சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

Escalating tensions between Russia and the West over Balkan energy

பால்கன் எரிசக்தி வளத்தின் மீது ரஷ்யாவுக்கும் மேற்கிற்கும் இடையே பெருகிவரும் பதட்டங்கள்

By Paul Mitchell
12 December 2014

Use this version to printSend feedback

ரஷ்யாவிலிருந்து கருங்கடலுக்கடியில் பால்கன் வழியாக மத்திய ஐரோப்பாவிற்கு எரிவாயு கொண்டு வரும் சௌத் ஸ்ட்ரீம் (South Stream) எரிவாயு குழாய்த் திட்டத்தை ரஷ்ய அரசுத்துறை எரிசக்தி நிறுவனம் காஸ்போரோம் இரத்து செய்துவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டின் டிசம்பர் 1 அன்று அறிவித்தார். இது ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே அதிகரிக்கும் பதட்டங்களின் இன்னொரு அறிகுறியாக இருக்கிறது இப்பதட்டங்கள் பால்கன் பிராந்தியத்தை கணிசமான அளவிற்கு பாதித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் கடந்த சில வருடங்களாகவே சௌத் ஸ்ட்ரீம் குழாய் வழித்தடத்தை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தன, ஐரோப்பா, ரஷ்ய எரிசக்தி விநியோகத்தை சார்ந்திருப்பதை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக அவை அதைக் கண்டு வருகின்றன. உக்ரேன் அரசாங்கத்தை கவிழ்த்த, அமெரிக்க மற்றும் ஜேர்மனியினால் திட்டமிடப்பட்ட ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர், இத்தகைய நகர்வுகள் வேகப்படுத்தப்பட்டன.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஐரோப்பிய நாடாளுமன்றம் குழாய் வழித்தடத்திற்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் பல்கேரியா ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏகபோகத்துவத்திற்கு எதிரான சட்டங்களை மீறி விட்டதாக கூறி, ஐரோப்பிய கமிஷன் அந்த திட்டத்தின் வேலையை நிறுத்த பல்கேரியாவை நிர்பந்தித்தது. சேர்பியாவும் மாசிடோனிய குடியரசும் (FYROM) முழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் ஆக விரும்பினால் அவற்றின் ஒப்பந்தங்களிலிருந்து பின்வாங்குமாறும், அல்லது அவற்றை மறுபரிசீலனை செய்யுமாறும் எச்சரிக்கப்பட்டன.

ஐரோப்பாவிற்கான ரஷ்யாவின் எரிவாயு விநியோகத்தில், எடுத்துச் செல்வதற்குரிய ஒரு பிராந்தியமாக உக்ரேனை சார்ந்திருப்பதை குறைக்கும் அதன் முயற்சியில், சௌத் ஸ்ட்ரீம் குழாய் வழித்தடம் ஒரு மிகப் பெரிய உட்கூறாக இருந்தது. முன்னாள் யூகோஸ்லாவியா உடைந்ததை தொடர்ந்து, அப்பிராந்தியத்தின் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் சேர்ந்ததால், பால்கன் பிரதேசத்தில் ரஷ்யா அதன் செல்வாக்கைத் தக்க வைப்பதற்கும் அது உதவியாக இருந்தது.

சேர்பியாவுடன் ரஷ்யாவின் உறவுமுறை மிக முக்கியமாக இருந்துள்ளது. அக்டோபரில், சோவியத் செம்படையால் பெல்கிராட் விடுதலை அடைந்ததன் 70ஆம் ஆண்டுகளை குறிக்கும் கொண்டாட்டங்களில் புட்டின் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார், அத்துடன் நவம்பர் மத்தியில், முன் எப்பொழுதும் இல்லாத சேர்பிய-ரஷ்ய கூட்டு இராணுவ ஒத்திகை நடத்தப்பட்டது. ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தடைகளை ஆதரிக்க சேர்பியா மறுத்துவிட்டது, என்றபோதிலும் பெல்கிராட்டில் புட்டின் இருந்தபோதே சௌத் ஸ்டீரீம் மீதான இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அது மறுத்துவிட்டதுஅது ரஷ்யாவுக்கும் மேற்கிற்கும் இடையே சமநிலை கொள்வதில் அதற்கு அதிகரித்துவரும் சிரமத்தின் ஓர் அறிகுறியாகும்.

பொஸ்னியா-ஹேர்ஸெகோவினாவில் (BiH) ஐரோப்பிய ஒன்றிய அமைதி படையை விஸ்தரிப்பதன் மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கடந்த மாதம் நடந்த வாக்கெடுப்பை, ரஷ்யா முதல்முறையாக தவிர்த்திருந்தது. பாதுகாப்பு துறையில் ஒரு சர்வதேச பிரசன்னம் கொள்வதற்கு நாங்கள் எதிராக உள்ளோம், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அந்நாட்டை ஒருங்கிணைப்பதை வேகப்படுத்தும் ஒரு வழிவகையாக அதை பார்க்கலாம் என்று ஐக்கிய நாடுகளுக்கான ரஷ்ய தூதர் விடாலி சுர்கின் அறிவித்தார்.

பால்கனுக்குள் நேட்டோ அதன் உறுப்பினர் சேர்க்கையை விஸ்தரித்துள்ளது, மேலும் மூன்று நாடுகளும்பொஸ்னியா-ஹேர்ஸெகோவினா, மாசிடோனியா குடியரசு (FYROM), மற்றும் மொண்டினெக்ரோ ஆகியவையும்—உறுப்பினராக விண்ணப்பித்துள்ளன. அப்பிராந்தியத்தில் நேட்டோ விஸ்தரிப்புக்கு எதிராக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரிக்கை செய்துள்ளார், அது ரஷ்யாவிற்கான ஒரு ஆத்திரமூட்டலாக மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் ஒரு அச்சுறுத்தலாக பார்க்கப்படக் கூடும்.

"ஐரோப்பிய ஒன்றியத்தில் புட்டினிச கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே நாடாக" ஜேர்மானிய வெளியுறவு மந்திரி ஜோஷ்கா பிஷ்ஷரால் வர்ணிக்கப்பட்ட ஹங்கேரியின் விக்டொர் ஓர்பனின் ஆதரவை பெறவும், மொண்டினெக்ரோவில் அதன் Bar துறைமுகத்தில் ரஷ்ய கடற்படையை நிறுத்த அனுமதிக்க அதற்கு அழுத்தம் அளித்தும், கொசோவோவை மறுபங்கீடு செய்ய பரிந்துரைத்தும், சேர்பியர்கள் அதிகம் உள்ள வடக்கு பகுதியை சேர்பியாவுக்கும், இனரீதியில் பெரும்பான்மை அல்பானியர்களின் தாயகமாக விளங்கும் பிரேசேவோ பள்ளத்தாக்கை கொசோவோவுக்கு மாற்றுவதற்கும், ரஷ்யா முயன்று வருகிறது.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கூட பால்கனில் அவற்றின் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய விவகாரங்களுக்கான செனட் வெளியுறவு துணைக்குழு தலைவரான அமெரிக்க செனடர் கிறிஸ் மர்பி, அக்டோபரில் ஒரு வார கால பால்கன் பயணம் செய்த பின்னர் கூறுகையில், "கடந்த தசாப்தத்தின் போக்கில், ஆண்டுக்கு ஆண்டு, பால்கனில் அமெரிக்காவின் ஆர்வமும் அக்கறையும் ஒரே சீராக குறைந்துள்ளது" என அறிவித்தார்.

பால்கனிலிருந்து தூரவிலகுவது ஒரு பிழையாகும், இது மாறவில்லையானால் அனேகமாக ஒரு மரணகதியிலானதாகும், ஏனென்றால், அப்பட்டமாக கூறுவதானால்...ரஷ்யா நமது இடத்தை எடுத்துக்கொள்ள தயாராக, வாசற்படியிலேயே காத்துக் கொண்டிருக்கிறது," என்றவர் எச்சரித்தார்.

குறிப்பாக அவர், "சைபீரியாவும் ஒட்டுமொத்த பால்கன் பிராந்தியமும் ரஷ்ய எரிசக்தியை சார்ந்திருப்பதை அதிகரிக்கிறது ... மேலும் ரஷ்யா சேர்பியாவுடன் அதன் இராணுவ கூட்டணியமைப்பை விரிவாக்க முனைகிறது என்ற பேச்சே இன்னும் அபாயகரமாக உள்ளது..." எனக் கூறி அவர் குறிப்பாக சௌத் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வழித்தடத்தின் மீது கவனத்தைக் கொண்டு வந்தார்.

அப்பிராந்தியத்திற்கு ஒபாமா நிர்வாகத்தின் உயர்மட்ட குழு விஜயம் செய்வது, அமெரிக்க பொருளாதார உதவிக்கான வெட்டுக்களை இரத்து செய்வது, நேட்டோ உறுப்பினர் சேர்க்கைக்கு வேகப்படுத்துவது மற்றும் உக்ரேனில் செய்ததைப் போல ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினராக சேர்க்கும் நிகழ்முறையை "குழப்பாமல் இருக்க" கூடுதலாக அழுத்தம் அளிப்பது ஆகியவற்றிற்கு மர்பி அழைப்புவிடுத்தார்.

பால்கனில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இன்னும் தீவிரமான தலையீட்டின் அவசியம் என்பது, ஜோஷ்கா பிஷ்ஷெசர் மற்றும் முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மற்றும் பால்கனுக்கான ஐநா தூதர் மார்ட்டி அஹ்டிசாரி தலைமையிலான வெளிநாட்டு உறவுகளுக்கான ஐரோப்பிய கவுன்சில் சிந்தனை கூடத்தின் ஒரு சமீபத்திய அறிக்கை ஒன்றின் விடயமாகவும் இருந்தது. ஏனைய சர்வதேச நெருக்கடிகளுடன் (மற்றும் அதன் சொந்த நெருக்கடியினாலும்) ஐரோப்பிய ஒன்றியம் மாட்டிக் கொண்டிருக்கையில், ரஷ்யாவோ அதன் செல்வாக்கு வலையை ஒரு பிராந்தியம் முழுவதும் திறமையாக பரப்பி கொண்டிருக்கிறது, அதன்மூலம் அது கணிசமான அளவு நெம்புகோல்களை பிடிப்பில் பெறுகிறது... என்று அந்த அறிக்கை எச்சரித்தது

அதைப் போலவோ அல்லது வேறுவிதத்திலோ, ஐரோப்பியர்களும் சமநிலைப்படுத்தும் வேறு சாதுரியமான முறைகளில் இறங்க வேண்டியுள்ளது மற்றும் மேற்கத்திய பால்கன்களாக வரையறை செய்யும் நடப்பு அதிகார வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஒரு மூலோபாயத்தை வெகு விரைவாக கொண்டு வர வேண்டும். புதிய ஐரோப்பிய ஒன்றிய தலைமை... மேற்கத்திய பால்கன்களில் ஐரோப்பிய ஒன்றியம் ஈடுபடுவதற்காக ஒரு தைரியமான கொள்கையை மீட்டமைக்கும் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும்."

ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. ஆகஸ்ட் கடைசியில், அந்த பிராந்தியத்தை "ஸ்திரப்படுத்துவதற்கு" மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்துவதற்கு ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் பால்கன் நாடுகள் குறித்து ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தினார். இந்த மாதம், பொஸ்னியா-ஹேர்ஸெகோவினாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக்கும் நிகழ்முறை குறித்து விவாதிக்க, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் Federica Mogherini, அண்டைநாடுகள் மற்றும் விரிவாக்கம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தும் கமிஷனர் ஜொகான்னஸ் ஹான் ஆகியோர் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்கள். பொது நிர்வாகத்திற்கு சிறுபான்மையினர் போட்டியிட அனுமதிப்பதற்கு அரசியலமைப்பு மசோதா திருத்தப்பட வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய கோரிக்கையின் காரணமாக அது தடைப்படுகிறது. அரசியலமைப்பு மாற்றங்களை ஒத்திவைப்பதன் மூலம் உறுப்பினராக சேர்ப்பதை வேகப்படுத்த முடியுமென ஒரு சமீபத்திய ஜேர்மானிய பிரிட்டிஷ் முனைவு ஆலோசனை தெரிவித்தது

அதேவேளையில் பொஸ்னியா-ஹேர்ஸெகோவினாவில், அதன் சொந்த நலன்களை வலியுறுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உரிமையை அறிவிப்பதற்கு முன்னதாக, பால்கனிலிருந்து ரஷ்யாவை விலகச் செய்ய வேண்டுமென Mogherini தெரிவித்தார். அனைத்து மேற்கத்திய பால்கன் நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு எதிர்காலம் இருக்கிறது என்று நாங்கள் எப்பொழுதும் கூறுகிறோம், உரிமையாளர் என்ற உணர்வுடன், ஒன்றிணைந்து, அதை நாங்கள் இப்போது உண்மையாக்க வேண்டும்" என்றவர் கூறினார்.

ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளும் கூட கொசோவோ சென்றிருக்கிறார்கள், அது தேர்தலுக்கு ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு பின்னரும் கூட இன்னும் அமையவில்லை. அரசியல்வாதிகளுக்கான என்னுடைய செய்தி தெளிவானது, நான் அதை அல்பானிய மொழியில் கூட கூறுவேன், Mos e dhi punen (தூண்டி விடாதீர்கள்) என்று அமெரிக்க தூதர் டிரேசி ஆன் ஜேகப்சன் அறிவித்தார்.

கொசோவோ அது போன்று செய்வதைத் தடுக்கும், இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடுகளாக உள்ள ஐந்து நாடுகளை சம்மதிக்க செய்தவதே ஓர் உயர் முன்னுரிமையாகுமென ஹான் தெளிவுபடுத்தினார்.