சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

United Nations report: US, UK surveillance programs violate international law

.நா அறிக்கை: அமெரிக்கா, இங்கிலாந்தின் கண்காணிப்பு திட்டங்கள் சர்வதேச சட்டத்தை மீறுகின்றன

By Thomas Gaist 
18 July 2014

Use this version to printSend feedback

பெரும் சக்திகளான குறிப்பாக, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடைமுறைப்படுத்தி வரும் கண்காணிப்பு நடவடிக்கைகள், சர்வதேச சட்டத்தின் அடிப்படை கொள்கைகளை மீறுவதுடன் ஜனநாயக உரிமைகளை அழிக்கின்றன என்று  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் (UNHCHR) நவி பிள்ளை புதன் கிழமையன்று வெளியிடப்பட்ட இலத்திரனியல் காலத்தில் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமை” (“The Right to Privacy in the Digital Age”), எனும் தலைப்பிலான ஓர் அறிக்கை கண்டறிந்துள்ளது.

இவ்வறிக்கையானது, தகவல்தொடர்பு தகவல்களை தொகையாக சேகரித்துவைப்பது, அரசு அமைப்புகளுக்கு இடையேயான தகவல்களை தடையின்றி பகிர்ந்து கொள்வது, இரகசிய சட்டங்கள் மற்றும் இரகசிய நீதிமன்றங்களில் தங்கியிருப்பது, வெளிநாட்டவர்களை தீவிரமாக கண்காணிப்பது, மற்றும் வான் வழி தாக்குதல்களுக்கு வசதிபடுத்துவதற்காக இத்தகைய கண்காணிப்புகளை பயன்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் சர்வதேச சட்டத்துடன் முரண்படும் பல்வேறு அரசுகளின் நடவடிக்கைகளை சுட்டிக் காட்டுகிறது. புதிய வடிவிலான தகவல் பகிர்வு மற்றும் அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான கண்காணிப்பு-தொடர்பான உரையாடல்கள் போன்றவை மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு தீவிர ஆபத்தாக உள்ளது என்று இவ்வறிக்கை எச்சரிக்கிறது.

உலகம் முழுவதிலுமுள்ள பகுதிகளில் வெளிப்படையான மற்றும் மறைமுகமான இலத்திரனியல்  கண்காணிப்புகளுக்கான உதாரணங்கள் மறுபடியும் அதிகரித்துள்ளன. அசாதாரணமான செயல்பாடுகளைவிடவும், அரசாங்கம் சார்ந்த பாரிய கண்காணிப்பானது ஒரு ஆபத்தான வழமையாக உருவெடுத்து வருவதாக இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. கண்காணிப்பு காரணங்களுக்காக தகவல் தொடர்பு போக்குவரத்து, உளவுபார்க்கப்பட்ட கண்ணாடி இழைவயர்கள் (fibre-optic) போன்றவற்றுக்கான நேரடி அணுகல் கொடுக்காத வரையில், சொல்லப்படும் வகையில் தகவல் தொடர்பு மற்றும் கம்பியில்லா உபகரண நிறுவனங்களின் சேவைகளுக்கு தடை விதித்துவிடுமென்று அரசாங்கங்கள் அச்சுறுத்தியுள்ளன மேலும் தேவைப்படும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றிய ஒட்டு மொத்த விவரங்களை முறைப்படி வெளிப்படுத்த வேண்டும். இதையும் தாண்டி, அரசியல்ரீதியாக எதிரான உறுப்பினர்கள் மற்றும் / அல்லது அரசியல் கருத்துவேறுபாடுள்ளவர்களை குறிவைப்பதற்காக சில தொலை தொடர்புத்துறையின் கண்காணிப்புகளை பயன்படுத்தியுள்ளது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது”.

இத்தகைய போலிஸ் அரச செயல்பாடுகளை ஆதரிப்பவர்கள், தகவல் தொடர்புகளுக்கான தரவுகளின் சேகரிப்பானது ஒரு பணிவான, சட்டபூர்வமான, அந்தரங்கத்தை பாதுகாப்பதற்கு  ஏற்புடைய வகையிலான கண்காணிப்பினை ஏற்படுத்துவதாக  வாதிட்டுள்ளனர். .நா அறிக்கை இக்காரணத்தினை மறுத்து, தொகையான தகவல் சேகரிப்பு என்பது உண்மையான தகவல் உள்ளடக்கத்தை சேகரிப்பது போல், சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு பாதிப்பேற்படுத்துவது என்கிறது.

அந்தரங்கத்தை பாதுகாப்பதற்கு  உரிமை என்ற கோணத்திலிருந்து, இந்த வேறுபாடு (உள்ளடக்கத்தை சேகரிப்பதற்கும் தொகையான தகவல்களுக்கும் இடையிலான) நம்பும்படியாக இல்லை. பொதுவாக தகவல்கள் சேகரிப்பு எனப்படும் தொகையான தகவல்கள் -metadata – தனிப்பட்ட தகவல் தொடர்பு தகவல்களை அணுகுவதன் மூலமாக கொடுக்கப்பட்டவற்றையும் தாண்டி தனிநபரின் பழக்கவழக்கம், சமூக உறவுகள், தனிப்பட்ட முன்னுரிமைகள் மற்றும் அடையாளம் போன்றவை குறித்த ஓர் உள்ளார்ந்த கருத்தினையும் வழங்கலாம் என அவ்வறிக்கை குறிப்பிடுகின்றது.

இந்த கண்காணிப்புத் திட்டங்கள் உரிமைகள் மீது பயங்கர விளைவுகளைகொண்டிருக்கின்றன, இதற்கு அவை நடைமுறையில் இருக்கிறது என்பது மட்டுமே போதுமானது. ஒட்டுமொத்த அளவில் அரச உளவு பார்த்தல் நடவடிக்கை, மின்னனு தகவல் தொடர்புகளில் தங்களது சிந்தனைகளை முழுமையாக வெளிப்படுத்துவது குறித்து தனிநபர்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று கூறி இவ்வறிக்கை வாதிடுகிறது.

அமெரிக்க தேசிய பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பு அமைப்போடு மேம்படுத்தப்பட்டுள்ள இரகசிய நீதிமன்றங்கள் மற்றும் இரகசிய சட்டங்களின் கட்டமைப்பை குறிப்பிட்டு, உண்மையில் இரகசிய சட்டம்என்பது சட்டத்தில் செல்லுபடியாகாத விஷயம் என இவ்வறிக்கை தெரிவிக்கிறது. ”சட்டத்தின் இரகசிய விதிகளிலும் இரகசிய மொழிபெயப்புகளிலும் ஏன் இரகசியமான சட்டபூர்வமான மொழிபெயர்ப்புகளிலும் கூட சட்டம் என்பதற்கு தேவையான தகுதிகள் இல்லைஎன்று UNHCHR முடிவாக தெரிவிக்கிறது.

இவ்வறிக்கை மேற்கோள் காட்டியிருக்கும் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அராசாங்கத்தின் சட்டத்துக்கு புறம்பான பிற நடவடிக்கைகளுள் பின்வருபவை உள்ளடங்கும். உண்மையில் அனைத்தையும் பதிவு செய்வது மற்றும் தொலைபேசி உரையாடல்களை தக்கவைத்துக் கொள்ளுதல், ”உலக நிகழ்வுகளில்நிகழும் தகவல் தொடர்புகள் குறித்து அந்நிகழ்வுகளை நடத்தும் அரசாங்கம் மூலமாக உளவுபார்த்தல், கண்காணிப்புக்கு உதவிகரமான மென்பொருள்களுடன் கூடிய தனிநபர் கணிப்பொறிகள் கொண்ட சட்ட வழிமுறைகளை இயற்றுதல்.

இவ்வறிக்கை குறிப்பிடும் மேலும் சில விஷயங்கள்; கண்காணிப்பு உபகரணங்களில் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பைச் சுட்டிக் காட்டி, தொடர்புடைய அரசாங்கங்கள் குறித்த தகவல்களைப் பெற்று சேமிப்பதில் தனியார் நிறுவனங்களின் அதிக அளவில் பங்களிப்பு செய்கின்றன. அதனால் இத்தகைய கண்காணிப்புகளால் ஏற்பட்டுள்ள அந்தரங்கத்தை பாதுகாப்பதற்கு  எதிரான அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இது அரசாங்கங்களுக்கு இடையேயான மூலோபாயரீதியான புலனாய்வுத் தொடர்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை வரைமுறைப்படுத்தும் கட்டுப்பாடு உள்ளிட்ட சர்வதேச அளவிலான வலை அமைப்பினை உருவாக்கி வருகிறது. அரச புலனாய்வு நிறுவனங்களின் மனித உரிமை துஸ்பிரயோகங்களில்  இந்த நிறுவனங்கள் அதிகரித்தளவில் உடந்தையாக இருக்கிறது, என அவ்வறிக்கை குறிப்பிட்டது.

இந்த பரந்த அளவிலான கண்காணிப்பானது உலக அளவிலான பல்வேறு மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதை இவ்வறிக்கை கண்டறிந்துள்ளது. அவற்றுள் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம், தகவல்களை தேடுதல், பெறுதல் மற்றும் தெரியப்படுத்துதல் ஆகியவற்றுக்கான சுதந்திரம், அமைதியான கூட்டம் கூடும் மற்றும் இணைந்திருக்கும் மற்றும் உடல்நலத்துடன் இருக்கும் உரிமைபோன்றவை இதில் உள்ளடங்கும். அமெரிக்க இலக்குவைத்த படுகொலை மற்றும் தடுத்துவைத்தல் செயல்பாடுகளுக்கு வசதி செய்ய இக்கண்காணிப்புகள் பயன்படுத்தப்பவதை என  இவ்வறிக்கை தெரிவிக்கிறது. தகவல்களைப் பெறுவதற்கும் பின்னர் சித்ரவதை மற்றும் பிற மோசமான-தண்டனைகள் கொடுப்பதற்கும் மற்றும் வான் தாக்குதல்களுக்கும் இந்த இலத்திரனியல் கண்காணிப்புகள் காரணமாக இருந்திருக்கின்றன.

வெளிநாட்டவர்களைப் பொறுத்தவரையில் தனிமைப் பாதுகாப்புகள் என்பது மிக பலவீனமாகவும், சில இடங்களில் இல்லாமலும் இருப்பதை ஆவணங்கள் விளக்குகின்றன.

.நா அறிக்கையின்படி, வெளிநாட்டினரது உரிமைகள் குறித்த அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளின் முழுமையான புறக்கணிப்பு என்பது சர்வதேச குடிஜன மற்றும் அரசியல் உரிமைகளில் (ICCPR) விவரிக்கப்பட்டுள்ள சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுடன் எந்த வித வேறுபாடுமின்றி சரிசமமான சட்ட பாதுகாப்புக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்என்ற அடிப்படை கொள்கைகளின் மீறல் என்பது தெளிவாகிறது.

ஒரு தகவல் தொடர்பு எங்கிருந்து வருகின்றது என்பது குறித்து நிச்சயமற்ற நிலை காணப்படும்போது, கண்காணிப்பு நிறுவனங்கள் அதனை ஒரு அந்நியமானவைஎன்று கருதுகின்றன, அதனால் அவர்கள் அதனை சேகரிக்கவும் சேமிக்கவும் முடிகிறது. மின்னணு தகவல் தொடர்புக்ளைப் பொறுத்தவரையில், வெளிநாட்டு சேவை வழங்கிகள் மூலமாக (overseas servers ) தகவல்கள் தொடர்ச்சியாக பெறப்படுகின்றன, இது போன்ற செயல்பாடுகள் தேசிய குடிமகனுக்கான பாதுகாப்புகள் எனக்கூறப்படுபவை பிரயோசனமற்றவை என்பதை உறுதிபடுத்துகின்றன.

அரசாங்கங்கள் தனியார்துறைக்கான இலத்திரனியல் கண்காணிப்புகளை மேற்கொள்வது மற்றும் வசதிப்படுத்துவது குறித்து நம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றன, அதற்கான வலுவான ஆதாரமும் இருக்கிறது. திருப்திகரமான வகையில் தகவல் பெறுவதற்கான அணுகல் மற்றும் மொத்தகவல்களுக்காக அரசாங்கங்கள் பொதுவான சட்டபூர்வமான வழிமுறைகள் மற்றும் மறைமுகமான வழிமுறைகள் இரண்டையும் பயன்படுத்தியுள்ளன என்று இவ்வறிக்கை கூறுகிறது.

 

கணிப்பொறி வலையமைப்புகள் ஒட்டுக்கேட்டலுக்கு தயாராகவே வடிவமைக்கபட வேண்டும் என்ற சட்டபூர்வமான கோரிக்கைகளால், அந்தரங்க உரிமைகளுக்கான அச்சுறுத்தல் பெரிதாக்கப்பட்டுவருவதாக இவ்வறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசாங்கத்தின் சட்டமற்ற தன்மை அபாயகரமானது என்பதை இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மனித உரிமைகளுக்கான சர்வதேச அறிக்கை, “யாரும் அவரது தனிமை, குடும்பம், வீடு அல்லது தொடர்புகள் மூலமாகவோ அல்லது அவரது மரியாதை மற்றும் புகழ் மீதான தாக்குதல்களுக்காகவோ ஒழுங்கற்ற வகையில் ஊடுறுவலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். இத்தகைய குறுக்கீடு அல்லது தாக்குதல்களுக்கு எதிராக ஒவ்வொருவருக்கும் சட்ட பூர்வ பாதுகாப்புக்கான உரிமை உண்டுஎன்று பிரிவு 12 தெரிவிக்கிறது.

169 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, சர்வதேச குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகளின் பிரிவு 17, கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு பிரிவினை உள்ளடக்கியது.

. நா அறிக்கை முக்கியமான ஆவணங்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை கொள்கைகள் மீறல்கள் குறித்த ஆய்வினையும் வழங்குகிறது. ஆயினும், அதன் ஒட்டு மொத்த நிலைநோக்கும் சட்டத்திற்கு புறம்பான அரச கண்காணிப்பானது நடைமுறையிலிருக்கும் சமுதாய மற்றும் பொருளாதார ஒழுங்கின் அதாவது முதலாளித்துவத்தின் கட்டமைப்பிற்குள் கட்டுப்படுத்தப்பட முடியும் என்ற தவறான நம்பிக்கையை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

எட்வார்ட் ஸ்நோவ்டென் வெளிப்படுத்தியவை தெரிவிப்பது போல், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிற முக்கிய முதலாளித்துவ நாடுகள் வெளிநாட்வர் மற்றும் அவர்களது சொந்த குடிமக்களது தனிப்பட்ட தகவல் தொடர்புகளை பெருமளவில் பெற்று சேகரித்து வருகின்றன. இது நாட்டிற்கும் மற்றும் ஆளும் மேல்தட்டிற்கு எதிரான முக்கிய எதிரிகள் குறித்த விவரக் குறிப்புகளை தேடி எடுப்பதற்காக செய்யப்படுகின்றது.

பரந்த அளவிலான, சட்டத்திற்கு புறம்பான அரசு கண்காணிப்பு என்பது ஒரு சர்வதேச போக்காக இருக்கிறது என்ற உண்மை உலக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியிலேயே அதன் வேர்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. ஏகாதிபத்தியப் போர் மற்றும் முன்னொருபோதுமில்லாத சமூக சமத்துவமின்மையின் மட்டங்கள் போன்றவை இந்த நெருக்கடியின் கூர்மையான வெளிப்பாடுகளே. போலிஸ் அரசு மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கான கட்டமைப்பினை உருவாக்குவதும் சமூக அழுத்தம் அதிகரிப்பது மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் பாரிய புரட்சிகர போராட்ட அச்சுறுத்தல் போன்றவற்றிற்கு தவிர்க்க முடியாத வகையில் முதலாளித்துவ ஆளும்வர்க்கத்தின் பிரதிபலிப்பாகும்.