சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

British government attempts to stamp out student protests

பிரித்தானிய அரசாங்கம் மாணவர் எதிர்ப்புக்களை நசுக்க முற்படுகிறது

By Zach Reed 
14 February 2014

Use this version to printSend feedback

மாணவர்கள் எதிர்ப்புக்கள் அலை கடுமையான அரச தாக்குதலைகளை முகங்கொடுக்கிறது.

பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் வேலை இழப்பு, ஊதிய வெட்டுக்கள் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும், பயிற்சிக் கட்டணம் அகற்றப்பட வேண்டும், எதிர்வரவிருக்கும் மாணவர்களின் கடன்புத்தகங்கள் தனியார்மயமாக்கப்படலுக்கு எதிராகவும் மற்றும் பல்கலைக் கழகங்கள் குடிவரவு எல்லைக் காவலர்களாகவும் அரசாங்க உளவுத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பதையும் எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

டிசம்பர் மாதம், பலமான ஆயுதங்கள் கொண்ட பொலிசார் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கி 41 பேரைக் கைது செய்தனர். அதில் மாணவர் சங்கத் தலைவர் மைக்கேல் செசும் லண்டனில் கைதானார். ஏனைய பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதுடன், கடுமையான பிணையெடுப்பு விதிகள் சுமத்தப்பட்டன. எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது, பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது என்ற தடையும் இருந்தன.

ஜனவரி 29ல் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கூடுதலான ஜனநாயகம் வேண்டும் என்ற கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்ததால், பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான ஊதியத்தையாவது அளித்தல், கூடுதல் பயிற்சிக் கட்டணத்திற்கு அது கொடுக்கும் பகிரங்க ஆதரவு அகற்றப்ப வேண்டும் என்பவற்றை வலியுறுத்தி பேர்மிங்ஹாமல் கல்வியை பாதுகார் என்னும் அமைப்பினால் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்குப்பின் கிட்டத்தட்ட 300 மாணவர்கள் அமைதியான அணிவகுப்பில் கலந்து கொண்டனர். பல்கலைக்கழகத்தின் Aston Webb’s பெரிய அரங்கில் குறுகிய நேர ஆக்கிரமிப்புடன் அது முடிவுற்றது.

சுவர்களில் எழுதப்பட்ட சிறிய நிகழ்வுகளை செய்தி ஊடகம் பரபரப்பாக்கியது. புகை குண்டுகள் பயன்பாடு, கதவுகளுக்குச் சேதம் விளைவித்தல், பாதுகாப்பு ஊழியர்களுக்கு எதிரான தாக்குதல் இதில் அடங்கும். இதற்கு மாறாக மோதலைக் கண்டவர்கள், தூண்டுதலின்றி நடைபெற்ற தாக்குதல்களில் மாணவர்கள்தான் பாதிக்கப்பட்டனர் என வலியுறுத்தினர்.

ஆக்கிரமிப்பு முடிவடைந்தவுடன், மாணவர்கள் வெளிமுற்றத்திற்குச் சென்றனர். வெளியே செல்லும் ஒரேயொரு வழியோ 50 பொலிஸ் அதிகாரிகளால் மறைக்கப்பட்டிருந்தது. அவர்கள் நான்கு மணி நேரத்திற்கு உணவு, நீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் குளிரிலும் மழையிலும் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர்.

மாணவர்கள் இரண்டு இரண்டு பேராக மட்டும், அதுவும் சோதனைக்கு உட்பட வேண்டும், அவர்களைப் பற்றிய விவரங்களைப் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். அப்பொழுது அவர்கள் படமும் எடுக்கப்பட்டனர். இதற்கு உட்பட மறுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறான நடவடிக்கையை, ITN வக்கீல்களில் ஒருவரான சைமன் நேடஸ் கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் அது சட்டவிரோதம் எனக் கூறினார். பொலிஸ் படை இன்னும் இத்தகைய நடைமுறையைக் கொண்டிருப்பது உளைச்சல் தருகிறது என்றார் அவர்.

மேற்கு மிட்லாண்ட்ஸின் பொலிஸ், அவர்கள் மாணவர்களை சுற்றிவளைத்ததை மறுத்தனர். மேலதிகாரி லீ கெண்ட்ரிக், ஆர்ப்பாட்டங்கள் ஒரு ஆர்ப்பாட்டத்திற்குரிய தன்மையை கொண்டிருக்கவில்லை ஆகையால், மாணவர்கள் கட்டிடங்களுக்குள் உடைத்து நுழைகிறார்கள், சொத்துக்களை சேதப்படுத்துகின்றனர், ஊழியர்களை தாக்குகின்றனர் எனக் கூறி பல்கலைக்கழக அதிகாரிகள் தம்மை அழைத்ததாக தெரிவித்தார்.

பொலிஸார் சுற்றிச் சூழ்ந்தது பற்றி கெண்ட்ரிக் கூறினார்: சந்தேகத்திற்கு உரியவர்கள் பொலிசால் நிறுத்தப்பட்டு குற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன் அவர்களைப் பற்றிய விவரங்களை கொடுக்குமாறு கோரப்பட்டனர். அதற்கு மறுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது இன்னும் வியப்பானது, ஏனெனில் பொலிசார் மாணவர்களை காவலில் வைக்குமுன் செய்யப்பட்டதாக கூறப்படும் செயல்கள் எதையும் மாணவர்கள் செய்யும்போது அவர்கள் எதிர்கொள்ளவில்லை.

சுற்றிவளைத்ததில் இரு மாணவர்கள் மயங்கிவிழுந்தனர். 19 வயதான மார்க் டேடரோ மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு அச்ச வலித்தாக்குல் மற்றும் கடுமையான வயிற்றுவலியை அடுத்து அவர் சுற்றிவளைப்பிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். மருத்து வசதியை பெறுவதற்கு அவருடன் செல்ல வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை.

மற்றொரு மாணவர் ஆண்ட்ரூ காலஷெர், அருகே இருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் வானொலியில் பொலிசார் டேடரோவிற்கு சிகிச்சை அளிக்கவந்த முதலுதவி வாகனத்தை தடுத்த உரையாடலை கேட்டதாக கூறினார்.

பொலிஸ் நடவடிக்கையின்போது 14 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் சைமன் பர்ஸ், டோமஸ் பிரை-மோர்கன், பானஜியோடிஸ் தியோடோரோபோலுஸ் ஆகிய மூவர் "வன்முறை சீர்கேடு" குற்றச்சாட்டிற்கு உட்பட்டனர். இதற்கு 8 ஆண்டுகால சிறைத் தண்டனையை வழங்கலாம். கைது செய்யப்பட்டபின் மூவரும் காவலில் வைக்க அனுப்பப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு பின்னர்தான் பேர்மிங்ஹாம் மாஜிஸ்ட்டிரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டபின் பிணையெடுப்பில் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மே 23 அன்று நீதிமன்றத்திற்கு வருமாறு உத்திரவிடப்பட்டுள்ளனர். மாணவர் சங்க துணைத் தலைவர் கெல்லி ரோஜர்ஸ் தனது விவரங்கள் கூற மறுத்ததை அடுத்துக் கைது செய்யப்பட்டதாகவும், 27 மணி காவலில் வைக்கப்பட்டதாகவும், ஆடைகளைக் களைந்து சோதனை நடந்ததாகவும் கூறினார். மற்ற மாணவர்கள் இறுதியில் 28 மணி நேர சிறைக்குப்பின் குற்றச்சாட்டுக்கள் இன்னும் கொடுக்கப்படாமல், மார்ச் 26 வரை பிணையில் விடப்பட்டனர்.

தண்டனை ஜாமீன் நிபந்தனைகள் மாணவர்கள் ஒவ்வொரு இரவும் அவர்கள் வீட்டு விலாசத்தில் படுத்து உறங்கு வேண்டும் எனக் கூறுகின்றன. இதன் பொருள் அவர்கள் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து படிக்கவும் வேலைசெய்யவும் மறுக்கப்படுகின்றனர் என்பதாகும். அத்துடன் பகிரங்கமாக பத்து பேர் அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களில் சந்திக்கக்கூடாது, கைது செய்யப்பட்ட மற்ற மாணவர்களை பார்க்கக்கூடாது, பல்கலைக்கழகத்தில் நுழையக்கூடாது அல்லது ஏனைய கல்வித் தளங்களுக்கோ, எல்லைகளுக்குள்ளோ வரக்கூடாது என்பதாகும். கைது செய்யப்பட்டவர்களில் சைமன் பர்ஸ், கெல்லி ரோஜர்ஸ் உட்பட 6 பேர் இப்பொழுது மேற்முறையீட்டிற்கான உரிமையின்றி பல்கலைக்கழகத்தால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

தேசிய மாணவர் சங்கத்தின் கொள்கையை ஒட்டி, பேர்மிங்ஹாம் மாணவர்கள் சங்கம் எதிர்ப்புக்களை கண்டித்து, கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு உதவவும் மறுத்துவிட்டது. அவர்கள் சட்டபூர்வ நேரடி நடவடிக்கை, அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்குத்தான் ஆதரவு கொடுப்பர் என்றும் கூறினர்.

பெப்ருவரி 4ம் திகதி, பேர்மிங்ஹாமில் கல்வியை பாதுகார் இயக்கம் Hornton Grange மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 30-40 மாணவர்களின் மற்றுமொரு இரண்டுவார ஆக்கிரமிப்பை முடிவிற்கு கொண்டு வந்தனர். இது பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு முந்தைய தினம் கொடுக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து ஆகும். இத்தீர்ப்பில் இதேபோன்ற நடவடிக்கையில் அடுத்த 12 மாதங்களில் ஈடுபட்டால் அதில் தொடர்புடையவர்கள் சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு எட்டு நாட்கள் ஆக்கிரமிப்பு செய்த 5 மாணவர்கள் வெளியேற்றப்படலாம் என்னும் அச்சுறுத்தலை எதிர்பார்த்து, இன்னுமும் பல்கலைக்கழக விசாரணையில் உள்ளனர். மற்றொரு தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் பல்கலைக்கழக ஊழியர்ககளின் பெப்ருவரி 6 வேலைநிறுத்தத்துடன் ஆரம்பிக்க உள்ளன.

மாணவர்களுக்கு எதிராக அடக்குமுறை நடவடிக்கைகள், மார்க் டக்கன் பொலிசாரால் கொல்லப்பட்டதை அடுத்து 2011இல் லண்டனிலும் மற்றும் பிற நகரங்களிலும் நிகழ்ந்த கலவரங்களில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு கூட்டு தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து முடுக்கிவிடப்பட்டுள்ளது. அப்பொழுது ஆயிரக்கணக்கானவர்கள் கங்காரு நீதிமன்றங்களின் முன்னிறுத்தப்பட்டு எந்தவித முறையான வழக்கும் இன்றி, பிணை கொடுத்தலும் இன்றி, கடுமையான அபராத வகையிலான காவல் தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.