சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

China challenges US economic war against Russia

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க பொருளாதார போரை சீனா சவால்விடுக்கிறது
By Alex Lantier
23 December 2014

Use this version to printSend feedback

ரூபிளைப் பலவீனப்படுத்த மற்றும் ரஷ்ய பொருளாதாரத்தை திவாலாக்குவதற்கு ரஷ்யாவுக்கு கடன் வழங்குவதை நிறுத்துவதென்ற நேட்டோ அதிகாரங்களின் கொள்கைக்கு நேரடியாக சவால்விடுத்து, மாஸ்கோவிற்கு நிதியியல் உதவிகளை விரிவாக்க சீனா சூளுரைத்துள்ளது.

சனியன்று, சீன வெளியுறவுத்துறை மந்திரி யான்ங் யி ரூபிள் நெருக்கடி குறித்து கருத்து தெரிவிக்கையில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பரஸ்பர உதவியின் அவசியத்தை வலியுறுத்தினார், ரூபிள் இந்த ஆண்டில் டாலருக்கு எதிராக அதன் மதிப்பில் கடுமையாக 45 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. "தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழ்நிலையைக் கடந்து வரும் தகைமையும், அறிவும் ரஷ்யா கொண்டுள்ளது," என்று தெரிவித்த யான்ங், "ரஷ்ய பக்கத்திற்கு அது தேவையென்றால், நாங்கள் எங்களது சக்திக்கு உட்பட்டு அவசியமான உதவிகளை வழங்குவோம்," என்றார்.

ஞாயிறன்று, சீன வர்த்தகத்துறை மந்திரி ஜியா ஹூசென்ங் ஹாங்காங்கின் போனிக்ஸ் தொலைக்காட்சிக்கு கூறுகையில், சீன-ரஷ்ய வர்த்தகம் ரூபிள் நெருக்கடிக்கு இடையிலும் இந்த ஆண்டு அதன் $100 பில்லியன் இலக்கை அடையுமென்ற அனுமானிப்புடன், பெய்ஜிங் எரிசக்தி மற்றும் உற்பத்தித்துறையில் மாஸ்கோவுடன் உறவுகளைப் பலபடுத்துமென தெரிவித்தார். டாலர் அல்லது யூரோவிற்கு எதிரான ரூபிளின் மதிப்பு அதிகளவில் ஆட்டங்கண்டு வரும் நிலையில், கெயோ சீன-ரஷ்ய வர்த்தக நிதியுறவுகளை டாலரிலிருந்து நகர்த்தி, அதற்கு மாறாக சீன செலாவணியான யான் அல்லது ரென்மின்பியைப் பயன்படுத்த பரிந்துரைத்தார்.

அவ்விரு பொருளாதாரங்களும் ஒன்றுக்கொன்று எவ்வாறு துணைபுரியுமென்பது போன்ற அடிப்படை காரணிகள்" மீது சீனா கவனம் செலுத்துமென ஜியா தெரிவித்ததாக ராய்டர்ஸ் அறிவித்தது. “மூலதன முதலீட்டாளர்கள், ஒரு குதியாட்டம் போடுகின்ற பங்குச் சந்தையின் மீதோ அல்லது அன்னிய செலாவணி சந்தை மீதோ மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கலாம். ஆனால் அவ்விரு நாடுகளுக்கு இடையே திடமான கூட்டுறவு என்ற அர்த்தத்தில், நாம் ஒரு சமநிலைப்பட்ட மனோநிலையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், அவற்றின் கூட்டுறவுகளை முன்னுக்கும் கொண்டு செல்ல வேண்டும்,” என்று ஜியா தெரிவித்தார்.

ரஷ்யாவுக்கான உதவியானது ஷாங்காய் கூட்டுறவு ஸ்தாபனம் (SCO) அல்லது பிரிக்ஸ் கூட்டமைப்பு போன்ற வழிகளில் கொண்டு செல்லலாம் என்று சமூக விஞ்ஞானங்களினது சீன பயிலகத்தின் லீ ஜியன்மின் கூறியதை நேற்று China Daily மேற்கோளிட்டது. குறிப்பாக, சீனா, ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் ஒரு கூட்டணியான SCO மற்றும் பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா) ஆகிய இரண்டிலுமே அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கிடையாது.

லீ குறிப்பிடுகையில் ஏற்கனவே கடந்த மாதம், சீன மற்றும் ரஷ்ய பிரதமர்கள் லீ கைய்ச்சி மற்றும் டிமிட்ரி மெட்வடெவ் கஜகிஸ்தானில் சந்தித்த போது, அவர்கள் சீனாவின் வடக்கில், ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியத்தில் இரயில்வே, உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தியின் மீது பரந்த உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டிருந்ததாக தெரிவித்தார். “கடன்கள், பிரதான திட்டங்களில் கூட்டுறவு, மற்றும் ரஷ்யாவின் உள்நாட்டு உள்கட்டமைப்பு முதலீட்டில் பங்கெடுத்தல் ஆகியவை முன்வைக்கப்பட்ட பரிசீலனைகளில் இருந்தன,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். கடந்த மாதம் அதுபோன்றவொரு உடன்பாட்டில், சீனா ரஷ்ய எரிவாயுவை வாங்க 30 ஆண்டுகால $400 பில்லியன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் யுரேஷியாவில் அவற்றின் நவ-காலனித்துவ மறுகட்டமைப்பை எதிர்க்கும் மாஸ்கோவை தண்டிப்பதற்காக அவற்றால் தொடங்கப்பட்ட ரஷ்யா மீதான பொருளாதாரப் போரை, இத்தகைய உதவிகள் குறுக்காக அறுக்கின்றன.

சிரியாவில் நேட்டோவினது பினாமி போருக்கு எதிராக ஜனாதிபதி பஷார் அல்-அசாத்திற்கு ரஷ்யா ஆதரவளித்ததற்கும், மற்றும் கியேவில் நேட்டோ ஆதரவிலான உக்ரேனிய ஆட்சிக்கு ரஷ்யாவின் எதிர்ப்புக்கும் பழிவாங்க, நேட்டோ அதிகாரங்கள் நிதியியல்ரீதியாக ரஷ்யாவின் குரல்வளையை நெரிக்க முனைந்தன. உலக எண்ணெய் விலைகளின் வீழ்ச்சியுடன் சேர்ந்து ரஷ்ய எண்ணெய் வருவாய்களும் வீழ்ச்சி அடைந்து, ரூபிள் பொறிந்து போன நிலையில் தான், அவை ரஷ்யாவுக்கு கடன் வழங்குவதை நிறுத்த வேலை செய்தன, அத்துடன் கியேவ் ஆட்சிக்கு ரஷ்யாவின் சம்மதத்தைக் கோரின. (பார்க்கவும்: Imperialism and the ruble crisis)

இந்த மூலோபாயத்தின் அடிப்படை நிதியியல் இயங்குமுறை, சர்வதேச பொருளாதாரங்களுக்கான பீட்டர்சன் பயிலகத்தின் ஆண்டர்ஸ் அஸ்லுண்டால் இலண்டனின் Financial Timesஇல் எடுத்துக்காட்டப்பட்டது. “ரஷ்யா எந்தவித கணிசமான சர்வதேச நிதியும் பெறவில்லை—சீன அரசு வங்கிகளிடம் இருந்தும் கூட—ஏனென்றால் ஒவ்வொருவரும் அமெரிக்க நிதியியல் நெறிமுறையாளர்களுக்கு அஞ்சுகின்றனர்,” என்று எழுதினார். ஆண்டு 125 பில்லியன் டாலர் மூலதன வெளியேற்றத்துடன், எளிதில் கரைந்து போகும் வெறும் 200 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்புகளுடன், மற்றும் மொத்தம் 600 பில்லியன் டாலர்கள் அன்னிய கடன்களுடன், ரஷ்யா அதன் டாலர்கள் தீர்ந்து போய், குறைந்தபட்சமாக இரண்டே ஆண்டுகளில் திவாலாகிவிடும் என அஸ்லுண்ட் கணக்கிட்டிருந்தார்.

ஆனால் இப்போது பெய்ஜிங் அமெரிக்காவுடன் ஒரு பலப்பரீட்சை அபாயத்தை ஏற்கவிருப்பதாக தெரிகிறது, அத்துடன் ரஷ்யாவுக்கு ஒரு நிதியியல் மறுவாழ்வளிக்க பகிரங்கமாக தயாராகி வருகிறது. சீனா 3.89 ட்ரில்லியன் டாலருடன் உலகின் மிகப்பெரிய செலாவணி கையிருப்புகளை, குறைபட்சம் காகிதத்தில் கொண்டுள்ளது, அது மிகச் சுலபமாக ரஷ்யாவின் கடன்களை திருப்பி அடைக்க பெய்ஜிங்கை அனுமதிக்கிறது.

முக்கியமாக, ரஷ்யாவுக்கு உதவி வழங்குவதன் மீது வாங் மற்றும் ஜியாவின் அழைப்புகள், கடந்த வாரம் ரஷ்யா பற்றிய ஒரு பிளவுபட்ட ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டுக்கு ஒருநாள் பின்னர் வந்தது. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரித்த போதினும், ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ரென்சி ஆகிய அனைவரும் கூடுதல் தடைகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்புகளை பகிரங்கமாக எதிர்த்தனர். முன்னணி ஐரோப்பிய பத்திரிகைகளும் கூட ரஷ்ய அரசு பொறிவதற்கான அபாயத்தை எச்சரித்தன.

ரூபிள் நெருக்கடிக்கு விடையிறுப்பளிக்க அது சிந்தித்து வருகின்ற நிலையில், சீன ஆட்சி, தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாய மக்களிடையே அதிகரித்துவரும் சமூக போராட்டங்களையும் மற்றும் ஒரு தணிந்துவரும் பொருளாதாரத்தையும் முகங்கொடுத்திருப்பதுடன், சந்தேகத்திற்கிடமின்றி அதன் வடக்கு அண்டைநாட்டவரின் முழு பொருளாதார மற்றும் அரசியல் உள்வெடிப்பின் விளைவுகளைக் குறித்தும் அஞ்சுகிறது.

எண்ணெய் நெருக்கடி மற்றும் யுரேஷியாவில் ஏகாதிபத்திய போர் முனைவு ஆகியவற்றின் மீது பிரதான சக்திகளுக்கு இடையே வெடித்துவரும் பொருளாதார மோதல்கள் உலக முதலாளித்துவ நெருக்கடி அபிவிருத்தி அடைந்திருக்கும் நிலைக்கும் மற்றும் உலக போர் அபாயம் அதிகரித்து வருவதற்கும் நிரூபணமாக உள்ளன.

ரஷ்யாவுக்கு சீன உதவி, நடைமுறையில் அது மெய்யாகும் போது, சீனாவுடன் அமெரிக்க மோதலைத் தீவிரப்படுத்தும். ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து, வாஷிங்டன் அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" மூலமாக அதை இராணுவரீதியில் சுற்றி வளைக்க முயன்றுள்ளது. சீனாவுடனான போர் திட்டங்கள், பொருளாதாரரீதியிலும் மற்றும் இராணுவரீதியிலும் இரண்டு விதத்திலும், சந்தேகத்திற்கிடமின்றி வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெண்டகனிலிருந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

ஓராண்டுக்கு முன்னர், “சீனா, கைய்சரின் பிழைகளை மீண்டும் செய்யக்கூடாது” என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில், Financial Times கட்டுரையாளர் மார்ட்டீன் வோல்ஃப் குறிப்பிடுகையில், அமெரிக்காவினது உலகளாவிய மேலாதிக்கத்திற்கு ஒரு சவாலாக கருதப்படக்கூடிய எந்தவொரு நடவடிக்கைக்கு எதிராகவும் சீனாவை எச்சரித்தார். 1914இல் முதலாம் உலக போர் வெடிப்புக்கு முன்னர் பிரிட்டிஷ் மேலாதிக்கத்திற்கு எதிராக ஜேர்மன் கைய்சர் சவால் விடுத்ததைப்போல அதேமாதிரியான சீனக் கொள்கை, அதேபோன்றவொரு விளைவுக்கு, அதாவது ஒரேயடியாக மோதலுக்கு இட்டுச் செல்லும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

பகிரங்கமான மோதல் வந்தால், அமெரிக்கா சீனாவுடன் உலக வர்த்தகத்தை துண்டிக்கும். அது சீனாவின் எளிதில் கரைந்து போகும் அன்னிய செலாவணி கையிருப்புகளின் ஒரு நல்ல பகுதியையும் குறைத்துவிடக் கூடும்,” என்று வொல்ஃப் எழுதினார், அவர் சீனாவின் "அன்னிய செலாவணி கையிருப்புகள், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்திற்கு சமமாக உள்ள அவற்றை நினைவுகூர்ந்து, வரையறைகளின்படி, வெளிநாடுகளில் தேங்கி இருக்கின்றன,” என்றார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான வர்த்தகத்திலிருந்து சீனா சம்பாதித்த ட்ரில்லியன் கணக்கான டாலர்களை அதுபோன்று அப்பட்டமாக திருடினால், உலக வர்த்தகம் பொறிந்து போகும் சாத்தியக்கூறை நேரடியாக அதிகரிக்கும் என்பதுடன், அணு-ஆயுதமேந்திய சக்திகளுக்கு இடையிலான போருக்கும் தயாரிப்பு செய்யும்.

அதன் முன்பில்லாத அளவிலான பொறுப்பற்ற மற்றும் வன்முறை கொள்கைகளுடன், அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்நாட்டில் அதுவே மதிப்பிழந்தும் மற்றும் விரோத நாடுகளிடமிருந்து எதிர்ப்பை எரியூட்டியும், பரந்தளவில் அதன் கரங்களை முறுக்கி வருகிறது. குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனாவை ஒன்றுசேர உந்திச் செல்வதன் மூலமாக, வாஷிங்டன் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு உருவாக்கி இருந்த ஒரு பிரதான சாதனையாக நீண்டகாலமாக பார்க்கப்பட்டதைக் களைத்து வருகிறது: அதாவது, அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் மற்றும் சீன தலைவர் மாவோ ஜிடோங்கிற்கு இடையிலான 1972 சமரசத்தை, அது சீனாவை முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒரு அமெரிக்க கூட்டாளியாக அதை மாற்றி விட்டது.

சீன மக்கள் பலர் இன்னமும் ரஷ்யாவை பெரியண்ணனாக தான் பார்க்கிறார்கள், அத்துடன் அவ்விரு நாடுகளும் மூலோபாயரீதியில் ஒன்றுக்கொன்று முக்கிய நாடுகளாகும்,” என்று ரென்மின் பல்கலைக்கழக துணை தலைவர் ஜின் கான்ரோன்ங் தெரிவித்தார். அவர் 1949இல் ஸ்ராலினிச சீனக் கம்யூனிச கட்சி (CCP) அதிகாரத்திற்கு வந்ததற்குப் பின்னர் சில காலத்திலேயே, அதன் அமெரிக்காவுடனான கொரியப் போரில் அது சண்டையிடுகையில், சோவியத் சீனாவுக்கு ஆதரவாக வந்ததை மேற்கோளிடுகிறார். “தேசிய நலன்களுக்காகவாவது, சீனா ரஷ்யாவுடனான கூட்டணி அவசியப்படும் போது அதனுடன் கூட்டுறவை ஆழப்படுத்த வேண்டும்,” என்றார்.

ரஷ்யா சர்வதேச அரங்கில் ஒரு ஈடுசெய்யவியலாத பங்காளியாக உள்ளது,” என்று CCP சார்பான Global Times நேற்று தலையங்கத்தில் எழுதியது. “ரஷ்யா தற்போதைய நெருக்கடியிலிருந்து வெளியே வர உதவுவதில் சீனா ஒரு செயலூக்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்,” என்று அது எழுதியது.