சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

European Union demands more austerity in Greece

ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்தில் மேலும் சிக்கன நடவடிக்கைகளை கோருகிறது

By Robert Stevens 
29 January 2014

Use this version to printSend feedback

ஐரோப்பிய ஆணைக்குழு, சர்வதேச நாணய நிதியம் IMF மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி என்னும் "முக்கூட்டு" கிரேக்கம் ஏற்கவே உடன்பட்டுள்ள பேரழிவு தரும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தவும் இன்னும் கூடுதலான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தும் அதன் கோரிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இவ்வாறு செய்யாவிட்டால் தண்டனையாக, இன்னும் பாக்கியிருக்கும் 4.9 பில்லியன் யூரோக்கள் கடன் கொடுக்கப்படமாட்டாது. கடன் இல்லையென்றால், கிரேக்கம் அதன் முக்கூட்டுடனான  மொத்த 240 பில்லியன் யூரோ கடன் உடன்பாட்டை நிறைவேற்ற முடியாது. ஏனெனில் அது மே மாதம் 10 பில்லியன் யூரோக்கள் மதிப்புப் பத்திரங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்.

ஆரம்பத்தில் கிரேக்கம் அதன் சிக்கனச் செயற்பட்டிலை முறையாக பரிசீலித்து செயல்படுத்தியிருந்தால்தான், கிரேக்கத்திற்கு 4.9 பில்லியன் யூரோக்கள் கொடுக்க கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய  இப்பரிசீலனை, முக்கூட்டால் மூன்று முறை தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவற்றின் ஆய்வுக்குழு ஏதென்ஸுக்கு ஜனவரி 15 இலும் மற்றும் பின்னர் ஜனவரி 23 இலும் திரும்புவதாக இருந்தது.

ஜனவரி 23 செய்தியாளர் மாநாட்டில் பேசிய IMF தொடர்புத் துறை துணைச் செய்தித் தொடர்பாளர் வில்லியம் முர்ரே, குறிப்பான பணி நாள் நிர்ணயிக்கப்படவில்லை, முக்கூட்டு “பல பிரச்சினைகள், நிதி, உள்கட்டமானம் பற்றியவை” தீர்க்கப்பட்ட பின்தான் முக்கூட்டு திரும்பச் செல்லும் என்று கூறினார்.

புதிய ஜனநாயகம்/PASOK அரசாங்கம் மற்றும் முக்கூட்டிற்கும் 2013-2014 வரவு செலவு திட்ட வெட்டுக்களின் அளவு குறித்து உடன்பாடு இன்னமும் வரவில்லை. இதில் 4.5 பில்லியன் யூரோக்கள் இடைவெளி இருக்கலாம். கிரேக்கம் 3 பில்லியனுக்கும் மேலான கூடுதல் வெட்டுக்கள் உள்ளடங்கிய அதன் 2014 வரவு-செலவுத் திட்டத்தை டிசம்பரில் நிறைவேற்றிய பின்னரும் நிலைமை இவ்வாறு உள்ளது.

முக்கூட்டு, முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட பொதுத்துறை வெட்டுக்கள் தக்க வைக்கப்பட வேண்டும் எனக் கோருகிறது; இதில் இந்த ஆண்டு குறைந்தப்பட்சம் 11,000 வேலைஇழப்புக்கள் இருக்கும்; இது தவிர தனியார்மயமாக்கலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என கோரி வருகிறது.

அரசாங்கத்தின் முடிவான உணவு விடுதி, உணவுச் சேவைகளுக்கு 23ல் இருந்து 13% எனக் மதிப்புக்கூட்டு வரியை (Value Added Tax)  குறைப்பதையும் சர்வதேச நாணய நிதியம் எதிர்க்கிறது ஒரு புதிய சொத்து வரியினால் வரும் பற்றாக்குறைக்கு நிதியளிக்க அரசாங்கம் மேலதிக சிக்கன நடவடிக்கைகளை குறிப்பிடவேண்டும் என அது விரும்புகிறது. இந்த பற்றாக்குறை 400 மில்லியன் யூரோக்கள் இருக்கலாம் என்று முக்கூட்டும்,  200 மில்லியன் யூரோக்களாக இருக்கலாம் என்று கிரேக்க நிதி அமைச்சரகமும் கூறுகின்றன.

முக்கூட்டுப் பரிசீலனையின் தாமதத்திற்கு முக்கிய காரணி, அரசாங்கம், பூகோள மூலதனத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்துத் தடைகளையும் நீக்கி, நூற்றுக்கணக்கான நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் நோக்கத்தை கொள்ள வேண்டும் என அது வலியுறுத்துவதுதான். 11 மாதகால ஆய்விற்குப்பின், மொத்தம் 329 பரிந்துரைகள் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பால் செய்யப்பட்டுள்ளன. நடைமுறையில் இருக்கும் 555 கட்டுப்பாட்டுத் தடைகள் திருத்தப்பட வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும் என்றும் அது அறிவித்துள்ளது.

அபிவிருத்தி அமைச்சர் Costis Hatzidakis க்கு முக்கூட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற ஒரு மின்னஞ்சலை Kathemerini மேற்கோளிட்டு, “முக்கூட்டு, இச்சீர்திருத்தங்கள் கிரேக்க வணிகத்தின் போட்டித்திறனை மேம்படுத்த மைய முக்கியத்துவம் உடையது, உள்ளூர் நுகர்வோர்களுக்கு விலை குறையும், வேலைகள் தோற்றுவிக்கப்பட முடியும்” என்று கூறியதாக தகவல் கொடுத்துள்ளது. நாட்டிற்குக் கடன் கொடுத்தவர்கள் OECD பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளனவா என்று கவனிக்கின்றனர், இது அரசாங்கம் சீர்திருத்தங்களுக்கான ஆர்வம் பற்றிய 'முக்கியமான செய்தியை' அனுப்ப வேண்டும்.” என்று குறிப்பிடுகின்றது.

ஆதாரங்களின்படி, அரசாங்கம் OECD பரிந்துரைகளில் 80%த்தை ஏற்றுள்ளபோதும் முக்கூட்டிடை சமாதானப்படுத்த இது போதுமானதாக இராது.

முக்கூட்டின் மற்றொரு முக்கிய கவலை, கிரேக்க அரச கவுன்சிலில் இருந்து இம்மாதம் முன்னதாக வந்த செய்தியான ஆயுதப்படைகள், பொலிஸ், கடலோரப் பாதுகாப்புப்படை, தீயணைக்கும் துறையினர் ஆகியோருக்கு ஊதிய வெட்டுக்களை நடத்தியிருப்பது “அரசியலமைப்பிற்கு முரணானது” என தீர்ப்பளித்துள்ளது ஆகும்.

இத்தீர்ப்பு, ஜனவரி 13ல் ஆயுதப்படைகள் மற்றும் பிற சீருடைதரித்தகுழுக்கள் ஊதிய வெட்டுக்களைச் சுமத்துவதற்கு எதிராக அவற்றைப் பிரதிபலிக்கும் கூட்டமைப்புக்களால் செய்யப்பட்ட ஒரு சட்டரீதியான எதிர்ப்பிற்கு பின்னர் வந்தது. இந்த வெட்டுக்களில் ஆகஸ்ட் 1, 2012 ல் இருந்து நடைமுறைக்கு வரும்ஊதியத்தில் தேவையற்றுக் கொடுக்கப்பட்ட ஊதியத்தை திருப்பிக் கொடுத்தலும் அடங்கும். இந்த சட்டரீதியான எதிர்ப்பு வெட்டுக்கள் விகிதாசாரப்படி வழங்கவேண்டும் என்ற அரசியலமைப்பு கொள்கைக்கு  எதிரானதாக உள்ளதுடன், ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நியாயமான ஊதியத்திற்கு விரோதமானவை என்றும் வலியிறுத்துகிறது.

நிதியமைச்சரகம் இந்த ஊதிய வெட்டுக்களை திரும்பபெறுதல் மட்டும் கிட்டத்தட்ட 500 மில்லியன் யூரோக்கள் செலவாகும் என்று கணக்கிட்டுள்ளது. ஆனால் இது ஒரு ஆரம்ப மதிப்பீடுதான் என்று ஒப்புக் கொண்டுள்ளது. இது 1 பில்லியன் யூரோக்களாகக் கூடப் போகலாம். ஆயுதப்படையினருக்கு இருப்பவை போன்ற இதேசிறப்பு ஊதிய உதவிகளை”  நீதித்துறை, பல்கலைக்கழக ஆசிரியர்களிடம் போன்றவர்களின் சமூகநலப் பாதுகாப்பு நிதிய அமைப்புக்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் அமைப்பிலிருந்தும் சட்டரீதியான கோரிக்கைகள் வரலாம் என கருதுவதாக இந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவர்களும் கடுமையான ஊதிய வெட்டுக்களை எதிர்கொள்ளுகின்றனர்.

பொதுத்துறையில் ஊதிய வெட்டுக்கள் 2010ல் இருந்து சுமத்தப்பட்டுள்ள அனைத்து சிக்கன நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 10ல் ஒரு பகுதியாகும். அரசாங்க ஊழியர்கள் 1,500 யூரோக்களுக்கு மேல் மாதம் சம்பாதிப்பவர்கள் 20 முதல் 35 சதவிகிதம் வரை தங்கள் ஊதியம் வெட்டப்பட்டதைக் கண்ணுற்றனர்.

2013 ஆரம்ப வரவு செலவு திட்டத்தில், 830 மில்லியனாக உபரி இருக்கும் என்று கிரேக்கம் மதிப்பிட்டுள்ளது – கடன்களுக்கு வட்டி கொடுக்கும் முன். கவுன்சில் தீர்ப்பின் விளைவாக உபரி இருக்காது, கிரேக்கத்தின் முக்கூட்டுடனான இலக்குகள் கொந்தளிப்பில் முடியும்.

மூத்த அரசாங்க அதிகாரிகள், ஊதியங்களை திரும்ப செலுத்துதல் மற்ற செலவுக் குறைப்புக்களில் ஈடுபடுவதற்கு வகை செய்வதோடு நாடு திவாலாகும் என எச்சரித்துள்ளனர். கிரேக்க சுகாதார மந்திரி அடோனிஸ் ஜோர்ஜியடிஸ், “எத்தனை நீதிமன்ற முடிவுகள் இருந்தாலும், எம்மால் திடீரென பணத்தைத் தோற்றுவிக்க முடியாது” என்றார்.

துணை  நிதி மந்திரி கிறிஸ்டோஸ் ஸ்டைகௌரஸ் கூறினார்: “இது ஒரு கூடுதல் தலைவலி, நாம் 2013 வரவு-செலவுத் திட்ட இலக்குகளில் அதிகம் சாதித்தாலும் கூட.... நாங்கள் கடமைப்பட்டுள்ளதால் நாம் அதை செய்யவேண்டும், ஆனால் நிரந்தர அடிப்படையில் வரவு-செலவுத் திட்ட சமப்படுத்தல்களைக் கண்டறிய வேண்டும் என்றார்.

2010ல் இருந்து முக்கூட்டு இச்சிறிய நாட்டை ஐரோப்பா முழுவதும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தும் ஒரு சோதனைக்களமாக பயன்படுத்த கிரேக்கத்தில் பாரிய சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்தி மக்களை திவாலாக்கிவிட்டது. தொடர்ச்சியாக பதவிக்கு வந்த அரசாங்கங்களினதும் மற்றும் தொழிற்சங்கங்க அதிகாரத்துவங்களின் முழு ஒத்துழைப்புடன், ஆறு தொகுதி சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்பட்டுள்ளன.  இன்னமும் 300 பில்லியன் யூரோக்களுக்கு மேல் உள்ள மொத்தக்கடனை அது விரைவாக செலுத்துவதில் தவறு இழைத்தால் கிரேக்கத்திற்கு நிதியை நிறுத்துவது குறித்து நாளாந்த அச்சுறுத்தல்கள் முக்கூட்டால் வெளியிடப்பட்டன.

யூரோ குழு தலைவர்கள் இவ்வாரம் பேச்சுக்களை நடத்த இருப்பதற்கு முன்னர், இன்னும் அச்சுறுத்தல்கள் முக்கூட்டாலும் பிற மூத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளாலும் கொடுக்கப்பட்டன. டச்சு நிதிமந்திரி Jeroen Dijsselbloem, யூரோப்பகுதி யூரோ குழுவின் நிதி மந்திரிகள் குழுவின் தலைவர், கிரேக்கத்தின் நிலைமை பரிசீலனை குறித்து புகார் கூறினார்: “இது செப்டம்பர் அக்டோபரில் இருந்து நடக்கிறது, விரைவில் முடிக்கப்பட வேண்டும்.”

“மிகவும் குறைவான முன்னேற்றம்தான்” அடையப்பட்டுள்ளன, “ஏதென்ஸிற்கு முக்கூட்டு திரும்பும் முன், கிரேக்கத்திற்கு இன்னும் பணிகள் தேவை” என்றார் அவர்.

கூட்டத்தில் ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷொய்பிள ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகளைத் தவிர, “கிரேக்கம் இன்னும் நிறையச் செய்ய வேண்டும், கூடுதல் முயற்சிகள் தேவை” என்றார்.

உச்சி மாநாட்டை தொடர்ந்து, கிரேக்க நிதி மந்திரி Yannis Stournaris கிரேக்கம் மார்ச்சுக்கு முன் நிதி எதையும் முக்கூட்டில் இருந்து பெறும் வாய்ப்பில்லை என்றார். யூரேசியா குழுவின் இயக்குனர் ஒருவர், அரசியல் நெருக்கடியை மதிப்பீடு செய்யும் ஆலோசனை நிறுவனம், சமீபத்தில் கிரேக்கம் “அதன் நிதிய, உள்கட்டுமான இலக்குகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கிறது” என்று கூறியள்ளார்.

கிரேக்கம் கிட்டத்தட்ட முக்கூட்டில் இருந்து 240 பில்லியன் யூரோக்களில் 200 பில்லியன் யூரோக்களைப் பெற்றிருந்தாலும், அதன் நெருக்கடி முடியும்போல் தோன்றவில்லை. 2008 பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து கிரேக்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 25% சரிந்துவிடது. இது கிரேக்க உள்நாட்டுப் போர்க்காலத்தில் இருந்ததைவிட அதிகம் ஆகும் – பொருளாதாரம் இப்பொழுது ஆறாம் ஆண்டு மந்த நிலையில் ஆழ்ந்துள்ளது.

பல பொருளாதார வல்லுனர்களின் கருத்துப்படி, கிரேக்கத்திற்கு மேலும் பிணை எடுப்புக்களுக்கு 7 முதல் 17 பில்லியன் யூரோக்கள் வரை அடுத்த ஆண்டு தேவைப்படும்.