சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

French automaker PSA plans to slash jobs at Poissy, shift production to Asia

பிரெஞ்சுக் கார்த்தயாரிப்பாளர் நிறுவனம் PSA புவசியில் வேலைகளை அகற்றி, உற்பத்தியை ஆசியாவிற்கு மாற்றும் திட்டத்தைக் கொண்டுள்ளது.

By Stéphane Hugues
11 February 2014

Use this version to printSend feedback

சமீபத்தில் அதன் பாரிஸ் பகுதியில் உள்ள ஒல்நே ஆலை மூடப்பட்டபின், Peugeot-Citroen (PSA) இப்பொழுது அதன் அருகிலுள்ள Poissy ஆலையில் இரண்டு உற்பத்தி வரிசைகளில் (production lines) ஒன்றில் உற்பத்தியை வெட்டப்போவதாக அறிவித்துள்ளது. இந்த வரிசை Peugeot 208 மாதிரியை தயாரிக்கிறது.

PSA கருத்துப்படி, இது இரண்டு பணி மாற்ற வேலைகளில் (Two shifts) ஒன்றை அகற்றும்; அதில் 684 பேர் உள்ளனர். 208 மாதிரிகளில் அதிநவீன மட்டத்துடையது மட்டுமே Poissy இல் இப்பொழுது உற்பத்தியாகும். 208 மாதிரியின் குறைந்த தர மட்ட உற்பத்தி ஸ்லோவாக்கியாவில் உள்ள PSA உடைய Trnava ஆலைக்கு நகர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையில் இது, PSA இன் திட்டத்தின் முதல் கட்டம் மட்டுமேயாகும். டிசம்பர் இறுதியில் நடந்த நிறுவனக் குழுக்கூட்டம் ஒன்றில், 1400 வேலைகளையும் வெட்டி, முழு Peugeot 208 உற்பத்தி வரிசயையும் மூடும் திட்டத்தை நிர்வாகம் தீட்டியுள்ளது என, CGT (தொழிலாளர் பொது கூட்டமைப்பு)  தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

பணிநீக்கங்கள் இராது, தொழிலாளர்கள் மற்ற வேலைகளில் வகைப்படுத்தப்படுவர் என்று PSA கூறுகிறது. தளத்தில் 800க்கும் மேற்பட்ட தற்காலிகத் தொழிலாளர்கள் உள்ளனர், பணிநீக்கங்கள் என்ற பேச்சுக்கிடமில்லாமல் இவர்களுடைய ஒப்பந்தங்கள் மார்ச் மாதம் நிறுத்தப்பட்டுவிட முடியும்.

மேலும், பிரான்சில் ரென்னுக்கு (Rennes) அருகே உள்ள La Janais ஆலையில் வெட்டுக்கள் அல்லது மூடல்கள் கூட இருக்கலாம் என்னும் வதந்திகள் ஏற்கனவே உள்ளன. நிர்வாகம் ஏற்கனவே இந்த ஆண்டு முதல் ஆலையில் இருந்து தானாக பணி நீங்கும் தொழிலாளர்கள் 1400 பேரை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறுகிறது.

ஐரோப்பிய கார் சந்தை 2011ல் சரிந்தபின், PSA ஆண்டு ஒன்றிற்கு பில்லியன் யூரோக்களுக்கு மேல் இழந்துவருகிறது. தொடர்ந்த 18 மாதங்களில் Peugeot உடைய பங்கு விலை, 27 யூரோக்களில் இருந்து 5 யூரோக்களுக்கும் குறைவாக சரிந்துவிட்டது.

கார் தொழிலாளர்கள் மீதான இத்தாக்குதல்கள் சர்வதேச செலவுக் குறைப்பு மூலோபாயத்தின் ஒரு பகுதி ஆகும்; பிரான்சில் மட்டும் 11,000 பணிநீக்கங்கள், அல்லது பிரான்சில் உள்ள அதன் 44,000 தொழிலாளர்களில் 25% பணிநீக்கம் 2015 ஐ ஒட்டி இருக்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் Peugeot ஏற்கனவே அதன் ஆண்டு செயற்பாட்டு இழப்புக்களை, 500 மில்லியன் யூரோக்களுக்கும் குறைவாக ஆக்கிவிட்டது. அதன் பங்கு விலை 12 யூரோக்கள் என உயர்ந்தது.

ஒல்நே ஆலை மூடும் திட்டங்கள் உட்பட, PSA  உடைய மூலோபாயம், ஆகஸ்ட் 23, 2010ல் அதன் உள்ளக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது; இதன் பொருளுரைகள் அடுத்த ஆண்டு CGT யால் அறிவிக்கப்பட்டன. புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் வாரன், அவரது நோக்கம் PSA ஐ உலக அரங்கில் செயலாற்றும் நிலைக்கேற்பமிகவும் குறைந்த உற்பத்தி செலவுகளில் இருத்த வேண்டும், ஆலைகள் 'குறுகுகிறது' என்பதை ஏற்று போட்டித்தன்மையை எதிர்கொள்ள வேண்டும், இதற்கு ஏற்ப தொழிலாளர் தொகுப்பு இருக்க வேண்டும் என்று கூறினார்.

PSA இன் உள்ஆவணங்களை அணுகும் வாய்ப்பு கொண்ட செய்தித் தளமான மீடியாபார்ட், முடிவுரையாகக் கூறியது: “ஐரோப்பிய சந்தையில், உள்கட்டுமானத் திறனை அதுவும் கிழக்கு ஐரோப்பா, துருக்கி, ரஷ்யாவில் ஆலைகளை அதிகம் வைத்திருக்கும் நிலையில், பெருநிறுவனம் பிரான்சிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் மிக அதிக உற்பத்திப் பிரிவுகளை கொண்டுள்ளது எனக் கருதுகிறது.” “மிகச் சிறிய இலாப விகிதத்தை பெருக்கும் வகையில் PSA உற்பத்தித் தளங்களில் செறிவு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கன முறைகளை நோக்கமாக கொண்டுள்ளது.

ஐரோப்பிய கார்த்தயாரிப்பு சந்தைகள்உள்கட்டுமான கூடுதல் திறனை எதிர்கொள்கின்றன என்ற PSA இனதும், பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தினதும் கூற்று இழிந்த பொய் ஆகும். PSA குறிப்பாக அதன் முக்கிய சந்தைகளில் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்சில் சரிவு, 2008 நிதிய நெருக்கடியினால் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) கிரேக்கத்தின் மீதும் பிற தெற்கு நாடுகளின் மீது சுமத்தியுள்ள அழிவு தரும் சிக்கனக் கொள்கைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு ஏகாதிபத்தியம் இதையொட்டி வரும் தொழில்துறை சரிவைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தால் வேண்டுமென்றே செயல்படுத்தப்படும் கொள்கைகள் மற்றும் வங்கிகள் குற்றம்சார்ந்த வகையில் பொருளாதார நிர்வாகத்தை கொண்டிருப்பதை வியத்தகு முறையில் வர்க்க உறவுகளை மறுகட்டமைத்து, தொழிலாள வர்க்கத்தை அது சுரண்டுவதையும் தீவிரப்படுத்தியுள்ளது.

PSA அதன் உள்நாட்டு செயற்பாடுகளை, ஆலை மூடல்கள், வெகுஜனப் பணிநீக்கங்கள், விரைந்து செயல்படுதல், தொழிலாளர் நிலைமையை நசுக்குதல் ஆகியவற்றின் மூலம் இலாபங்களை அதிகப்படுத்த முற்படுகிறது. ஒபாமா நிர்வாகத்தின் அமெரிக்க கார்த்தயாரிப்பு தொழில்துறையின்பிணை எடுப்பு போன்றவற்றை மாதிரியாக கொண்டுள்ளது; புதிய தொழிலாளர்களுக்கு 50 சதவீத சம்பள வெட்டை மேற்பார்வையிட்ட ஐக்கிய கார் தொழிலாளர் சங்கத்துடன் (UAW) பேச்சுக்களை நடத்தியது. பிரான்சின் தொழிற்சங்கங்கள் துலூஸ் இல் உள்ள கான்டினென்டல் கார் ஆலைகளில் ஊதிய வெட்டுக்களுக்கும், PSA இன் செவல்நோர்ட் ஆலையில் ஊதிய முடக்கம் மற்றும் கடுமையான பணிநேர மாறுதல்களுக்கும் பேசுக்களை நடத்துகின்றன.

அதே நேரத்தில் PSA, —வோக்ஸ்வாகனுக்கு பின் ஐரோப்பாவின் இரண்டாம் பெரிய கார்த்தயாரிப்பு நிறுவனம், 2.9 மில்லியன் கார்களை உற்பத்தி செய்கிறது அதனுடைய உற்பத்தியை ஆசியாவிற்கு மாற்றும் திட்டங்களைக் கொண்டுள்ளது; இதையொட்டி அங்கு இருக்கும் தொழிலாளர்களை மிகவும் சுரண்டுவதின் மூலம் அதிக இலாபங்களை அடையமுடியும்.

இந்த ஆண்டு ஓய்வு பெறும் தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் வாரனுக்கு பதிலாக, PSA நிர்வாகம் கார்லோஸ் ரவாரேஸை (Carlos Tavares) நியமிக்கிறது. ரவாரேஸ், ரெனோல்ட்-நிசான், கார்லோஸ் கோனின் கீழ் இரண்டாம் உயர்நிலையில் இருந்துள்ளார், தன்னுடைய நிறுவனத்தை ஐந்து ஆண்டுகளில், 20% தொழிலாளர் தொகுப்பைப் பணிநீக்கம் செய்து மாற்றியவர், 10% விற்பனையாளர் தொகுப்பை அகற்றியவர், வேறுநிறுவனங்களில் கொண்ட ரெனோல்ட் பங்குகளை விற்றல் ஆகியவற்றின் மூலம்.

வாரனும் டாவேர்ஸும் நெருக்கமாக ஒரு சீன அரசுக்கு சொந்தமான கார்த்தயாரிப்பு நிறுவனமான டோங்ஃபெங்குடன் PSA கொண்டுள்ள பிணைப்புக்களை விரிவாக்குவதில் தொடர்புடையவர்கள். PSA, ஒல்நே ஆலை மூடல் நிறைவு என சமீபத்திய மாதங்களில் பிரெஞ்சு அரசாங்கத்துடனும் டோங்ஃபெங்குடனும் நெருக்கமாக பணியாற்றி நிறுவனத்தை மறுஒழுங்கமைக்க முற்பட்டது. இதன் இலக்கு, குறைந்தபட்ச தொழிலாளர் செலவுகளை பயன்படுத்தி, முக்கியமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆலைகளில் உற்பத்தியை கவனப்படுத்துதல் ஆகும்.

1990 களின் முற்பகுதியில் Peugeot முதன்முதலாக டோங்ஃபெங்குடன் சீனாவில் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. எனினும், விற்பனை 2004ல் தான் தொடங்கியது. 2004 ல் இருந்து 2012 வரை வருடாந்திர உற்பத்தி 89,000 த்தில் இருந்து 442,000 கார்கள் என ஐந்து மடங்கு உயர்ந்தது. 2013ல் டோங்ஃபெங், அரை மில்லியன் Peugeot-Citroen கார்களை தயாரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015ல் அவை 750,000 க்கும் மேற்பட்ட கார்களை தயாரிக்கும் இலக்கை கொண்டுள்ளன.

சீனாவில் Chang’an Automobile குழுவுடனும் PSA பங்காளித்தனம் கொண்டுள்ளது. CAPSA  என அழைக்கப்படும் இந்நிறுவனம் 2015 ஐ ஒட்டி 200,000 கார்களுக்கும் மேலாகத் தயாரிக்கும் நோக்கம் கொண்டது. மொத்தத்தில் PSA அடுத்த ஆண்டில் சீனாவுடனான கூட்டு முயற்சிகள் மூலம 1 மில்லியன் கார்களுக்கும் மேலாகத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 2020 ஐ ஒட்டி PSA உடைய உற்பத்தியில் பாதிக்கும் மேல் சீனாவில், ஆசிய சந்தைகளுக்காக தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் அதன் கூட்டு முயற்சிகளால் PSA பாதிக்கும் மேலான பங்குகளைக் கொண்டுள்ளது; எனவே இயல்பாகவே பாதி இலாபங்களைப் பெறுகிறது; உண்மையில் அது கூடப்பெறும்; ஏனெனில் அது PSA தொழில்நுட்பத்தை அதன் சீனச் செயற்பாடுகளில் பயன்படுத்தப்படுவதற்கு கட்டணம் வசூலிக்கும்.

அதே நேரத்தில் பிரெஞ்சு அரசும், டோங்ஃபெங் நிறுவனமும் மிகப் பெரிய ரொக்கத்தை, கிட்டத்தட்ட ஒவ்வொன்றும் 1.5 பில்லியன் யூரோக்கள் என PSA நிறுவனத்திற்கு மறு மூலதனத்திற்காக கொடுத்துள்ளன. PS அரசாங்கத்தின் பங்கு, டோங்ஃபெங் சீன அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதைப்போல, PSA பிரெஞ்சுக் கரங்களில் இருக்க அவசியமானவற்றை உறுதிப்படுத்துவதுதான். Peugeot குடும்பம், டோங்ஃபெங் மற்றும் பிரெஞ்சு அரசு ஒவ்வொன்றும் இதன் முடிவில் நிறுவனத்தின் மூலதனத்தில் 14% ஐக் கொண்டிருக்கும்.

எனினும், Peugeot குடும்பம் அது கட்டுப்படுத்தும் பங்கை இழக்கும், தற்பொழுது 25%, ஆனால் பங்குதாரர் வாக்குகளில் 38%-- மற்றும் அவர்களது இரண்டு பங்காளிகளுடன் தம்மை சம நிலையில் காணும்.