சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐக்கிய அமெரிக்கா

Germany, US push aggressive policies at Munich Security Conference

மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மனி, அமெரிக்கா ஆக்கிரோஷமான கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன

By Stefan Steinberg 
3 February 2014

Use this version to printSend feedback

இந்த வார இறுதியில் கிட்டத்தட்ட 400 முக்கிய சர்வதேச அரசியல் மற்றும் இராணுவ பிரமுகர்களும் பாதுகாப்புத்துறை ஒப்பந்தக்காரர்கள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் பிரதிநிதிகளும் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் (MSC), கலந்து கொண்டு உலக இராணுவ, மற்றும் பாதுகாப்பு நிலைமையை விவாதித்தனர். இதில் ஜோன் கெர்ரி மற்றும் சக் ஹேகல் இருவரும் கலந்து கொண்டதன் மூலம் முதல் தடவையாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலரும் பாதுகாப்பு மந்திரியும் பங்குபெற்ற முதலாவது மாநாடாகின்றது.

மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உயர்மட்ட ஜேர்மனிய அதிகாரிகளின் ஒரு தொடர் உரைகள் நிகழ்ந்தன. இவை ஆக்கிரோஷமான இராணுவக் கொள்கையை அறிவித்து, இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜி ஆட்சி வீழ்ச்சியடைந்ததின் பின், ஜேர்மனிய இராணுவத்தின் மீது இருந்த மரபார்ந்த கட்டுப்பாடுகளை அநேகமாக நிராகரித்தன. மாநாட்டின் மிரட்டும் தொனி, முன்னாள் கிழக்கு ஜேர்மனிய மதகுருவும் தற்பொழுது ஜேர்மனியின் ஜனாதிபதியுமான ஜோஅகிம் கௌவ்க்கால் உரைக்கப்பட்டது.

20ம் நூற்றாண்டில் இரு உலகப் போர்களை ஆரம்பித்த அதன் கடந்த காலத்தை, ஜேர்மனி ஒரு கேடயம் போல் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என அழைப்புவிட்ட கௌவ்க், நாட்டின் ஆயுதப்படைகள் அடிக்கடியும் தீர்க்ககரமாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். முன்போல் ஜேர்மனி தொடர்ந்தும் இருக்கமுடியாது என்று கௌவ்க் வாதிட்டார். வெளிப்படையான உலக ஒழுங்மைப்பிற்கு விரைவான, வியத்தகு அச்சுறுத்தல்கள் இருக்கையில் ஜேர்மனியின் அசட்டைத்தனமான மனப்பான்மை மற்றும் ஐரோப்பாவின் பிரச்சனைகளை மட்டும் பார்ப்பதிலிருந்து கடந்துவரவேண்டியது அவசியம் என்றார்.

இது உலகத்தின் முக்கிய மோதல்களான மத்திய கிழக்குப் போர்களில், மிக முக்கியமாக அமெரிக்க தலைமையில் சிரியாவில் நடக்கும் பினாமிப் போரில், உக்ரேன் தொடர்பாக மாஸ்கோவுடனான பேர்லினின் மோதலில், கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக ஆசியாவிற்கு முன்னுரிமை கொடுத்தலை நடத்திக்கொண்டிருக்கையில், அவசியமானால் இராணுவத்தின் மூலம் ஜேர்மனிய ஏகாதிபத்தியம் தலையிட வேண்டும் என்பதற்கான அடையாளம் ஆகும்.  

ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் நலன்கள் உலகம் முழுவதும் பரந்திருப்பதை தெளிவுபடுத்திய கௌவ்க் பல கேள்விகளை  எழுப்பியுள்ளார். நமது அண்டைப்பகுதிகளிலும், கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் ஸ்திரப்படுத்த போதுமானதை நாம் செய்கிறோமா? பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாம் செய்ய வேண்டியதை செய்கிறோமா? இராணுவ நடவடிக்கை எடுக்கும் நட்புநாடுகளுடன் இணைவதற்கு நாம் நம்பகரமான காரணங்களைக் கண்டுபிடித்துள்ளோமா? ஆபத்துக்களில் நியாயமான பங்கெடுத்துக்கொள்ள நாம் விருப்பமாக உள்ளோமா? எனக் கேட்டார்.

நமது இராணுவத்தை அனுப்புதல் என்ற இறுதியான முடிவிற்கு வருவது பற்றி விவாதிக்கப்படுகையில், ஜேர்மனி கொள்கை அடிப்படையில் இயலாது எனக் கூறுதல் கூடாது என்று முடிவாக அவர் தெரிவித்தார்.

கௌவ்க்கின் ஆயுதங்களை உலகளாவிய பயன்படுத்தும் அழைப்பு, மாநாட்டில் மீண்டும் தனித்தனி உரைகளில் ஜேர்மனியின் புதிய பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லையென் (CDU) மற்றும் வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் (SDP) ஆகியோரால் வலியுறுத்தப்பட்டன.

வொன் டெர் லையென் பின்வருமாறு கூறினார்: இம்மாநாட்டின் திட்டத்தை பார்த்துத்தான் நாம் எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடிகளையும் மோதல்களையும் பற்றி பார்வையாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டியதில்லை. சிரியாவில் நடக்கும் கொடூரப்போர், லிபியாவின் மோசமடைந்துவரும் நிலைமை, அண்டைக் கண்டமான ஆபிரிக்காவில் சில பகுதிகளில் சீர்குலைந்துவரும் நிலைமை..... என்பன பொறுத்திருந்து பார்ப்போம் என்பது ஒரு விருப்புரிமை அல்ல என்பதை காட்டுகின்றன. வழிவகைகளும், தகமைகளையும் நாம் கொண்டிருந்தால், அவற்றில் தலையிடும் கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது.

ஜேர்மனி வெளிநாட்டு, பாதுகாப்புக் கொள்கைகளில் முன்கூட்டியே, இன்னும் தீர்க்கரமாக, இன்னும் கணிசமாக ஈடுபடத் தயாராக இருக்க ஸ்ரைன்மையர் அழைப்புவிட்டார். அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் ஒரு கூட்டு ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கை விரிவாக்கப்படுவது தேவை என்னும் கருத்தை அவர் விரிவாக்கி, உக்ரேனிலும் ஈரானிலும் மேற்கு நலன்களைக் பாதுகாக்க ரஷ்யாவுடன் பேச்சுக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மாநாட்டிற்கு ஜேர்மனியில் கெர்ரி வந்து இறங்கியபின் அவரை முதலில் வரவேற்றவர்களுள் ஸ்ரைன்மையர் ஒருவராவர். இருவருமே தங்கள் நெருக்கமான, நட்புறவை வலியுறுத்தினர்.

ஜேர்மன் இராணுவத்தின் ஒரு புதுப்பிக்கப்பட்ட பங்கிற்கு வாதிடும் அனைவருடைய முக்கிய எதிர்ப்பாளர்கள், ஜேர்மன் மக்கள் ஆகும். ஒரு சமீபத்திய ARD Morgenmagazin நடத்திய கருத்துக் கணிப்பு, ஆபிரிக்காவில் ஜேர்மனிய இராணுவத்தின் அதிகரித்த தலையீட்டை மக்களில் 61% எதிர்க்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. வெள்ளியன்று வெளிவந்த மற்றொரு மதிப்பீடு ஜேர்மன் இராணுவம் ஏற்கனவே வெளிநாடுகளில் அதிகம் ஈடுபட்டுள்ளது என 45% இனர் நம்புவதைக் காட்டுகிறது.

உக்ரேன் பற்றித் தீவிர வேறுபாடுகள் மாநாட்டில் எழுந்தன. ஜேர்மனியும் அமெரிக்காவும் அங்கு ஐரோப்பிய ஒன்றிய சார்பு எதிர்த்தரப்பின் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முக்கியமாக ஆதரிக்கின்றன. அரசியல்ரீதியாக இது வலது தீவிர பிரிவினரால் தலைமை தாங்கப்படுவதுடன், இதில் பாசிச ஸ்வோபோடா (சுதந்திரக்) கட்சி உள்ளது. ரஷ்ய, உக்ரேனிய அதிகாரிகள் மேற்கின் கொள்கைகளைக் குறைகூறியுள்ளனர்.

உக்ரேனிய வெளியுறவு மந்திரி லியோனிட் கோஷ்ஹரா எதிர்த்தரப்பு உக்ரேனிய ஆட்சியுடன் நேர்மையுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை என்று புகார் தெரிவித்தார். உக்ரேனிய எதிர்த்தரப்புத் தலைவர் விட்டாலி கிளிட்ஷ்கோ அரசாங்கம் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு எதிராக பயங்கரவாதம், வன்முறையை பயன்படுத்துகிறது எனக் குற்றம்சாட்டினார்

ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவும் எதிர்த்தரப்பிற்கு ஆதரவு கொடுப்பதின் மூலம் தாங்கள் ஜனநாயகத்தை வளர்க்கிறோம் என்னும் அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கூற்றை விமர்சித்தார். ஜனநாயக வளர்ப்பதற்கு  தெருக்களில் நடக்கும் வன்முறை எதிர்ப்புக்களுக்கு ஆதரவு கொடுப்பது எப்படி உதவும்? அரசாங்கக் கட்டிடங்களைக் கைப்பற்றுவோர், பொலிசைத் தாக்குவோர், இனவெறி, யூத எதிர்ப்பு, நாஜிக் கோஷங்களை எழுப்புவர்கள் மீதான கண்டனங்களை நாம் கேட்கமுடியவில்லை? என்றார் அவர்.

இக்கருத்துக்களை மேற்கு அதிகாரிகள் அப்பட்டமாக உதறித்தள்ளினர். கெர்ரி ஒரு ஜனநாயக ஐரோப்பிய எதிர்காலத்திற்கான போராட்டம் உக்ரேனைவிட வேறு எங்கும் வெளிப்படையாக இல்லை என்றார். உக்ரேன் பற்றிய தன் கருத்துக்களில், கெர்ரி கீயேவில் சமீபத்திய எதிர்ப்புக்களில் புதிய பாசிசக் குண்டர்களின் முக்கிய பங்கை எந்த குழப்பநிலையிலும் தெருக்களில் காணக்கூடிய விரும்பத்தகாத பிரிவினர் என உதறித்தள்ளினார்.

கெர்ரியுடைய உரையே மாநாட்டில் நிறைய திரிப்புக்களையும், தவிர்ப்புக்களையும் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் செல்வ திரட்சியை அவர் பெருமை பேசிக் கொண்டு, சந்தை கொள்கைகளை இது அடித்தளமாக கொண்டுள்ளது என்றார், 1990களில் எங்கள் வருமானம ஈட்டுபவர்களின் ஒவ்வொரு பகுதியும் வருமானம் அதிகரித்தலைக் கண்டது... 1990களில் உலகம் கண்ட மிகப்பெரிய செல்வத்தை நாங்கள் தோற்றுவித்தோம்; அமெரிக்காவிலேயே இது Pierponts, Morgans, Rockfellers, Carnegies, Mellons தோற்றுவித்ததை விட மிக அதிகம் ஆகும்.

தன் உரையின் மற்றொரு பகுதியில் கெர்ரி தேசிய பாதுகாப்பு அமைப்பின் (National Security Agency -NSA) ஒற்று நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார். இவை குறிப்பாக ஜேர்மனிய மக்களின் பரந்த தட்டுக்களிடம் இருந்து பாரிய சர்வதேச விமர்சனத்தை சந்தித்துள்ளன. அமெரிக்க ஜனநாயகம் எப்பொழுதும் முன்னேற்றத்திற்கான பணி என அறிவித்த கெர்ரி, ஒபாமா நிர்வாகத்தின் கீழ் உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள NSA கண்காணிப்பை பாதுகாத்து, அரசாங்கத்தின் சமீபத்திய திட்டமான நம் அடையாள உளவுத்துறை நடைமுறைகள் பரிசீலிக்கப்படும், திருத்தப்படும் என்பதையும் பாராட்டினார்.

அமெரிக்காவில் அதிகரித்துள்ள பாரிய சமூக சமத்துவமின்மையையும், அவருடைய அரசாங்கமே ஜனநாயக உரிமைகள்மீது நடத்தும் தாக்குதலையும் புறக்கணித்து, கெர்ரி பின்வருமாறு கூறினார்: நாம் ஒரு குழப்பமிக்க போக்கைக் கண்டுள்ளோம் --கிழக்கு ஐரோப்பா, பால்கன்களின் பல பகுதிகளில் குடிமக்களின் விருப்புகள் ஊழல் மிகுந்த தன்னலக்குழுக்களின் நலன்களுக்காக நசுக்கப்படுகின்றன. இந்த நலன்கள் அரசியல் எதிர்ப்பையும் அமைதியின்மையையும் நசுக்க பணத்தை பயன்படுத்தப்படுத்துவதுடன் அரசியல்வாதிகளைகளையும் செய்தி ஊடகத்தையும் விலைக்குவாங்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

கெர்ரி கருத்துக்களில் உள்ள பாசாங்குத்தனம் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. கிழக்கு ஐரோப்பாவின் தன்னலக்குழுக்களின் மாதிரிகளில் முக்கியமானவர்கள் வோல் ஸ்ட்ரீட்டின் பில்லியனர் நிதியாளர்களும் சொத்துக்களை அழிப்பவர்களும் ஆவர். கடந்த 25 ஆண்டுகளில் ரஷ்யா, உக்ரேன் மற்றும் பிற இடங்களில் அவர்கள் தங்கள் பெரும் செல்வத்தை கெர்ரி தன் உரையில் பாதுகாத்த அதே சந்தைக் கொள்கைகளாலேயே ஈட்டினர்.

அவரது கருத்துக்களில் கெர்ரி, அடிப்படையில் ரஷ்யா, உக்ரேனை, அமெரிக்க ஆதரவுடைய ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ், ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கிற்கு உட்படுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார்.

மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ஹேகல் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பாதுகாப்புத்துறைகள் எதிர்கொள்ளும் அழுத்தம் நிறைந்த சவால்கள் உலகளாவியது என வலியுறுத்தினார்; இதில் மத்திய கிழக்கு, வட ஆபிரிக்காவில் அரசியல் உறுதியற்ற தன்மை, ஆபத்தான அரசாங்க தொடர்பற்றவர்களின் செயல்கள், வட கொரியா போன்ற  போக்கிரி நாடுகள், வலைத் தள போர், மக்கள் தொகை மாற்றங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வறுமை, பட்டினி ஆகியவையும் உள்ளன. என்றார்.

ஒபாமா நிர்வாகத்தின் பசிபிக்கிற்குத் திரும்புதலை பாதுகாத்து ஹேகல் தன் உரையை முடித்தார். அத்திலாந்திற்கு இடையிலான கூட்டிற்கு முக்கிய அச்சுறுத்தல்கள், சீனாவும் ரஷ்யாவும்தான் என்றார். இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்கையில், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் விரைவில் அவற்றின் இராணுவங்களை நவீனப்படுத்தியுள்ளன, உலகப் பாதுகாப்புத் துறைகளை நவீன்படுத்தி உலகெங்கிலும் உள்ள நம் பாதுகாப்பு பங்காளித்தனத்தின் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் சவாலுக்கு உட்படுத்தியுள்ளன. என அவர் அறிவித்தார்.

இந்த கலந்துரையாடல்களின் ஒரு சுற்றை அடுத்து, கெர்ரி, ஹேகல் இருவருமே, அமெரிக்கா உலக அரங்கில் இருந்து பின்வாங்குகிறது என்பதை நிராகரித்து, சிரியா மற்றும் ஈரானுக்கு எதிராக ஆக்கிரோஷமாக செயல்படும் அவர்கள் விருப்பத்தையும் அறிவித்துள்ளனர்.

ஒரு செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ஹேகல்: எல்லா இடங்களிலும் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப்பற்றிய முழு பட்டியலையும் நான் பார்க்கவில்லை. ஆனால் அமெரிக்கா இதற்கு முன்பு இருந்ததைவிட இப்பொழுது அதிக இடங்களில் பலவிடயங்களை செய்கிறது என துணிந்து கூறுவேன். என்றார்