சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

SYRIZA’s pose of opposition to Greek austerity unravels

கிரேக்கத்தில் சிக்கன நடவடிக்கைகளுக்கு சிரிசா எதிரி எனக் காட்டிக் கொள்வது அம்பலமாகிறது

By Robert Stevens 
10 February 2014

Use this version to printSend feedback

இது கிரேக்கத்தில் சிக்கன நடவடிக்கைகளின் செயற்பாடு ஆரம்பித்து ஆறாவது ஆண்டாகும். இது மக்களில் பெரும்பாலானவர்களை வறுமையில் தள்ளிவிட்டது.

இத்தகைய மிருகத்தன வெட்டுக்களுக்கு ஈடாக, ஏதென்ஸ் இதுவரை ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய முக்கூட்டின் மொத்த கடனான 240 பில்லியன் யூரோக்களில் இருந்து 200 பில்லியன் யூரோக்களை (அமெரிக்க $273 பில்லியன்) பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் கிரேக்க அரசாங்கக் கடன் நெருக்கடியை தடுக்க ஏதும் செய்யவில்லை. அது இன்னும் 340 பில்லியன் யூரோக்களாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 176%) அதிகரித்துள்ளது.

கிரேக்க அரசாங்கத்திற்கு மேலும் கணிசமான கடன்கள் இனி கிடைக்காது என்பது தெளிவு. கடந்தவாரம் Der Spiel இதழில் ஜேர்மனி கிரேக்கத்திற்கு 10 முதல் 20 பில்லியன் யூரோக்கள் வரை கூடுதல் கடன் கொடுப்பதை பரிசீலிக்கிறது எனத் தகவல் வந்துள்ளது. இந்த புள்ளிவிவரம் கசியவிடப்பட்ட நிதி அமைச்சரக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேர்மன் நிதிமந்திரி வொல்ப்காங் ஷொய்பிள அதேநேரத்தில் ஏதென்ஸுக்கு வழங்கும் எத்தகைய கடனும் ஏற்கனவே இரு பிணையெடுப்புக்களில் கொடுக்கப்பட்ட 240 பில்லியன் யூரோக்களைவிட மிகவும் சிறியதாக இருக்கும் என்றார். நிதிய ஏடான Wirtschaftwoche இடம் ஷொய்பிள எக்கூடுதல் உதவியும் இதுவரை கொடுக்கப்பட்ட உதவியைவிட மிகவும் குறைவாக இருக்கும் என்பது நிச்சயம் என்றார்.

இத்திட்டமிடப்பட்ட உதவியை நடைமுறைப்படுத்த, கிரேக்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட 15 பில்லியன் வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறையை சந்திப்பதுடன், இருக்கும் மலை போன்ற கடனுக்கு வட்டியாக ஆண்டுக்கு 9 பில்லியன் யூரோக்களை கொடுக்க வேண்டும். இந்த வட்டித்தொகை மட்டும் அத்தகைய கடனின் அளவிற்கு வந்துவிடும்.

நிதி அமைச்சரக ஆவணம் இக்கடன் கூட கிரேக்கம் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின்கீழ் இருக்கும் என்று நிர்ணயிக்கிறது.

சமீபத்திய புள்ளி விவரங்கள் இப்படி நடக்கும் சமூக பயங்கரத்தின் கொடூர மனிதச் செலவை உறுதிப்படுத்துகின்றன. கடந்த மாதம் Small Enterprises Institute of Hellenic Confederation of Professionals, Craftsmen & Merchants ஆகிய அமைப்புகள், நெருக்கடியின்போது 5% இல்லங்களின் வருமானங்கள்தான் பாதிப்பிற்கு உட்படவில்லை என்பதைக் காட்டுகிறது. சராசரி கிரேக்கக் குடும்பம் 2010க்கும் 2013க்கும் இடையே அதன் வருமானங்கள் கிட்டத்தட்ட 40% குறைந்துவிட்டதைத்தான் கண்டுள்ளது.

40.2% இல்லங்களில் -கிட்டத்தட்ட 1.4 மில்லியன்- ஒரு உறுப்பினராவது வேலையில் இல்லை. வேலையில்லாதவர்களில் 9.8%, 200,000 மக்களுக்கும் குறைவானவர்கள் வேலையின்மை உதவிநலனை பெறுகின்றனர்.

கிட்டத்தட்ட பாதி கிரேக்க குடும்பங்கள் ஓய்வூதியப் பணத்தை நம்பியுள்ள போது, சராசரி ஓய்வூதியம் மாதம் 700 யூரோக்களுக்கும் கீழே உள்ளது. 35.9% குடும்பங்கள் தானே ஒருவர் செய்யும் வேலையை அல்லது சுயதொழிலிருந்து வரும்  வருமானத்தை நம்பியுள்ளன.

மக்களில் முக்கால்வாசி பகுதியினர் வீட்டை உஷ்ணப்படுத்துவதற்கும் போக்குவரத்திற்கும் இப்பொழுது குறைவாக செலவழிப்பதாக கூறினர். பத்தில் ஆறுபேர் தங்கள் உணவு செலவினை குறைத்துள்ளனர். 10 இல்லங்களில் ஒன்பது உடை, கேளிக்கை ஆகிய செலவுகளைக் குறைத்துவிட்டன.

பணப்பிரச்சினைகள் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான இல்லங்கள் அரசாங்கத்திற்கு, வங்கிகளுக்கு, சமூகப் பாதுகாப்பு நிதிக்கு அல்லது பொது பயன்பாடுகளுக்குக் கட்டணம் கொடுக் முடியாதிருப்பதாக காட்டுகின்றன. 41%க்கும் அதிகமான ஆய்வில் பங்கு பெற்றவர்கள் இந்த ஆண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாது என்றனர்.

நெருக்கடியின் ஆரம்பத்தில் இருந்தே போலி இடது அமைப்பான சிரிசா (தீவிர இடது கூட்டணி) தன்னை ஒரேயொரு முற்போக்கான மாற்றீடாக முன்வைத்தது. இந்த அடிப்படையில் அது பெற்ற வாக்குகள் 2009ல் 4.6%இல் இருந்து 2012 தேர்தலில் கிட்டத்தட்ட 27% என உயர்ந்தது. இது பெரும்பான்மை கட்சியாவதற்கு ஒரு சில சதவிகிதப் புள்ளிகள்தான் குறைவானதாகும்.

இதன் வார்த்தைஜாலங்கள் சர்வஜனவாக்கெடுப்பை நிராகரித்தல், சிக்கன நடவடிக்கைகளை தொடரல் என்பதை அடித்தளமாக கொண்டது. மேலும் அது அதிகாரத்திற்கு வந்தபின் கிரேக்கத்தின் கடன்கள் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தைகளை செய்வதாகவும் கூறியது.

இந்த அடிப்படையில் சிரிசா, ஐரோப்பாவில் பல போலி இது அமைப்புக்களுடன் சுதந்திர ஆணைக்குழு மூலம் கிரேக்கத்தின் கடன்களை மேற்பார்வை செய்வதாக தெரிவித்தது. இது எந்தக் கடன் நியாயமானது, எது மோசமான திருப்பிக் கொடுக்கத் தேவையில்லாததுலை என்பதை நிரூபிக்கும் என்றது.

கடந்த மாதம் MacroPolis வலைத் தளம் மோசமான கடன் பற்றி இறுதி புள்ளிவிவரம் உறுதிப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டி, சிரிசா பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பொருளாதாரக் குழு உறுப்பினருமான ஜியோர்கோஸ் ஸ்டாதாகிஸ், இப்பொழுது ஆண்டு இறுதியில் கடன் 340 பில்லியன் யூரோக்கள் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 174.8% என இருக்கும் கிரேக்கத்தின் கடனில் 5 சதவிகிதம்தான் மோசமானது எனக் கருதலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

ஸ்டாதாகிஸ் Sto Kokkino வானொலி நிலையத்திற்கு கொடுத்த கருத்துக்களை கட்டுரை மேற்கோளிட்டுள்ளது. அதில் அவர் மோசமான கடன்கள் ஆயுதங்கள் வாங்கிய திட்டங்கள், ஹெலெனிக் ரயில்வேஸ் அமைப்பு (OSE) மின்சாரமாக்கப்பட்டதால் அல்ல, அது நடக்கவே இல்லை என்று வரையறை செய்துள்ளார். 90%க்கும் மேற்பட்ட கடன் மரபார்ந்தது, சந்தையில் பொதுக் கடன்கள், பத்திரங்கள். இதனை எதிர்க்க சட்டபூர்வ வழிவகை இல்லை. என்றார்.

ஸ்டாதாகிஸ் இன் குறிப்புகள், சிரிசா தான் சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதாக கூறுவதை அம்பலப்படுத்துகின்றது. முக்கிய ஆளும் கட்சியாகவோ அல்லது ஏனைய சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவான கட்சிகளுனோ கூட்டாக சிரிசா கிரேக்கத்தின் பாரிய கடன்களை திருப்பி செலுத்த உதவுகின்றது.

இதுதான் சிரிசாவின் ஐரோப்பிய ஒன்றியத்தில் எப்படியும் இருக்க வேண்டும், கடன்களை மறு பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கொள்கையில் எஞ்சியிருக்கும் உள்ளடக்கமாகும்.

செவ்வாயன்று சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் ஒரு சிரிசா அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக கடன்களை திரும்பசெலுத்துவதில் தவறு செய்யாது என்றும், நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு ஆயுதம், நம் பங்காளிகள் மிக, மிக கடுமையாக இருந்தால், கிரேக்கப் பொருளாதாரத்திற்கு நிதியளிப்பதற்கான வட்டியை திருப்பிக் கொடுத்தலை நிறுத்துதல் ஆகும். ஆனால் இதுவும் எங்கள் நோக்கம் இல்லை. எங்கள் நிலைப்பாடு ஒருமித்த உணர்வான தீர்வைக் காண்பது ஆகும் என்றார்.

தனது முந்தைய தீவிரமாக நிலைப்பாட்டை சிரிசா கைவிட்டிருப்பது கிரேக்கச் செய்தி ஊடகம், பாராளுமன்றக் கட்சிகளில் ஆளும் கன்சர்வேடிவ் புதிய ஜனநாயகத்துடன் (ND) வருங்காலக் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு பற்றி வெளிவந்துள்ள ஒரு அண்மைய விவாதத்தின் பின்னணியிலாகும். சிரிசா பாராளுமன்ற உறுப்பினர் மனோலிஸ் கிளேசோஸ் (பின்னர் இந்த கருத்துக்களை வசைப்பாங்கானவை என்றார்) பின்வருமாறு வினவினார் அரசாங்கம் அதன் கடன்வாங்கும் கொள்கையை கைவிடுமா? வங்கிகளைக் காப்பாற்ற மக்களிடம் இருந்து திருடுவதை அது நிறுத்துமா? அதை அவர்கள் செய்வார்களா என்பதை நான் நம்பவில்லை. சிரிசா சக ஊழியர்களே, கூட்டணிக்கு நாம் எதிர்ப்போம்.

இதற்கு விடையிறுக்கையில் வலதுசாரி Kathemerini பத்திரிகை ஒரு கருத்துக் கட்டுரையில் இத்தகைய முன்னோடியில்லாத நெருக்கடிக்காலத்தில், ஆய்வாளர்களை ஒரு நவீன வைமார் (மிகவும் வராதது, உண்மை என்பதை விட) ஆபத்தை பற்றி அல்லது ஒரு உள்நாட்டுப்போருக்கான சூழ்நிலை உறுதிப்படுவது பற்றி கேள்வி எழுப்ப வைக்கும் நிலைமையில் கிரேக்கக் கட்சிகள் ஏன் அடிப்படை பிரச்சனைகள் குறித்துகூட தம்முள் தொடர்பாடிக்கொள்ள முடியவில்லை? எனக் கேட்டுள்ளது.

அது மேலும் கூறியது: ஐரோப்பிய சுற்றுவட்டத்தில் இருக்கும் இதே போன்ற நெருக்கடிகள் உள்ள நாடுகள் அனைத்திலும், அரசாங்கமும் எதிர்க்கட்சியும் நாட்டை இணையாக ஆண்டன அல்லது திட்டங்களில் ஒன்றாக கையெழுத்திட்டன (போர்த்துக்கல், அயர்லாந்து).

கடந்த மாதம் அமெரிக்க முதலீட்டு வங்கி ஜே.பி. மோர்கனிடம் இருந்து ஒரு ஆய்வுக் குறிப்பு கருத்துக் கணிப்பில் சிரிசா முக்கிய ஏதென்ஸ் நகர B தொகுதியில் 7% முன்னணியில் இருக்கிறது என்றும் அநேகமாக அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறக்கூடும் என்றும் கூறியது. அது எந்தக் கிரேக்கக் கட்சியும் தனியே அரசாங்கம் அமைக்க முடியாது, சிரிசாவிற்கும் புதிய ஜனநாயகத்திற்கும் ஒரு கூட்டு ஆலோசிக்கப்படலாம் என்றும் கூறுகிறது.

சிரிசாவுடன் கூட்டு இல்லை என்று கூறிவிட்ட புதிய ஜனநாயகத்தின் பிரதம மந்திரி அன்டோனிஸ் சமாரஸ், சிப்ரஸின் கட்சியை பற்றி அவர்கள் ஒரு நம்பகரமான மற்றும் பொறுப்பான அரசாங்கமாக வேண்டும் என தான் நம்பவைக்கமுடியும் எனக் கருதுவதாக கவனமாக கருத்து தெரிவித்தார்.

2008 உலக நிதிய நெருக்கடி ஆரம்பமானதில் இருந்து நம்பகமான, பொறுப்பான அரசாங்கமாகலாம் என்னும் பாதையில் சிரிசா உள்ளது. ஜனவரி 2013ல், முக்கிய தலைநகரங்களுக்கான பயணம் என்பதின் ஒரு பகுதியாக சிப்ரஸ் வாஷிங்டனில் உள்ள ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் கூறினார்: சிலர் நினைப்பது போல் நான் அவ்வளவு ஆபத்தானவன் அல்ல என்பதை உங்களுக்கு நம்ப வைத்துள்ளேன் என நினைக்கிறேன்.

சிரிசாவின் வலதுபுற திருப்பம் சமீபத்தில் அது சிக்கன நடவடிக்கை சார்பு வேட்பாளர் ஒடிசியஸ் வௌடௌரிசை எதிர்வரவிருக்கும் உள்ளூர்த் தேர்தல்களில் தேர்ந்தெடுத்திருப்பதில் அடிக்கோடிட்டுக் காணப்படுகிறது. வௌடௌரிஸ் வெறுக்கப்படும் சமூக ஜனநாயகக் கட்சியான PASOK இன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக முதல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியவராவர். டிசம்பர் 2011ல் வௌடௌரிஸுடைய குழு அவருடைய மெசினா தொகுதியில் உள்ள காலமாட்டாவிற்குச் சென்றபோது எதிர்ப்பாளர்கள் சதிகாரர்களே எங்கள் நகரை விட்டு நீங்குக என்ற கோஷத்துடன் அவர்களை எதிர்கொண்டனர்.