சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP holds press conference to announce its presidential campaign

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அதன் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தினை அறிவிக்க செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தியது

By our correspondents
29 November 2014

Use this version to printSend feedback

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோசக), ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலில் அதன் தலையீடு சம்பந்தமாக அறிவிக்கவும் அதன் வேட்பாளரான சோசக அரசியல் குழு உறுப்பினர் பாணி விஜேசிறிவர்தனவை அறிமுகப்படுத்தவும், புதன் கிழமை கொழும்பு தேசிய நூலக மாநாட்டு மண்டபத்தில் ஊடகவியாலளர் மாநாடொன்றை நடத்தியது. ஆங்கில வாராந்திர பத்திரிகையான சண்டே டைம்ஸ், ஆங்கில-தினசரியான சிலோன் டுடே மற்றும் மவுபிம, லங்காதீப மற்றும் லக்பிம போன்ற சிங்கள நாளிதழ்களில் இருந்தும் செய்தியாளர்கள் வந்திருந்தனர். சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் விஜே டயஸ் இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்தார்.

செய்தியாளர் மாநாட்டை ஆரம்பித்த டயஸ், தேர்தலானது இலங்கை ஆளும் வர்க்கத்திற்குள் காணப்படும் ஆழ்ந்த பிளவுகளை வெளிப்படுத்தியுள்ளது என்று விளக்கினார். "இந்த தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ போட்டியிடுவதன் சட்டபூர்வ மற்றும் அரசியலமைப்பு ரீதியான நியாயம் பற்றி கடந்த வாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இது முதலாளித்துவ ஆட்சியின் பிரமாண்டமான அரசியல் நெருக்கடியின் ஒரு வெளிப்பாடு ஆகும்," என்று அவர் கூறினார்.

இலங்கை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்து பிரிந்து தேர்தலில் "எதிர்க்கட்சி பொது வேட்பாளராக" இராஜபக்ஷவை சவால் செய்ய முடிவெடித்தமை பற்றி அவர் சுட்டிக் காட்டினார். சிறிசேன ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார்.

இந்த சுருக்கமான தேர்தல் பிரச்சார காலமானது, இலங்கையின் வரலாற்றில் ஒரு பிரதானாமான தேர்தலில் மிகவும் குறுகிய காலத்தை குறிப்பதோடு மேலும் இலங்கையின் ஆளும் உயரடுக்கின் தீவிர பிளவுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, என்று டயஸ் கூறினார்.

"இதற்கு பின்னால் உலக அரசியல் நிலைமையின் ஆழமடைந்துவரும் நெருக்கடியே உள்ளது," என டயஸ் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் மீண்டும் மனித குலத்தை மற்றொரு உலகப் போர் அழிவுக்குள் தள்ளிவிட உள்ளது என்று அவர் விளக்கினார். தனது பூகோள மூலோபாயத்திற்கு ஏற்ப, வாஷிங்டன் அதன் "ஆசியாவில் முன்னிலை" கொள்கைக்குள், அதாவது சீனாவுக்கு எதிரான இராணுவத் தயாரிப்புக்களுக்குள், இலங்கை உட்பட ஆசிய நாடுகளை ஒருங்கிணைக்க செயற்படுகின்றது.

 சீனாவுடனான தனது அரசாங்கத்தின் நெருக்கமான உறவுகளை முறித்துக்கொண்டு முழுமையாக வாஷிங்டனின் பூகோள அரசியல் மூலோபாயத்தை தழுவிக்கொள்ள வேண்டும் என இராஜபக்ஷவை நெருக்குவதற்காக, அமெரிக்க, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, இலங்கை இராணுவம் செய்த போர் குற்றங்கள் பயன்படுத்தி வருகின்றது, என்று டயஸ் விளக்கினார்.

தனது "ஆசியாவில் முன்னிலை" கொள்கையுடன் கொழும்பு இணைந்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கோருவதே, இப்போது இராஜபக்ஷ அரசாங்கம் எதிர்கொள்ளும் நெருக்கடியின் பின்னால் உள்ள காரணியாகும், என பேச்சாளர் கூறினார்.

 "அமெரிக்காவை தளமாகக் கொண்ட கிளின்டன் மன்றத்தின் ஒரு பிரதிநிதி என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இலங்கை அரசாங்கத்தினுள் நடந்த பிளவில் [சிறிசேன வெளியேற்றம்] ஒரு முக்கிய பங்கு ஆற்றியுள்ளார். வரும் தேர்தலில் மற்றும் அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியில் தலையிடுவது எப்படி என்பது பற்றி பல மேற்கத்தைய இராஜதந்திரிகளுடன், பல்வேறு எதிர்க்கட்சிகள், குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ), பேச்சு நடத்தியதாக ஊடகங்கள் கூட செய்தி வெளியிட்டிருந்தன."

ஏகாதிபத்திய உலக யுத்த அச்சுறுத்தல், மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் பொருட்டு, சோசலிச சமத்துவக் கட்சி தனது சொந்த ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துகிறது என்று பத்திரிகையாளர்களிடம் டயஸ் கூறினார்.

இந்த முன்னோக்கு மட்டுமே இந்த நெருக்கடிக்கு ஒரே முற்போக்கான தீர்வு என கூறிய டயஸ், சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவை அறிமுகப்படுத்தினார். கடந்த 30 ஆண்டுகளாக சோசலிசத்திற்காக அர்ப்பணிப்புடன் போராடிய விஜேசிறிவர்தன, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் முக்கிய உறுப்பினராவார். அவர் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார். அவர் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களின் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் மற்றும் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களின் தாக்குதல்களுக்கு எதிராகவும் இடைவிடாமல் போராடுபவராக அறியப்பட்டவராவார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரமானது, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பூகோள போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சக சிந்தனையாளர்களின் ஒத்துழைப்புடன் கட்சி முன்னெடுக்கும் அரசியல் போராட்டத்தின் ஒரு பாகமாகும், என்று விஜேசிரிவர்தன சுட்டிக்காட்டினார். சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரமானது வளர்ச்சியடைந்து வரும் உலகப் போர் அச்சுறுத்தல் பற்றி மக்களை இருட்டில் வைக்க முயற்சிக்கும், ஏனைய அனைத்து கட்சிகள் மற்றும் ஊடகங்களுக்கும் எதிரானதாகும், என்று அவர் கூறினார்.

இலங்கையின் தனி நபர் தலா வருமானம் உயர்வது பற்றி இராஜபக்ஷ பெருமைப்பட்டுக்கொள்வதற்கு மாறாக, சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமை வளர்ந்து வருவதை சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் விளக்கினார். "சமூக சமத்துவமின்மையை அளக்கும் இலங்கையின் கினி மதிப்பீடு, 1990-91ல் 0.34 என்ற குறைந்த அளவில் இருந்து 2012ல் 0.40 வரை அதிகரித்துள்ளது. உயர் மட்டத்தில் உள்ள 20 சதவீதமானோர் நாட்டின் தேசிய வருமானத்தில் 53.5 சதவீதம் பெறுகின்ற அதேவேளை, கீழ் மட்டத்தில் இருக்கும் 20 சதவீதத்தினர் வெறும் 4.4 சதவிகிதத்தையே பெறுகின்றனர். இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் எதிர்கொள்ளும் உண்மையான நிலைமை இதுவே ஆகும்."

இராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் மேலும் சமூக சமத்துவமின்மை அதிகரிக்கும் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்று, விஜேசிரிவர்தன விளக்கினார். சர்வதேச நாணய நிதியமானது வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 வீதமாகவும், 2015 ஆம் ஆண்டின் இறுதியில் 3.8 சதவிகிதமாகவும் குறைக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.சிறிசேன தேர்தலில் வெற்றி பெற்றாலும், அவரும் அதே சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்வார். எந்த கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும், தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் முதலாளித்துவத்தின் கீழ் அதே சிக்கன நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரும்" என்று அவர் கூறினார்.

“அதனாலேயே, நாங்கள் முதலாளித்துவத்தை தூக்கி வீசி, உற்பத்தி சாதனங்களை தொழிலாள வர்க்கத்தின் பொது உடைமையின் கீழ் வைக்கும் ஒரு சோசலிச அமைப்பு முறையை ஸ்தாபிக்காமல், உழைக்கும் மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்பட முடியாது, என்று நாம் விளக்குகிறோம். இல்லேயேல், உலக யுத்தம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் முன்னெடுக்கும் சமூக எதிர்-புரட்சி தாக்குதல்களை எவராலும் தடுக்க முடியாது" என அவர் தெரிவித்தார்.

 இராஜபக்ஷ, பொது வேட்பாளர் எனப்படும் சிறிசேன மற்றும் போலி இடதுகளான நவ சமசமாஜக் கட்சி (நசசக), ஐக்கிய சோசலிசக் கட்சி (USP) மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் எதிராக, இந்த தேர்தலில் தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவம் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும், என்று விஜேசிரிவர்தன கூறினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை பற்றிய கட்சியின் நிலைப்பாடு சம்பந்தமான ஒரு கேள்விக்கு பதில் அளித்த டயஸ், "வெறுமனே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மட்டும் அல்ல, முழு முதலாளித்துவ ஒழுங்கையே மாற்றீடு செய்ய வேண்டும், அது ஒரு புரட்சிகர மாற்றமாகும், நாம் சோசலிசத்திற்கு போராடும் ஒரு புரட்சிகர கட்சியாகும், என விளக்கினார்.

"1972 மற்றும் 1978 ல் செய்யப்பட்டது போல்... தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக போலியாக மாற்றுவதற்காக அன்றி, குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்படும் ஒரு புதிய அரசியலமைப்பு நிர்ணய சபை மூலம் உருவாக்கப்படும் ஒரு புதிய அரசயலமைப்பை வரைவதை பரிந்துரைக்கின்றோம். முழு முதலாளித்துவ ஒழுங்கை தூக்கியெறியும் ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் மீது தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காக கட்சி முன்னெடுக்கும் போராட்டத்தின் பாகமாக, சோசலிச சமத்துவக் கட்சி ஒரு அரசியல் நிர்ணய சபைக்கான கோரிக்கையையும் முன்வைக்கின்றது."

"எதிர்க்கட்சி பொது வேட்பாளர்" சிறிசேன பற்றி கட்சியின் நிலைப்பாட்டை கேட்கப்பட்ட போது, சோசலிச சமத்துவக் கட்சி "பொது வேட்பாளருக்கு" எந்தவித அரசியல் ஆதரவும் கொடுக்கவில்லை, மற்றும் அவரை இராஜபக்ஷவை விட எந்தவிதத்திலும் சிறந்தவராக கருதவில்லை என டயஸ் தெளிவுபடுத்தினார்.

"சிறிசேன, இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் கணிசமான பிரிவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஒரு முதலாளித்துவ வேட்பாளர் மற்றும் வலதுசாரி யூஎன்பீயின் ஆதரவைக் கொண்டவர்," என டயஸ் தெரிவித்தார். நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, சமீப காலம் வரை யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை 'சிறந்த பொது வேட்பாளராக' முன்னிலைப்படுத்தி வந்ததையும் டயஸ் சுட்டிக் காட்டினார். "அவர்கள் முதலாளித்துவத்தின் ஊது குழல்களாக ஆகியுள்ளனர்," என்று அவர் கூறினார்.

நவம்பர் 27, சிலோன் டுடே பத்திரிகை சோசலிச சமத்துவக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு பற்றி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. தனியாருக்கு சொந்தமான தமிழ் மொழி வானொலி சேவையான சூரியன் எஃப்.எம், புதன் இரவு, அதன் பிரதான செய்தியில், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது.