சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Workers Inquiry into the bankruptcy of Detroit

டெட்ராய்ட் திவால்நிலையின் மீது தொழிலாளர்களின் விசாரணை

உலக சோசலிச வலைத் தள ஆசியர் குழு
14 February 2014

Use this version to printSend feedback

சனியன்று, அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சி டெட்ராய்ட் திவால்நிலையின் மீது மற்றும் டெட்ராய்ட் கலைக்கூடம் & ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல் மீது ஒரு தொழிலாளர்களின் விசாரணையை நடத்த உள்ளது. டெட்ராய்ட் திவால்நிலையின் சமூக மற்றும் வரலாற்று வேர்களை விளங்கப்படுத்திக் காட்டுவதும், தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள அரசியல் மற்றும் நிதியியல் நலன்களை அம்பலப்படுத்திக் காட்டுவதுமே இந்த விசாரணையின் நோக்கமாகும். தொழிலாளர்களும் இளைஞர்களும் திரும்பி போராடுவதற்கு அவர்களுக்கு அவசியமான விளக்கத்தை வழங்குவதே இந்த கூட்டத்தின் நோக்கமாகும்.

டெட்ராய்டின் நிதியியல் சர்வாதிகாரி, நெருக்கடிகால நிர்வாகி கெவின் ஓர் (Kevyn Orr) அவரது "சீரமைக்கும் திட்டத்தை" வெளியிட தயாரிப்புகள் செய்து வருகின்ற நிலையில் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது. நகரின் மிகப்பெரிய கடன் வழங்குனர்களோடு சேர்ந்து வேலை செய்து தயாரிக்கப்பட்ட அந்த திட்டம், ஓய்வூ பெற்ற 20,000'கும் மேலான நகர தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதார உதவிகளை வெட்டுவதற்கும் மற்றும் டெட்ராய்ட் கலைக்கூடத்தின் (DIA) கலாச்சார சொத்துக்கள் உட்பட பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவதற்கும் அழைப்புவிடுக்கும்.

டெட்ராய்டில் நடந்து வருவதென்னவென்றால், அளப்பரிய விகிதாச்சாரத்துடனான ஒரு சமூக குற்றமாகும். நிதியியல் மேற்தட்டுக்களை மேலதிகமாக செழிப்பாக்க ஓர் ஒட்டுமொத்த நகரமும் சூறையாடப்பட்டு வருகிறது. அனைத்திற்கும் மேலாக, டெட்ராய்டில் என்ன நடக்கிறதோ அது அமெரிக்காவில் எஞ்சியுள்ளவர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்க மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக பயன்படுத்தப்படும்.

இந்த திவால்நிலைமை வெறுமனே ஸ்தூலமான பொருளாதார சக்திகளின் விளைவு அல்ல, மாறாக குடியரசு கட்சியின் மிச்சிகன் ஆளுநர், மாநில மற்றும் உள்ளூர் ஜனநாயக கட்சியினர், சக்தி வாய்ந்த நிதியியல் மற்றும் சட்ட நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஒபாமா நிர்வாகம் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ள, தீர்க்கமான வர்க்க நலன்களின் சார்பாக நடத்தப்பட்டு வருகிற ஓர் அரசியல் சூழ்ச்சியாகும் என்பதை இந்த விசாரணை ஸ்தாபிக்க முயலும்.

அமெரிக்க திவால்நிலைமைக்கான நீதியரசர் ஸ்டீபன் ரோட்ஸ் இந்த சூழ்ச்சிக்கு அவரது சட்ட அனுமதியை வழங்கி உள்ளார், மேலும் செய்தி ஊடகங்கள் டெட்ராய்ட் மற்றும் அமெரிக்கா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கு உண்டாக கூடிய பேரழிவுகரமான தாக்கங்களை மூடிமறைக்க அவற்றின் சக்திக்கு உட்பட்டு அனைத்தையும் செய்துள்ளன.

மிதமிஞ்சிய ஓய்வூதியங்கள், மருத்துவ உதவிகள் மற்றும் சமூக சேவைகள் தான் இந்த நெருக்கடிக்கு காரணமென்பதே, ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகங்களால், டெட்ராய்ட் திவால்நிலைமைக்கு அலுத்து போகும் அளவுக்கு மீண்டும் மீண்டும் கூறப்படும் உத்தியோகபூர்வ சொல்லாடலாக உள்ளது.

பெருநிறுவனங்களால் நடத்தப்படும் நகரமாக மறுசீரமைத்தால் டெட்ராய்ட் உயிர்த்தெழும் என்றும், மின்சார வசதி, கழிவுநீர் வடிகால் வசதி மற்றும் தீயணைப்பு வசதி போன்ற அத்தியாவசிய சேவைகளை மீண்டும் கொண்டு வரப்படுமென்று கூறப்படுகிறது.

இவை பொய்களாகும். ஒருகாலத்தில் தழைத்தோங்கி இருந்த வாகன நகரை ஏற்கனவே அதற்கு முந்தைய நிலைக்கு வெற்றுக்கூடாக மாற்றியுள்ள வங்கிகளும் பெருநிறுவனங்களும், டெட்ராய்ட் மக்களுக்கென என்ன எஞ்சி உள்ளதோ அவற்றையும் திருட பொருளாதார நெருக்கடியை பயன்படுத்த முயன்று வருகின்றன.

ஒபாமா நிர்வாகம் இந்த தாக்குதலை முழுமையாக ஆதரிக்கிறது. கடந்த வாரத்தில் தான், ஜனாதிபதி ஒரு பெருநிறுவனவாதியாக இருந்து வல்லுனராக "மாறிய" அந்நகரின் புதிய மேயர் மைக் டக்கனைச் சந்தித்தார். 700,000 மக்கள் வசிக்கும் அந்நகருக்கு பிணையெடுப்பு அளிக்க முடியாதென வெள்ளை மாளிகை அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தி இருந்தனர். இது 2008 பொறிவுக்குப் பொறுப்பான நிதியியல் ஊகவணிகர்களுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களை ஒப்படைத்த ஒரு நிர்வாகத்திடமிருந்து வருகிறது. அதன்மூலம் நிதியியல் மற்றும் பெருநிறுவன மேற்தட்டு இன்னும் கூடுதலாக செழிப்படையும் மற்றும் நாட்டின் செல்வ வளத்தை மேலும் மேலதிகமாக ஏகபோகமாக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

அமெரிக்க மாநில, கவுன்டி மற்றும் முனிசிப்பல் பணியாளர்களின் கூட்டமைப்பு (AFSCME) மற்றும் ஒருங்கிணைந்த வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் உட்பட, தொழிற்சங்கங்கள் திவால்நிலையை எதிர்க்கவில்லை. அவை ஊதியங்கள், மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியங்களில் மில்லியன் கணக்கான டாலர்களை விட்டுகொடுப்புகளாக வழங்கி உள்ளனர். அவர்களின் ஒரே குறை என்னவென்றால் நிதியியல் எச்சசொச்சங்களின் ஒரு பகுதியை பெறுவதிலிருந்து அவர்களை ஒதுக்கி வைக்க அச்சுறுத்தும் விதத்தில், Orr அவற்றின் பரிந்துரைகளை புறக்கணித்து, ஏகமனதாக வெட்டுக்களைத் திணித்து விட்டார் என்பதே ஆகும். சரிசெய்யும் திட்டத்தின் பாகமாக, தற்போது, ஓய்வூதியதாரர்களின் முதலீட்டு அறக்கட்டளைக்கு என்ற வடிவத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு அரை பில்லியன் டாலர் கழிவு நிதி (slush fund) வழங்கப்பட உள்ளது.

டெட்ராய்டில் என்ன நடந்து வருகிறதோ அதை டெட்ராய்டின் கட்டமைப்பிற்குள் இருந்து மட்டும் புரிந்து கொள்ள முடியாது. ஒருசமயத்தில் அமெரிக்காவின் மற்றும் உலக வாகனத்துறை உற்பத்தியின் மையமாக எது விளங்கியதோ அங்கே பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒரு பரந்த நிகழ்முறையின், அதாவது ஒரு சமூக எதிர்புரட்சியின் வடிவத்தில் தேசியளவிலும் சர்வதேச அளவிலும் வர்க்க உறவுகளை மறுகட்டமைக்கும் செய்வதன் பாகமாக உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மத்திய, மாநில மற்றும் முனிசிப்பல் தொழிலாளர்களின் ஓய்வூதியங்களில் தாக்குதல் நடத்த, மற்றும் தொழிலாளர்களால் சம்பாதிக்கப்பட்ட பணத்தை வோல் ஸ்ட்ரீட் வங்கிகளுக்குத் திருப்பிவிட ஒபாமா நிர்வாகம் டெட்ராய்டை ஒரு பரிசோதனை விடயமாக பயன்படுத்தி வருகிறது. இது தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் சலுகைகள் மீதான ஒரு தேசியளவிலான தாக்குதலோடும் மற்றும் உணவு மானிய கூப்பன்கள், நீண்டகால வேலைவாய்ப்பின்மை மீதான உதவிகள், வீடுகளை வெப்பமூட்ட வழங்கப்படும் உதவிகள், மற்றும் ஏனைய திட்டங்கள் உட்பட வறுமை ஒழிப்பு திட்டங்கள் மீதான தாக்குதலோடும் சேர்ந்துள்ளது.

கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளில், சமூக செலவினங்கள் மற்றும் அத்தோடு தொழிலாளர்களுக்கான ஊதியங்கள் மற்றும் உதவிகளில் அதிகளவிலான வெட்டுக்களைச் செய்து உலக நிதியியல் பொறிவின் விளைவுகளுக்கு நிதியை வழங்க வங்கிகள் கட்டளையிட்டு வருகின்றன. ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில், இதே நிகழ்ச்சிநிரல் தான் உள்ளது.

விசாரணைக்கான பிரச்சாரத்தினூடாக, தீயணைப்பு படையினர், ஆசிரியர்கள், நகர தொழிலாளர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், குடியிருப்போர், மாணவர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினர்கள் உட்பட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து சோசலிச சமத்துவ கட்சிக்கு அங்கே பெரும் ஆதரவு இருந்தது. இது "ஒன்றுகூட திட்டமிடப்பட்டுள்ளது" என்ற, அதாவது அரசியல் அமைப்பு ஒட்டுமொத்தமாக பரந்த பெரும்பான்மைக்கு எதிராக வேலை செய்து வருகிறது என்றவொரு பொதுவான உணர்வு அங்கே நிலவுகிறது. அங்கே முன்பில்லாத அளவிற்கு நிலவும் சமூக சமத்துவமின்மை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், மற்றும் முடிவில்லா யுத்தம் ஆகியவற்றின் மீது ஆழ்ந்த மற்றும் வளர்ந்துவரும் கோபம் உள்ளது.

போராடுவதற்கான விருப்பத்திற்கோ, அல்லது நிகழ்கால சூழ்நிலையோடு இருக்கும் அதிருப்திக்கோ அங்கே குறைவில்லை, ஆனால் குறைவாக இருப்பது என்னவென்றால் செறிவாக வேலை செய்யப்பட்ட ஓர் அரசியல் முன்னோக்காகும். பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டின் குரல்வளையை நெரிக்கும் பிடிக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு தெளிவான வேலைத்திட்டத்தோடு, என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதை நனவுபூர்வமாக விளங்கி கொண்டு ஆயுதபாணியான தொழிலாள வர்க்கத்தால் ஒரு புதிய போக்கை வரையறுக்க முடியுமென்ற கருத்துருவில் இந்த விசாரணை வேரூன்றி உள்ளது.

அரசியல் ஸ்தாபகங்களின் அனைத்து கன்னைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூலக்கூற்றுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவைகளோடு சோசலிச சமத்துவ கட்சி முன்னேறுகிறது. தொழிற் சங்க நிர்வாகிகள் மத்தியில் உள்ள அவரது " தொழிற் பங்காளிகளிடம்" இருந்து ஒத்துழைப்பைக் கோருவதற்கு முன்னதாக உலக சோசலிச வலைத் தளத்தின் வித்தியாசமான "மெய்யியல் அடித்தளத்தைக்" குறித்து டிசம்பரில் ஒரு வானொலி நேர்காணலில் குறிப்பிடுகையில், Orr இந்த அரசியல் உண்மையை ஒப்புக்கொண்டார்.

தொழிலாள வர்க்கம் உருவாக்கியிராத ஒரு நெருக்கடிக்கு, அது விலை கொடுக்க வேண்டுமென்ற கருத்தை சோசலிச சமத்துவ கட்சி நிராகரிக்கிறது, அது பணக்காரர்களின் முறையீடுகளைத் திருப்திப்படுத்த பரந்த பெரும்பான்மையினரை வறியவர்களாக்க தேவைப்படும் ஒரு சமூக அமைப்பால், முதலாளித்துவத்தால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

டெட்ராய்டை கொள்ளையடிப்பது முதலாளித்துவ அமைப்பு முறையின் தோல்வியை மற்றும் அதை பாதுகாக்கும் அனைவரின் தொழிலாள வர்க்க விரோத பாத்திரத்தை அடிக்கோடிடுகிறது. அது தொழிலாள வர்க்கம் நிதியியல் பிரபுத்துவத்தின் பிடியிலிருந்து உடைத்துக் கொள்ள மற்றும் பொருளாதார வாழ்வை சோசலிச அடித்தளத்தில் மறுகட்டமைக்க ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை முன்நிறுத்துகிறது.

டெட்ராய்ட் மாநகரில் உள்ள மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களையும் தொழிலாளர்களின் விசாரணையில் கலந்து கொள்ள நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். (மேலதிக தகவல்களுக்கு, detroitinquiry.org தளத்தைப் பார்க்கவும்) நேரடியாக இதில் கலந்து கொள்ள முடியாதவர்கள் கீழே உள்ள கருத்துரை பகுதியில் அவர்களின் ஆதரவு கருத்தைத் தெரிவிக்குமாறும் நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம்.