சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Chinese navy conducts exercises in east Indian Ocean

சீனக் கடற்படை கிழக்கு இந்திய பெருங்கடலில் பயிற்சிகளை நடத்துகிறது

By Peter Symonds 
14 February 2014

Use this version to printSend feedback

இந்தோனேசியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே உள்ள கடலில் சீனா நடத்திய கடற்படைப் பயிற்சி ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் கூடுதல் இராணுவ ஒத்துழைப்பிற்கு அழைப்புக்களை கொடுத்து, ஒரு அறிக்கை விளக்கியபடி, “பெய்ஜிங்கின் பெருகிய தைரியமான கடல்வழித் தோற்றம் இந்திய-பசிபிக்கில்” எதிர்கொள்ளப்பட வேண்டும் என கூறத் தூண்டியுள்ளது.

இத்தகைய பிரதிபலிப்பு ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவில் முன்னிலை” தோற்றுவித்துள்ள பெருகிய அழுத்தங்களின் மற்றொரு அடையாளமாகும்; இதில் அமெரிக்க உடன்பாடுகள் மற்றும் இராணுவ சக்திகள் சீனாவைச் சுற்றி பிராந்தியம் முழுவதும் இருப்பதை வலுப்படுத்தும். இது, அமெரிக்கா ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் மூலோபாயப்பங்காளி இந்தியா ஆகியவற்றை நெருக்கமான இராணுவப் பிணைப்புக்களை வளர்க்க ஊக்கம் கொடுத்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகளின் தூண்டுதல் பேரில், ஆஸ்திரேலிய விமானப் படை, ஒரு P-3 ஓரியன் கண்காணிப்பு விமானத்தை அப்பகுதிக்கு அனுப்பி சீனப் பயிற்சியை கண்காணிக்க வைத்தது. சீன அரசு செய்தி ஊடகத்தின்படி, இண்டு அழிக்கும் போர்கப்பல்கள் மற்றும் தரையிலும் நீரிலும் செல்லும் கப்பல் சங்பைஷன் இந்தோனேசியாவின் சுந்தா நீர்ச்சந்தியை ஜனவரி 29ல் கடந்து இந்தோனேசிய தீவான ஜாவா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவிற்கு சென்றது. மூன்று கப்பல்களும் அருகில் உள்ள லோம்போக் நீர்சந்தி மூலம் வடக்கிற்கு செல்லுமுன் தொடர்ச்சியான பயிற்சிகளை மேற்கொண்டன.

ஆஸ்திரேலியனில் ஒரு கட்டுரை “சீன அதிகாரத்தில் பெரும் மாற்றம்” என்ற தலைப்பில், எச்சரிக்கை மணியை ஆஸ்திரேலிய பாதுகாப்பு வட்டங்களுக்கு கொடுத்தது. அது இப்பயிற்சி “சீனாவின் நீண்ட கால நோக்கமான இந்தியப் பெருங்கடலில் ஆற்றலை வெளிப்படுத்தும் நோக்கத்தை சந்தேகித்தவர்களுக்கு ஒரு விழிப்பு அழைப்பாகும்” என்று கூறியுள்ளது.

இக்கடல் பயிற்சி, கிழக்கு இந்திய பெருங்கடலில் சீனாவிற்கு முதல் தடவையாகும், மேலும் முதல் தடவையாக சீன செயற்படை இந்தோனேசியாவின் சுந்தா, லோம்போக் நீர்ச்சந்திகளை இந்தியப் பெருங்கடலுக்குள் உட்புக அல்லது வெளியேற பயன்படுத்தியதும் ஆகும்.

அமெரிக்க மூலோபாயத்தினர் நீண்ட காலமாக இச்சந்திகளை, அமெரிக்க சீன மோதல் ஏற்பட்டால் சீனா மீது பொருளாதாரத் தடையை சுமத்தப் பயன்படும் என்றும், அத்துடன் மாலாக்கா நீர்ச்சந்தியையும் முக்கிய “தடுப்பு புள்ளிகள்” ஆக அடையாளம் கண்டுள்ளனர். சீனா மிக அதிக அளவில் எரிசக்தி மற்றும் மூலப் பொருள்கள் என மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து கப்பல் பாதைகள் வழியாக இச்சந்திகள் வழியே கடப்பதைத்தான் நம்பியுள்ளது.

ஆஸ்திரேலியனின் கருத்துக்கள் இரண்டு சிந்தனைக்குழு பகுப்பாய்வாளர்களால் எழுதப்பட்டவை – Lowy Institute இன் Rory Medcalf மற்றும் இந்தியாவின் Observer Research Foundation இன் சி. ராஜ்மோகன். இருவருமே வலுவான ஆஸ்திரேலிய-இந்திய உறவுகளுக்கு வாதிடுபவர்கள், ஆஸ்திரேலிய-இந்திய வட்டமேசைக்கு இணைத் தலைவர்கள். சீனாவின் அதன் முக்கிய கடல் வழி பாதைகளை பாதுகாக்கும் உரிமையை நிராகரிக்காமல், இவர்கள் சீனா “ஒரு சட்டங்கள் அடிப்படையிலான முறையில்” இணைக்கப்பட வேண்டும், “அது இந்தியாவின் வளர்ந்து வரும் பசிபிக் கடல் ணைப்புக்களையும் ஏற்க வேண்டும்” என்று வலியுறுத்துகின்றனர்.

ஒரு சட்டங்கள் அடிப்படையிலான முறை” என்னும் சொற்றொடர் எல்லாவற்றிற்கும் மேலாக வாஷிங்டனால் –அமெரிக்க நிர்ணயிக்கும் ஒரு உலக விதிகளுக்கு பெய்ஜிங் தாழ்ந்து நடக்க வேண்டும் என வலியுறுத்த பயன்படுத்தப்படுகிறது. அதன் “கிழக்கைப் பார்” மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, தன் கடற்படையை பெருக்கும் இந்தியா, கிழக்கு ஆசியாவில் நெருக்கமான பொருளாதார, அரசியல் பிணைப்புக்களை கொண்டுவருகிறது. ஏற்கனவே இது சீனாவுடன், இந்திய-வியட்நாமிய எரிபொருள் ஆராய்ச்சி தென் சீனக்கடலில் சில பகுதிகளில் நடத்தப்படுவது குறித்த மோதலில் உள்ளது; அவை பெய்ஜிங், ஹனோய் இரண்டினாலும் உரிமை கோரப்படுகின்றன.

ஒரு தனிப்பட்ட வலைப்பதிவில் Medcalf சமீபத்திய சீன கடற்படை பயிற்சியில் “சட்டவிரோதமானதோ அல்லது அடிப்படையில் விரோதம் என ஒன்றும் இல்லை”, இது சர்வதேச நீர்நிலையில் நடைபெற்றது என்றார். ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகம் கருத்துக் கூறவில்லை. ஆயினும்கூட பரந்த ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் இது குறித்து தகவல்கள் கொடுத்திருப்பது, இது விரும்பத்தகாத ஊடுருவல் எனக் கருதப்படுவதை தெளிவுபடுத்துகிறது.

மெட்காபும் மோகனும் “புதிய கடற்பகுதி பாதுகாப்பு உரையாடல், நடைமுறைக் கண்காணிப்பு ஒத்துழைப்பு, பிராந்தியத்தின் கடற்படை உடைய ஜனநாயகங்களிடையே தேவை” என அழைப்பு விடுத்துள்ளனர். இதில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, இந்தியா ஆகியவை அடங்கும்.

ஆஸ்திரேலியா ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் பரந்த கண்காணிப்புப் பகுதிகளை கண்டத்தின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் கொண்டுள்ளது; குறிப்பாக அதன் பிற்போக்குத்தன “எல்லைப் பாதுகாப்பு” குடியேறுவோர் எதிர்ப்புக் கொள்கையின் பகுதியாக – இது கூட்டணி அரசாங்கம், எதிர்க்கட்சி இரண்டின் ஆதரவையும் கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் வாடிக்கையாக பகுதிகளை ரோந்து வந்து இந்தோனேசியாவிற்கு தெற்கே தஞ்சம் கோருவோர் படகுகள் ஆஸ்திரேலியாவிற்கு வருவதை தடுக்கின்றன. பல சந்தர்ப்பங்களில், ஆஸ்திரேலிய போர்க்கப்பல்கள் இந்தோனேசிய பகுதி நீர்களில் ஊடுருவி ஜாகர்த்தாவில் இருந்து எதிர்ப்புக்களை தூண்டியுள்ளன.

வாஷிங்டன், ஆஸ்திரேலியாவை அதன் “முன்னிலைக்கு” மையமாகக் கருதுகிறது. ஒபாமா நிர்வாகம் ஏற்கனவே அமெரிக்க மரைன்களுக்கு வடக்கு நகரமான டார்வினில் தள ஏற்பாட்டைக் கொண்டு, அமெரிக்கப்போர்க் கப்பல்களுக்கு, நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மற்றும் இராணுவ விமானங்களுக்கு கூடுதல் அணுகுதலை முயற்சிக்கின்றது.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க தளம் கொண்ட Centre for Strategy and the Future of Australia-US Alliance அறிக்கை ஒன்றை “Gateway to the Indo-Pacific: Australian Defense Strategy and the Future of the Australia-US Alliance”  என்ற தலைப்பில் வெளியிட்டு, சீனாவுடன் எத்தகைய போருக்கும் ஆஸ்திரேலிய தளங்களின் முக்கியத்துவத்தை விவரித்துள்ளது. இதில் மலாக்கா, சுந்தா, லோம்போக் நீர்ச்சந்திகளை கைப்பற்றுவதும் அடங்கும். (See: US think tank report: Australia central to American war plans against China)

இந்தியா தனது பாதுகாப்பு உறவுகளை, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவுடன் ஊக்குவித்து வருகிறது. சீனக் கடற்படைப் பயிற்சி நடந்த சில நாட்களுக்குள் இந்திய, இந்தோனேசிய கடற்படைகள் அவற்றின் ஈராண்டுக்கு ஒருமுறை ரோந்தை கூட்டுப்பயிற்சியாக உயர்த்தலாம் எனக் குறிப்பிட்டன. Diplomat இல்  குறிப்பிட்டுள்ளபடி இந்தோனேசிய லெப்டினன்ட் கேர்னல் அம்ரின் ரோசிஹன் ஒரு கூட்டுப்பயிற்சியில் அதிக கப்பல்கள் ஈடுபடும், அது “கடற்படைகளுக்கு இடையே உள்ள உறவுகளை வளர்க்கும்” என்றார்.

சமீபத்தில் ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்சோ அபே, இந்தியாவின் குடியரசுத் தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதை தொடர்ந்து, இந்தியா ஜப்பானுடனும் நெருக்க உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. இரு நாடுகளும் மேற்கு பசிப்பிக்கில் 2014ல் கூட்டு கடற்படைப் பயிற்சி நடத்த ஒப்புக் கொண்டுள்ளன; புது டெல்லி ஜப்பானிய கடற்படையை இந்திய பெருங்கடலில் நடக்கும் மலபார் பன்முகப் பயிற்சிகளில் பங்கேற்க அழைத்துள்ளது.

இப்பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகளுடன் அமெரிக்கா கூட்டுப்பயிற்சிகளை நடத்தியுள்ளது. அது ஏற்கனவே ஜப்பான், தென் கொரியா, குவாம், டியாகோ கார்சியா மற்றும் சிங்கப்பூரில் இராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது. மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இராணுவ தளங்களை கொண்டுள்ளது, இப்பொழுது பிலிப்பைன்சுடன் புதிய தளங்களுக்கான ஏற்பாடுகளுக்கு முயற்சிக்கின்றது. அமெரிக்க கடற்படை வாடிக்கையாக சீன நிலப்பகுதியை ஒட்டிச் செல்வதால், அனைத்து சீன கடற்படைப் பயிற்சிகளையும் கண்காணிக்கிறது. டிசம்பர் மாதம் அமெரிக்க ஏவுகணை க்ரூசர், சீன கடற்படைக் கப்பல்களை தென்சீனக் கடலில் நெருக்கமாக பின்பற்றியது, ஒரு மோதல் குறுகிய இடைவெளியில் தவிர்க்கப்பட்டது.

ஒப்புமையில், மூன்று சீன போர்க் கப்பல்கள் இந்தோனேசியாவிற்கு தெற்கே நீர்நிலையில் பயிற்சியை மேற்கொள்வது ஒரு சிறிய செயற்பாடாகும். ஆயினும்கூட, ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் அடிக்கோடிட்டுக் காட்டுவது போல், எத்தகைய சீன நடவடிக்கையும் “சீனாவின் அச்சுறுத்தல்” என போலிக்காரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, மோதலுக்கான அமெரிக்கத் தலைமையிலான இராணுவத் தயாரிப்புக்களை நியாயப்படுத்துவதற்கு பற்றிக்கொள்ளப்படும்.