சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

European Union ramps up sanctions against Russia amid ruble crisis

ரூபிள் நெருக்கடிக்கு இடையே ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் அதிகரிக்கிறது

By Alex Lantier
20 December 2014

Use this version to printSend feedback

ரஷ்ய செலாவணி பொறிவின் தாக்கங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பிளவுகள் அதிகரித்து வருவதற்கு இடையே, புருசெல்ஸில் நடந்த இரண்டு நாள் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு, கிரிமியாவில் வணிகங்கள் செயல்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தடைகளை விதித்து ரஷ்யாவுடனான ஐரோப்பாவின் மோதலை அதிகரித்தது.

வியாழனன்று ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு தொடங்கிய போதே, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ரஷ்யாவைத் தண்டிக்கும் வகையில் அதன் மீது பெருமளவிற்கு புதிய தடைகளை விதிக்க வாஷிங்டனை அனுமதிக்கும் புதிய சட்ட மசோதாவில் கையெழுத்திட்டார். ரஷ்ய பொருளாதாரத்திற்கு கடன் வழங்கக்கூடாதென ஏற்கனவே அமுலில் உள்ள தடைகளின் தாக்கமே, அதை முடமாக்கி கொண்டிருக்கிறது. ரஷ்ய செலாவணி இந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிராக அதன் மதிப்பில் சுமார் பாதியளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது, ரஷ்ய பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5 சதவீதத்திற்கு சுருங்கக்கூடுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்ய அரசினது பொறிவின் தாக்கங்கள் குறித்து ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தில் கவலைகள் நிலவி வருகின்றன, அத்தகைய ஒரு நிலை ஐரோப்பிய பொருளாதார பொறிவையும், யுத்தத்தையும் கொண்டு வர அச்சுறுத்துகின்றன. ஆஸ்திரியாவிலிருந்து, Wiener Zeitung எழுதியது: “ரஷ்யாவில் நிலவும் பொருளாதார கொந்தளிப்பு ஐரோப்பாவின் கவலைக்கு ஒரு காரணமாகி வருகிறது. ரஷ்ய அரசின் பொறிவு ஒரு பெரும் ஆபத்தாகுமா என முன்னணி அரசியல்வாதிகள் தங்களைத் தாங்களே வினவி வருகின்றனர். இத்தாலி போன்ற ஒருசில குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகள், சில காலத்திற்கு தடைகளைத் தளர்த்த முன்மொழிந்து வருகின்றன.”

ஆனால் பேரழிவுகரமான விளைவுகள் சாத்தியமாகும் என்பதற்கு இடையிலும், ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு அமெரிக்க கொள்கை உடன், அதாவது கிரெம்ளின் யுரேஷியாவில் அமெரிக்க-நேட்டோ மேலாதிக்கத்திற்கு அடிபணிந்தால் ஒழிய, ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்திற்காக பொருளாதார போரை நடத்துவதென்ற நிலைப்பாட்டுடன் தரப்பெடுத்துள்ளது. உச்சிமாநாட்டில் மேலாளுமை செலுத்திய சக்திகள், மாஸ்கோ கியேவில் உள்ள தீவிர-வலது, மேற்கத்திய-சார்பு ஆட்சிக்கு அதன் அனைத்து எதிர்ப்பையும் கைவிடும் வரையில் தடைகளை நீடித்து வைக்க வேண்டுமென கோரின.

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் கூறுகையில், கடந்த பெப்ரவரியில் கியேவில் நேட்டோ-ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் முதன்முதலில் கொண்டு வரப்பட்ட தடைகள் அமுலில் இருக்க வேண்டுமென தெரிவித்தார். “குறிப்பிட்ட காரணங்களுக்காக தடைகள் விதிக்கப்பட்டன, அந்த காரணங்கள் பொருந்தாமல் போகும் போது மட்டுமே அவற்றை நீக்கிக் கொள்ளலாம்,” என்றார்.

இது அதற்கு முந்தைய நாள் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Bundestag) அவர் கூறிய கருத்தை எதிரொலித்தது. கிழக்கு உக்ரேனில் கியேவ் ஆட்சிக்கு சார்பான பாசிச போராளிகள் குழுக்களால் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் பரவலாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்ற போதினும் கூட, மேர்க்கெல் வலியுறுத்துகையில் "பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டின் கிழக்கு பகுதிகளுக்கு" கியேவ் ஆதரவு சக்திகள் "அவற்றின் சொந்த நிவாரண வினியோகங்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்" என்றார். இந்த விவகாரத்தில் ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைக்கும் வரையில், “தடைகள் தவிர்க்கவியலாமல் நீடிக்கும்” என்றவர் தொடர்ந்து கூறினார்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூனும் அந்த உச்சிமாநாட்டில் ஒரு கடுமையான போக்கிற்கு அழுத்தமளித்தார். அவர் அறிவிக்கையில், கிரெம்ளின் "உக்ரேனிலிருந்து ரஷ்ய துருப்புகளை வெளியேற்றி, மின்ஸ்க் உடன்படிக்கையின் [கியேவ் மற்றும் கிழக்கு உக்ரேனிய பிரிவினைவாதிகளுக்கு இடையிலான போர் நிறுத்தம்] எல்லா நிபந்தனைகளுக்கும் அது பணிந்தால், இந்த தடைகள் நீக்கப்படும்,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவரும் முன்னாள் போலாந்து பிரதமருமான டோனால்டு டஸ்க் கூறுகையில், “நாம் எதிர்வினையாற்றுவது மற்றும் தற்பாதுகாப்பில் ஈடுபடுவதற்கும் அப்பால் செல்ல வேண்டும். ஐரோப்பியர்களாக நாம் நமது சுய-நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும் மற்றும் நமது சொந்த பலங்களைக் கைவரப்பெற வேண்டும்,” என்றார். அவர் ரஷ்யாவை ஐரோப்பாவிற்கான ஒரு "மூலோபாய பிரச்சினையாக" குறிப்பிட்டார்.

ரஷ்யாவுடன் நேட்டோ அதிகாரங்களின் மோதலினால் ஐரோப்பாவிற்குள் அதிகரித்துவரும் பிளவுகளை டஸ்க் மறைமுகமாக சுட்டிக்காட்டினார், இதை பிரான்சும் இத்தாலியும் பகிரங்கமாகவே அந்த உச்சிமாநாட்டில் சாடியிருந்தன. அவர் அறிவித்தார், “ரஷ்யாவை நோக்கி ஒரு ஏற்புடைய, நிலையான ஒருங்கிணைந்த ஐரோப்பிய மூலோபாயமின்றி உக்ரேனுக்கான ஒரு நீண்டகால முன்னோக்கை நம்மால் காண முடியாது... இன்று நாம் திடமான நம்பிக்கையில் இல்லாமலும் கூட இருக்கலாம். ஆனால் நாம் திடமான நம்பிக்கையுடன் இல்லையென்றாலும், யதார்த்தமாக இருக்க வேண்டும்.”

டிசம்பர் 6 அன்று பேச்சுவார்த்தைகளுக்காக மாஸ்கோவிற்கு பயணித்திருந்த பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் கூறுகையில், ரஷ்யா உடனான ஒரு உடன்பாடு சாத்தியமாகும் என்று அறிவித்ததுடன், நிலைமையை அமைதிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்புவிடுத்தார். “நாம் எதிர்பார்ப்பதைப் போன்ற நகர்வுகளை ரஷ்யா எடுத்திருந்தால், இன்று மேற்கொண்டும் தடைகள் விதிக்க அங்கே எந்த காரணமும் இருந்திருக்காது... மாறாக, எவ்வாறு தீவிரத்தைக் குறைக்க தொடங்குவது என்பதைக் குறித்தும் நாம் ஆராய்வது சிறந்ததென நான் கருதுகிறேன்,” என்றார்.

இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ரென்சி, “புதிய தடைகள் முற்றிலுமாக கூடாது" என்பதே அவரது நிலைப்பாடென்று தெரிவித்தார்.

வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் நிதியியல்ரீதியாக ரஷ்யாவின் குரல் வளையை நசுக்கும் ஒரு கொள்கையை விமர்சித்து Der Spiegelக்கு பேட்டி அளித்திருந்த நிலையில், நேற்று ஜேர்மன் அரசாங்கத்திற்குள்ளும் பிளவுகள் எழுந்தன. அந்த இதழ் எழுதியது: “ரஷ்யாவைப் பொருளாதாரரீதியில் நிர்பந்தித்து அடிபணிய செய்ய நினைப்பவர்கள், அது ஐரோப்பாவில் கூடுதல் பாதுகாப்புக்கு இட்டுச் செல்லுமென கருதினால், அவர்கள் அபாயகரமாக தவறிழைக்கிறார்கள். 'இது குறித்து என்னால் எச்சரிக்க மட்டுமே முடியும்' என்று ஸ்ரைன்மையர் தெரிவித்தார். அவர் மேற்கொண்டு தடைகள் விதிப்பதற்கு எதிராக இருப்பதாக நேரடியாகவே தெரிவித்தார். 'அதனால் தான் மேற்கொண்டும் தடைகளை அதிகரிப்பதற்கு எதிராக இருக்கிறேன்,' என்று வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார்.”

இருந்தபோதினும் ரஷ்யாவைச் சுற்றி பொருளாதார பிடியை இறுக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவு, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வரலாற்று திவால்நிலையையும், அதன் ஆளும் மேற்தட்டின் அவநம்பிக்கை மற்றும் அடாவடித்தனத்தையும் நிரூபிக்கிறது. ஓராண்டுக்கு முன்னர், பொருளாதார பொறிவையும் அவற்றின் சிக்கன கொள்கைகளுக்கு தொழிலாளர் வர்க்கத்திடையே அதிகரித்துவருந்த எதிர்ப்பையும் முகங்கொடுத்திருந்த நிலையில், அவை உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவுடன் ஒரு மோதலைத் தொடங்கின. இப்போது அந்த சாகசம் ஐரோப்பாவையும், உலகையுமே இன்னும் அதிகமாக நிதியியல் மற்றும் இராணுவ மோதலின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் வெடிப்பார்ந்த சூழல் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டை தொந்தரவுக்குள்ளாக்கியது, அதில் பங்கெடுத்தவர்கள் புருசெல்ஸின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக போராட்டக்காரர்களை அணுகாதவாறு, அது வெளியன்று அதிகாலை வெடித்தது.

நான்கு நாட்களுக்குப் பின்னர் பெல்ஜியத்தில் நடந்த கடைசி நாள் பொது வேலைநிறுத்தத்தில், விவசாயிகளும் வேளாண்துறை தொழிலாளர்களும் புருசெல்ஸின் புறநகர் பகுதிகளை டிராக்டர்களைக் கொண்டு முற்றுகையிட்டு பொலிஸை எதிர்த்து நின்றனர். பெல்ஜியம் அரசாங்கத்தின் சமூக நலத்திட்ட குறைப்புகள் மீதும், பெல்ஜியத்தின் இரண்டாம் உலக போர் காலத்திய நாஜி ஒத்துழைப்பு ஆட்சிக்கு உயர்மட்ட அதிகாரிகள் காட்டும் ஆதரவின் மீதும் கோபம் நிலவி வருகிறது.

ரஷ்யா மீதான தடைகளின் தாக்கம் ஐரோப்பா மற்றும் உலக பொருளாதாரம் முழுவதிலும் பரவுகையில், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைய உள்ளது.

ஜேர்மன் தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்பின் (DIHK) வோல்கர் ட்ரைய்ர் Neue Osnabruecker Zeitung பத்திரிகை உடன் உரையாற்றுகையில், ரஷ்யாவின் "வாங்கும் சக்தியில் ஏற்பட்ட தீவிர வீழ்ச்சி" காரணமாக ரஷ்யாவுக்கு செல்லும் ஜேர்மன் ஏற்றுமதிகள் 2014இல் 20 சதவீதம் வீழ்ச்சி அடையக்கூடுமென அனுமானித்தார். ரூபிள் வீழ்ச்சி அடைவதற்கு முன்னர் அதன் மதிப்பு அதிகமாக இருந்த போதும் கூட ரஷ்யர்கள் பண்டங்களை வாங்க முயன்ற நிலையில், ரூபிள் நெருக்கடி செலவுகளைக் குறைவாகவே ஊக்குவிக்கும், ஆனால் அனேகமாக இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் குறுகியகால தாக்கத்தைக் கொண்டுள்ளது என்றவர் சுட்டிக்காட்டினார்.

ஏற்றுமதிகளில் வீழ்ச்சி ஜேர்மன் தொழிலாளர்கள் மீது மேற்கொண்டும் தாக்குதலுக்கு இட்டுச் செல்லும். “ஜேர்மன் வாகனத்துறை ஆலைகள் ஏற்கனவே பல வாரங்களாக ஷிப்டுகளைச் சுருக்கி வேலை [Kurzarbeit] செய்து வருகின்றன அல்லது தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி வருகின்றன,” என்று ட்ரைய்ர் தெரிவித்தார்.

ரஷ்யாவுக்கு 49 பில்லியன் யூரோ கடன் வழங்கி, ரஷ்யாவுக்கு தனியொரு மிகப்பெரிய கடன் வழங்குனராக விளங்கும் பிரான்ஸூம் கூட குறிப்பாக ரூபிள் நெருக்கடியால் அச்சுறுத்தப்பட்டுள்ளது. பிரெஞ்சு எண்ணெய் நிறுவனம் டோட்டல் மற்றும் வாகனத்துறை உற்பத்தியாளர் ரெனால்ட் ஆகியவையும் ரஷ்யாவில் பெரிதும் அவற்றின் வியாபாரத்தைக் கொண்டுள்ளன, மேலும் Société Générale வங்கி அந்நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ரோஸ்வங்கியில் 99.4 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது.