சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The collapse of the French government: A crisis of capitalist rule in Europe

பிரெஞ்சு அரசாங்கத்தின் பொறிவு: ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடி

Alex Lantier
29 August 2014

Use this version to printSend feedback

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட்டின் மதிப்பிழந்த சிக்கன கொள்கைகள் மீதான விமர்சனங்களுக்கு இடையே, முந்தைய அரசாங்கம் திடீரென பொறிந்துபோன ஒரு நாளைக்குப் பின்னர், செவ்வாயன்று அழைக்கப்பட்டிருந்த புதிய சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம், பிரான்சில் உத்தியோகபூர்வ "இடது" அரசியலின் சிதைவையும் மற்றும் ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியையும் நிரூபிக்கிறது. ஐரோப்பிய பொருளாதாரம் சரிந்து வருகின்ற நிலையில் மற்றும் PSக்கான ஆதரவு பொறிந்துள்ளதுடன், இன்னும் மேற்கொண்டு வலதிற்கு நகர்வதைத் தவிர ஹோலண்டிடம் அளிப்பதற்கு வேறொன்றும் இல்லை.

பொருளாதார மந்திரி ஆர்னோ மொண்டபூர்க் தலைமையிலான PS மந்திரிகளின் ஒரு குழுவை, ஹோலண்டும் பிரதம மந்திரி இமானுவேல் வால்ஸூம் ஒட்டுமொத்தமாக நீக்கி இருந்தார்கள், அக்குழு ஹோலண்டின் சிக்கன நிகழ்ச்சிநிரலை அரசியல்ரீதியாக தற்கொலைக்குரியதாகவும் ஒரு விரோத ஜேர்மனியால் கட்டளையிடப்பட்டதாகவும் பகிரங்கமாக தாக்கியிருந்தது. PS இடம் ஒரு இடதுசாரி கொள்கை இல்லை என்ற ஒரு புள்ளியை கலாச்சார மந்திரி ஓரேலி பிலிப்பெத்தி உரக்க கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், மந்திரிசபைக்குள் பதட்டங்கள் வெடித்திருந்தன.

கருத்துக்கணிப்புகளில் அவர்களின் மதிப்பு தொடர்ந்து அடிமட்டத்திற்கு சரிந்து வருகின்ற சூழலில், ஹோலண்ட் மற்றும் வால்ஸால் பெயரிடப்பட்ட புதிய PS மந்திரிசபை, தொழிலாளர்களுக்கு எதிராக PSஆல் நடத்தப்பட்டு வருகின்ற வர்க்க யுத்தத்தைத் தீவிரப்படுத்தும். ஒரு பிற்போக்குத்தனமான மற்றும் அரசியல்ரீதியாக வெடிப்பார்ந்த 15 பில்லியன் யூரோ உயர்வை, விற்பனை வரிகளில் திணிக்க திட்டமிடத் தொடங்குவதே அதன் முதல் நகர்வாக இருந்தது.

ஒரு மில்லியனிய முதலீட்டு வங்கியாளரும் மேற்தட்டினது தேசிய நிர்வாக பள்ளியில் (ENA) படித்த பட்டதாரியுமான 36 வயது எமானுவேல் மக்ரோனை பொருளாதார மந்திரியாக தேர்ந்தெடுத்ததில் இருந்தே, மக்கள் மீதான அதன் கடுமையான வெறுப்பு உணரக்கூடியதாக இருக்கிறது. முன்னர் மந்திரி பதவிகளுக்கு தகுதிபெற்றிருந்த அவர், இதற்கு முன்னர் ஒருபோதும் எந்தவொரு பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதாலேயே, ஒரு சுதந்திர-சந்தையாளராக ஹோலண்டின் ஆரம்ப பதவிக் காலத்தில் "இடை தேர்தல்களை இழப்பதற்குத் தயாராக" இருக்குமாறு அவருக்கு அறிவுறுத்தி இருந்தார்.

மொண்டபூர்க்கின் கன்னையும் திவால்நிலைமை மற்றும் பிற்போக்குத்தனத்திற்குக் குறைந்ததில்லை. யூரோவைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும், ஜேர்மனியின் செல்வாக்குமிகுந்த, ஐரோப்பிய மத்திய வங்கியை விட, சுதந்திரமாக கடன் வழங்குவதற்கும் மற்றும் பெரும் வங்கி பிணையெடுப்புகளுக்கும் அதிகமாக ஆலோசனை வழங்கும் அமெரிக்க பெடரல் ரிசர்வின் உறுப்பினர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவரும், பிரெஞ்சு தொழில்துறை போட்டித்தன்மையின் சார்பாளருமான மொண்டபூர்க், ஊதியங்கள் மற்றும் சமூக செலவின வெட்டுக்களை ஆதரிக்கிறார். கடந்த மாதம், ஹோலண்டின் பொறுப்புணர்வு ஒப்பந்தத்தில் இருந்த வரவு-செலவு திட்ட வெட்டுக்களை ஆதரித்து அவர் கூறுகையில், “50 பில்லியன் வெட்டுக்களை நாம் சவால்விடுக்கக்கூடாது, மாறாக அவற்றை நாம் மீண்டும் பிரெஞ்சு மக்களுக்கு கொண்டு சேர்க்க, நாம் அவற்றை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும்," என்றார்.

ஹோலண்ட் அரசாங்கத்தின் நெருக்கடி, ஒரு பரந்த உடைவை வழங்கியுள்ள நிதி மூலதனத்தின் ஒரு வலதுசாரி கட்சியாக, PSஇன் முகமூடியைக் கிழித்து வருகிறது. அது புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி மற்றும் ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணி போன்ற பிரான்சின் ஊழலுற்ற போலி-இடது கட்சிகளின் மீது வைக்கத்தகுந்த ஒரு குற்றப்பத்திரிகையாகவும் விளங்குகிறது. PSக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பின் குரல்வளையை பல தசாப்தங்களாக நசுக்கி வந்துள்ள செல்வாக்குமிகுந்த மத்தியதட்டு வர்க்கத்தின் கட்சிகளான இவை, 2012இல் ஹோலண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஆமோதித்ததுடன், அவரது கொள்கைகளுக்கும் முழு அரசியல் பொறுப்பைத் தாங்குகின்றன.

ஜேர்மனி மீதான மொண்டபூர்க்கின் அசாதாரண தாக்குதல், நிகழ்ந்துவரும் ஐரோப்பிய ஒன்றிய (EU) உடைவையும் நிரூபணம் செய்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி, கிரீஸிற்கான ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு பிரெஞ்சு நலன்களை மதிக்கவில்லையானால், பிரான்ஸ் யூரோ நாணயத்திலிருந்து வெளியேறும் என்று ஜேர்மன் சான்சலர் ஆங்கெலா மேர்கெலிடம் கூச்சலிட்டு, முறுகிக் கொண்டார். பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் வங்கிகள் இணைந்து இறுதியாக கிரேக்க தொழிலாளர்களை கொள்ளையடிக்க ஒரு ஏற்பாட்டிற்கு வந்தன, இதனால் ஐரோப்பாவிற்குள் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பதட்டங்கள் அப்போதைக்கு மேற்பார்வைக்கு இல்லாமல் போயின.

எவ்வாறிருந்த போதினும், கிரீஸின் நலிந்துபோன சமூக ஜனநாயக PASOK கட்சியினது பிரதம மந்திரி ஜோர்ஜியாஸ் பாப்பாண்ட்ருவின் சிக்கன நடவடிக்கையையே ஹோலாண்டும் மற்றும் PSஉம் தொடர்கையில், ஐரோப்பாவெங்கிலும் பிரான்சின் நவ-பாசிச தேசிய முன்னணி (FN) போன்ற ஐரோப்பிய ஒன்றிய விரோத கட்சிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதற்கு மத்தியில், இத்தகைய பதட்டங்கள் மீண்டும் மேற்புறத்திற்கு வருகின்றன.

முற்றிலுமாக தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளைப் பறித்துள்ள, உத்தியோகபூர்வ "இடது" அரசியலின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் பிரான்சிலும் ஐரோப்பாவெங்கிலும் இப்போது பொறிந்து வருகிறது. முதலாளித்துவம் மற்றும் அதன் "இடது" பாதுகாவலர்களுக்கு எதிரான புரட்சிகர போராட்டத்திற்குள், பிரெஞ்சு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் வெடிப்பார்ந்து நுழைவதற்கு தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னரும் மற்றும் ஐரோப்பாவில் பாசிச ஆட்சியின் பொறிவுக்குப் பின்னரும், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களால் அளிக்கப்பட்ட அரைகுறை-சோசலிச வாக்குறுதிகள் இன்று கேலிக்கூத்துக்களைப் போல பார்க்கப்படுகின்றன. அதன் 1944 வேலைத்திட்டத்தில், முதலாளித்துவம் மற்றும் தேசிய எதிர்ப்பு கவுன்சிலின் சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச சக்திகள், “பொருளாதாரத்தின் தலைமையிலிருந்து பெரும் பொருளாதார மற்றும் நிதியியல் பிரபுத்துவங்களை வெளியேற்றுவதை உள்ளடக்கி, ஓர் உண்மையான பொருளாதார மற்றும் சமூக ஜனநாயகத்தை உருவாக்கும்" யுத்தத்திற்குப் பிந்தைய பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு வாக்குறுதி அளித்திருந்தன.

ஆனால் யதார்த்தம் என்னவாக இருக்கிறது? முதலாளித்துவ ஐரோப்பாவின் அமைப்புகள் பொறிகின்ற வேளையில், ஒரு நிதியியல் பிரபுத்துவமோ நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளில் சர்வாதிகார ஆட்சியை நடைமுறைப்படுத்தி உள்ளது. அது வாக்குப் பெட்டிகளில் பட்டவர்த்தனமாக வலதுசாரி மற்றும் முதலாளித்துவ "இடது" கட்சிகளுக்கு இடையே வித்தியாசம் இல்லாதவாறு முற்றிலுமாக இறுகிப்போயுள்ளது. எவ்வாறிருந்த போதினும், 70 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைப் போல, அது நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் பாசிச சர்வாதிகாரம் மூலமாக பிரான்சை ஆளாமல், மாறாக சோசலிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் ஒரு கட்சியின் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் உடந்தையாளர்கள் மூலமாக ஆட்சி செய்து வருகிறது.

இதற்கான மைய பொறுப்பு ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து பிரிந்தோடிய ஓடுகாலிகளின் வழிதோன்றல்களின் மீது தங்கியுள்ளது. பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் கடந்த மிக பிரமாண்ட புரட்சிகர மேலெழுச்சியான 1968 பொது வேலைநிறுத்தத்தால் அதிர்ந்துபோன அவர்கள், புதிதாக-ஸ்தாபிக்கப்பட்ட PS மற்றும் அதன் தலைவர்கள், முன்னாள் விச்சி ஆட்சியின் அதிகாரிகள் மற்றும் முதலாளித்துவ சாகசக்காரர் பிரான்சுவா மித்திரோன் போன்றவர்களை "இடது" என்று தொடர்ச்சியாக ஊக்குவித்தார்கள். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) முந்தைய பிரெஞ்சு பிரிவாக இருந்த சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI), PS மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் "இடது ஐக்கியத்தைப்" பின்தொடர ICFI இல் இருந்தும், ட்ரொட்ஸ்கிசத்திலிருதும் உடைத்துக் கொண்டது.

அந்த சம்பவத்தில், இந்த சக்திகள் அதற்கடுத்த ஐந்து தசாப்தங்களுக்கு, PSஐ சுற்றி மையப்படுத்தி, பிரான்சில் முதலாளித்துவ "இடது" ஆட்சிக்கான கட்டமைப்பை உருவாக்கின. சிக்கன நடவடிக்கைகள் மற்றும் 1981-1995இல் மித்திரோன் ஜனாதிபதி காலத்திய ஏகாதிபத்திய போர்கள் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்தின் முதலாளித்துவ மீட்சியுடன் இணங்கி, அவை தொழிலாளர்களுக்கும், மார்க்சிசத்திற்கும், சோசலிச புரட்சிக்கும் நனவுபூர்வமாக விரோதமான ஒரு வெளிப்படையான சமூக அடுக்காக மாறின.

இந்த கட்சிகளின் மற்றும் அவற்றோடு இணைந்த பின்நவீனத்துவ புத்திஜீவிகளின் செல்வாக்கின் கீழ், “இடது" அரசியலின் ஒட்டுமொத்த உள்ளடக்கமும் மறுவரையறை செய்யப்பட்டது. வர்க்க போராட்டம் என்பது முதலாளிமார்களுக்கும் பிரான்சின் ஊழல்நிறைந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் இடையிலான "சமூக பேச்சுவார்த்தைகளாக" மாற்றப்பட்டது; ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு என்பது அதன் "மனிதாபிமான" யுத்தங்களுக்கு ஆதரவு என்று மாற்றப்பட்டது; தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சமூக சக்தி என்பதே நிராகரிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னால் இந்த அடுக்குகளின் அரசியலைச் சுருக்கமாக தொகுத்தளிக்கும் முகமாக, ஹோலண்ட் சுயதிருப்தியோடு நியூ யோர்க் டைம்ஸிற்குத் தெரிவித்தார்: “இன்று பிரான்சில் கம்யூனிஸ்டுகளே கிடையாது. இடது, நிதியளிக்கவும் தனியார்மயமாக்கவும் பொருளாதாரத்தைத் தாராளமயப்படுத்தி சந்தைகளைத் திறந்துவிட்டிருக்கிறது. அங்கே பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை," என்றார்.

பிரான்சில் உள்ள ICFIஉம் அதன் ஆதரவாளர்களும் அதிலிருந்து வேறுபட்ட ஒன்றைக் காட்டுகிறார்கள்: தொழிலாள வர்க்கத்திற்குள் அங்கே முதலாளித்துவத்திற்கு ஒரு பலமான எதிர்ப்பு இருக்கிறது; சோசலிச மனோபாவம் அதிகரித்து வருகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறார்கள். நாம் PS மற்றும் அதன் பங்காளிகளின் தோல்வியுற்ற எந்திரத்திற்கு ஒரு ட்ரொட்ஸ்கிச மாற்றீடாக ICFIஇன் பிரெஞ்சு பகுதியைக் கட்டியமைத்து வருகிறோம். வரவிருக்கும் புரட்சிகர போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் தலைமையை வழங்குவதே நமது நோக்கமாகும்அத்தகைய போராட்டங்களில் பிரான்சில் உள்ள தொழிலாளர்கள், கிரீஸ், ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் அதைக் கடந்தும் உள்ள தொழிலாளர்களிடையே அவர்களின் இயல்பான பங்காளிகளைக் காண்பார்கள். தோல்வியுற்றது சோசலிசம் அல்ல, மாறாக போலி-இடது எதிர்ப்பாளர்களின் பிற்போக்குத்தனமான அரசியலாகும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.