சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Deflationary tendencies intensify in Europe as unemployment remains at record levels

வேலையின்மை மிக உயர்ந்த அளவில் இருக்கையில் விலையிறங்கும் போக்குகள் ஐரோப்பாவில் தீவிரமாகின்றன

By Stefan Steinberg
5 February 2014

Use this version to printSend feedback

சமீபத்திய ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிவரத் துறையான யூரோஸ்டாட் கொடுத்துள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 17 நாடுகளை கொண்ட யூரோப் பகுதியில் வேலையின்மை மிக அதிகமாக உள்ளதுடன், விலையிறக்க போக்குகள் தீவிரமாக உள்ளன என்பதை காட்டுகின்றன. இந்த சமீபத்திய புள்ளிவிவரங்கள், ஐரோப்பா 2008ல் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்கிறது என்னும் அண்மைய ஒருதொகை செய்தி ஊடகக் கட்டுரைகளின் தகவல்களை மறுதலிக்கின்றன.

வெள்ளியன்று மாலை வெளிவந்த யூரோஸ்டாட் அறிக்கையின்படி, வேலையின்மை யூரோப்பகுதியில் அக்டோபர் மாதம் இருந்த மிக அதிக அளவான 12%த்தில்தான் உள்ளது என்பதைக் காட்டுகிறது. அதே நேரத்தில் ஜனவரியில் பணவீக்கம் மீண்டும் புதிய மிக்ககுறைவான 0.7 சதவிகிதப்புள்ளியாக சரிந்தது. விலைவீக்கத்தில் வீழ்ச்சி என்பது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மனிய அரசாங்கம் கண்டம் முழுவதும் செயல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளின் பேரழிவு தரும் பாதிப்பை பிரதிபலிக்கிறது.

விலை வீக்கத்தின் வீழ்ச்சி, முக்கியமாக தொடர்ச்சியான மாதங்களில் பெருகிய வேலையின்மை, நுகர்வோர் செலவழிப்பதில் குறைவு, வருமானங்களின் வீழ்ச்சி ஆகியவற்றால் வந்துள்ளது. ஜனவரிக்கான 0.7 சதவிகித புள்ளி, ஐரோப்பிய மத்திய வங்கி நிர்ணயித்துள்ள விலைவீக்கத்தின் இலக்கான 2 விகிதத்திற்கு கீழேயே உள்ளது.

ஐரோப்பாவில் விலையிறக்கத்தினை நோக்கிய அதிகரிக்கும் திருப்பத்தின் விளைவு பற்றிய அச்சங்கள் பைனான்சியல் டைம்ஸின் கட்டுரையாளர் வொல்ப்காங்க் முன்சௌவால் திங்களன்று வெளிப்படுத்தப்பட்டன. நெருக்கடி முடிந்துவிட்டது எனக் கூறுவதனால் பயனில்லை என்று தொடங்கும் ஒரு கட்டுரையில், முன்சௌவ், பல வளர்ந்து வரும் பொருளாதாரங்களில், அதிகரிக்கும் நெருக்கடி இருப்பதற்கு சமீபகாலத்தில் துருக்கிய ஆர்ஜென்டீனிய நாணயங்களில் மதிப்பிறக்கத்தினை மேற்கோளிடுகிறார். நெருக்கடி தீவிரமானால் அது ஐரோப்பாவை நேரடி விலையிறக்கத்தில் தள்ளும், அதாவது உண்மை விலைகள் குறையும்.

முன்சௌவ் எழுதுகிறார்: விலையிறக்க விளிம்பில் இருக்கும் ஒரு பொருளாதாரத்திற்கு அடுத்த வீட்டில் ஒரு நாணய நெருக்கடி என்பது நடக்கக்கூடாத ஒன்று. இது கிரேக்கத்திற்கும் சைப்ரஸிற்கும் மட்டுமான பிரச்சினை அல்ல, ஐரோப்பியப்பகுதி முழுவதற்கும் பொருந்தும்.... ஒரு ஒற்றை பெரிய அதிர்ச்சி மட்டுமே போதும். துருக்கியிலும் ஆர்ஜென்டீனாவிலும் நடப்பவை அத்தகைய அதிர்ச்சியை கொண்டிருக்கின்றன. சீனாவின் பொருளாதாரக் கொள்கை மாற்றத்தின் மூலம் வரக்கூடிய விளைவுகளைப்பற்றி நான் இன்னும் பேசக்கூடத் தொடங்கவில்லை.

ஐரோப்பிய உயரடுக்கின் கொள்கைகளால் விளையும் மனித துன்பநிலை, அதன் தீவிர வெளிப்பாட்டை பாரிய வேலையின்மை மற்றும் அதனால் உருவாகும் வறுமை ஆகியவற்றின் வளர்ச்சியில் காணமுடிகிறது.

சமீபத்திய யூரோஸ்டாட் புள்ளிவிவரங்களின்படி, ஐரோப்பிய ஒன்றியம்சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களின் கீழ் சிக்கனத் திட்டங்களைக் கொண்டுவந்த நாடுகளில் வேலையின்மை மிக அதிகமாக உள்ளது. உதாரணம், கிரேக்கத்தில் 27.8%, ஸ்பெயினில் 25.8% (இரண்டும் அக்டோபரில்). யூரோஸ்டாட் கருத்துப்படி, ஓராண்டிற்கு முன் இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், வேலையின்மை விகிதம் 14 அங்கத்துவ நாடுகளில் அதிகமாகிவிட்டது, 13 நாடுகளில் வீழ்ந்து, ஸ்வீடனில் மாறாதிருந்தது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பது சைப்ரஸில் (17.5), கிரேக்கத்தில் (27.8), நெதர்லாந்தில் (7.0) மற்றும் இத்தாலியில் (12.7 சதவிகிதம்) எனப் பதிவாயின.

அதே நேரத்தில் புளூம்பேர்க் நியூஸில் கடந்த வாரம் வந்த அறிக்கை ஒன்று, யூரோஸ்டாட் புள்ளிவிவரங்கள் ஐரோப்பாவின் வேலையின்மையின் உண்மை தன்மை பற்றி குறைத்து மதிப்பிடுவதாக குறிப்பிட்டுள்ளது. யூரோஸ்டாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த நான்கு வாரங்களில் தீவிரமாக வேலை தேடியவர்களுடனும் அடுத்த இரண்டு வாரங்களில் கிடைக்கலாம் என்பவர்களுடனும் நின்றுவிடுகிறது. இதன்படி உத்தியோகபூர்வ வேலையில்லாதோர் மொத்தம் 19 மில்லியன் ஆகும். புளூம்பேர்க் கடந்த ஆண்டு மூன்றாம் காலண்டிற்கு யூரோஸ்ராட் புள்ளிவிவரங்களை அடிப்படையாக கொண்டு தனி மதிப்பீடு ஒன்றை செய்து, வேலை தேடுவதை கைவிட்டுவிட்டவர்களையும் மற்றும் உடனடியாக வேலை கிடைக்காது என இருப்பவர்களையும் சேர்த்து வேலையின்மை 31.2 மில்லியனை விட அதிகமானவர்களை பாதித்துள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இதே அறிக்கை இத்தாலியையும் மேற்கோளிடுகிறது. யூரோ பகுதியில் மூன்றாம் பெரிய பொருளாதாரமான இங்கு, 4.2 மில்லியன் மக்கள் வேலையின்மையில் உள்ளமை, நாட்டின் வேலையின்மை புள்ளிவிவரங்களில் காணப்படவில்லை. இந்த பிந்தைய எண்ணிக்கை உத்தியோகபூர்வ மொத்தத்தில் சேர்க்கப்பட்டால், வேலையின்மை விகிதம் இத்தாலியில் இரு மடங்கிற்கும் அதிகமாகி 24% என இருக்கும்.

ஐரோப்பாவில் 31.2 மில்லியன் பேருக்கு வேலையில்லை என்னும் அதிர்ச்சிதரும் எண்ணிக்கை கூட மொத்தத்தில் ஒரு பகுதிதான். நீண்டகால பரந்துள்ள வேலையின்மையை அடிப்படையாகக் கொண்டு, முதலாளிகள் கண்டம் முழுவதும் குறைவூதியத்துறையை நிறுவ முடிந்துள்ளது. இது ஜேர்மனியில் ஒரு தசாப்தத்திற்கு முன் ஹெகார்ட் ஷ்ரோடரின் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக்கட்சி அரசாங்கத்தால் முதலில் கொண்டுவரப்பட்டது. ஜேர்மனியில் கிட்டத்தட்ட 7 மில்லியன் தொழிலாளர்கள் தற்பொழுது குறைவூதிய வேலைகளில் உள்ளனர். அவர்களில் பலர் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் போதுமான வாழ்வுச் செலவுகளை ஈடுசெய்ய சம்பாதிக்க முடியவில்லை.

ஒரு சமீபத்திய ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையின்படி, அத்தகைய குறைவூதியத் தொழிலாளர் துறைகள் மேற்கு ஐரோப்பா முழுவதும் பரவி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை, இத்தாலியில் 12% க்கும் மேலான தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்களுடன் வாழமுடியவில்லை என்பதைக் குறிக்கிறது. இது ருமேனியா மற்றும் கிரேக்கத்திற்கு அடுத்தாற்போல் உள்ள நிலையாகும். அதே அறிக்கை இத்தாலி, வேலையற்றோருக்கு மிக மோசமான நாடுகளில் ஒன்றாக உள்ளது எனக் கூறுகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் 14 முதல் 15% இனரே மற்றொரு வேலையை ஓராண்டிற்குள் பெறக்கூடியதாக உள்ளது. ஐரோப்பாவில் இது மிகவும் குறைந்த மட்டமாகும்.

ஐரோப்பாவில் வேலைகள் நெருக்கடி பற்றி, சமீபத்திய உலக வணிக, அரசியல் உயரடுக்கின் டாவோஸ் மாநாட்டில் எழுப்பப்பட்டது. டாவோஸில் ஒரு பேட்டியில் பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைமைச் செயலர் ஏஞ்சல் குர்ரியா, ஆளும் உயரடுக்கிற்கு அரசியல் ஆபத்துக்களை சுட்டிக்காட்டினார். பிரச்சினை என்பது வேலைகள், வேலைகள், வேலைகள் என ஆகிறது. ஒரு தலைமுறை இளைஞர்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதைவிட, அரசியல்ரீதியாக வேறு எதுவும் இதுபோன்ற மிகவும் வெடிப்புத்தன்மையும், அதிக ஆபத்தானதும், அதிகம் உறுதியைக் குலைப்பதும் இல்லை.

அவருடைய எச்சரிக்கை ஒரு புறம் இருக்க, ஐரோப்பிய ஒன்றியமும் ஜேர்மனிய அரசாங்கமும் அடுத்த வாரங்கள், மாதங்களில் தங்கள் சிக்கன நடவடிக்கை செயற்பட்டியலை செயல்படுத்த உள்ளன. ஏற்கனவே இது மில்லியன் கணக்கான மக்களை வேலையின்மை, வறுமையில் தள்ளியுள்ளது. வெறும் பத்து நாட்களுக்கு முன்னர்தான், சமூக ஜனநாயக-பசுமைக் கட்சியின் சமூகநல-விரோத சட்டங்களின் உரிமையாளரும், ஷ்ரோடரின் ஆலோசகரும், வோக்ஸ்வாஹனின் முன்னாள் தொழிற்சங்க நிர்வாகியுமான பீட்டர் ஹார்ட்ஸ், பிரெஞ்சு அரசாங்கத்திற்கு அதன் ஜேர்மனிய மாதிரியிலான குறைவூதிய தொழிலாளர் துறையை நிறுவ ஆலோசனை கூற பாரிசுக்கு பயணித்திருந்தார்.