சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France admits it directly supplied arms to Syrian “rebels”

சிரிய "கிளர்ச்சியாளர்களுக்கு" நேரடியாக ஆயுதங்கள் வினியோகித்ததை பிரான்ஸ் ஒப்புக்கொள்கிறது

By Pierre Mabut
27 August 2014

Use this version to printSend feedback

ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை நீக்குவதற்கான அதன் பினாமி போரில் சுதந்திர சிரிய இராணுவத்தின் (FSA) “கிளர்ச்சியாளர்களுக்கு" பிரான்ஸ் நேரடியாக ஆயுதங்கள் வினியோகித்துள்ளதை ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட் ஆகஸ்ட் 19இல் Le Mondeக்கு அளித்த நேர்காணலில் உறுதிப்படுத்தினார். ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் இஸ்லாமிக் அரசின் எதிர்ப்பு போராளிகளை நசுக்குவதற்காக என்ற போர்வையில் சிரியாவில் இராணுவரீதியில் தலையீடு செய்வதென்ற சமீபத்திய அமெரிக்க தீர்மானத்திற்கு மேலாக இது வந்திருந்தது.

பிரெஞ்சு ஏகாதிபத்தியம் குறைந்தபட்சம் 2013இன் வசந்தகாலத்திலிருந்தே சிரிய இஸ்லாமிஸ்ட் எதிர்ப்பு படைகளுக்கு ஆயுத உதவிகள் செய்து வந்துள்ளது. Le Monde செய்தியின்படி, அது 12.7-மிமீ இயந்திர துப்பாக்கிகள், ராக்கெட் ஏவும் கருவிகள், உடல் கவசங்கள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் உட்பட ஆயுததளவாடங்களை வழங்கியுள்ளது—ஆனால் Le Monde செய்திக்கு ஆதாரமாக இருந்தவரைப் பொறுத்த வரையில், “அதுபோன்ற போர் ஆயுதங்கள் 'நமக்கு எதிராகவே திரும்பக்கூடும்' என்பது" “ஒரு விடயமே இல்லை”. ஈராக்கில் அமெரிக்க யுத்தத்தின் ஒரு நேரடி விளைபொருளாக உள்ள இஸ்லாமிக் அரசு, கைப்பற்றி முன்னேறுவதை நிறுத்த வடக்கு ஈராக்கின் பெஷ்மெர்கா குர்திஷ் போராளிகள் குழுக்களுக்கும் இதே ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு" ஆயுதமளிப்பதில் ஹோலண்ட் அரசாங்கம் வகிக்கும் பாத்திரம், சிரியாவில் ஏகாதிபத்திய பினாமி யுத்தத்தை ஆதரித்த புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற பிரான்ஸின் போலி-இடது கட்சிகளை மீண்டுமொருமுறை அப்பட்டமாக அம்பலப்படுத்தி உள்ளது. சோசலிஸ்ட் கட்சியின் வெளியுறவு கொள்கையை ஊக்குவித்து கொண்டு, FSA ஒரு "ஜனநாயக புரட்சிக்கு" தலைமை வகித்து வருவதாக அந்த பொய்யை திரும்ப திரும்ப கூறிவந்த NPA, சிரிய எதிர்ப்பிற்கு ஹோலாண்ட் ஆயுத உதவி வழங்காததற்காக அவரை தாக்கியிருந்தது. உண்மையில், அவர் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி கொண்டிருந்த பிற்போக்கு கொள்கையை ஆழப்படுத்த தான் NPA ஹோலண்டுக்கு அழுத்தம் அளித்து வந்திருக்கிறது.

கடந்த செப்டம்பரில் சிரியா குறித்த ஒரு NPA தேசிய குழு தீர்மானம் இவ்வாறு குறிப்பிட்டது: “ஒரு புதிய இராணுவ சாகசத்தைத் தவிர்க்க, மேற்கத்திய அதிகாரங்கள் கிளர்ச்சி தொடங்கியதிலிருந்தே அனைத்தையும் செய்து பார்த்துள்ளன.... உணவு, அத்தியாவசிய தேவைகள், மருத்துவ உதவிகளுக்கான கோரிக்கைகளையும்... அவற்றோடு சேர்ந்து மிகவும் ஜனநாயகப் பிரிவுகளின் ஆயுதங்களுக்கான கோரிக்கைகளையும் நாம் ஆதரிக்க வேண்டும்."

கடந்த செப்டம்பரிலும், NPA செய்தி தொடர்பாளர் ஒலிவியே பெசன்ஸெநோ RFIஇல் "சிரியர்களுக்கு கருணையோடு ஆயுதங்கள் வழங்குமாறு" வெளியுறவுத்துறை மந்திரி லோரன்ட் ஃபாபியுஸிற்கு அழைப்புவிடுத்தார். “அனைத்திற்கும் மேலாக நாம் வழங்கும் 'ஆயுதங்கள் ஜிஹாதிஸ்டுகளிடம் போய் சேரும் என்பதால் நாம் அவற்றை வழங்கக்கூடாது' என்பது ஏற்கனவே விவகாரத்திற்குரியதாக இருக்கிறது தான், அதனால் அவ்வாறு கூறுபவர்களை" அரசாங்கம் பொருட்படுத்த வேண்டாமென அவர் எச்சரிக்கைப்படுத்தி வைத்தார். (பார்க்கவும்: ஈராக்கில் ISISஇன் தாக்குதல் சிரிய யுத்தத்திற்கான பிரெஞ்சு போலி-இடதுகளின் ஆதரவை அம்பலப்படுத்துகிறது)

NPAஇன் யுத்த-சார்பிலான உணர்ச்சிப்பிரவாகம், அதன் பிற்போக்குத்தனமான செல்வாக்குமிக்க மத்தியதட்டு அடித்தளத்தினது எரிச்சலூட்டும் ஆழ்ந்த கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது, அவை சிரியாவை மீண்டும் காலனிமயப்படுத்தும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் உந்துதலை ஆதரிக்கின்றன, ஆனால் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைக் குழப்புவதற்காக ஹோலண்ட் அரசாங்கத்தின் விமர்சகர்களாக பொய்யாக காட்டிக்கொள்ள விரும்புகிறது. பிரெஞ்சு யுத்த கொள்கையின் போக்கிற்கேற்ப அவை என்னமாதிரியான தந்திரோபாய நோக்கங்களை எடுத்தாலும், அவை சிரியாவில் தலையீட்டைத் தீவிரப்படுத்துவதை தொடர்ந்து ஆதரிக்கும் என்பதை எளிதாக ஊகிக்கிவிடலாம்.

அவரது Le Monde நேர்காணலில், ஹோலாண்ட் சிரியாவில் தலையீடு செய்ய பிரான்ஸ் தீர்மானகரமாக இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். “அவர்கள் மட்டுமே [அந்த போரில்] ஜனநாயக நோக்கங்களோடு பங்கெடுத்து வருகிறார்கள் என்பதால், கிளர்ச்சியாளர்களுக்கு நாம் வழங்கியுள்ள ஆதரவை நாம் தளர்த்தக்கூடாது," என்றார்.

மேற்கத்திய அதிகாரங்கள் மற்றும் அவற்றின் கூட்டாளிகளால் ஆதரிக்கப்பட்டுள்ள சிரிய எதிர்ப்பு படைகளை ஜனநாயகமாக்கி காட்டும், ஹோலண்ட் மற்றும் NPAஇன் சித்தரிப்பு முற்றிலும் ஒரு ஏமாற்றுத்தனமாகும். சுமார் 190,000 பேரைக் கொன்றும் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக வெளியேற செய்தும் ஒரு கொடூர உள்நாட்டு யுத்தத்தை நடத்த அதிபயங்கர குண்டுவீச்சுக்கள் மற்றும் பாரிய படுகொலைகளைப் பயன்படுத்திவரும் IS மற்றும் FSAஇன் பெரும் பாகங்கள், இஸ்லாமியவாத குழுக்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில், ISஐ நசுக்குவதற்காக வாஷிங்டன் இப்போது ஈராக் மற்றும் சிரியாவில் அது தலையீடு செய்திருப்பதாக வாதிட, எரிச்சலூட்டும் விதமாக துல்லியமாக இந்த குற்றங்களைத் தான் சுரண்டி வருகிறது.

அசாத் உடன் யுத்தத்திற்குள் செல்வதில்லை என்ற நேட்டோ அதிகாரங்கள் முடிவெடுத்ததால் தான், சிரியாவில் ISஇன் வளர்ச்சியும் அதன் குறுங்குழுவாத போர்களும் ஏற்பட்டிருப்பதாக கூறி, ஹோலண்ட் யதார்த்தத்தைத் தலைகீழாக திருப்பிவிட்டார்.

"சிரியாவில் என்ன நடந்து வருகிறதோ அதற்கு சர்வதேச சமூகம் பெரிதும் பொறுப்பாகிறது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே ஒரு ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இஸ்லாமியவாத அரசே இருந்திருக்காது. ஓராண்டிற்கு முன்னர் [அசாத்தால்] இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு வல்லரசுகள் தகுந்த எதிர்நடவடிக்கை எடுத்திருந்தால், ஒரு சர்வாதிகாரிக்கும் ஒரு பயங்கரவாத குழுவிற்கும் இடையே ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய இக்கட்டை நாம் முகங்கொடுத்திருக்க மாட்டோம்," என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் உண்மையில், உள்நாட்டு யுத்ததைத் தூண்டிவிட்டதற்காகவும், FSA மற்றும் IS போன்ற பிற்போக்குத்தனமான ஜிஹாதிஸ்ட் சக்திகளை பினாமிகளாக பயன்படுத்துவதற்காகவும், ஜனாதிபதி ஹோலண்டும் அமெரிக்காவும்தான் "பலமாக பொறுப்பாளிகளாகின்றார்கள்".

ஆட்சிமாற்றத்திற்காக சிரியா மீது குண்டுவீசுவதற்கு ஐ.நா பாதுகாப்பு அவையில் ரஷ்யா வீட்டோ வாக்கைப் பயன்படுத்துமென அச்சுறுத்தியதன் மீது அது பெரும் கூச்சலிட்ட போதே, ஆகஸ்ட் 2013இல் ஹோலண்டினது PS அரசாங்கத்தின் சட்டமீறல் பார்வைக்கு முன்னால் வந்திருந்தது. வெளியுறவு கொள்கை ஸ்தாபகத்திற்குள் நிலவிய ஆழ்ந்த பிளவுகள் மற்றும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் யுத்தத்திற்கு எதிரான வாக்குகளில் பிரதிபலித்த பரந்த மக்களிடையே இருந்த யுத்த எதிர்ப்பு காரணமாக கடைசி நிமிடத்தில் யுத்தம் கைவிடப்பட்டது—ரஷ்யா மற்றும் ஈரானுடன் ஒரு யுத்தத்தைத் தூண்டும் ஆபத்திற்கு தயாராகி இருந்த ஹோலண்டின் அரசாங்கத்திற்கு அது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

சிரியாவில் ஜிஹாதிஸ்ட் சக்திகளின் வளர்ச்சியானது, அசாத்தைத் தூக்கியெறிய பினாமி சக்திகளுக்கு சிஐஏ, பிரான்ஸ் மற்றும் வளைகுடா முடியாட்சிகளால் வழங்கப்பட்ட நிதியுதவி மற்றும் ஆயுத உதவிகளின் நேரடி விளைவாகும். ஹோலண்ட் எரிச்சலூட்டும் விதத்தில் எதை "ஜனநாயகத்திற்குரியதென்று" அழைக்கிறாரோ, அந்த FSAஇன் கணிசமான பிரிவுகள் அல் கொய்தாவுடன் இணைப்பு பெற்ற அல் நுஸ்ரா முன்னணியிலிருந்து பிரிந்து வந்தவை ஆகும்.

பல்வேறு இஸ்லாமியவாத குழுக்கள் மற்றும் அசாத்தின் தாராளவாத எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகளோடு சேர்ந்து, FSA இடம் பெற்றிருக்கும் சிரிய தேசிய கூட்டணியை, சிரியாவின் அரசாங்கமாக ஹோலண்ட் அங்கீகரித்த போதே, 2012இல் இருந்து பிரான்ஸ் உள்நாட்டு யுத்தத்தின் சுவாலைகளைப் பகிரங்கமாக தூண்டிவிட்டுள்ளது. ஆபிரிக்காவை மீண்டும் காலனித்துவப்படுத்தும் ஒரு உந்துதலில் மாலி மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசில் யுத்தங்களை தொடங்கியும், உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவுடன் வாஷிங்டன் மற்றும் பேர்லினின் பினாமி போரை ஆதரித்தும், ஹோலண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் இந்த பூமியில் மூர்க்கமாக யுத்தம்-நாடும் யுத்தவெறியர்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.