சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Socialist Equality Party of Germany publishes open letter to Professor Jörg Baberowski

ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி பேராசிரியர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கிக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தை வெளியிடுகிறது

24 January 2014

Use this version to printSend feedback

ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gleichheit PSG) பேர்லினில் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில், கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுத் துறையின் தலைவரான பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கிக்கு எழுதிய பகிரங்க கடிதத்தை கீழே நாங்கள் வெளியிடுகிறோம்.

******

பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கி அவர்களே,

இந்த கல்வியாண்டு தவணையின் உங்கள் கடைசிக் கூட்டத்தில், நீங்கள் பிரித்தானிய புத்தக ஆசிரியர் ரோபேர்ட் சேர்விசை பேச்சாளராக அழைத்துள்ளீர்கள். அவர் பெப்ருவரி 12 அன்று ட்ரொட்ஸ்கி: ஒரு வாழ்க்கை நூல் பிரச்சினைகள் என்ற தலைப்பில் பேச உள்ளார்.

ரோபேர்ட் சேர்வீசை வாழ்க்கை நூல் பற்றி உரையாற்ற அழைப்பதே ஒரு புத்திஜீவித ஆத்திரமூட்டலாகும். ஆங்கிலத்தில் 2009லும் ஜேர்மனில் 2012லும் வெளியான ரோபேர்ட் சேர்விசின் ட்ரொஸ்கியின் வாழ்க்கை நூலைப் போல் எந்தவொரு படைப்பும் அதன் ஆசிரியரை அவமதிப்பிற்கு உட்படுத்தவில்லை. இது ஒரு அறிவுசார்ந்த நூல் அல்ல; மாறாக கம்யூனிசம் பற்றிய ஆராய்ச்சியில் பெருந்தகையான பேராசிரியர் ஹெர்மன் வேபர் (மான்ஹைம்) கூறியுள்ளபடி, ஒரு திசை மாறியது, பொய்கள், வரலாற்றுத் தவறுகள், சந்தேகத்திற்குரிய குறிப்புக்கள், யூத எதிர்ப்புக் கருத்துக்கள் கூட அடங்கியது.

பல நாடுகளை சேர்ந்த வரலாற்றாளர்கள் இந்த மதிப்பீட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். 2011ல் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் வரலாற்றாளர் பேர்ட்ராண்ட் பட்டனவ்ட் சேர்வீசின் ட்ரொட்ஸ்கி வாழ்க்கை நூல் குறித்த பேரழிவுதரும் திறனாய்வை American Historical Review என்னும் மதிப்புடைய உயர்கல்வி ஏட்டில் வெளியிட்டார். பட்டனவ்ட் எழுதினார்: ட்ரொட்ஸ்கியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தன் ஆர்வத்தால், சேர்வீஸ் வரலாற்றுப் பதிவுகள் பலவற்றை சிதைத்துள்ளார், அப்பட்டமான உண்மைப் பிழைகளையும் செய்துள்ளார். இதனால் அவருடைய முழு முயற்சியும் வினாவிற்கு உட்படுகிறது. பிழைகள் மிகவும் மோசமாக இருப்பது சில சந்தர்ப்பங்களில் எம்மை பேசமுடியாது செய்துள்ளது.

இதற்கு முன்பு உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த், ஏற்கனவே பல தவறுகளை, தவறான கருத்துக்களை, சேர்வீசின் பொய்களை ஆவணப்படுத்தியுள்ளார். இவை அனைத்தும் ஓரளவிற்கு ஸ்ராலினிச பிரச்சாரக் கிடங்கில் இருப்பவை. American Historical Review நோர்த்துடன் முற்றிலும் உடன்பட்டது. அவருடைய நூல் ட்ரொஸ்க்கியை பாதுகாத்து (In Defence of Trotsky) என்பது ஜேர்மனிய மொழியிலும் கிடைக்கிறது. அந்த ஏடு பின்வரும் முடிவிற்கு வந்தது: நோர்த், சேர்வீசின் வாழ்க்கை நூல் ஒரு கீழ்த்தரமான வசைபாடல் என எழுதியது வலுவான சொற்கள், ஆனால் முற்றிலும் நியாயமானதே. ஹார்வர்ட் பல்கலைக்கழக பதிப்பகம் அதன் மதிப்பை வரலாற்று அறிவுகளின் அடிப்படைத் தரங்களை பூர்த்தி செய்யாத நூலுக்கு உயர்வு கொடுத்துள்ளது.

பின் ஜூலை 2011ல் ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்தில் உள்ள 14 புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள், அரசியல் விஞ்ஞான வல்லுனர்கள் புத்தக பதிப்பகமான Sukrkamp இற்கு கடிதம் எழுதி ஜேர்மனிய பதிப்பாக ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை நூலை வெளியிடுவதற்கு எதிராக ஆலோசனை கூறினர். அவர்கள் அதன் ஆசிரியர் வரலாற்று அறிவுசார்த்தன்மையின் அடிப்படை தரங்களை மீறிவிட்டார் என்றும் முடிவுரை கூறினர், அவருடைய வாழ்க்கை நூல் ஒரு வசைபாடல் என்றும் கூறினர்.

இக்கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் சர்வதேச சிறப்புப் புகழ் பெற்றவர்களான Professor Hermann Weber (Mannheim); Professor Oliver Rathkolb, head of the Institute for Contemporary History at the University of Vienna; Professor Peter Steinbach (Berlin), director of the German Resistance Memorial Centre; Professor Heiko Haumann (Basel); and Professor Mario Kessler (Potsdam) ஆகியோர் அடங்குகின்றனர்.

எந்த கவனமான கல்விமானும், இத்தகைய பேரழிவான தீர்ப்பிற்கு எதிரான தன் உயர்கல்வி பெருமையை பாதுகாக்க முயன்றிருப்பார். ஆனால் ரோபேர்ட் சேர்வீஸ் அவ்வாறு அல்ல. தனக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுக்க ஒரு முயற்சிகூட அவர் செய்யவில்லை. இதற்குக் காரணம் அவர் தன்னை ஒரு வரலாற்றாளராக காணவில்லை, ஒரு வலதுசாரி பிரச்சாரகத்தான் காண்கிறார். சேர்வீசே இதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். செய்தித்தாள் அறிக்கையின்படி, லண்டனில் அவருடைய நூல் வெளியிட்டின்போது அவர் இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்: பனிக்கோடரியால் [ட்ரொட்ஸ்கி மெக்சிகோவில் 1940ல் கொலை செய்யப்பட்ட கருவி] அவரைக் கொலை செய்வதில் வெற்றி அடையவில்லை என்றால், நான் அதை இப்புத்தகத்தால் செய்துள்ளேன் என்று நம்புகிறேன். என்றார்.

இப்பின்னணியில், பேராசிரியர் பார்பரோவ்ஸ்கி அவர்களே, நீங்கள் சேர்வீசை அறிவுத்துறை சார்ந்த தன்மைக்காக அல்லாது, கூறப்படாத அரசில் காரணங்களுக்காகவே அழைத்துள்ளீர்கள் என்பது வெளிப்படை.

சேர்வீசுக்கு அழைப்பு என்பது நீங்களும் உங்கள் துறையும் புகழ்பெற்ற அமெரிக்க வரலாற்றாளர் அலெக்சாந்தர் ராபினோவிச் தன் புத்தகமான போல்ஷிவிக்குகள் அதிகாரத்தில் முதல் ஐந்து ஆண்டு பெட்ரோகிராடில் சோவியத் ஆட்சி என்பதை பேர்லினில் அக்டோபர் 2010ல் வெளியிட்டபோது நடந்து கொண்ட முறைக்கு முற்றிலும் எதிரானது. அப்பொழுது நீங்கள் உரிய பேச்சு அரங்கை வழங்க மறுத்துவிட்டீர்கள், ரஷ்ய வரலாற்றில் சர்வதேசப் புகழ் பெற்ற இந்த வல்லுனரான ராபினோவிச்சை அழைக்கவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை.

நான்கு மாதங்களுக்கு முன், வலைத் தள அரங்கான H-Soz-U-Kult சேர்வீசின் ட்ரொட்ஸ்கி வாழ்க்கை நூலை வெளியிட்டது; விரைவில் அது ஆங்கிலத்திலும் வந்தது. உங்கள் துறையின் உறுப்பினர் ஒருவரான ஆண்ட்ரே ஓபரென்டெர் உங்கள் ஆசிரியர்குழு மேற்பார்வையில் பரிசீலனை ஒன்றை இதற்கு எழுதினார். அது சேர்விஸின் வாழ்க்கை நூலை பெரும் சிறப்புரைகளில் பாராட்டியது, அதன் பொருளுரை பற்றி ஏதும் எழுதவில்லை, அதில் இருந்து ஒரு சொற்றொடர் கூட மேற்கோளிடவில்லை. மாறாக அது ட்ரொட்ஸ்கிக்கு எதிரான சேர்வீசின் இழிந்த கருத்துக்களுடன் சில கூடுதல் கருத்துக்களையும் கூறியது.

கடந்த கோடை காலத்தில், சேர்வீசுடன் நீங்கள் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஹூவர் நிறுவனத்தின் கோடைக்கால பணிமனையில் பங்கு பெற்றீர்கள். ஹூவர் நிறுவனம் பனிப்போர்க் காலத்திலும் சோவியத்திற்குப் பிந்தைய காலத்திலும் கம்யூனிச எதிர்ப்பிற்கு ஒரு வலுவான கோட்டை ஆகும். சேர்வீசை அழைக்கும் திட்டங்கள் அங்கு தோன்றியவை போலும்.

நீங்கள் எவரையும் சந்திக்கலாம், நீங்கள் விரும்பும் எவருடனும் ஒத்துழைக்கலாம். ஆனால் உங்கள் மாணவர்களுக்கு உங்கள் பேராசிரியர் பொறுப்பின்கீழ் அரங்கில் முன்வைக்கப்படும் ஒரு நூலுக்கு எதிரான கருத்துக்களை அறியும் உரிமை உள்ளது, அதைப் பற்றித் தீர்மானித்துக்கொள்ளவும் உரிமை உண்டு.

உரையரங்கு அழைப்பிதழில் ஆர்வம் உடையவர்கள் அனைவரும் விருப்புடன் வரவேற்கப்படுகின்றனர். என கூறப்பட்டுள்ளது. நாங்கள் மகிழ்ச்சியுடன் இந்த அழைப்பை ஏற்கிறோம். உரையரங்குகளின் வடிவமைப்பை நாங்கள் இயல்பாக மதிப்போம், ஆனால் சேர்விசிற்கு விமர்சனம் தெரிவிப்போருக்கு வினாக்களை எழுப்பவும் நூல் பற்றி நன்கு நிறுவப்பட்ட எதிர்ப்புக்களை முன்வைக்கவும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று நம்புகின்றோம். இன்றுவரை அவர் இந்த எதிர்ப்புக்களுக்கு பதிலளிக்கவில்லை. நீங்கள் ட்ரொட்ஸ்கி வாழ்க்கைநூல் பிரச்சினைகளைப் பற்றி பேச அழைத்துள்ளதால், அவர் அதை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (PSG— Partei für Soziale Gleichheit)சார்பில்

வொல்வ்காங் வேபர்.