சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The acquittal of Hosni Mubarak

ஹோஸ்னி முபாரக்கின் விடுவிப்பு

Alex Lantier
1 December 2014

Use this version to printSend feedback

ஊழல் மற்றும் அரச படுகொலை குற்றச்சாட்டுக்களின் மீது பதவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கை குற்றங்களிலிருந்து சனியன்று விடுவித்தமை, ஜெனரல் அப்தெல் பத்தாஹ் அல்-சிசியின் ஆட்சி எதிர்புரட்சியை தொடரவும் மற்றும் இராணுவ சர்வாதிகாரத்தை நிரந்தரமாக மீட்டமைக்கவும் நோக்கம் கொண்டுள்ளது என்பதற்கு, அந்த ஆட்சியால் அளிக்கப்பட்டிருக்கும் ஒரு அறிவிப்பாக உள்ளது.

2011இல் முபாரக்கை பதவியிலிருந்து வெளியேற்றிய புரட்சிகர மேலெழுச்சிகளின் போது, துப்பாக்கியேந்திய பொலிஸ் மற்றும் குண்டர்களைக் கொண்டு 846 பேரைக் கொன்றதில் மற்றும் 6,000 பேரைக் காயப்படுத்தியதில் அவர் வகித்த பாத்திரம் குறித்த கண்துடைப்பு, எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்க அந்நாட்டின் முதலாளித்துவவாதிகளும் மற்றும் அதன் உயர்-மத்தியதர வர்க்கத்தின் ஆதரவாளர்களும் நடத்திவரும் முனைவின் பாகமாகும். “ஜனவரி 25இல் 'மேற்கால் சதி திட்டமிடப்பட்டதென' பகிரங்கமாக கூறும் [செய்தி] அறிவிப்பாளர்களை மிக சாதாரணமாக காண முடிகிறது," இது கெய்ரோவில் ஒரு வெளிநாட்டு தூதரக அதிகாரி Al Ahramக்கு கூறியதாகும். எகிப்திய அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், "முபாரக் நல்லவராகவும், ஆனால் ஒருசில தவறுகளைச் செய்திருந்ததாகவும்" இப்போது நம்புகிறார்கள் என்று மற்றொருவர் தெரிவித்தார்.

அந்த தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பாதுகாப்பு படைகளின் காவலில் சுற்றி வளைக்கப்பட்டிருந்த தஹ்ரீர் சதுக்கத்திற்கு வெளியே, பல ஆயிரக் கணக்கான மக்களின் ஒரு போராட்டத்தைப் பொலிஸ் தண்ணீர் பீச்சிகளைக் கொண்டும் மற்றும் படைத்தளவாடங்களை பிரயோகித்தும் தாக்கியது, அதில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

எல்லா மாபெரும் புரட்சிகர மேலெழுச்சிகளையும் போலவே, எகிப்திய புரட்சியும் தீர்க்கமான கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. அப்புரட்சி, மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இஸ்ரேலிய கொள்கையின் ஒரு முக்கிய கருவியாக விளங்கிய, முபாரக்கின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய மேலெழுச்சியுடன் தொடங்கியது. எகிப்தில் முந்தைய புரட்சிகளில் செய்ததைப் போலவே, முதலாளித்துவவாதிகள் எதிர்-தாக்குதலுக்கு அவர்களைத் தயார் செய்து கொள்வதற்காக, கால அவகாசத்தை பெறுவதற்கும் மற்றும் அதன் படைகளை மறுஒழுங்கு செய்வதற்கும், அவர்கள் தங்களைத் தாங்களே வெகுஜன இயக்கத்திற்குள் இணைத்துக் கொள்ள முனைந்ததன் மூலமாக ஆரம்ப கட்டங்களில் விடையிறுப்புக் காட்டினர்.

அந்த கட்டத்தில், ஜனநாயக முழக்கங்கள் பொதுவாக மேலோங்கி இருந்தன, மற்றும் அது ஜனவரி 25, 2011இல் தொடங்கிய மேலெழுச்சிக்குப் பிந்தைய ஆரம்பக்கட்ட நாட்களாக இருந்தன. எகிப்திய ஆளும் வர்க்கமும் மற்றும் வாஷிங்டனில் இருந்த அதன் ஆதரவாளர்களும் வெற்று ஜனநாயக சீர்திருத்த வாக்குறுதிகளைக் கொண்டு, முபாரக்கை அதிகாரத்தில் வைத்திருக்க முனைந்தனர். தொழிலாள வர்க்கம் பிரதான சமூக சக்தியாக எழுச்சிபெற தொடங்கிய அந்த பாரிய மேலெழுச்சியை இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறையே கூட நசுக்க தவறிய போது, அமெரிக்க ஏகாதிபத்தியமும் எகிப்திய முதலாளித்துவமும் விருப்பமின்றி முபாரக்கை நீக்கியது, மற்றும் ஆயுதப்படைகளது உயர்குழுவின் (Supreme Council of the Armed Forces) வடிவத்தில், கூடுதல் "ஜனநாயகம்" கொண்டதாக கூறப்பட்ட, ஒரு புதிய இராணுவ ஆட்சியை நிறுவின.

மொஹ்மத் எல்பராடி போன்ற பிரபலங்களைப் பிரதிநிதித்துவம் செய்த தாராளவாத முதலாளித்துவவாதிகள், புதிய ஆட்சியை ஆதரித்தனர். அதில் புரட்சிகர சோசலிஸ்டுகள் போன்ற குட்டி-முதலாளித்துவ அமைப்புகளும் சேர்ந்து கொண்டன, அவை புதிய இராணுவ ஆட்சியாளர்களின் பின்னால் அணிதிரண்டிருந்ததுடன், அவற்றின் "ஜனநாயக" உள்நோக்கங்களையுமே கூட உறுதி செய்தன.

ஆனால் ஆரம்ப தந்திரோபாய மாற்றங்களால் புரட்சிகர மேலெழுச்சியை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. ஆளும் வர்க்கமும், வாஷிங்டனும் முஸ்லீம் சகோதரத்துவத்தின் பக்கம் திரும்பின, மொஹ்மத் முர்சியை அதன் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரத்திற்குக் கொண்டு வர ஏற்பாடுகள் செய்தன. அது [முஸ்லீம் சகோதரத்துவம்] பதவியேற்ற போது அதை புரட்சியின் "வெற்றியாக" ஊக்குவித்து, புரட்சிகர சோசலிஸ்டுகளும் மற்றும் அதைப்போன்ற தனிச்சலுகை கொண்ட மத்தியதர வர்க்கங்களது அமைப்புகளும் அப்போது முஸ்லீம் சகோதரத்துவத்திற்கு பின்னால் அணிதிரண்டன.

முதலாளித்துவ இஸ்லாமிய ஆட்சியின் வலதுசாரி கொள்கைகள், வெறுமனே தொழிலாள வர்க்கத்தின் கோபத்திற்கு எண்ணெய் வார்த்தன. 2013இல், எகிப்திய பாட்டாளி வர்க்கம் முர்சிக்கு எதிராக ஒரு கடுமையான தாக்குதலை நடத்தியது. 2011ஆம் ஆண்டு, 1,000க்கு மேற்பட்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை கண்டிருந்தது, அவை புரட்சிக்கு முந்தைய ஆண்டுகளில் நடந்ததை விட ஐந்து மடங்கு அதிகமாகும், இந்நிலையில் 2013 முதல் பாதி மட்டுமே 5,500 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

ஒரு புரட்சிகர மார்க்சிச தலைமையின்மையால், மக்களின் அரசியல் குழப்பத்தைச் சுரண்டி, ஆளும் வர்க்கம் முர்சிக்கு எதிரான ஒரு வெகுஜன மேலெழுச்சி என்ற போர்வையில் ஒரு எதிர்புரட்சிகர வேலைநிறுத்தத்தை தயார் செய்ய எதிர்வினையாற்றியது. தொழிலாள வர்க்க போராட்டங்களின் அதிகரித்துவந்த அலையால் ஸ்தம்பித்துப் போயிருந்த புரட்சிகர சோசலிஸ்டுகள் போன்ற குழுக்கள், இராணுவ-பின்புலத்திலான தமரோட் ("கிளர்ச்சி") இயக்கத்தை ஊக்குவிப்பதில் ஒரு மைய பாத்திரம் வகித்தன. அந்த இயக்கம் முர்சியை அதிகாரத்திலிருந்து நீக்க இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தது.

புரட்சிகர சோசலிஸ்டுகளும் மற்றும் "இடது" குழுக்கள் என்று கூறக்கொண்ட ஏனையவைகளும், முதலில் முபாரக்கை எதிர்த்த இவை, பின்னர் அல்-சிசி தலைமையிலான ஜூலை 13, 2013 ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரிப்பதில் தாராளவாதிகளுடன் சேர்ந்து கொண்டன. அல்-சிசி ஆட்சிக்கவிழ்ப்பு சதியை எதிர்த்த ஆயிரக் கணக்கானவர்களை வீதிகளில் படுகொலை செய்யவும், பத்து ஆயிரத்திற்கும் மேலானவர்களைக் கைது செய்யவும், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது பெரும் எரிபொருள் விலை உயர்வுகளைத் திணிக்கவும் தொடங்கினார்.

முபாரக்கை குற்றங்களில் இருந்து விடுவித்தல், இந்த எதிர்புரட்சிகர தாக்குதலின் விளைபொருளாகும். முபாரக்கின் கீழ் இருந்ததை விடவும் இன்னும் மேலதிகமாக ஏதேனும் காட்டுமிராண்டித்தனமான முறைகளை பிரயோகித்து, இராணுவ ஆட்சியை மீளமைப்பதே அதன் நோக்கமாகும்.

முன்னாள் காலனித்துவ நாடுகளின் முதலாளித்துவவாதிகளது எதிர்புரட்சிகர பாத்திரம், மீண்டுமொருமுறை, ஏகாதிபத்திய மையங்களில் இருப்பதை விட குறைவில்லாமல், எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களின் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில், மற்றும் எந்தவொரு நாட்டு புரட்சியையும் உலக சோசலிச புரட்சியுடன் தொடர்புபடுத்தும் ஒரு சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையில், முதலாளித்துவவாதிகளின் அனைத்து கன்னைகளுக்கு எதிராகவும், தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் ஒரு புரட்சிகர போராட்டம் இல்லாமல், பெருந்திரளான மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை கைவரப்பெறுவது சாத்தியமற்றதாகும்.

ஒரு புரட்சியின் போக்கில் தவிர்க்கவியலாமல், முதலாளித்துவவாதிகளின் ஆரம்பகட்ட ஜனநாயக பாசாங்குகள் என்னவாக இருந்தாலும் கூட, பெருந்திரளான மக்களைப் போராட்டத்திற்கு இழுத்து வந்த பிரச்சினைகளே முன்னுக்கு வருகின்றன. அவர்கள் தொடங்கிய போராட்டங்களில் இருந்து அவர்கள் ஏதோவொன்றைப் பெற முனைகிறார்கள், அதேவேளையில் அத்தகைய முறையீடுகள் அனைத்திற்கும் ஆளும் மேற்தட்டுக்களின் எதிர்ப்பு இன்னும் மேலதிகமாக வக்கிரமான வடிவத்தை எடுக்கிறது. புரட்சி முகங்கொடுக்கின்ற அரசியல் சவால்களில், மக்கள் இதுவரையில் வேலை செய்ததில்லை என்பதால், சமூக எதிர்நடவடிக்கையே பலத்தைப் பெறுகிறது மற்றும் அது இழந்த இடங்களை மீண்டும் கைப்பற்றிவிடுகிறது.

எகிப்திய புரட்சியின் இந்நாள் வரையிலான கசப்பான அனுபவம், எகிப்தில் மட்டுமல்ல, மாறாக சர்வதேச அளவில், தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்துவரும் மிக முக்கியமான பிரச்சினையைஅதாவது புரட்சிகர தலைமைக்கான நெருக்கடியை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின் மிகவும் பிரமாண்டமான மேலெழுச்சியே கூட, தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை கோரிக்கைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க முடியாது. ஆளும் வர்க்கங்களும் மற்றும் அவற்றின் முகவர்களும்அதாவது தனிச்சலுகை கொண்ட மத்தியதர வர்க்கத்தின் போலி-இடது அமைப்புகள் போன்றவைதொழிலாள வர்க்கத்தின் பழைய அதிகாரத்துவ தலைமைகளால்ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், தொழிற்சங்கம் ஆகியவற்றால்செய்யப்பட்ட வரலாற்று காட்டிக்கொடுப்புகளின் விளைவாக, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் குழப்பத்தை ஆதாயப்படுத்திக் கொள்கின்றன.

அதிகாரத்தை கைப்பற்றவும் மற்றும் முதலாளித்துவவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யவும், பாரிய போராட்டங்களை வழிநடத்த, தொழிலாள வர்க்கத்தில் ஆழமான வேரூன்றிய, ஒரு புரட்சிகர கட்சி கட்டப்பட வேண்டும்.

இதை மிக தெளிவாக விளங்கிக் கொண்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, எகிப்திய புரட்சியின் ஆரம்ப நாட்களிலேயே ஒரு சுயாதீனமான முன்னோக்கு கொண்ட தொழிலாள வர்க்கத்தினது அமைப்பின் அவசியத்தைக் குறித்து எச்சரித்தது. உலக சோசலிச வலைத் தளத்தில் பிப்ரவரி 10, 2011 வெளியிடப்பட்ட முன்னோக்கு பத்தியில், நாம் எழுதியது:

"முதலாளித்துவ கட்சிகளின் கவசத்தின் கீழ் அவர்களது ஜனநாயக அபிலாசைகளை எட்ட முடியுமென்ற தொழிலாளர்களிடையே நிலவும் அத்தனை பிரமைகளுக்கு எதிராகவும் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டாக வேண்டும். அத்துடன் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளது பொய்யான வாக்குறுதிகளையும் அவர்கள் இரக்கமின்றி அம்பலப்படுத்த வேண்டும். அரசியல் போராட்டம் தீவிரப்படும்போது, தொழிலாள வர்க்கத்துக்கு அதிகாரம் மாற்றப்படுவதற்கான அடிப்படையாக ஆகத்தக்க தொழிலாளர் அதிகாரத்தின் சுயாதீனமான உறுப்புகளை உருவாக்க அவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் அத்தியாவசியமான ஜனநாயகக் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதென்பது சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதிலிருந்து பிரிக்கவியலாததாகும் என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.

"அனைத்திற்கும் மேலாய், எகிப்திய தொழிலாளர்களின் அரசியல் அனுபவ எல்லைகளை, அவர்களது சொந்த நாட்டின் எல்லைகளைக் கடந்து புரட்சிகர மார்க்சிஸ்டுகள் உயர்த்த வேண்டும். எகிப்தில் இப்போது கட்டவிழ்ந்து வரும் போராட்டங்கள், உலக சோசலிசப் புரட்சிக்காக எழுந்து வரும் உலகளாவிய நிகழ்முறையுடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளன என்பதையும் மற்றும் எகிப்தில் புரட்சியின் வெற்றிக்குத் தேவை ஒரு தேசிய மூலோபாயம் அல்ல, மாறாக சர்வதேசிய மூலோபாயமாகும் என்பதையும் அவர்கள் விளங்கப்படுத்த வேண்டும். ... இந்த உலகளாவிய போராட்டத்தில், பெருந்திரளான எகிப்திய மக்களின் பிரிக்கவியலாத மாபெரும் கூட்டாளிகள் என்றால் அது சர்வதேச தொழிலாளர் வர்க்கம் தான்."

இந்த வரிகள் முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எகிப்திய புரட்சியின் கசப்பான அனுபவம், தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமான புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்பும் போராட்டத்தை எடுக்க ஒரு தூண்டுபொருளாக ஆக வேண்டும். எகிப்திலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கம் முங்கொடுக்கும் தீர்க்கமான கேள்வி, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டமைப்பதாகும்.