சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The return of German militarism

ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவு

Ulrich Rippert
6 February 2014

Use this version to printSend feedback

ஜேர்மனியில் இராணுவ தடைகள் மீதான முந்தைய கொள்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றன என்ற புதிய மாபெரும் கூட்டணி அரசாங்கத்தின் அறிவிப்பு ஒரு வரலாற்று திருப்பமாகும். அது ஆக்கிரோஷமான ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கையின் ஒரு புதிய கட்டத்தை முன்னறிவிக்கிறது.

எதிர்காலத்தில் நெருக்கடி பகுதிகளில் மற்றும் உலகின் கொந்தளிப்பான இடங்களில் ஜேர்மனி முன்னரை விட மிக பலமாக மற்றும் சுதந்திரமாக, இராணுவ வழிமுறைகளோடு கூட, தலையீடு செய்யும் என்பதை, இரண்டாம் உலக யுத்தம் மற்றும் நாஜி சர்வாதிகாரத்தின் அரக்கத்தனமான குற்றங்களுக்குப் பின்னர் முதல்முறையாக, பேர்லினின் முன்னணி அரசியல்வாதிகள் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். ஜேர்மனி இராணுவ தவிர்ப்பை நடைமுறைப்படுத்த கடமைப்பட்டிருந்த நாட்கள் இறுதியாக முடிந்துவிட்டன என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் (சமூக ஜனநாயக கட்சி - SPD) ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Bundestag) கடந்த வாரம் முதன்முதலாக அந்த புதிய கொள்கையை அறிவித்தார். “உலக அரசியலில் ஒதுங்கியிருந்து கருத்துக் கூறும் நிலையில்" ஜேர்மன் தன்னைத்தானே இனியும் கட்டுப்படுத்தி வைக்க முடியாதபடிக்கு அது "மிகவும் பெரியதாகவும் மற்றும் மிகவும் முக்கியமானதாகவும்" இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதன் பொருளாதார சக்தி மற்றும் ஐரோப்பாவின் மையத்தில் புவியியல்ரீதியாக அதன் இடம் ஆகியவற்றின் காரணமாக, உலக விவகாரங்களின் விடயத்தில் ஜேர்மன் ஒரு சிறப்பு பொறுப்பைப் பெறுவதாக தெரிவித்த அவர், தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் எங்களின் பொறுப்பை உணர்ந்துள்ளோம்,” என்றார். ஒரு பொதுவான ஐரோப்பிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு ஜேர்மனி ஒரு வினையூக்கியாக செயல்பட முடியும் என்று கூறியதோடு, இராணுவ பலத்தின் பிரயோகம் கடைசிப் புகலிடமாக மட்டுமே இருக்குமென்றாலும், அதை விட்டுவிட முடியாது என்றார்.

இந்த மாற்ற போக்கு ஒட்டுமொத்த அரசாங்கத்தாலும் ஆதரிக்கப்படுகிறது. "நேட்டோ மற்றும் ஏனைய கூட்டணிகளில் ஜேர்மனி கூடுதல் பொறுப்பை" ஏற்கக்கூடும் என்று தெரிவித்த பாதுகாப்பு மந்திரி உர்சுலா வொன் டெர் லையென் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்CDU), ஆயுத படைகளைக் (Bundeswehr) கொண்டு வெளிநாட்டு நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிடத்தக்க விரிவாக்கம் செய்யப்படுமென அறிவித்தார். “ஆபிரிக்காவிற்கான ஒரு மூலோபாயத்தை" அபிவிருத்தி செய்ய ஸ்ரைன்மையர் மற்றும் வளர்ச்சித்துறை மந்திரி ஜெர்டு முல்லருடன் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம்CSU) இணைந்து தாம் வேலை செய்ய தொடங்கி இருப்பதாக வொன் டெர் லையென் கூறினார்.

கடந்த வாரயிறுதியில் முனிச் பாதுகாப்பு மாநாட்டில், ஜேர்மன் ஜனாதிபதி ஜோஅஹிம் கௌக் எவ்வித மழுப்பலும் இன்றி ஜேர்மனியின் இராணுவ பலத்தைப் பலப்படுத்துவதற்கு அழைப்புவிடுத்தார். ஒரு வீராவேச உரையில் அவர், இராணுவத் தடைகள் மீதான முந்தைய கொள்கைகள் அறரீதியில் கோழைத்தனமானது மற்றும் ஒட்டுண்ணித்தனமானது என்பதாக வர்ணித்தார்.

இறுதியாக ஜேர்மனி அதன் சர்வதேச பொறுப்புகளுக்காக செயல்பட வேண்டி உள்ளது, மற்றும் "சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைப்பிலிருந்து ஆதாயமடைபவர் என்பதிலிருந்து அதற்கு உத்தரவாதமளிப்பவர்" என்ற இடத்திற்கு மாற வேண்டி உள்ளதென, கௌக் முறையிட்டார். பாமர உளறல் மற்றும் யுத்த பிரச்சாரம் கலந்த ஒரு வெறுப்பூட்டும் உரையோடு, முன்னாள் கிழக்கு ஜேர்மனிய மதகுரு மனிதநேயம் என்ற பெயரில் இராணுவவாத போதனை நிகழ்த்தினார்.

தடைகள் என்பதிலிருந்து, சுய-சிறப்பந்தஸ்து போன்ற ஏதோவொன்று உதிக்கிறது" என்று எச்சரித்த அவர், “அமெரிக்காவாலும் கூட எப்போதும் நிறைய சுமக்க முடியாது என்பதால்" நேட்டோவிடம் ஒரு தெளிவான பொறுப்புறுதியைக் கொண்டிருக்க அழைப்புவிடுத்தார். அவர் கூறினார், “மனித உரிமைமீறல்கள், இனப்படுகொலை, யுத்த குற்றங்கள், இனத்துடைப்பு அல்லது மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்ளை உண்டாக்குமேயானால்" இயல்பாகவே ஜேர்மனி இராணுவரீதியில் தலையீடு செய்ய வேண்டியதிருக்கும்,” என்றார்.

இந்த "மனிதாபிமான" யுத்த பிரச்சாரம் முன்னணி செய்தியிதழ்களில் மீண்டும் மீண்டும் எழுதப்படுவதோடு அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஊக்குவிக்கப்படுகிறது. கௌக்கின் உரை, ஜேர்மனியின்எனக்கு சம்பந்தமில்லை" (Ohnemicheltum) கொள்கையுடன் உடைவைக் குறிக்கும் விதத்தில், ஒரு மைல்கல்லாக இருந்ததென Die Welt பாராட்டியது. “வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் யுத்தத்திற்குப் பிந்தைய ஜேர்மனியின் சுய-நலிவுக்கு ஒரு மூடுவிழாவை" அது தொடங்கி வைத்திருப்பதால் "ஜனாதிபதியின் ஓர் அறிவார்ந்த உரை" நீண்ட காலத்திற்கு எதிரொலிக்குமென்று Frankfurter Allgemeine Zeitung பேசியது. ஜேர்மனியின் "பாதுகாப்பான சௌகரியத்திற்கு" எதிராக ஒரு எச்சரிக்கை குரலாக கௌக்கை Süddeutsche Zeitung பாராட்டியது.

ஊடகங்களின் இந்த ஒருங்கிணைந்த முன்னணி, பத்திரிகை அலுவலகங்களில் உள்ள ஊழல் அளவை தெளிவுபடுத்துவதோடு, ஜேர்மனின் அரசியல் மேற்தட்டின் ஏகாதிபத்திய தாக்குதலுக்குள் பத்திரிகைகள் உள்ளார்ந்து ஐக்கியப்பட்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஜேர்மனியின் வெளியுறவுக் கொள்கை எதற்காக திரும்பியுள்ளதென்பதைக் குணாம்சப்படுத்துபவர் அங்கே உத்தியோகப்பூர்வ அரசியலிலோ அல்லது ஊடகங்களிலோ எவரும் இல்லை. மூன்றாம் குடியரசு (Third Reich) பொறிந்து ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குப் பின்னர் மற்றும் பேர்லின் சுவர் இடிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் ஏகாதிபத்தியம் அதன் வரலாற்று வேர்களை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தி வருகிறது. அது கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றிய பிராந்தியங்களுக்குள் அழுத்தமளித்து வருவதோடு, ஆபிரிக்காவில் அதன் பழைய காலனித்துவ கொள்கைகளோடு மீள்-இணைப்பு செய்து வருகிறது.

வெளியுறவு கொள்கை முன்னெடுப்பு ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் நலன்களுக்கு சேவை செய்கின்றதென்ற பொய் பிரச்சாரத்தை உக்ரேனிய சம்பவங்கள் அம்பலப்படுத்துகின்றன. நவ-பாசிச அனைத்து-உக்ரேனிய சங்கம் அல்லது "ஸ்வோபோடா" கட்சியின் ஓலெஹ் தியாஹ்னெபொக் (Oleh Tyahnybok) உட்பட ஓர் எதிர்ப்பு இயக்க தலைவர்களோடு பேர்லின் அரசாங்கம் வேலை செய்து வருகிறது.

1991இல் சோவியத் ஒன்றிய கலைப்பிற்குப் பின்னர் இருந்து, பேர்லின் உக்ரேனை ரஷ்ய செல்வாக்கு பரப்பெல்லையிலிருந்து நீக்கி, அதன் சொந்த பரப்பெல்லைக்குள் கொண்டு வர முனைந்துள்ளது. அது உக்ரேனை ஜேர்மனுக்கான மற்றும் ஐரோப்பிய பெருநிறுவனங்களுக்கான மலிவு-கூலித் தளமாக மாற்றவும், அதேநேரத்தில் ரஷ்ய அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கவும் விரும்புகிறது.

உலக அரங்கில் ஜேர்மனிய ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதத்தின் மீள்வரவு, வெளியுறவு கொள்கையோடு மட்டும் மட்டுப்பட்டதல்ல. பெரும்பான்மை உழைக்கும் மக்கள் அவர்கள் எதற்கான விலையைக் கொடுக்க நிர்பந்திக்கப்படுகிறார்களோ அந்த யுத்த கொள்கை மற்றும் வெளியுறவு இராணுவ நடவடிக்கைகளின் விஸ்தரிப்பை அவர்கள் நிராகரிக்கும் போது, அவர்களுக்கு எதிராக அது உள்நோக்கியும் திருப்பப்படுகிறது.

இந்த காரணத்திற்காக தான், நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு வந்த அந்த வெளியுறவுக் கொள்கை மாற்றம் கடந்த ஆண்டின் பொது தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான அம்சமாக காட்டப்படவில்லை. அது மக்களின் முதுகுக்குப் பின்னால் தயாரிக்கப்பட்டது. முடிவில்லா தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் தேர்தல் கூட்டங்கள் இருந்தபோதினும், நிஜமான திட்டங்கள் ஒரு வெளிப்படையான அரசியல் சூழ்ச்சியில் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டன.

மாபெரும் கூட்டணியில் வெளியுறவுக் கொள்கை திருப்பத்திற்கான முனைப்பை, சமூக ஜனநாயகக் கட்சி எடுத்துள்ளதென்பது தற்செயலானதல்ல. வேறெந்தக் கட்சியை விடவும், அரச எந்திரங்களோடு அது நெருக்கமாக இணைந்துள்ளதோடு, அது கட்சி நலன்களை விட அரசு நலன்களையே மேலாக நிறுத்துகிறது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், இதே சமூக ஜனநாயகவாதிகள், அப்போது பசுமை கட்சியினர் உடனான ஒரு கூட்டணியில் இருந்த போது, நேட்டோ உடன்படிக்கை பகுதிக்கு வெளியே ஜேர்மன் இராணுவ பிரிவின் போர் நடவடிக்கையை பாதுகாத்தார்கள் என்பதோடு, கட்டாய இராணுவ சேவை அடிப்படையிலான ஜேர்மன் இராணுவ பிரிவை ஒரு தொழில்ரீதியிலான இராணுவமாக மாற்ற குரல் கொடுத்தார்கள். அரசின் 2010 நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்பட்டிருந்த சமூகத் தாக்குதல்களோடு இராணுவ அத்துமீறல் பிணைந்திருந்தது.

இன்று அது வெளிப்படையாக உள்ளது. ஜேர்மன் இராணுவ திறனின் விஸ்தரிப்போடு சேர்ந்து, அரசாங்கம் ஒரு 2020 நிரழ்ச்சிநிரலை திட்டமிட்டு வருகிறது. அது தற்போதைய சமூக வெட்டுக்களையும் கடந்து வெகு தூரம் செல்லும்.

இதில், அது ஏனைய அனைத்து நாடாளுமன்ற கட்சிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது. CDU உடன் சேர்ந்து ஹெஸ்ஸ மாநிலத்தை ஆளும் பசுமை கட்சி தற்போது ஒரு கடுமையான சிக்கன திட்டத்திற்கு பேரம் பேசி வருகிறது. அது ஏற்கனவே மத்திய அரசிற்கு அதன் ஆதரவு சமிக்ஞையைக் காட்டி உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஸ்ரைன்மையர் இராணுவத் தடை முடிவுக்கு வந்தமையை அறிவித்ததும், பசுமை கட்சியின் நாடாளுமன்றக் குழு, துருக்கியில் 400 ஜேர்மன் சிப்பாய்கள் மற்றும் பட்ரியாட் வான் பாதுகாப்பு உபகரணங்களின் இரண்டு யூனிட்டை விரிவாக்குவதற்கான அரசாணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

இடது கட்சி, துருக்கி அரசாணை நீடிப்புக்கு எதிராக வாக்களித்த போதினும், அதன் ஒப்புதல் இல்லாமலேயே பெருபான்மை ஆதரவு வாக்குகள் இருந்ததால், அதுவும் வலிந்துதாக்கும் மேலதிக ஜேர்மனிய வெளியுறவு கொள்கைக்கு ஆதரவளிக்க சமிக்ஞை செய்துள்ளது. ஜனவரி மத்தியில், பசுமை கட்சி அரசியல்வாதி Agnieszka Brugger உடன் சேர்ந்து, நாடாளுமன்ற இடது கட்சி உறுப்பினர் ஸ்டீபன் லீபெச், வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் உத்தரவாணையின் கீழ் வரும்பட்சத்தில் மற்றும் "மனித உரிமைகளைப் பலப்படுத்த" சேவை செய்யுமேயானால் அவற்றை ஆதரிக்கும் ஒரு மூலோபாய அறிக்கையை வெளியிட்டார்.

கடந்த இலையுதிர் காலத்தில், “புதிய சக்திபுதிய பொறுப்பு: மாறிவரும் உலகிற்கான ஜேர்மன் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையின் கூறுகள்" என்ற தலைப்பில் விஞ்ஞான மற்றும் அரசியல் அமைப்பிற்காக லீபெச் இணை-ஆசிரியராக இருந்து ஒரு மூலோபாய அறிக்கையை எழுதினார். அது தற்போதைய வெளியுறவு கொள்கை மாற்றத்தை ஆதரித்து வாதிட்டது.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதத்தின் மீள்வரவை தொழிலாள வர்க்கம் மிகுந்த அக்கறையுடன் கையாள வேண்டும். கடந்த நூற்றாண்டு, இரண்டு உலக யுத்தங்கள், பாசிச சர்வாதிகாரம் மற்றும் இனப்படுகொலைகளைக் கண்டது. மீண்டும் அதுபோன்ற பேரழிவுகள் ஏற்படாமல் தடுக்க, யுத்த எதிர்ப்பு போராட்டமானது வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக செலவின வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தோடு இணைக்கப்பட்டு, ஒரு சர்வதேச சோசலிச வேலைதிட்டத்தின் அடித்தளத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். இது தான் இந்த ஆண்டின் ஐரோப்பிய தேர்தல்களில் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit) இன் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்துவமாகும்.