சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

ஜனாதிபதி இராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வெறியார்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்

W.A. Sunil
23 December 2014

Use this version to printSend feedback

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஜனாதிபதி தேர்லுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அதில் எப்படியாவது வெற்றிகொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இரகசியமாக இலஞ்சம் கொடுத்தல், பல்வேறு வரப்பிரசாதங்களை கொடுக்கும் வாக்குறுதிகளின் மூலம் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தூண்டில் போடுதல் மற்றும் அரச வளங்களைப் பயன்படுத்திக்கொள்வதும் வன்முறையும் இராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்தின் அங்கங்களாக இருப்பது பேர்போன விடயாமாகும்.

தனக்கு எதிராக வளர்ச்சிகண்டுவரும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக காலம் தாழ்த்துவது தோல்விக்கு வழி வகுக்கும் என்று பீதியடைந்ததாலேயே முன்கூட்டிய தேர்தலுக்குச் செல்வதற்கு இராஜபக்ஷ தள்ளப்பட்டார். போர்க் குற்றங்கள் பற்றி குற்றஞ்சாட்டிவரும் அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், சீனவுடனான உறவுளை முறித்துக்கொண்டு தமது மூலபாய நிகழ்ச்சி நிரலின் பின்னால் அணிதிரளுமாறு நெருக்கிவரும் நிலையில், மீண்டும் ஆட்சியைப் பற்றிக்கொள்வதன் மூலம், அரசியல் சூழ்ச்சிகளைச் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று இராஜபக்ஷ கணக்கிடுகின்றார்.

முன்கூட்டிய தயாரிப்பின் மூலம், அவரது அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்ப்பட்ட மறுநாளே இராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிடுவதாக அறிவித்தவுடன், இராஜபக்ஷ எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடி மேலும் உக்கிரமடைந்தது. வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஒத்துழைப்புடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவாலேயே சிறிசேன களத்துக்கு கொண்டுவரப்பட்டார். அவர் அமெரிக்காவின் கிளின்டன் மன்றத்தின் பூகோள முன்னெடுப்பு பயிற்சி அமைப்பின் ஆலோசகராவார்.

இந்தத் தொடர்புகள் மூலமாக யூஎன்பீ தலைமையில் முன்னெடுக்கப்படும் தேர்தல் மூலோபாயத்தின் கீழ், கொழும்பில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் செய்து வாஷிங்டனின் பின்னணியுடன் செய்யப்பட்ட ஆடசிக் கவிழ்ப்பு திட்டத்துக்கு இராஜபக்ஷ முகங்கொடுத்துள்ளார்.

இராஜபக்ஷ தலைமையிலான ஆளும் கும்பல், அரச செலவுகளில் நூற்றுக்கு ஐம்பது வீதத்தை தமது ஆளுமையில் வைத்துக்கொண்டும், தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடனான உறவுகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டும் உள்ள நிலையில், தமது பங்கு பறிபோன அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் தமது வாய்ப்புகளை இழந்த முதலாளிகள் தொகையினரும் உள்ளனர். இந்த அமைச்சர்கள் சிறிசேனவுக்குப் பின்னால் செல்வதை தடுத்துக்கொள்ளவும் யூஎன்பீ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தூண்டில் போடவும் வெறியார்வத்துடன் இராஜபக்ஷ முயற்சிக்கின்றார். இந்த முயற்சிகளுக்காக கோடிக்கணக்கான பணம் கை மாறுவதாக பகிரங்கமாகியுள்ளது. வெளியேறும் அமைச்சர்கள் மற்றும் மந்திரிகளை தக்கவைத்துக்கொள்வதற்காக அவர்களது தகவல்கள் அடங்கிய "கோப்புகளை" அம்பலப்படுத்துவதாக இராஜபக்ஷ பகிரங்கமாக அச்சுறுத்தினார். அமைச்சர்ளின் மோசடி ஊழல் பற்றிய இத்தகைய "கோப்புகள்", இராஜபக்ஷ தமது கட்சி உறுப்பினர்களை கட்டிப்போட்டு வைப்பதற்கு பயன்படுத்திக்கொள்வதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

தேர்தல் சட்டங்களை மீறி, அரச வளங்களை தேல்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்துவதற்கும், அரசியல் விரோதிகளுக்கு எதிராக கொடூரமான வன்முறைகளை கட்டவிழ்த்துவிடவும் அரசாங்க தரப்பினர் செயற்படுவது, இராஜபக்ஷவின் மௌன அனுமதியுடனேயே ஆகும். தேர்தலில் இராஜபக்ஷ தோல்வியை சந்தித்தால், இராஜபக்ஷ இலகுவில் ஆட்சியை விட்டுக்கொடுக்காதது மட்டுமன்றி, மீண்டும் ஆட்சிக்குவந்தால் அரசியல் விரோதிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், விசேடமாக தொழிலாள வர்க்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக, எத்தகைய கொடூரமான பாய்ச்சல்களை மேற்கொள்வார் என்பது, இந்த வன்முறைகள் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கும் முன்னரே தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த இராஜபக்ஷ, டிசம்பர் 2, அரசாங்கத்தின் இராசாயனப் பகுப்பாய்வாளர்கள் மற்றும் இலங்கை விஞ்ஞான சேவையாளர்களின் சங்கத்தின் அதிகாரிகள் முன் உரையாற்றும்போது, ஸ்திரமான அரசாங்கத்தால் மட்டுமே நாட்டில் நல்ல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும், எனத் தெரிவித்தார். மறுநாள் எம்பிலிபிட்டியில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, கடந்த அரசாங்கங்கள் "ஆர்ப்பாட்டங்களுக்கு" பயந்து நடுங்கிக்கொண்டு அபிவிருத்தி திட்டங்களை கைவிட்டிருந்ததாக அவர் கூறினார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சர்கள் "ஸ்திரமான அரசாங்கத்துக்காக" இராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். டிசம்பர் 23, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு, தான் "ஸ்திரமான சக்திவாய்ந்த" அரசாங்கத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக இராஜபக்ஷ சுட்டிக் காட்டினார். (இராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி விளக்கமான ஆய்வு ஒன்று உலக சோசலிச வலைத் தளத்தில் பின்னர் வெளியிடப்படும்)

இராஜபக்ஷ நடத்தி வந்த "ஸ்திரமான அரசாங்கம்" என்பது, மேலும் மேலும் எதேச்சதிகார பலத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பையும் நாட்டின் சட்டத்தையும் மீறி, எதிரிகளை நசுக்கி ஆட்சியை முன்னெடுப்பதே ஆகும். ஆர்ப்பாட்டங்களுக்கு பயப்படாமல் செயற்பட்ட அரசாங்கம், 2011ல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தின் போதும், 2012ல் சிலாபம் மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போதும், 2013ல் வெலிவேரிய மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதும் பொலிஸ் மற்றும் இராணுவத்தை பயன்படுத்தி ஐந்துபேரை சுட்டுக்கொன்று, அசாங்கத்தினதும் முதலாளித்துவ கம்பனிக்காரர்களதும் தேவையை நடைமுறைப்படுத்தியது.

இராஜபக்ஷவின் கருத்துக்களின் அர்த்தம், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொலிஸ்-அரச ஆட்சி ஒன்றை உறுதிப்படுத்திக்கொள்வதே ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலை நடத்துவதன் மூலம் 2022 வரை ஆட்சியில் இருக்க அவர் முயற்சிக்கின்றார்.

பெரும் கடன் சுமையாலும், ஆழமடைந்துவரும் பூகோள நெருக்கடியாலும் உக்கிரமடைந்துள்ள இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இராஜபகஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தொழிலாளர்கள், வறியவர்களின் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு தொகை தாக்குதல்களை தொடுப்பார். சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி, 2016 அளவில் வரவு செலவுப் பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 3.8 வரை குறைப்பதும் இராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலில் அடங்கும். மெல்லிய முதலாளித்துவ தட்டின் அபவிருத்தியையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இலாப அவசியங்களையும் முன்னெடுப்பதே நாட்டின் அபிவிருத்தியாக இராஜபக்ஷ காட்டுகின்றார்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் நிகழ்ச்சி நிரலின்படி, அரசாங்கத்தை மாற்றுவதன் மூலம் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிக்கும் சிறிசேன மற்றும் அவரைச் சுற்றியுள்ள ஆளும் கும்பலும், அதிகாரத்துக்கு வந்தால், இதேபோன்ற கொடூரமான தாக்குதல்களையே நடைமுறைப்படுத்துவார்கள். இதை நல்லாட்சி என்ற போலிக் கதைகளைக் கூறியே சிறிசேன மூடி மறைக்கின்றார்.

தொழிலாளர்கள், வறியவர்கள் மற்றும் இளைஞர்ளுக்கு, இந்த முதலாளித்துவ வேட்பாளர்களுக்கு இடையில் தேர்ந்தெடுத்துக்கொள்வதுற்கு எவரும் கிடையாது. சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிரிவர்தனவும் சோசலிச வேலைத் திட்டத்துக்காக முன்னெடுக்கும் போராட்டத்துக்கே அவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.