சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Australian car industry closure: A warning to workers internationally

ஆஸ்திரேலிய கார் தொழிற்சாலை மூடல்: சர்வதேசஅளவில் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை

James Cogan
13 February 2014

Use this version to printSend feedback

2017 இறுதி வாக்கில் உற்பத்தியை நிறுத்த உள்ள போர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஹோல்டென் ஆகியவற்றோடு சேர விரும்புவதாக பெப்ரவரி 10இல் டொயோட்டா வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த கார் தொழில்துறையும் சீரழிக்கப்பட உள்ளன. ஐந்து தயாரிப்பு மற்றும் என்ஜின் ஆலைகளில் குறைந்தபட்சம் 7,000 தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளை இழப்பார்கள். வாகன பாகங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் துணை வியாபாரங்களால் நியமிக்கப்பட்ட 44,000 தொழிலாளர்களில் பலரும் கூட நீக்கப்படுவார்கள். பொருளாதாரத்தில் உணரப்படும் தாக்கத்தினால், 150,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வரை வேலையின்மைக்குள் வீசப்படுவார்கள். ஒருகாலத்தில் அமெரிக்க வாகன தொழில்துறையின் மையமாக விளங்கிய டெட்ராய்ட் போன்ற அமெரிக்க நகரங்களில் நிலவும் வறுமை மற்றும் தொழில்துறை-தகர்ப்பு (deindustrialisation) ஆகியவற்றிற்குள் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் தொழிலாள வர்க்கம் வாழும் புறநகர்கள் கொண்டு செல்லப்படும்.

வாகன நிறுவனங்களால் நடத்தப்பட்ட ஒவ்வொரு மறுசீரமைப்போடும் மூன்று தசாப்தங்களாக உடந்தையாய் இருந்துள்ள, முற்றிலுமாக பெருநிறுவனமயப்பட்ட தொழிற்சங்கங்கள், ஆலைகளை "முறையாக மூடுவதை" நடைமுறைப்படுத்த தொழில்துறை பொலிஸ் படையைப் போன்று பயன்படுத்தப்படும். டொயோட்டாவின் அறிவிப்பு தொழிலாளர்களுக்கு "ஒருவித ஆறுதலை" அளிக்கும், ஏனென்றால் அவர்களுக்கு இப்போது "உறுதியான தகவல்" கிடைத்துவிட்டது என ஆஸ்திரேலிய உற்பத்தித்துறை தொழிலாளர் சங்க தேசிய செயலர் டேவ் ஸ்மித் அறிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிற்சாலைக்கான இந்த மரண வாசகம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டுமெனும் ஒரு நிச்சயிக்கப்பட்ட தீர்மானமாக உள்ளது.

கார் ஆலை மூடல்கள் உட்பட பெரும் வேலை வெட்டுக்களுக்கு, முந்தைய தொழிற்கட்சி அரசாங்கம் தலைமை ஏற்றிருந்த நிலையில், தொழிற்சங்கங்களும் எதிர்கட்சியான தொழிற்கட்சியும் இரண்டுமே, ஆலைமூடல்கள் மீதான தொழிலாளர்களின் கோபத்தை பிரதம மந்திரி டோனி அபோட்டின் கூட்டணி அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவிப்பதன் திசையில் திருப்பிவிட முயன்று வருகின்றன.

எவ்வாறிருந்த போதினும் அச்சுறுத்தும் சமூக சீரழிவின் நிஜமான காரணம், 2008க்குப் பின்னர் உலகளாவிய முதலாளித்துவ உடைவைத் தொடர்ந்து உலகெங்கிலும் வாகனத்துறை தொழிலாளர்களின் நிலைமைகளுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள தாக்குதலாகும். சந்தைகளுக்கு இடையே இருந்த ஆக்ரோஷமான போட்டிகளுக்கு இடையே, தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து இரக்கமற்ற செலவுக் குறைப்புகள் மூலமாக, எல்லா வாகனத்துறை பெருமுதலாளிகளும் பெரும் இலாபங்களை அடைந்துள்ளனர்.

ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) ஆதரவோடு, போர்ட், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறிஸ்லெர் ஆகியவை அமெரிக்காவில் ஆலைகளை மூடின; பத்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கின; ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியங்களை குறைத்ததோடு ஒரு இரட்டை-அடுக்கு ஊதிய முறையை திணித்தனர், அதன்படி புதிதாக நியமிக்கப்படும் தொழிலாளர்களுக்கு வெறுமனே மணிக்கு 15 டாலர்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த கடுந்தாக்குதல் ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. 2012இல் இருந்து போர்ட் நிறுவனம் 5,700 வேலைகளை அழித்து, ஐரோப்பாவில் மூன்று ஆலைகளை மூடி உள்ளது. இந்த ஆண்டு, ஜெனரல் மோட்டார்ஸின் ஓப்பல் துணை நிறுவனம், ஜேர்மன் தொழிற்சங்கங்களின் பின்புலத்தோடு, 3,500 வேலைகளை வெட்டி, போஹும் நகரத்தில் உள்ள பிரதான ஆலையை மூட விரும்புகிறது. தெற்கு கொரியாவில், ஜெனரல் மோட்டார்ஸ் 1,100 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க தயாரிப்பு செய்து வருகிறது.

டொயோட்டாவின் உலகளாவிய மறுசீரமைப்பு அமெரிக்காவை மையமாக கொண்ட பன்னாட்டு நிறுவனங்களால் செய்யப்பட்டதைப் போல அதேயளவிற்கு கொடூரமானதாக உள்ளது. ஜப்பானில், அந்நிறுவனம் அதன் வினியோகிப்பாளர்களிடம் 30 முதல் 40 சதவீதம் வரை செலவுகளை வெட்ட கோரியது, அது "வழக்கமான நியமன முறைகளில் அல்லாதவர்கள்" (non-regular) என்றழைக்கப்படும் தொழிலாளர்களின் பாரியளவிலான அதிகரிப்பிற்கு இட்டு சென்றது. அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியங்கள் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படுவதில் வெறும் பாதி விகிதத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்பதோடு ஓர் உடனடி அறிவிப்போடு அவர்களை வேலையிலிருந்து நீக்கவும் முடியும். டொயோட்டாவின் ஜப்பானிய ஆலைகளில் ஆறு ஆண்டுகளாக ஊதியங்கள் உறைந்து போயுள்ளன; உற்பத்தி குறைக்கப்பட்டு அமெரிக்காவின் தெற்கு, சீனா மற்றும் தாய்லாந்தில் உள்ள அந்நிறுவனத்தின் மலிவூதிய-தொழிலாளர் ஆலைகளுக்கு உற்பத்தி மாற்றப்பட்டுள்ளன. இதன் விளைவாக, சுமார் 19 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு நிறுவனத்தின் இலாபங்கள் உயர்ந்துள்ளதோடு, அதன் ரொக்க கையிருப்புகள் 4 ட்ரில்லியன் யென்னுக்கு (39 பில்லியன் அமெரிக்க டாலர்) உயர்ந்துள்ளது.

உலகளாவிய செலவு-வெட்டுக்களில் இருந்து ஆஸ்திரேலிய தொழிலாளர்களும் விதிவிலக்காக விடப்படவில்லை. போர்ட், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா ஆலைகளில் 2008 மற்றும் 2012க்கு இடையே 2,500க்கு அதிகமான வேலைகள் அழிக்கப்பட்டன. இருந்தபோதினும், டெட்ராய்ட் மற்றும் டோக்கியோவின் கார்பரேட் தலைமையிடங்களில் அங்குள்ள ஆஸ்திரேலிய தொழிலாளர்களின் நிலைமைகள் ஆசியா மற்றும் அமெரிக்காவில் நிலவும் நிலைமைகளோடு ஒப்பிடுகையில் "போட்டித்தன்மைக்கு உகந்ததாக இல்லை" என குற்றஞ்சாட்டப்பட்டன. தற்போது மூவரும் சேர்ந்து ஒன்று நிரந்தர செலவு-வெட்டுக்களை ஏற்க வேண்டும் அல்லது அதே தலைவிதியைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை அனுப்பும் விதத்தில் ஒட்டுமொத்தமாக உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

அந்த முடிவானது, முதலாளித்துவ அமைப்புமுறையின் இரக்கமற்றதன்மை, பகுத்தறிவற்றதன்மை மற்றும் சமூகரீதியிலான பேரழிவுமிக்க குணாம்சத்தை அடிக்கோடிடுகிறது. 1980களில் இருந்து, தொழில்நுட்பம், போக்குவரத்து, தகவல்தொடர்புகளில் ஏற்பட்டுள்ள புரட்சிகர முன்னேற்றங்கள் மேலாதிக்கம் செலுத்தும் பெருநிறுவனங்களால், உலகளாவிய உற்பத்தி வலையமைப்புகளை, முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு, ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்த உலகையும் ஒன்றோடொன்று சார்ந்திருக்கும் ஒரே பொருளாதார அமைப்பாக அபிவிருத்தி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன. இருந்த போதினும், முதலாளித்துவத்தின் கீழ், இத்தகைய பரந்த உற்பத்தி திறன் நிதியியல் பிரபுத்துவத்திற்கு இலாபங்களையும், தொழிலாளர் வர்க்கத்திற்கு சமூக சீரழிவுகளையும் உருவாக்கி உள்ளது.

முதலாளித்துவத்தை தேசிய-அரசுக்குள் நெறிப்படுத்த முடியுமென்றும், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பை வழங்க முடியுமென்றும் முறையிடும் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்களினது போன்ற, அனைத்து தேசிய அரசியல் வேலைத்திட்டங்களின் ஒரு நாசகரமான வரலாற்று நிரூபணமாக ஆஸ்திரேலியாவில் கார் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் நிலைமை உள்ளது. ஆஸ்திரேலிய பிரத்யேகவாதத்தால் (exceptionalism) மிக கவனமாக விளைவிக்கப்பட்ட மாயை தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவுகரமாக நிரூபணமாகி உள்ளது.

ஆஸ்திரேலியா சம்பந்தப்பட்ட எதுவொன்றும், அதன் பரந்த இயற்கை வளங்களோ அல்லது புவியியல்ரீதியில் தொலைவில் இருப்பதோ, பூகோளரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மூலதனத்தின் கட்டளைகளில் இருந்து அந்த தொழிலாள வர்க்கத்தை காப்பாற்றி விட முடியாது. தொழில்துறை உற்பத்திக்கான ஒரு தளமாக இருப்பதற்கு எந்தவொரு பிராந்தியத்திற்குமான முன்நிபந்தனை என்னவென்றால், வறுமை-மட்டத்திற்கு ஊதியங்களை திணிப்பது மற்றும் தொழிலாளர்களை கட்டுப்பாடில்லாமல் சுரண்டுவது என்பதாக உள்ளன. ஆஸ்திரேலியாவில் இது வேலைகளை பாதுகாக்கும், உற்பத்தியை நிலைக்க வைக்கும் என்பது போன்ற பொய் வாக்குறுதிகளின் மீது ஒன்று மாற்றி ஒன்றாக செலவு-வெட்டு சுற்றுக்களை ஏற்குமாறு செய்ய தொழிலாளர்களுக்கு அழுத்தம் அளிப்பதே தொழிற்சங்கங்களின் பாத்திரமாக இருந்துள்ளது.

மூன்று தசாப்தங்களாக, முதலாளித்துவத்தின் கீழ் பூகோளமயமாக்கல் நிகழ்முறையில், உற்பத்தி மற்றும் ஏனைய துணை தொழில்துறைகளை சேர்ந்த வேலைகள் ஒன்று மாற்றி ஒன்றாக முறைப்படி அழிக்கப்பட்டுள்ளன. முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்த வரையில், அது ஆஸ்திரேலிய முதலாளித்துவ வர்க்கமாகட்டும் அல்லது சர்வதேச ரீதியில் இருப்பதாகட்டும், அந்நாடு பிராந்திய வணிக அலுவலகங்களுக்கான ஒரு தளமாக, ஒரு மலிவு மூலப்பொருட்கள் வழங்குநராக மற்றும் ஒரு சூதாட்ட மற்றும் சுற்றுலா மைதானமாக மட்டுமே பயன்படுகிறது.

ஆஸ்திரேலிய கார் தொழில்துறையை அழிக்கும் நகர்வுகள் ஒவ்வொரு இடத்திலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாக உள்ளன. ஆஸ்திரேலியாவிற்குள், கார் உற்பத்தித்துறை தொழிலாளர்களின் கதி, ஏற்கனவே அபராத விகிதங்கள் போன்ற "பண்டைய" நிபந்தனைகளை முடிவுக்குக் கொண்டு வர மற்றும் ஊதியங்கள், நிலைமைகளை ஒட்டுமொத்தமாக வீழ்த்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேசரீதியில், அது தொழிலாளர்களுக்கு எதிராக செய்யப்பட உள்ள செலவு-வெட்டுக்களுக்கான அடுத்த கோரிக்கைகளுக்கு வாகனத்துறை தொழிலாளர்களை அடிபணியச் செய்ய அச்சுறுத்தவும் மற்றும் கட்டாயப்படுத்தவும் பயன்படுத்தப்படும்.

தொழிலாளர்கள் இந்த நிலைமைகளை கணக்கெடுக்க வேண்டும். பன்னாட்டு நிதியியல் மற்றும் பெருநிறுவனங்களின் உலகளாவிய மூலோபாயங்கள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களை எடுத்துக்காட்டும் பூகோள அரசியல் மூலோபாயத்தால், அதாவது உலக சோசலிசத்தால் மட்டுமே தோற்கடிக்கப்பட முடியும்.

முதலாளித்துவ ஆளும் மேற்தட்டுக்களின் கரங்களில் இருந்து உற்பத்தி சக்திகளின் கட்டுப்பாட்டை விடுவித்து, பகுத்தறிவான சோசலிச திட்டமிடலின் அடிப்படையில் உலகப் பொருளாதாரத்தை மறுஒழுங்கமைப்பு செய்ய மற்றும் தனியார் இலாபங்களை பின்தொடர்வதற்காக பொருளாதார வாழ்வு மண்டியிட செய்யப்பட்டிருப்பதை முடிவுக்கு கொண்டு வர, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியமே ஒரு வரலாற்று ரீதியில் அவசியமான ஓர் அரசியல் போராட்டத்தின் அடித்தளமாக உள்ளது. வாகனத்துறை பெருமுதலாளிகளுக்கு எதிரான, அவர்களுக்கு சேவை செய்யும் அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஓர் ஐக்கியப்பட்ட போராட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஆஸ்திரேலியா மற்றும் உலகெங்கிலும் உள்ள கார் தொழிலாளர்கள் இந்த முன்னோக்கின் அடிப்படையில் தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொள்வது அவசியமாகும்.