சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK police marksman will not be charged for killing Anthony Grainger

ஐக்கிய இராச்சியப் பொலிஸ் கொலைப்படை ஆன்டனி கிரேன்ஜரைக் கொன்றதற்கு குற்றச்சாட்டப் படமாட்டார்கள்

By Trevor Johnson 
1 February 2014

Use this version to printSend feedback

ஆயுதமற்ற நான்கு குழந்தைகளின் தந்தை மார்க் டுக்கனின் கொலைக்குக் காரணமாக பொலிசார், சட்டத்திற்கு உட்பட்டு நடந்தனர் என்ற ஜனவரி 8 லண்டன் நடுவர்கள் முடிவை அடுத்து, ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்க குற்றவியில் பிரிவுத்துறை (Crown Prosecution Service -CPS) இதே போன்ற முடிவை ஆன்டனி கிரேன்ஜர் கொலையிலும் எடுத்துள்ளது

36 வயதான, இரு குழந்தைகளுக்கு தந்தையான கிரேன்ஜர் மார்ச் 3, 2012ல் மான்செஸ்டர் பெருநகரப் பொலிஸ் அதிகாரி ஒருவரால் கொலையுண்டார். CPS, துப்பாக்கி இயக்கிய பொலிஸ் அதிகாரி எத்தகைய குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளமாட்டார் என்று தீர்ப்பளித்துள்ளது.

கொலை செய்யப்பட்ட துப்பாக்கிச்சூடு செஷயரில் Culcheth கிராமத்தில் உள்ள பிஸ்ஸா கடைக்கு பின்னே உள்ள பொதுக் கார் நிறுத்தும் இடத்தில் நடந்தது. அபாயகரமான துப்பாக்கி சூட்டின் முன், பொலிசார் பாதிக்ப்பட்டவரின் காரைத் தடுத்து அதன் பின் அதன் டயர்களில் சுட்டனர். பின் காரில் உள்ளவர்களை அதிர்ச்சிக்கும் செயலற்ற தன்மைக்கும் உட்படுத்த CS வாயு பயன்படுத்தப்பட்டது. கிரேன்ஜரைக் கொன்ற தோட்டா காரின் கண்ணாடிக்கூடாக செலுத்தப்பட்டது, கிட்டத்தட்ட நேருக்குநேர் என்னும் முறையில், அவருடைய இதயத்தில் மற்றும் இரு நுரையீரல்களிலும் நுழைந்தது. இது Heckler & Koch துணை இயந்திரத் துப்பாக்கி மூலம் சுடப்பட்டது.

அரசாங்கக் குற்றவியல்துறை பிரிவு, கிரேன்ஜர் மரணத்திற்குப் பின் மான்செஸ்டர் பெருநகர்ப் போலிசின் தலைமை பொலிஸ் அதிகாரி Sir Peter Fahy க்கு எதிராக எதிர்பார்த்த நடவடிக்கை சுகாதார மற்றும் பாதுகாப்பு சட்டங்களின் கீழ்த்தான் இருந்தது. இது பற்றிய முதல் விசாரண பெப்ருவரி 10 அன்று வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும்.

தலைமை பொலிஸ் என்னும் முறையில் இந்த வழக்கில் Fahy உள்ளார். CPS அவருக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் எந்த கிரிமினல் குற்றச்சாட்டுக்களையும் கூறவில்லை; அவர் நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ள தேவையில்லை மற்றும் சாத்தியமான ஒரு குற்றப்பதிவையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை. பிரச்சினையில் இருப்பது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டிற்கு வகை செய்த செயற்பாட்டை போதுமான அளவிற்குத் திட்டமிட்டனரா என்பதுதான்.

கிரேன்ஜர் மரணத்திற்குப்பின், அவரது உறவினரான வெஸ்லி அஹ்மத் இதற்குப் பொறுப்பானவர்களை நீதி முன் நிறுத்த முற்பட்டுள்ளார். “CPS உடைய முடிவு எங்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இது ஒரு தெளிவான வழக்கு என்று நாங்கள் நினைத்தோம்... குற்றச்சாட்டில் இருந்து பொலிஸுக்கு விலக்க அளிக்கும் நோக்கத்தை இது கொண்டுள்ளது. அவர்களுக்குப் பொறுப்புணர்வு கிடையாது, காவலில் இருக்கும்போதும்.... அன்டனியின் வழக்கு இத்தகைய கருத்தை முறிக்கும் என்று நான் நினைத்தேன், ஏனெனில் அவர்கள் ஒரு நிராயுதபாணியான மனிதனை சுட்டுக் கொன்றுள்ளனர். இப்பொழுது நாம் தனியார் குற்றவிசாரணக்கு ஏற்பாடு செய்யவேண்டும் “என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கிரேன்ஜரின் பெற்றோர்கள் Marina மற்றும் John Schofield ம் கூறினர்: “ஆன்டனியின் மரணம் தொடர்பாக சில குற்றச்சாட்டுக்கள் வரவுள்ளன என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், ஆன்டனியை கொன்ற அதிகாரி குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள மாட்டார் என்பதில் கடுமையான ஏமாற்றம் கொண்டுள்ளோம்.”

கிரேன்ஜர் மற்றும் காரில் இருந்த இருவர் கொள்ளையடிக்கும் திட்டத்தை கொண்டிருந்தனர் என்று பொலிசார் கூறினர். செப்டம்பர் 2012 ல் காரில் இருந்த மூவர் மீது விசாரணை நடத்தியபின், அரசாங்க குற்றத்துறை தற்செயல் சாட்சியத்தை மட்டும் தோற்றுவித்திருக்கையில், ஜூரர் பிரிவு ஒன்று கொள்ளை அடிக்கும் சதி அனைவருக்கும் இல்லை என்பதை ஒரு மணி நேரத்திற்குள் கண்டது.

இந்த வசந்த காலத்தில் ஒரு விசாரணையின்போது கிரேன்ஜர் மரணத்திற்கு முன்னர் வரையான நிகழ்வுகள் பற்றி ஜூரிக்குழு ஒன்று விசாரிக்க இருக்கிறது.

ஆகஸ்ட் 2011 மார்க் டுக்கன் கொலை வழக்கில் பொலிசார் கொலையை நியாயப்படுத்த அந்த இடத்தில் ஒரு துப்பாக்கியைக் கண்டதாக கூறுகையில், கிரேன்ஜர் வழக்கில் இவ்வாறு முடியவிலை. தனியாக கிரேன்ஜர் இடத்திலோ, அவர் உட்கார்ந்திருந்த காரிலோ, அவருடன் தொடர்புடைய எந்த முகவரியிலுமோ ஆயுதங்கள் காணப்படவில்லை. கிரேன்ஜர் குடும்பத்தின் வக்கீலான ஜோனதன் பிரிட்ஜ் ஆயுதங்களுடன் அவருக்கு ஈடுபாடு இல்லை என்றும் அதை அவர் அணுகினார் என்பதற்கு சாட்சியம் இல்லை என்றும் கூறினார்.

அதிகாரிகள் 2006 ஜூலையிலும் இதே போன்ற தந்திரோபாயத்தை கையாள முடிவெடுத்தனர்; அப்பொழுது ஜோன் சார்லஸ் டு மெனசெஸ் மரணம் குறித்த சீற்றம் தணிக்கப்பட வேண்டும் என இருந்தது -- பொலிஸ் முழுவதையும் Safety at Work Act 1974 இன் கீழ், டு மெனசெஸ் கொலை மூடிமறைக்கப்பட்டதுபோல், CPS இதிலும் ஒரு அபாயகரமான துப்பாக்கி சூட்டாளரான கிரேன்ஜர் மீதும் சட்டரீதியாக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறுகிறது.

நீதிமன்ற நடவடிக்கை மூலம் வரும் விளைவு ஒரு அபராதமாக  இருக்கும்; பொலிஸ் அதைப் பொதுப் பணத்தில் இருந்து கொடுக்கும். 385,000 பவுண்டுகள் செலவு கொண்ட டு மெனசெஸ் வழக்கில் அபராதம் 175,000 பவுண்டுகள்.

அரசாங்க வக்கீல்கள், ஆயுதமற்ற மக்களைக் கொன்றாலும், ஆயுதம் தாங்கிய பொலிசுக்கு குற்ற்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் அபாயம் உள்ளது என்று பிரிட்ஜ் கூறினார். உண்மையில் பொலிஸ் நடவடிக்கைகள் ஜூலை 2005 மெனசெஸ் கொலைக்குப்பின், அவர்கள் இலக்குக்கு உத்தரவாதம் அளிக்கச் செயல்படுகின்றர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது, அவர்களுக்கு அது பற்றி நன்கு தெரியும்.

கிரேன்ஜர் கொலையை நியாயப்படுத்தும் CPS அறிக்கைகள், “ஒரு ஜூரி அதிகாரி அவருடைய செயல்கள் தேவை என நம்புவரை ஏற்கும்”, “விடையிறுக்கத் தேவையான சக்தி... விகிதாசாரமாக இருக்கும்” என்பது எந்த அளவிற்கு முந்தைய ஜனநாயகம், பொறுப்பு என்பவற்றின் நெறிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன என்பதை உயர்த்திக் காட்டுகின்றன. CPS இப்பொழுது, அரசாங்கம் இலக்கு கொள்ளும் எவரையும் பொலிஸ் கொல்லுவது முறையானது என்று காண்கிறது, அதை விலக்கு எனக் கருதுவதில்லை. எவரையும் – ஆயுதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், குற்றம் செய்தாலும், செய்யாவிட்டாலும், அச்சுறுத்தினாலும் அல்லது நிறுத்தப்பட்ட காரில் அமைதியாக உட்கார்ந்திருந்தாலும்– கொல்லுவது நியாயமானது என்று அது கருதுகிறது.

ஒரு சமீபத்திய BBC Panorama ஆவணம் “கொலை செய்ய சுடுவதா?” இது ஒரு அரசாங்கம் வேண்டுமென்றே கொண்டுள்ள கொள்கை என்பதற்கு மற்றொரு நிரூபணம் எனக் கூறுகிறது. போலீஸ் துப்பாக்கி சூட்டு பிரிவினர் SCO 19 “கடுமையான நிறுத்தங்களை” செயல்படுத்த சான்று எனப் பயன்படுத்தப்படுகிறது; இதில் பொலிசார் பெரும் ஆயுத வலிமையை “மேலாதிக்கம்” “கட்டுப்பாடு” என்று சந்தேகத்திற்கு உரியவர்களை கொல்லப் பயன்படுத்துகின்றனர். இப்பிரிவு பல முறை ஆயுதக் குற்றவாளிகளை இலக்கு கொள்கிறது எனக் கூறப்படுகிறது ஆனால் ஆன்டனி கிரேன்ஜர் வழக்கில் அவ்வாறு இல்லை.

பனோரமா நிகழ்ச்சி கடந்த தசாப்தத்தில் லண்டன் பெருநகரப் பொலிஸ் சுட்டுக் கொன்ற 10  பேர்களில் எட்டு பேர் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டனர் என்று தெரியப்படுத்துகிறது. பெருநகர ஸ்னைப்பர்கள் “ஒரு பாதுகாப்பு வாகனம் கொள்ளையடிக்கப்பட உள்ளது என்பதை எதிர்பார்க்கின்றனர்”, அதையொட்டி “ஹாம்ப்ஷயரில் இருவரைக் கொன்றனர். பொலிசார் நபரைக் கொல்லுமுன் தொடக்கத்தில் கொள்ளை அடிக்க அனுமதிக்கப்பட்டது. கொலைகள் பின்னர் சட்டபூர்வம் எனக் கூறப்பட்டன.” இதை ஆவணம் நன்கு காட்டுகிறது.

Shooting to Kill? என்னும் நூலின் இணை ஆசிரியர் பேராசிரியர் Peter Squires பனோரமாவிற்குத் தெரிவித்தார்: “80கள், 90களில் அதிகாரிகள் பயிற்சி பெற்றது பெரும்பாலும் பலவற்றை அடக்குவதற்குத்தான் என்பதுதான் பெரும் உணர்வாக இருந்தது. இப்பொழுது கட்டுப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்று இல்லாமல் சந்தேகிக்கப்படுபவர் மேல் நேரடித் தீவிரம், முன்கூட்டிய அணுகுமுறை செலுத்தப்படுகிறது.” 

பொலிஸ் சூட்டில் கொல்லப்பட்ட பலவழக்குகளை பனோரமா பரிசீலித்தது, இதில் Azelle Rodney வழக்கும் உண்டு; இவர் பொலிசால் லண்டனில் ஏப்ரல் 30, 2005ல் கொல்லப்பட்டார். பொது விசாரணையில், அதிகாரி எட்டு தோட்டாக்களை இயக்கியதாகக் கூறப்பட்ட சாட்சியம் உண்மையல்ல என நிரூபிக்கப்பட்டது.  SCO 19 பிரிவு (இரகசியப் பெயர் E7) உறுப்பினர் ஒருவர் Rodney ஐ கார் நிறுத்தப்பட்ட சில வினாடிகளுக்குள் தலையில் சுட்டார்: அவர் கீழே குனிந்து துப்பாக்கியை எடுக்குமுன் என்று E7 கூறியது போல் அல்லாமல்.

விசாரணை அறிக்கையின் முழுச் சுருக்கம் கூறுவது: “Bravo, [போலீஸ்] கார் பின்னர் Golf ஐ (ரோட்னியின் காரை) மீண்டும் மோதியது; E7 காரின் பின் சன்னலுக்கு அருகே இம்முறை காரை நிறுத்தியது. கிட்டத்தட்ட Bravo நிறுத்தப்பட்ட உடன், Azelle Rodney மீது E7 தாக்குதலை தொடங்கியது. அதன் வேகத்தை ஒட்டி சாட்சிகள் மற்றும் பிற சிறப்புப் படை அதிகாரிகள் அது ஒரு தானியங்கி துப்பாக்கி சூடு மூலம் என நினைத்தனர். ஒரே மூச்சில் அவர் 6 தோட்டாக்களைச் சுட்டார். குறுகிய இடைநிறுத்தத்தின் பின்னர், இரண்டு கூடுதல் தோட்டாக்களையும் சுட்டார்.”

Ballistics சோதனைகள், E7 மூலம் சுடப்பட்ட தோட்டாக்களில் ஒன்று அருகில் இருந்த பொது வீட்டை விட்டு வெளியேறிய Leon Gittens க்கு மிக அருகில் சென்றுள்ளது என்பதை நிரூபிக்கின்றன. பின்னர் Independent Police Complaints Commission இன் “கடுமையான நிறுத்தங்களை” மறுபரிசீலனை செய்யவேண்டும் என்னும் கோரிக்கையை புறக்கணித்து, பொலிசார் இன்னமும் குறிப்பிடத்தக்க மாற்றம் இன்றி பயன்படுத்தி வருகின்றனர்.