சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Detroit bankruptcy and the global social counterrevolution

டெட்ராய்ட் திவால் நிலையும் உலக சமூக எதிர்ப்புரட்சியும்

Jerry White
4 February 2014

Use this version to printSend feedback

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரியளவில் திவாலாகி உள்ள ஒரு நகரசபையில் நெருக்கடிக்கால மேலாளர் Kevyn Orr'ஆல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள மறுசீரமைப்பு திட்டங்களின் சில பகுதிகள் கடந்த வாரம் டெட்ராய்ட் செய்தி ஊடகங்களில் கசிந்தன. "சரிசெய்வதற்கான ஒரு திட்டம்" என்று அலங்காரமாக கூறப்படும் அத்திட்டம், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த, ஒரு முன்மாதிரியை அமைக்கும் கொடூர தாக்குதலுக்கான திட்டவரைவாகும்.

ஓய்வூபெற்ற 23,500 நகர தொழிலாளர்களுக்கான மருத்துவ உதவிகளை இல்லாதொழிப்பது மற்றும் அவர்களை மெடிகேர் திட்டத்திற்குள் அல்லது ஒபாமாவின் தனியார் காப்பீட்டு பரிவர்த்தனை மையங்களுக்குள் தள்ளுவதை அத்திட்டம் உட்கொண்டுள்ளது. ஓய்வூதிய அறக்கட்டளை நிதிக்கான தொகைகளை அந்நகரம் ஏறக்குறைய 75 சதவீதம் குறைக்க இருக்கின்ற நிலையில், ஓய்வூதியதாரர்கள் ஏற்கனவே சொற்பமாக உள்ள அவர்களின் ஓய்வூதிய தொகையில் இந்த வெட்டுக்களையும் காண உள்ளார்கள்.

டெட்ராய்ட் கடன்களின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள வோல் ஸ்ட்ரீட் வங்கியாளர்கள் மற்றும் ஏனைய செல்வசெழிப்பான கடன் வழங்குனர்களுக்கான கணக்கை தீர்க்க, டெட்ராய்ட் கலைக்கூடம் மற்றும் முனிசிப்பல் குடிநீர் மற்றும் வடிகால் அமைப்பு உட்பட, பொது சொத்துக்களை வந்தவிலைக்கு விற்க Orr ஏற்பாடுகள் செய்து வருகிறார். குடிநீர் வழங்கு துறையில் 1,700 வேலைகளில் 700'ஐ அழித்தமை, நகர வேலைகளில் செய்யப்படவிருக்கின்ற வெட்டுக்களுக்கான முன்நடவடிக்கை மட்டுமே ஆகும்.

டெட்ராய்ட் திவால்நிலைமையானது, காலத்தைப் பின்னோக்கி திருப்புவதற்கான மற்றும் 19ஆம் நூற்றாண்டிலிருந்து பார்த்திராத மிக இழிந்த பொருளாதார நிலைமைகளுக்குள் தொழிலாளர்களை மீண்டும் கொண்டு செல்வதற்கான ஆளும் வர்க்க மூலோபாயத்தின் பாகமாக உள்ளது. டெட்ராய்ட் மக்களுக்கு வோல் ஸ்ட்ரீட் பாணியிலான எவ்வித பிணையெடுப்பையும் அடியோடு நிராகரித்து, அரசு பணியாளர் ஓய்வூதியத்தை அழிப்பதற்கு எதிராக உள்ள அரசு சாசனங்களை மற்றும் ஏனைய சட்ட பாதுகாப்புகளை மீறுவதற்கு, அந்த திவால்நிலைமையை ஒபாமா நிர்வாகம் ஒரு பரிசோதனைக்குரிய விடயமாக பயன்படுத்தி வருகிறது.

என்ன நடந்து வருகிறதென்றால், தனக்கு மட்டுமே செல்வவளமை வேண்டுமென விரும்பும் ஒரு ஒட்டுண்ணித்தனமான நிதியியல் மேற்தட்டால் தொழிலாளர்களின் சலுகைகள் மற்றும் பொது சொத்துக்கள் ஒட்டுமொத்தமாக திருடப்படுகின்றன. மத்திய, மாநில மற்றும் உள்ளூர் மட்டத்தில் இரண்டு பெருநிறுவன கட்சிகளின் அரசியல்வாதிகளால் குற்றத்தனமான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன, அவை நீதிமன்றங்களால் ஒப்புதல் வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு திட்டமிட்டு பொய்யுரைத்து வரும் ஊடகங்களால் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் வெள்ளை மாளிகையும் காங்கிரஸூம் நீண்டகால வேலைவாய்ப்பின்மைக்கான சலுகைகளை வெட்டி உள்ளன; உணவு மானிய கூப்பன் திட்டத்திலிருந்து கூடுதலாக 9 பில்லியன் டாலர் வெட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது; அத்தோடு அடுத்த தசாப்தத்தில் 1 ட்ரில்லியன் டாலர் வெட்டுக்களைத் திணிக்கும் ஒரு வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒபாமாவின் மருத்துவ காப்பீட்டு "சீர்திருத்தம்" ஏற்கனவே மில்லியன் கணக்கானவர்களுக்கு மருத்து காப்பீட்டை தகர்த்துள்ளதோடு, அது மருத்துவ பராமரிப்பு (Medicare) மற்றும் சமூக பாதுகாப்பின் தனியார்மயமாக்கலுக்கு முதல் படிக்கல்லாக சேவை செய்து வருகிறது.

கட்டவிழ்ந்து வருவதென்னவென்றால் ஒரு சமூக எதிர்புரட்சியாகும், அது அமெரிக்காவோடு மட்டும் மட்டுப்பட்டதல்ல. உலகெங்கிலும், ஒவ்வொரு அரசாங்கமும், அது வெளிவேடத்திற்கு "இடதாக" இருந்தாலும் சரி அல்லது வலதுசாரியாக இருந்தாலும் சரி, அதன் செயல்பாட்டுக்குரிய சொல் சிக்கன நடவடிக்கை என்பதாகும். உலக வங்கிகளால் கோரப்படும் வரவு-செலவு திட்ட வெட்டுக்கள் மற்றும் "கட்டமைப்பு சீர்திருத்தங்கள்" என்பவை தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட சமூக உரிமைகளில் என்னவெல்லாம் எஞ்சியுள்ளதோ, அவற்றை அழிக்க நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கிரீஸில், அங்கே பொதுத்துறை தொழிலாளர்கள் ஏற்கனவே 35 சதவீத சம்பள வெட்டுக்களைக் கண்டுள்ளனர் மற்றும் இளைஞர்கள் மற்றும் இளம் தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் வேலையின்றி உள்ள நிலையில், ஐரோப்பிய கமிஷன், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றால் திணிக்கப்பட்ட மறுசீரமைப்பு முறைமைகள், 2008இல் உலகளாவிய பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு கால்பகுதியைக் குறைத்து விட்டுள்ளது. இது இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து உருவான கிரேக்க உள்நாட்டு யுத்தத்தின் போது இருந்ததை விடவும் ஒரு செங்குத்தான வீழ்ச்சியாகும்.

ஜனவரி 1இல், ஸ்பானிய அரசாங்கம் ஒரு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமுலாக்கியது. அது சமூக பாதுகாப்பிற்கான தொகைகளை வாழ்வாதார செலவோடு இணைக்காமல், மாறாக ஆயுள்காலத்தின் அடிப்படையில் ஒரு புதிய " நீடிப்புத்தன்மை காரணியோடு" இணைத்திருந்தது. இது, சராசரி ஆயுள்காலம் அதிகரித்தால் ஓய்வூதியங்கள் வீழ்ச்சி அடையும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இத்தாலி, போர்ச்சுக்கல், பிரிட்டன் மற்றும் அயர்லாந்து மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் கொடுமையான சிக்கன திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரெஞ்சு அரசாங்கமும் சமூக திட்டங்கள் மீதான அதன் தாக்குதல்களை அதிகரிக்க உள்ளது. ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் "அபிவிருத்தி அடைந்துவரும்" நாடுகள் என்றழைக்கப்படுபவைகளில் நிலவும் செலாவணி நெருக்கடி, அந்நாடுகளின் அரசுகளை வட்டிவிகிதங்களை உயர்த்த மற்றும் சமூக செலவினங்களைக் குறைக்க இட்டுச் செல்கிறது.

ஐரோப்பிய மனித உரிமைகள் கவுன்சிலின் கமிஷனரால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை, மந்தநிலை அளவிலான வேலைவாய்ப்பின்மை, வீழ்ச்சி அடைந்துவரும் உணவுப்பொருட்களின் நுகர்வு மற்றும் கண்டம் முழுவதிலும் ஓய்வூதியதாரர்கள் "வறியவர்களாகி வருதல்" ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டியது. Nils Muižnieks குறிப்பிட்டார், கல்விசார் சாதனைகளை வாழ்நாள் முழுவதும் கைவிடும் அளவிற்கு ஆபத்தை முன்னெடுத்து, வேலைவாய்ப்புகளை தேடவும், தங்களின் குடும்பங்களை காப்பாற்றவும் அதிகளவிலான குழந்தைகள் பாடசாலைகளுக்கு செல்வதை நிறுத்தி வருகின்றனர். இது குழந்தை தொழிலாளர்கள் மற்றும் சுரண்டல் போன்றவற்றை மீண்டும் உருவாக்குவதோடு, அதனோடு இணைந்த விதத்தில் வேலை பாதுகாப்பின்மைக்கான நிலைமைகளை ஏற்படுத்துகிறது, என்றார்.

ஏதென்ஸில் ஆகட்டும், அல்லது மட்ரீட் அல்லது டெட்ராய்டில் ஆகட்டும், கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் முடிவே இல்லாமல் தொழிலாள வர்க்கம் ஒரு பாரிய வரலாற்றுரீதியிலான பின்னடைவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், அரசியல் அதிகாரத்தின் ஒவ்வொரு நெம்புகோலையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஒரு சிறிய நிதியியல் மேற்தட்டு ஏறத்தாழ புரிந்து கொள்ளவே முடியாதபடிக்கு தன்னைத்தானே வளப்படுத்தி வருகிறது.

உலகில் அடியிலுள்ள 3.5 பில்லியன் மக்களை விட மிக பணக்கார 85 தனிநபர்கள் பெரும் செல்வவளத்தை வைத்திருக்கிறார்கள் என்ற உண்மையானது, பகுத்தறிவுக்கு புறம்பான நிலையை, வரலாற்றுரீதியில் திவாலான நிலைமையை மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்வியை நிரூபணம் செய்கிறது. அது சமூகம், உயிர் வாழ்வதற்காகவாவது, முதலாளித்துவத்தை முடிவுக்கு கொண்டு வந்து, உற்பத்தி சக்திகளின் பொது உடைமையை, உண்மையான ஜனநாயகத்தை மற்றும் சமூக சமத்துவத்தை, அதாவது சோசலிசத்தை, அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்புமுறையால் அதை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை அடிக்கோடிடுகிறது.

இரண்டொரு வாரங்களுக்குள், சோசலிச சமத்துவ கட்சி டெட்ராய்ட் திவால்நிலைமை மற்றும் DIA & ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல் என்பதன் மீது தொழிலாளர் விசாரணையை நடத்த உள்ளது. அந்த நிகழ்வு பெப்ரவரி 15இல் வேய்னே அரசு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

தொழிலாள வர்க்கம் ஒரு சக்திவாய்ந்த எதிர்தாக்குதலை அபிவிருத்தி செய்வதென்பது டெட்ராய்ட் திவால்நிலைமைக்குப் பின்னால் உள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சக்திகளைக் குறித்த பரந்த புரிதலைச் சார்ந்துள்ளதென்ற கருத்துருவின் அடித்தளத்தில் அந்த விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. அந்நகரைக் கொள்ளையடித்தல் என்பது ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்கின் பாகமாக உள்ளதென்பதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான ஒரு நனவுபூர்வமான அரசியல் இயக்கத்தின் அபிவிருத்தி மூலமாக மட்டுமே அந்த நிகழ்முறைக்கு விடை காண முடியும்.

நிதியியல் தலைமை பிரபுகளால் சமூகம் சூறையாடப்படுவதன் மீதிருக்கும் கோபத்திற்கு அங்கே குறைவில்லை, ஆனால் ஒவ்வொரிடத்திலும் தொழிலாள வர்க்கம் ஒரு முன்னோக்கிற்கான மற்றும் தலைமைக்கான நெருக்கடியை முகங்கொடுத்துள்ளது. உலகின் ஏனைய இடங்களைப் போன்றே, டெட்ராய்டிலும், தொழிற்சங்கங்கள் சிக்கன வெட்டுக்களை நடைமுறைப்படுத்துவதில் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது வறுமையைத் திணிப்பதில் சக-சூழ்ச்சியாளர்களாக செயல்படுகின்றன. தேசியவாதம் மற்றும் இலாபகர அமைப்புமுறையை பாதுகாப்பதை அடிப்படையாக கொண்ட இத்தகைய வலதுசாரி அமைப்புகள் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதை நீண்ட காலத்திற்கு முன்னரே கைவிட்டுவிட்டன.

ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கம், அமெரிக்க மாநில கூட்டமைப்பு, கவுன்டி மற்றும் மாநகரசபை பணியாளர்கள் சங்கம் (AFSCME) மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள், அரை பில்லியன் டாலர் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டு அறக்கட்டளை நிதியம் அல்லது VEBA என்பதன் மீது கட்டுப்பாட்டை பெறுவதற்கு கைமாறாக, நகர தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நகர நிர்வாகத்தின் மருத்துவ சலுகைகளை அழிக்க ஒப்புதல் வழங்கும் Orr மற்றும் பெடரல் மத்தியஸ்தர்களின் ஒரு பரிந்துரைக்கு உடன்பாடு தெரிவித்திருந்தன என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

VEBA நிதியை கொள்ளையடிப்பதன் மூலமாக மற்றும் சாமானிய தொழிற்சங்க உறுப்பினர்கள் மீது மருத்துவ காப்பீட்டு வெட்டுக்களை நேரடியாக திணிப்பதன் மூலமாக திவால்நிலைமையிலிருந்து கிடைக்கும் எச்சசொச்சங்களில் ஒரு பங்கை தொழிற்சங்க நிர்வாகிகள் பெறுவார்கள்.

இலாப அமைப்புமுறைக்கு எதிராக முந்தைய தலைமுறையினர் ஏன் பாரிய புரட்சிகர போராட்டங்களை நடத்தினார்கள் என்பது ஒவ்வொரு நாளும் தொழிலாள வர்க்கத்திற்கு நினைவூட்டப்பட்டு வருகிறது. போர்குணமிக்க போராட்டம் மற்றும் சோசலிச கொள்கைகளுக்கான ஒரு செறிவார்ந்த வரலாறைக் கொண்டுள்ள டெட்ராய்டில், தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த எதிர்ப்பை ஒரு நனவுபூர்வமாக அரசியல் போராட்டமாக மாற்ற முடியும்; மாற்றப்பட வேண்டும்.

உத்தியோகபூர்வ பொய்களை வெட்டியறுக்க மற்றும் இந்த போராட்டத்தை தொடங்க அவர்களுக்கு தேவைப்படும் அறிவை வழங்கி தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஆயுதபாணியாக்க சோசலிச சமத்துவ கட்சி தொழிலாளர் விசாரணையை நடத்தி வருகிறது.