சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Berlin and Washington foment civil war in Ukraine

பேர்லினும் வாஷிங்டனும் உக்ரேனில் உள்நாட்டு யுத்தத்தைத் தூண்டுகின்றன

Peter Schwarz
20 February 2014

Use this version to printSend feedback

சமீபத்திய உக்ரேனிய சம்பவங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை ஆகும். அந்நாட்டை பிளவுபடுத்த, அதை உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ள மற்றும் தங்களின் புவிசார் மூலோபாய இலக்குகளை எட்ட அந்த ஒட்டுமொத்த பிராந்தியம் முழுவதையும் ஒரு பெருங்கலவர அபாயத்திற்கு உட்படுத்த வாஷிங்டன், பேர்லின் மற்றும் புரூஸ்செல்ஸின் அரசியல் தலைவர்கள் தயாராகி வருகின்றனர் என்பதை அந்த சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஆர்ப்பாட்டங்கள் மூலமாக ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை தூக்கிவீசி, அவரது ஆட்சியை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நேசமான ஓர் அரசாங்கத்தைக் கொண்டு பதிலீடு செய்வதில், உக்ரேனிய எதிர்ப்பாளர்கள் மற்றும் அதன் மேற்கத்திய ஆதரவாளர்களின் தோல்வியை தொடர்ந்து, அதே நோக்கத்தை அடைய ஆயுதமேந்திய பாசிச கும்பல்கள் ஒன்றுதிரட்டப்பட்டு வருகின்றது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் எதிர்ப்புக்கள் தொடங்கியதிலிருந்து, கீவ் மிகக் கொடூர இரத்த மோதல்களை செவ்வாயன்று கண்டது. துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் மற்றும் வீசுவதற்குரிய கற்களோடு ஆயுதமேந்திய கும்பல்கள் அரசு பாதுகாப்பு துருப்புகளுடன் வீதிப் போராட்ட வன்முறைகளில் ஈடுபட்ட போது, பல பொலிஸ் சிப்பாய்கள் உட்பட இருபத்தி ஆறு நபர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 1,000 பேர் காயமுற்றனர்.

எதிர்ப்புகளுக்கு ஆதரவாக பிரச்சாரமயப்பட்டுள்ள மேற்கத்திய ஊடக பிரிவுகளாலும் கூட, அந்த வன்முறை போராட்டங்களில் பங்குபற்றி இருந்த தீவிர-வலது சக்திகளின் பாத்திரத்தை முற்றிலுமாக புறக்கணிக்க முடியவில்லை. பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டதாவது, இராணுவ தலைக்கவசம், குண்டு துளைக்கா உடை மற்றும் உருவத்தை முற்றிலுமாக மறைத்து உடையணிந்திருந்த சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கை துப்பாக்கிகளை போன்று காணப்பட்டவைகளை கொண்டு விடையிறுப்பு காட்டினர். அதே செய்தியிதழ் எழுதியது: மிகவும் இராணுவமயப்படுத்தப்பட்ட போராட்ட குழுக்களில் ஒன்றான, Right Sector, அவர்கள் முகாமில் சேருமாறு கூறி துப்பாக்கிகளோடு பொதுமக்களை வற்புறுத்தியது."

"தீவிர கொள்கை உடைய Right Sector'ஐ சேர்ந்தவர்கள் போராட்ட இயக்கத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர்," என்று ஜேர்மனியின் N24 செய்தி சேனல் அறிவித்தது. நாடு முழுவதிலும் உள்ள தீவிர வலதுசாரி அமைப்புகளின் ஆதரவாளர்களைக்" கொண்ட அந்த குழுவைக் குறிப்பிட்டுக் காட்டி, அது மேலும் குறிப்பிட்டது, முகமூடிகள் அல்லது தலைக்கவசங்களால் தங்களின் முகங்களை மறைத்துக் கொண்டு, அவர்கள் கைத்தடிகள் மற்றும் இரும்பு கம்பிகளைக் கொண்டு கீவ்வில் பொலிஸ் மீது தாக்குதல் நடத்தினர்."

யானுகோவிச் மற்றும் அவரது அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா மற்றும் ஜேர்மன் அரசாங்கங்கள் இத்தகைய நவபாசிச துணைப்படை குழுக்களை ஆதரித்து வருகின்றன. இதை Frankfurter Allgemeine Zeitung அப்பட்டமாக வெளிப்படுத்தியது. அது குறிப்பிட்டது, ஆட்சியை எதிர்க்கும் தீவிர எதிர்ப்பாளர்களோ அல்லது பாதுகாப்பு படைகளோ யார் செவ்வாயன்று வன்முறையை முதலில் தொடங்கினார்கள் என்பது விடயமல்ல. இப்போது யானுகோவிச்சின் விரைவான இராஜினாமா என்ற ஒரேயொரு விடயம் மட்டும் தான் உதவக் கூடியதாகும்."

திங்களன்று, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் உக்ரேனின் எதிர்க் கட்சி தலைவர்கள் அர்செனி யாட்சென்யுக் மற்றும் விடாலி கிலிட்ஸ்ச்கோ ஆகியோரை அக்கறையோடு வரவேற்றார், ஆனால் தடைகள் விதிப்பதற்கான அவர்களின் அழைப்பை நிராகரித்திருந்தார். கீவ்வில் நடந்த இரத்த கலகங்களுக்குப் பின்னர், அவரே நேர்மாறாக மாறியதோடு யானுகோவினுச் அரசாங்கத்திற்கு எதிராக தடைகள் விதிக்க ஆதரவை வெளிப்படுத்தினார். பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டுடன் கூட்டாக சேர்ந்து ஆஜரான ஒரு கூட்டத்தில், அவர் அந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு உக்ரேனின் பாதுகாப்பு படைகளை குற்றஞ்சாட்டினார்.

இதேபோன்ற கருத்துக்களை அமெரிக்க அரசாங்கமும் தெரிவித்திருந்தது, அதன் கலக-தடுப்பு பொலிஸைத் திரும்ப பெறுமாறு அது உக்ரேனிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது. மக்கள் ஒரு கோட்டை கடந்துவிட்டால், அங்கே விளைவுகள் இருக்கும்," என்று ஜனாதிபதி பராக் ஒபாமா அச்சுறுத்தினார்.

பேர்லினும் வாஷிங்டனும் அவற்றின் சொந்த நோக்கங்களுக்காக பாசிச துணைப்படை கும்பல்களின் சேவைகளைச் சுரண்ட தயாராகி வருகின்றன என்ற உண்மை உத்தியோகபூர்வ பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகின்றது. உக்ரேனில் பிரச்சினைக்குள்ளாகி இருப்பது என்னவென்றால் சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகமும் ஆகும் என்று உத்தியோகபூர்வ பிரச்சாரம் குறிப்பிடுகின்றது. உண்மையில், ரஷ்யாவிலிருந்து தன்னைத்தானே தூர விலக்கி நிறுத்திக் கொண்ட, ஐரோப்பிய ஒன்றியத்திடம் தன்னைத்தானே அடிபணிய செய்து கொண்ட மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் மீது ஈவிரக்கமற்ற சிக்கன கொள்கைகளை திணிக்கின்ற ஒரு ஆட்சியைக் கொண்டு யானுகோவிச் ஆட்சியை மாற்றி அமைப்பதே நோக்கமாகும்.

கிலிட்ஸ்ச்கோ, யாட்சென்யுக் மற்றும் ஓலெஹ் தியாஹ்ன்பொக் ஆகியோர் தலைமையிலான எதிர்ப்பின் நோக்கமும் இதுவே ஆகும். ஓலெஹ் தியாஹ்ன்பொக்கின் ஸ்வோபோடா கட்சி பகிரங்கமாக நாஜி ஒத்துழைப்பாளர் ஸ்தீபன் பாண்டேராவைப் பெருமைப்படுத்துவதோடு, யூத-எதிர்ப்பு மற்றும் இனவாதத்தையும் தழுவி உள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரங்களின் செயலெல்லைக்குள் கிழக்கு ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளையும் இணைத்து, ரஷ்யாவை தனிமைப்படுத்தும் அவற்றின் முயற்சிகளின் பாகமாக உக்ரேனுக்கான யுத்தம் உள்ளது. முதலாளித்துவ மீட்சியோடு தொடங்கிய அந்த நிகழ்வுப்போக்கு, முன்னாள் கிழக்கு முகாம் நாடுகள் மற்றும் பால்கன் அரசுகளை நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இணைத்ததோடு தொடர்ந்தது. தற்போது அது முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பெரும் பகுதிகளுக்குள் விஸ்தரிக்கபட உள்ளது.
அதன் நீண்ட எரிசக்தி எண்ணெய்குழாய், மூலோபாயரீதியில் இராணுவ முகாம்கள் மற்றும் கனரக தொழில்துறை ஆகியவற்றின் வலயத்தோடு உக்ரேன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஒரு பிரதான இலக்காக உள்ளது. கடந்த நூற்றாண்டில் இரு தருணங்களில், 1918இல் மற்றும் 1941இல், ஜேர்மன் ஏகாதிபத்தியம் உக்ரேன் மீது படையெடுத்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது, ஹிட்லரின் இராணுவங்கள் மில்லியன் கணக்கான உக்ரேனியர்களை படுகொலை செய்தன.

உக்ரேனிய ஏனைய முன்னாள் சோவியத் குடியரசுகளையும் ஐரோப்பிய ஒன்றிய செல்வாக்கு எல்லைக்குள் இழுக்க ஒரு தளமாக சேவை செய்கிறது. Carnegie Europe பத்திரிகைக்கான ஒரு கட்டுரையில் இதழாளர் ஜூடி டெம்ப்சே உக்ரேன் நெருக்கடியை, "ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கிடைத்திருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக" குறிப்பிட்டார். அவர் இவ்வாறு தொடர்ந்து எழுதி இருந்தார்: உக்ரேனில் மட்டுமல்ல, ஜோர்ஜியா மற்றும் மால்டோவாவிலும் கூட ஐரோப்பிய ஒன்றியம் தன்னை வர்த்தகம் செய்து கொள்வதற்கு இதுவே சரியான நேரம்."

உக்ரேனில் ஒரு சாதகமான ஆட்சியை நிறுவுவது அல்லது அந்நாட்டை ஏகாதிபத்திய துண்டாடலுக்குள் தள்ளுவதென்பது இறுதியில் ரஷ்யாவிற்கு எதிராக நோக்கம் கொண்டதாகும். ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் கொண்டு வர மற்றும் அத்தோடு அந்நாட்டை சிதைக்க பயன்படக்கூடிய இன மற்றும் அரசியல் பதட்டங்களை பல்வேறு சிந்தனைகூடங்கள் ஆய்வு செய்து வருகின்றன.

வாஷிங்டன், பேர்லின் மற்றும் புரூஸ்செல்ஸால், அவற்றின் வலதுசாரி மற்றும் பாசிச பங்காளிகளின் ஒத்துழைப்போடு, உக்ரேனில் பின்பற்றப்படும் கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டுள்ளன. அவை உள்நாட்டு யுத்த அபாயத்திற்கு வித்திட்டுள்ளதோடு, ரஷ்யாவோடு ஓர் இராணுவ மோதலின் ஆபத்தையும் அதிகரிக்கின்றன.

உக்ரேனிய தொழிலாள வர்க்கம் யானுகோவிச் முகாமிற்கு ஆதரவளிப்பதன் மூலமாக இத்தகைய ஆபத்துக்களை தவிர்க்க முடியாது. அவரது ஆட்சி ஊழல் நிறைந்து, திவாலாகி போயுள்ளதோடு, அது எதிர்ப்புகளுக்கு ஆதரவளிப்பர்களைத் தவிர வேறு செல்வந்த தட்டுக்களின் கோஷ்டிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பது மற்றும் உழைக்கும் மக்களை வறுமையில் தள்ளுவது மற்றும் ஒடுக்குவதென்று வரும் போது அவர்கள் அனைவரும் ஒன்று கூடிவிடுவர்.

செல்வந்த மேற்தட்டை பறிமுதல் செய்து, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை தேசியமயமாக்கி, சமரசத்திற்கிடமின்றி ஏகாதிபத்தியம் மற்றும் தேசியவாதத்தை நிராகரிப்பதற்காக போராடும் மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களை, ரஷ்யா, ஐரோப்பா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள தொழிலாளர்களோடு ஐக்கியப்படுத்துவதற்காக போராடும் ஒரு சுயாதீனமான சோசலிச கட்சியை கட்டியெழுப்புவதே தொழிலாள வர்க்கத்தின் முன்னால் உள்ள ஒரே பாதையாகும்.