சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Cameron appeals to “quiet patriots” to save the United Kingdom

ஐக்கிய இராச்சியத்தைக் காப்பாற்ற காமெரோன் அமைதியான நாட்டுப்பற்றாளர்களுக்கு அழைப்புவிடுகிறார்

By Steve James and Chris Marsden 
19 February 2014

Use this version to printSend feedback

பிரித்தானியப் பிரதம மந்திரி டேவிட் காமெரோனின் இந்த மாத ஓர் உரையில் பிரித்தானிய அரசாங்கம் ஸ்காட்லாந்து சுதந்திரம் பற்றிய செப்டம்பர் 18 வாக்கெடுப்பில் தோற்றுவிடும் அபாயத்தை அங்கீகரிக்கும் வகையில் பேசினார்.

லண்டனின் ஒலிம்பிக் சைக்கிள் ஓடும் மைதானத்தில் பேசிய காமெரோன், யூனியன் ஜாக் கொடியால்  தன்னை சுற்றிக்கொண்டு, நீண்டக்கால, குருதிசிந்திய பிரித்தானிய இராணுவவாதத்தின் மரபுகளை நினைவுகூர்ந்து  ஐக்கிய இராச்சியத்தை காப்பாற்றத் திரளுமாறு நாட்டுப்பற்றாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

காமெரோனுடைய பேச்சு, ஒரு பெரிய நெருக்கடி விரைவாக வருவதை ஆழமடைய செய்கின்றது.

தனது முன்னோடியான தொழிற் கட்சியால் எதிர்க்கப்பட்ட ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) சர்வஜன வாக்கெடுப்புத் திட்டத்தை  காமெரோன் அரசாங்கம் 2012இல் ஒப்புக்கொண்டது.

சுதந்திரம் தொடர்பாக வேண்டும்/வேண்டாம் என்ற வாக்கெடுப்பை வலியுறுத்துவதின் மூலம் SNP உடைய பிரச்சினையை ஸ்காட்லாந்து கட்டாயமாக நிராகரிக்கும் எனவும் அதை ஒரு தலைமுறைக்கு பின்போடப்படும் எனவும் கமரோன் கணிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திற்குள் கூடுதலான அதிகாரப் பகிர்வு வரும்.

ஆனால், காமெரோனின் சூதாட்டம் பொறுப்பற்றது எனக் காட்டப்பட்டுள்ளது. வேண்டும் என்ற பிரச்சாரத்திற்கு ஆதரவு கருத்துக் கணிப்புக்களில் பின்தங்கியிருந்தாலும், எண்ணிக்கை வாக்கெடுப்பு தினம் அணுகுகையில் இதுபற்றி தெரியாது என்பது அதிகரிக்கிறது.

வேண்டும் என்ற முகாம் கோரிக்கையின் மையத்தில் முடிவில்லாத பொய்யான வெஸ்ட்மின்ஸ்டர் சுமத்தும் மிருகத்தன சிக்கன நடவடிக்கை ஸ்காட்லாந்து சுதந்திரத்தால்தான் தீர்க்கப்பட முடியும் என்பது உள்ளது. தன்னுடைய உரையில் காமெரோன் அவருடைய அரசாங்கம் பிரித்தானியாவின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளின் வாழ்க்கைத் தரங்களிலும் ஆழ்ந்த தாக்குதல் நடத்த இருப்பதைத் தெளிவுபடுத்தினார். இடக்கரடக்கலாக, இது இந்த முயற்சிகளின் பின்னணியில் இருப்பது, நம் கடன்களைத் தீர்ப்பது, நம் மக்களுக்கு மன அமைதியையும் வருங்காலத்தில் பாதுகாப்பையும் கொடுப்பது என்று விவரிக்கப்படுகிறது.

மக்கள் கவலை பற்றிய அவருடைய கருத்து, ஓர் இழிந்த தன்மையைத்தான் காட்டுகிறது. பிரித்தானியா முழுவதும் முன்னொருபோதும் கண்டிராத வாழ்க்கைத் தரங்கள் மிக தொடர்ச்சியாக சரிவதற்குப் பொறுப்பான செல்வம் படைத்த பாசாங்குவாதி, இந்நாட்டில் மக்கள் நோயுற்றுள்ளபோது, மக்கள் வேலையற்று இருக்கும்போது, மக்கள் வயதான காலத்தில் வெறுமே பார்த்துக் கொண்டு கடந்து போகப்போவதில்லை என்றார்.

தேசியவாதத்திற்கு அழைப்பு விடுவது தவிர, காமெரோனால் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் ஸ்காட்லாந்து மக்களுக்கு மட்டும் இன்றி, இங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மக்களுக்கும் இந்த அழைப்பைவிட்டார். அமைதியான நாட்டுப்பற்றாளர்கள் வெறுமே தோளைக் குலுக்கிக் கொள்பவர்கள் மற்றும் ஸ்காட்லாந்து இல்லாமல் நாம் நன்றாகத்தான் இருப்போம் என்று நினைப்பவர்களுக்கு ஸ்காட்லாந்தின் சுதந்திரம் ஒரு பெரிய அடியாகும் என்று காமெரோன் எச்சரித்தார்.

பிரித்தானிய ஏகாதிபத்தியம் அதன் போட்டியாளரகளுடன் போட்டியிடும் திறமை பற்றிய உண்மை கவலைகளையும் அவர் விரைவில் வெளிப்படுத்தினார். ஐக்கிய இராச்சியத்தில் ஸ்காட்லாந்து, ஒரு முக்கிய உலக அரங்கில் இருக்கும் நாட்டின் ஒரு பகுதி ஆகும்.... 63 மில்லியன் மக்களின் திறந்த பொருளாதாரத்துடன் நாம் மிகப் பழைய, மிக வெற்றிகரமான தனிச்சந்தையை உலகில் கொண்டுள்ளோம். உலகின் மிகப்பழைய, மிக வெற்றிகரமான நாணயங்களில் ஒன்றைக் கொண்டுள்ளோம். அந்த ஸ்திரப்பாடு முதலீட்டாளர்களுக்கு பெரும் ஈர்ப்புள்ளதாக இருக்கின்றது கடந்த ஆண்டு நாம் ஐரோப்பாவில் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் மிகஉயர்ந்த இடத்தில் இருந்தோம்.

ஒன்றாக இணைந்து நாம் அங்கு சென்று நம் பொருட்களை உலகில் விற்பதில் பலமாக உள்ளோம்... நாம் ஒரு சிறப்பு முத்திரை சக்திவாய்ந்த முத்திரையைக் கொண்டுள்ளோம் என்று அவர் வலியுறுத்தினார்.

பிரிட்டிஷ் இராணுவவாதத்திற்கு ஸ்காட்லாந்தின் பங்களிப்பையும் புகழ்ந்தார்.

ஒன்றாக நாம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபையில் இடம் பெறுவோம், நேட்டோவிலும் ஐரோப்பாவிலும் உண்மையான செல்வாக்கைப் பெறுவோம், G8 போன்ற நிகழ்வுகளை நடத்துவோம். ஒன்றாக நாம் நம் உலகில் மிகச் சிறந்த ஆயுத படைகளைக் கொள்வோம். RAF Lossemouth இருந்து லிபியா மீது பறந்தபோது அதை முதலில் இயக்கிய விமானிகளை பற்றி நினைத்துபார்க்கின்றேன். பிளாக் வாட்ச், ஹைலாண்டர்ஸ் என்பது போன்ற.....புகழ்பெற்ற ஸ்காட்லாந்து பட்டங்கள் இப்பொழுது Royal Regiment of Scotland உடைய பகுதியாகும்.

இது லோவட் பிரபு வெற்றிநாளன்று கடற்கறையில் இறங்கியது பற்றியதாகும். அவருடைய படை, கரையில் இறங்கியபோது இசை முழங்கின. இது நல்ல நடவடிக்கைகளுக்காக HMS Sheffield, HMS Glasgow, HMS Antim, HMS Glamorgan சாம்பல் நிறக் கப்பல்கள் 8000 மைல்கள் தள்ளி இருந்த பாக்லாந்துத் தீவுகளை கடல் மூலம் அடைந்தது குறித்ததாகும்.

இவை அனைத்தும் சுதந்திர-சார்பு பிரச்சாரத்தின் ஒரு அரசியல் பரப்புரையாக எழுதப்பட முடியும். உண்மையில் அனைத்து முன்னாள் இடது கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ள ஆம் முகாமினர் துல்லியமாக உந்துதல் பெற்றுள்ளது வேண்டாம் முகாமில் சிக்கன நடவடிக்கைகள், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா ஆகியவற்றில் நடந்த சட்டவிரோதப் போர்களுடன்  தொடர்பு கொண்டதற்காக வெறுக்கப்படும் டோரிக்கள், தொழிற் கட்சியினர் லிபரல் டெமக்ராட்டுக்களை அடக்கியுள்ளதாலாகும்.

நியாயபூர்வமான உணர்வு, SNP இற்கும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ சக்திகளுக்கு பின்னாலும் திசைதிருப்பப்படுவதற்கான பெருமளவிலான காரணம், அனைத்து போலி இடதுகளும் ஸ்காட்லாந்து சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கைக்கு பின்னால் இருப்பதாலாகும்.  

எவரும் ஐக்கிய இராச்சிய முத்திரையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் ஆம் முகாமோ இதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து முத்திரையை கொடுக்க விரும்புகிறது. அதாவது பெருநிறுவன வரியை குறைப்பதை வசதியாக்கவும் மற்றும்  ஐரோப்பிய சந்தையை அணுகுவதுடன் இணைந்த ஒரு மலிவான முதலீட்டு அரங்கை தோற்றுவிப்பதற்கான ஏனைய நடவடிக்கைகளை எடுக்க சமூகநல உதவிகளை அழித்து ஒரு புதிய முதலாளித்துவ குறுநிலப்பகுதியை உருவாக்குவதாகும்.

உண்மையில், இதன் அடிப்படைகளில் SNP உடைய நோக்கங்கள் காமெரோன் கோடிட்டுள்ள செயற்பட்டியலை போன்றதுதான். அவர்கள் தொழிலாள வர்க்கத்தை இன்னும் சுரண்டி, கூடுதல் ஆதாயங்களைத் தங்கள் பைகளிலும் கிளாஸ்கோ, எடின்பரோவில் இருக்கும் தங்கள் வணிக நண்பர்களின் பைகளிலும் போடுவதுதான். எனவேதான் SNP வரிவிதிப்புகளை நிர்ணயிக்க விரும்புகிறது, பவுண்டையும் முடியாட்சியையும் தக்க வைத்துக் கொள்ள முயல்வதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ இராணுவக் கூட்டிலும் அங்கத்துவத்தை பெற விரும்புகிறது. எனவேதான் அது பதவியில் இருந்தபோதான சான்று கோரப்பட்டபோது எல்லாம் வெட்டுக்களைச் சுமத்தியது, ஐக்கிய இராச்சிய வரிகள் சாதகமாகப் பெறவேண்டியதை நம்பியிருத்தல், அதையொட்டி சில துறைகளில் அவர்கள் கடினப்போக்கை எதிர்பார்க்க வேண்டியதில்லை என்பதாகும். இவையனைத்தும் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பிற்குப்பின் அதிகரிக்கப்படும்.

உழைக்கும் மக்களுக்கு, வாக்கெடுப்புப் பிரச்சினையில் எடுக்க வேண்டிய அணுகுமுறையை நிர்ணக்கும் அடிப்படைப் பிரச்சினை இதுதான்: ஆளும் வர்க்கத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு எது உதவும்?

தீவிரவாத சுதந்திர மாநாடு என்பதின் கீழ் கூடிய ஸ்காட்டிஷ் சோசலிசக் கட்சி போன்றவற்றின் இடைவிடா முழக்கம் ஐக்கிய இராச்சியத்தை வலுவிழக்கச் செய்யும் எதுவும் வரையறைப்படி ஏகாதிபத்திய எதிர்ப்புடையது, முற்போக்கானது என்பதாகும். இது ஒரு பொய் ஆகும். இன்று நாம் ஐக்கிய இராச்சியம் முறிவதற்கு அருகில் உள்ளோம். ஆனால் இது தேசியவாத குப்பை தொழிலாளர்கள் மீது புகுத்தப்பட்டு அவர்கள் யூனியன் கொடி (Union Flag) அல்லது சால்டைருக்கு (Saltire) பின்னால் அணிதிரளவே இட்டுச்செல்லும்.

இறுதி விளைவு இராணுவவாதத்திற்கு எதிராகவும், வேலைகள், ஊதியங்கள் அடிப்படைத் தேவைகள் தேசிய சுகாதார சேவை இவற்றிற்காக ஒன்றுபட்ட போராட்டம் நடத்த வேண்டியது மிக முக்கியம் என்னும் நேரத்தில் தொழிலாள வர்க்கத்தைப் பிரிப்பதாகும். SSP க்கு இது பற்றி நன்கு தெரியும். அது தொழிலாள வர்க்கக் கட்சி என்று கூறிக்கொள்கிறது, ஆனால் நாம் பிற கட்சிகளுடன் உடனடி நோக்கமான சுதந்திரத்திற்காக உழைக்கிறோம். SSP தான் ஸ்காட்லாந்தில் அனைத்துக் கட்சிகளின் சுதந்திர மாநாட்டில் கையெழுத்திட்டது. அது இப்பொழுது SNP, பசுமைவாதிகள் இன்னும் பலதரப்பட்ட நபர்களையும் இழுத்துள்ளது என SSP பெருமை பேசுகிறது.

SSP போன்றவற்றை பொறுத்தவரை, ஸ்காட்லாந்தின் தொழிலாள வர்க்கம் SNP க்கு தேர்தல் தீனிதான். இதற்கு இங்கிலாந்தின் தொழிலாள வர்க்கம் கிட்டத்தட்ட இல்லை எனலாம். SSP உடைய கொள்கைகளில் அது பற்றிய குறிப்புக்கூட இல்லை.

இதன் தாக்கங்கள் ஸ்காட்லாந்திற்கு மிகவும் அப்பால் செல்கின்றன.

கேக்கில் பெரிய துண்டினை யார் பெறுவது என்ற இதேபோன்ற கோரிக்கைகள், ஐக்கிய இராச்சியம் முழுவதும், முதலாளித்துவ அதன் குட்டி முதலாளித்துவ ஆதரவாளர்களை ஸ்காட்லாந்திலும் தூண்டி, வேல்ஸ், இங்கிலாந்தின் வட பகுதிகள் நகரமான ஷெஃபீல்டிலும் எழுச்செய்துள்ளன. இத்தகைய பால்க்கன்மயமாக்கப்படுதல், முன்னாள் யூகோஸ்லாவியாவில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியதை முன்னரே கண்டுள்ளோம். இது இப்பொழுது ஸ்பெயினில் இருந்து காட்டலோனியா முறிவில் ஆரம்பித்து மற்ற பகுதிகளுக்கும் செல்லும் நிலையில் ஐரோப்பா முழுவதும் நடக்க இருக்கும் ஆபத்தைக் காட்டுகிறது.

ஸ்காட்லாந்தில் உள்ள தொழிலாளர்கள் வேண்டாம் வாக்கை பதிவு செய்யவேண்டும். இது ஐக்கிய இராச்சியத்தின் மீதான விசுவாசத்தால் என்று இல்லாமல், பிரித்தானிய தொழிலாள வர்க்கத்தின் பொது விரோதிக்கு எதிரான மூன்று நூற்றாண்டு போராடத்தை தொடரவும், ஆழப்படுத்தவும் தேவை உள்ளது என்ற உணர்வினாலாகும். அந்த போராட்டம் இன்று புதிய முதலாளித்துவ நாடுகள் அமைக்கப்படுவதை கோரவில்லை, மாறாக முதலாளித்துவம் அகற்றப்பட்டு, தொழிலாளர்கள் அரசாங்கம் நிறுவப்படுவதைத்தான் கோருகிறது. இது அனைத்து ஐக்கிய இராச்சியத்தின் அடிப்படையில் மட்டும் நடத்தப்படாது, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட வேண்டும்.