சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Canada’s government curtly dismisses concerns over blanket spying

கனேடிய அரசாங்கம் ஒட்டுமொத்த ஒற்றாடல் குறித்த கவலைகளை வெறுப்புடன் புறக்கணித்திருகிறது

By Keith Jones 
6 February 2014

Use this version to printSend feedback

கனடாவின் பழமைவாத அரசாங்கமும் அதன் உளவுத்துறை நிறுவனங்களும் கனேடிய மின்னஞ்சல் தொடர்புகளை, அரசு ஒற்றுப் பார்க்கும் அதிகாரத்தை எடுத்துக் கொண்டதை கடுமையாக பாதுகாக்கின்றன.

பல மாதங்களாக அவை தவறான தகவல், அரைகுறை உண்மைகள் மற்றும் பொய்களை பயன்படுத்தி Communications Security Establishment Canada (CSEC), கனேடியர்களின் தொலைபேசி அழைப்புக்கள், உரை செய்திகள், இணைய தள பயன்பாட்டை குறைந்தபட்சம் 2005ல் இருந்து சேகரித்து பகுப்பாய்கிறது என்னும் உண்மையை மறைக்க முற்பட்டன.

ஆனால் கடந்த வாரக் கடைசியில், கனேடிய ஒளிபரப்பு நிறுவனம் (CBC) அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைப்பின் எட்வார்ட் ஸ்னோவ்டென் கசியவிட்ட ஆவணத்தை அடித்தளமாகக் கொண்டுCESE-NSA முன்னோடி பொதுத் தொகுப்பு- கண்காணிப்புத் திட்டத்தை அம்பலப்படுத்தியபின் அவை தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன. 2012ல் CSEC அனைத்து Wi-Fi தகவல்களை கனேடிய விமான நிலையம் ஒன்றில் சேகரித்ததுடன் கைபேசி மற்றும் கணினி பயன்பாடு கண்காணிப்பில் தாங்கள் இருவாரங்கள் சேகரித்த தகவல்களை கண்காணிக்கவும் செய்தன.

CBC அறிக்கை தூண்டிய பொதுக் கூச்சலை அடுத்து, பழமைவாத அரசாங்கமும் கனேடிய தேசியப் பாதுகாப்புக் கருவியும் வெற்றுத்தனமாக அவை கனேடிய மெட்டாடேட்டாவை சேகரித்து பகுப்பாயும் தடையற்ற உரிமையைக் கொண்டுள்ளதாக உறுதிபடுத்துகின்றன. இத்தகைய ஒற்றாடல் கனடாவின் அரசியலமைப்பு பாதுகாக்கும் அந்தரங்க உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும், ஆனால் இவை உரத்த குரலில் “இது சட்டபூர்வம்” என அறிவித்து, பாதுகாப்பு மந்திரி வெளியிட்டுள்ள உயர்மட்ட இரகசிய கட்டளைகளை மேற்கோளிடுகின்றன.

அரசாங்கமும் CSEC அதிகாரிகளும், எட்வார்ட் ஸ்னோவ்டெனையும் CBC ஐயும் சீற்றத்துடன் கண்டித்து, அவற்றின் “அதிகாரமற்ற”, “சட்டவிரோத” இரகசிய தகவல்களை கசியவிடுவது கனடாவின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளன.

பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்ப்பரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ரிக்பி, செனட் பாதுகாப்பு, உளவுத்துறைக் குழுவிடம் திங்களன்று CSEC ஒற்றர்கள் கனேடிய மெட்டாடேட்டாக்களை ஒற்றுப் பார்க்கின்றனர் என்பது “நன்கு அறியப்பட்ட உண்மை” என்றார். “இது... கனேடியர்களின் சொந்த தொடர்புகளை சமரசப்படுத்தவில்லை” என்றார் ரிக்பி. “இது தகவல்களைப் பற்றிய தகவல், எனவே CSEC நடைமுறைகளுக்கு உட்பட்டதுதான்.”

ரிக்பியின் “தகவல்கள் பற்றிய தகவல்கள்” என்னும் கருத்து, அரசாங்கம் மற்றும் கனேடிய தேசிய பாதுகாப்புக் கருவியும் அரசியல் அமைப்புத் தடைகளை, தங்கள் கனேடிய மின்னஞ்சல் தொடர்புகளை ஒற்று அறிய மீறுவதற்கு கூறும் போலிச்சட்டப்பூர்வ காரணமாகும். இவை குற்றவியல் தவறு என்ற சந்தேகம் இல்லாமலோ, நீதித்துறை இசைவு இல்லாமலோ, ஒவ்வொரு மின்னஞ்சல் தொடர்பிலும் அதன் “பொருளுரையில்” தனித்தன்மை கொண்ட, குறிப்பிட்ட நபரின் தொகுப்புத் தகவல் சேகரித்து அரசாங்கத்தால் விருப்பப்படி கண்காணிக்கப்படலாம் என்கின்றனர்.

உண்மையில் கணக்கிலடங்கா நோக்கர்கள் குறிப்பிட்டபடி, சேகரிப்பு மற்றும் தகவல் தொகுப்புக்களின் பகுப்பாய்வு (கைபேசிக்கருவிகளால் வாடிக்கையாக வெளியிடப்படும் அடையாளங்கள் உட்பட), அரசாங்கம் விரைவில் ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் விரிவான முழுத்தகவல்களையும் சேர்க்க முடியும். இதில் அன்றாட நடைமுறை வழிவகை, நண்பர்கள், தொடர்புடைய அமைப்புக்கள், பணிநிலையங்கள், அரசியல் கருத்துக்கள் ஆகியவை அடங்கும்.

CSEC அதன் விமான Wi-Fi கண்காணிப்பிற்கு பயன்படுத்திய திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது இப்பொழுது கூட்டம், ஆர்ப்பாட்டம் அல்லது அரசாங்க எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டவரை உடனடியாக தேடி அடையாளம் காண பயன்படுத்தப்பட முடியும்.

இதே ரிக்பி வாக்குமூலம் அளித்த செனட் குழுமுன் பேசிய CSEC தலைவர் John Forster, CSEC அதன் விமான நிலைய தேடுதல் வேட்டை கண்காணிப்புத் திட்டம் சட்டத்தை மீறவில்லை என்று போலி சொற்றொடர்களைப் பயன்படுத்திக் கூறினார். CSEC கனேடியர்களை “இலக்கு வைக்கவில்லை”, “தேடவில்லை” என்றும் அவர் கூறினார். அது அவர்களின் மின்னஞ்சல் கருவிகளைத்தான் தேடுகிறது!

CSEC உடைய தேவை, தடையற்ற அதிகாரம் தொகுப்புத் தகவல்களை கனேடிய தொடர்புகளில் இருந்து சேகரிக்கும் உரிமையை வலியுறுத்துகையில், Forster வெற்றுத்தனமாக கனேடியர்களின் தொகுப்புத் தகவல்கள், நிறுவனத்திற்கு “எங்கள் உளவு வெளிநாட்டு இலக்குகள் மீது இயக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தும்” முக்கியமான கருவி என்று வாதிட்டார்.

CSEC தொகுப்புத் தகவல்களை கனேடியர்களைப் பற்றிய முழுப் பின்னணியை அறியப் பயன்படுத்துவதில்லை என்றும் Forster கூறினார். Forster உடன் வாக்குமூலம் கொடுத்த கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் (CSIS) தலைவர் மைக்கேல் கொலம்பே செனட் குழுவிடம் தன்னுடைய அமைப்பு – மற்றொரு முக்கிய ஒற்று அமைப்பு – “வெகுஜனக் கண்காணிப்பில்” ஈடுபடவில்லை என்றார்.

இந்த உத்தரவாதங்கள் பயனற்றவை. தகவல் தொகுப்புக்கள் அரசியலமைப்பின் பாதுகாப்பிற்குட்பட்ட “தொடர்புகள்” இல்லை என்னும் அவர்களுடைய கூற்றில் உள்ளபடியும், Forster இன் கருத்தான CSEC, Wi-Fi ஆல் இரு வாரங்கள் கண்காணிக்கப்பட்ட கனேடியர்களை “இலக்கு”, “தேடுதல்” இல்லை, என்பதும் கனேடிய உளவுத்துறை அதிகாரிகள் வாடிக்கையாக சொற்களின் பொருட்களை திரித்து அவற்றிற்கு பயன்படாத பொருளை அளிப்பதுதான்.

CSIS க்கு மக்களிடமும், நீதிமன்றத்திடம் பொய்கூறியதற்கு நீண்டகால, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட, வரலாறு உள்ளது.

CSEC ஐ பொறுத்தவரை, அது அமைச்சரக இயக்க நெறிகளின் கீழ் செயல்ப்படுவது, அதிகப்பட்சம் சிறிய எண்ணிக்கையிலான மந்திரிகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு செயலர்களுக்கு தெரியும், அது NSA உடன் அதன் உலக ஒற்றுச் செயல்களில் நெருக்கமான பங்காளி என்பது. உண்மையில் “பங்காளி” என்னும் சொல் NSA உடன் அது ஒருங்கிணைந்துவிட்ட நிலையில் பொருந்தாது. இரு ஒற்று நிறுவனங்களும் தொடர்ந்து தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மட்டும் இல்லாமல், அவை திட்டங்கள், நபர்களையும் பகிர்ந்து கொள்கின்றன, NSA செயற்பாடுகளை CSEC க்கு ஒப்பந்தங்களாக கொடுக்கிறது.

திங்கள் செனட் கூட்டம் பற்றிக் கருத்துக் கூறுகையில், Toronto Star  கட்டுரையாளர் தோமஸ் வாகோம் எழுதியது: “ஒற்றுத் துறைத் தலைவர்கள் மின்னஞ்சல், கைபேசி தொடர்புகள் என அனைத்துக் கனேடியர்களுடையதையும் கண்காணிக்கும் உரிமை உடையவர்கள் எனக் கூறுகையில், வினாவின் தொனி வேதனைதரும் வகையில் உள்ளது, அதுவும் பலரைப் பொறுத்தவரை, அவற்றைத்தான் அவை செய்கின்றனர்.”

செவ்வாய் அன்று மக்கள் மன்ற விவாதத்தில், பழமைவாத அரசாங்கம், CESC அதன் தொகுப்புத் தகவல் ஒற்று குறித்து முழு ஆதரவையும் அளித்துப் பேசியது. அரசாங்கம் விரைவில் கனேடிய தொகுப்புத் தகவலை அணுகும் அரசின் உரிமை பற்றிய வினாக்களை நிராகரித்தது. இது “சட்டப்பூர்வம்”, ஏனெனில் 2005ல் இருந்து அமைச்சரக இயக்க நெறிகள் அவ்வாறு கூறியுள்ளன, CSEC ஆணையர், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவரும், கனேடியர்களின் உரிமைகளை CSEC மீறாமல் காப்பவரும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

பழமைவாத மந்திரிகளும் மற்றும் பின்வாங்கில் உட்கார்ந்திருப்பவர்களும் அமைச்சரக இயக்கநெறிகள்—ஒருபொழுதும் காணப்படாதவை, பாராளுமன்றம் ஒப்புதல் கொடுப்பது ஒருபுறம் இருக்கட்டும், நீதிமன்றங்களில் கூட பரிசீலிக்கப்பட்டது இல்லை—குடிமக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளை மிதிக்கின்றன என்று கூறப்படுவதற்கு ஒப்புக் கொள்கையில் அவர்களுடைய கருத்து வெட்கமற்று இருந்தன.

அவர்கள் பலமுறையும் எதிர்க்கட்சிகளை பயங்கரவாதம், பொதுப் பாதுகாப்பு குறித்து “மிருதுவாக” இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்; CSECசட்டவிரோதச் செயலில்” ஈடுபட்டுள்ளது என்று தெரிவிப்பதற்காகவும்; அவர்களுடைய பெருவணிக அரசியல் எதிரிகளை “அச்சத்தைத் தூண்டுபவர்கள்” எனக் கண்டித்து, அவர்கள் அரசின் முக்கிய நிறுவனங்கள் மீது மக்கள் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றனர் என்றும் கண்டித்துள்ளனர்.

குடியுரிமை மற்றும் குடிவரவு மந்திரி Chris Alexander உடைய உரை சரியான மாதிரியாக இருந்தது. ஒரு தாராளவாத எம்.பி. அவருடைய செயற்பாடுகள் ஓட்டாவா விமான நிலையத்தின் மூலம் அவர் கடந்தபின் கண்காணிக்கப்பட்டிருக்கலாம் என்ற கவலையை தெரிவித்தற்கு விடையிறுக்கையில், அவர் திமிர்த்தனமாக அறிவித்தார்: “அவர் எத்தொடர்பும் அற்று இருக்க விரும்பினால், அவர் வீட்டில் அவரது தொலைபேயை விட்டுவிட வேண்டும்." அலெக்சாந்தர்கணக்கிலடங்கா மற்ற கன்சர்வேடிவ் குறுக்கே பேசியவர்கள் செவ்வாய் விவாதத்தின்போது இருந்தது போல்— தாராளவாதிகளை CESC தொகுப்புத் தகவல்கள் கனேடியர்களின் தொடர்புகளை எடுப்பது சட்டவிரோதம் என்று கூறியதற்கு கேலி செய்தார்; ஆனால் தாரளவாத அரசாங்கம் 2005ல் ஆட்சியில் இருந்தபோது, அதுதான் முதலில் CESC ஐ அவ்வாறு செய்யலாம் என்றது. தன் பேச்சை அவர் முடிக்கையில் எதிர்க்கட்சி, எட்வார்ட் ஸ்னோவ்டென் கொடுத்த ஆவணங்களை பயன்படுத்தி CESC தாக்குகிறது; அவரோ ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடைய “விருந்தாளி”, “அமெரிக்க நீதித்துறையில் இருந்து அகதி” என்றார்.

CSEC ஐச் சுற்றியுள்ள இரகசியம் காப்பது குறித்து அரசாங்கம் பிடிவாதமாக உள்ளது, எத்தகைய பொதுஜனக் கண்காணிப்பும், பாராளுமன்றக் கண்காணிப்பும் இதன்மீது வராமல் காக்கிறது. எதிர்த்தரப்பு கட்சிகள் CSEC, CSIS இரண்டையும் அதிகாரத்துவத்தின்கீழ் கொண்டுவந்து அவற்றின் செயல்களை “பாரபட்ச அரசியல் பூசலுக்கு” உட்படுத்த விரும்புகின்றன என்று கன்சர்வேடிவ் குற்றம் சாட்டியது.

உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி, தொழிற்சங்க ஆதரவு புதிய ஜனநாயகக் கட்சி மற்றும் லிபரல்கள், தங்கள் பங்கிற்கு பகிரங்கமாக தங்கள் ஆதரவை கனேடிய உளவுத்துறை நிறுவனங்களின் “மதிப்புடைய” பணிக்கு அளித்தன. மேலும் அவை உயர்மட்ட இரகசிய உளவுத்துறை விளக்கங்கள் பெற தேர்ந்தெடுக்கும் எம்பிக்கள் கொண்ட ஒரு மக்கள் மன்றச் சிறப்புக் குழு, CSIS க்கு பொது ஜன நம்பிக்கையை தேசியப் பாதுகாப்புக் கருவிக்கு மீட்கும் நோக்கத்தைக் கொண்டு அமைக்க வேண்டும் என்றும் கூறின. ஒரு மாதிரி எனப் பின்பற்ற, அமெரிக்க காங்கிரஸ் உளவுத்துறைக் குழுக்களை அவை சுட்டிக்காட்டியது முக்கியத்துவம் வாய்ந்தது, அக்குழுக்கள் NSA உடைய ஒற்று நடவடிக்கைகளுக்கு ரப்பர் முத்திரை அளிக்கின்றன; அவற்றில் சட்டவிரோத முழு அமெரிக்கத் தொடர்புகளின் கண்காணிப்பும் உள்ளது.

ஜூன் 2013ல் முதல் முறையாக CSEC கனேடிய மின்னஞ்சல் தொடர்புகள் தோற்றுவிக்கும் மெட்டாடேட்டாக்களை சேகரிக்கிறது, பகுப்பாய்கிறது என்பது பொதுமக்களுக்கு தெரிய வந்தது. ஆனால் கடந்த வார இறுதி வரை எதிர்க்கட்சிகள், இதில் Bloc Quebecois, பசுமை வாதிகளும் அடங்குவர், இதை ஒரு பிரச்சினை ஆக்க மறுத்துவிட்டன. NSA-CSEC விமான நிலையக் கண்காணிப்புத் திட்டம் குறித்த மக்களின் சீற்றம் அதிகரிக்க, தாமதமாக மெட்டாடேட்டா தேடுதல் சட்டவிரோதம், கனேடிய மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு ஆபத்து என்று கண்டுபிடிக்க வைத்துள்ளது. ஆனால் அவை அரசாங்கம், அரச நிறுவங்களுக்கு தேசிய பாதுகாப்புக் கருவி 2001 முதல் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்னும் பெயரில் கொண்ட பரந்த அதிகாரங்களை மூடி மறைத்து அதன் உண்மை இலக்கு தொழிலாள வர்க்கம் என்பதையும் மறைத்தன. இவ்வகையில் செவ்வாயன்று CSEC குறித்த விவாதத்தில், NSA உடன் அதன் பங்காளித்தனம், மற்றும் கூட்டு சட்டவிரோத செயற்பாடுகளில் அவை ஈடுபடுவது குறித்த எந்த குறிப்பும் இருக்கவில்லை.