சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US, European Union threaten sanctions against Ukraine

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளுக்கு அச்சுறுத்துகின்றன

By Bill Van Auken 
20 February 2014

Use this version to printSend feedback

செவ்வாயன்று கீவின் சுதந்திர சதுக்கத்தில் இரத்தக்களரி மோதல்களை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியமும் வாஷிங்டனும் உக்ரேனிய அதிகாரிகளுக்கு எதிராக, இலக்கு வைத்த பொருளாதாரத் தடைகளைச் சுமத்தும் அச்சுறுத்தலை விடுத்துள்ளன; இது முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஆட்சி மாற்றத்தின் ஒரு பகுதியாக உள்ள மேற்கத்தைய பிரச்சாரத்தின் விரிவாக்கம் ஆகும்.

மேற்கில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள், கீவிலும் பல உக்ரேனிய நகரங்களிலும் வெளிப்படும் வன்முறை, ஓர் “இராணுவ ஆட்சி சதி” அல்லது “உள்நாட்டுப் போராக கூட” வளரலாம் என்ற எச்சரிக்கைகளுக்கு இடையே வந்துள்ளன.

ஜனாதிபதி பாரக் ஓபாமா, மெக்சிகோவிற்கு அரச விஜயமாக செல்கையில் கொடுத்த பகிரங்க அறிக்கை ஒன்றில், “மக்கள் ஒரு கோட்டை கடந்துவிட்டால், அங்கே விளைவுகள் இருக்கும்" என அச்சுறுத்தினார். வாஷிங்டன், துப்பாக்கிச்சூடு,  தீகுண்டுகள், கற்கள், தடிகள் எனத் பாதுகாப்புப் படையினரை தாக்கியோரைக் குறிப்பிடவில்லை என்பதை அவசரமாகத் தெளிவுபடுத்தினார். மாறாக, “நாம் உக்ரேனிய அரசாங்கத்தைத்தான் முக்கியமான பொறுப்பு என கொள்கிறோம்” என்றார்.

“இன்னும் அமைதியான மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது” என்று அமெரிக்க ஜனாதிபதி மேலும் கூறினார்.

இது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை அகற்றி, அமெரிக்கா மற்றும் நேட்டோவிற்கு நெருக்கமாகவும் ரஷ்யாவிற்கு விரோதப் போக்கையும் கொண்ட ஆட்சியை இருத்துதல் என்பதை விளைவிக்கும் வாஷிங்டனின் ஆணைக்கு இடக்கரடக்கல் ஆகும்.

தன்னுடைய சுருக்கமான கருத்துக்களின் போக்கில், ஒபாமா மூன்று முறை “அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள்” என்னும் சொற்றடரைப் பயன்படுத்தினார்; இந்த விவரிப்பு செவ்வாயன்று கீவில் மேற்கொள்ளப்பட்ட வன்முறை மற்றும் கொலைக்கார தாக்குதல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

முன்னதாக வெள்ளை மாளிகை துணைத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் பொருளாதாரத் தடைகள் குறித்து ஐரோப்பிய நட்புநாடுகளுடன் வாஷிங்டன் ஆலோசித்துவருகிறது என்றார். செவ்வாய் கீவ் “காட்சிகள்”, “முற்றிலும் சீற்றம் தருபவை, 21ம் நூற்றாண்டில் இவற்றிற்கு இடம் இல்லை” என்றார்: இந்த நூற்றாண்டில் முதல் 15 ஆண்டுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழத்த வன்முறை அளவோடு ஒப்பிடும்போது இது விந்தையான கருத்தாகும். “உக்ரேன் ஐரோப்பா மற்றும் அட்லான்டிக் கடந்த சமூகத்துடன் கொண்டுள்ள நோக்குநிலை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கிய முன்னுரிமையைக் கொண்டுள்ளது” என்று அவர் உறுதிப்படுத்தினார்.

ஐரோப்பாவில் உள்ள அரச தலைவர்களும் மந்திரிகளும் இதேபோன்ற கண்டனங்கள் மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டனர். ஐரோப்பிய ஒன்றியம் வியாழன் அன்று பிரஸ்ஸல்ஸில் அவசரகாலக் கூட்டத்தை நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில உக்ரேனிய அதிகாரிகளுடைய சொத்துக்களை முடக்க, பயணங்களுக்கு தடைவிதிக்க அழைப்புவிட்டது.

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் இருவரும் புதன் அன்று பாரிஸில் சந்தித்தனர்; தற்போதைய அரசாங்கத்தை வெளியற்றும் நோக்கம் கொண்ட பரந்த கொள்கையின் ஒரு பகுதிதான்  பொருளாதாரத் தடைகள் என வலியுறுத்தினர். “உக்ரேனில் நடப்பது கூறத்தக்கது அல்ல, ஏற்கத்தக்கது அல்ல, பொறுக்கத்தக்கது அல்ல” என்று ஹாலண்ட் குமுறினார்.

பொருளாதாரத் தடைகள் ஒரு முன்கூட்டிய முடிவு என்று மேர்க்கெல் அடையாளம் காட்டினார்; அவை எப்படி இலக்கு கொள்ளும் என்பதுதான் ஒரே பிரச்சினை என்றார். “ஆனால் பொருளாதாரத் தடைகள் மட்டும் போதாது.” “அரசியல் வழிவகையை மீண்டும் நாம் கொண்டுவரவேண்டும்.” என்றார் அவர்.

இந்த வாரம் முன்னதாக இரண்டு முக்கிய உக்ரேனிய எதிர்த்தரப்புத் தலைவர்கள் விட்டாலி கிளிட்ஷ்கோ மற்றும் ஆர்செனி யான்சென்யுக் பேர்லினுக்குப் பறந்து மேர்க்கெல் மற்றும் ஜேர்மனிய வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையரை சந்தித்து மூலோபாயத்தை விவாதித்தனர். பேச்சுக்கள் எந்த அளவிற்கு ஜேர்மனி நேரடியாக உக்ரேனில், 20ம் நூற்றாண்டில் அது இருமுறை படையெடுத்த நாட்டின்மீது தலையிடப்போகிறது என்பதின் அடையாளம் ஆகும்.

யானுகோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்பு உடன்படிக்கையில் இருந்து பின் வாங்கியதும், ஜேர்மனியும் அமெரிக்காவும் நாட்டில் தங்கள் தலையீட்டை முடுக்கிவிட்டுள்ளனர், அந்த உடன்படிக்கை, சிக்கன நடவடிக்கைகளுடன் கடன்களை பிணைத்தது; யானுகோவிச் இதற்குப் பதிலாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் 15 பில்லியன் டாலர்கள் பிணை எடுப்பிற்கு பேச்சுக்களை நடத்தினார்.

ஜேர்மனிய, பிரெஞ்சு, போலந்து வெளியுறவு மந்திரிகள் அரசாங்கத்துடனும் எதிர்த்தரப்பினருடனும் பேச்சுக்களுக்கு கீவிற்கு செல்ல உள்ளனர்; அதன் பின் அவர்கள் பொருளாதாரத் தடைகளை பரிசீலிக்க பிரஸ்ஸ்ல்ஸுக்கு உடனே செல்வர்.

செவ்வாய் நடைபெற்ற மோதல்கள்,  உக்ரேனிய பாராளுமன்றம் இவர்கள் கோரிய நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்பதற்குப்பின், வலதுசாரி மற்றும் நவ-பாசிச யானுகோவிச் அரசாங்க எதிர்ப்பாளர்களால் தொடக்கப்பட்டது, குறைந்தப்பட்சம் 26 பேரைக் கொன்றன; இதில் குறைந்தப்பட்சம் 10 பொலிசார் இருந்தனர். மற்றும் ஒரு 263 எதிர்ப்பாளர்கள், 342 பொலிஸ் அதிகாரிகள் காயமுற்றிருந்தனர்.

பொலிஸ் இறப்புக்கள் அனைத்தும் துப்பாக்கிச்சூட்டினால் ஏற்பட்டவை என்று அரசாங்கம் கூறுகிறது; ஆனால் சில அறிக்கைகள் பொலிசார் எதிப்பாளர்களை ஆயுத வண்டியால் தாக்கியபோது, எரிபொருள் நிறைந்த போத்தல்கள் வீசப்பட்டு தீயில் இறந்தனர் என்று கூறுகின்றன. செவ்வாய் அன்று யூட்யூப்பில் வெளிவந்த வீடியோ காட்சி எதிர்ப்பாளர்கள் ஹெல்மெட் மற்றும் பிளாக் ஜாக்கெட் அணிந்து பெரிய துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகளை பயன்படுத்தி கீவின் சுதந்திர சதுக்கத்தில் பாதுகாப்புப் படையின் மீது சுட்டதைக் காட்டுகிறது.

புதன் அன்று ஆங்காங்கு மோதல்கள் இருந்தன; ஆனால் முந்தைய தினத்தின் மோசமான அளவிற்கு இல்லை. நெருப்புக்கள் கீவின் சுதந்திரச் சதுக்கத்தில் எதிர்த்தரப்பு முகாம்களைச் சுற்றித் தொடர்ந்து எரிந்தன; அங்கு கூட்டம் ஒரு சில ஆயிரம் எனக் குறைந்துவிட்டன; அவற்றை வலதுசாரித் தீவிரவாதிகள் செமிடிய எதிர்பு ஸ்வோபோடா கட்சி, வலது பிரிவு என்பவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளன.

ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வரும் தகவல்கள் அரசாங்கத்தின் மீது தாக்குதல்கள் தொடர்ந்து விரிவாதலைக் காட்டுகின்றன. போலந்து எல்லையில் உள்ள மேற்கு நகரமான லீவிவ்ல், வலதுசாரிப் போராளிகள் பல அரசாங்கக் கட்டிடங்களை முற்றுகையிட்டனர்; இதில் பொலிஸ் நிலையங்களும் உள்துறை அமைச்சரகத் துருப்பினரின் பாசறைகளும் இருந்தன; அவை தீக்கிரையாக்கப்பட்டன. கூட்டத்தால் துப்பாக்கிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன என அதிகாரிகளும் நிருபர்களும் தெரிவித்தனர்.

ஒலெக்சாந்தர் யாகிமென்டோ, உக்ரேனிய அரசாங்கப்  பாதுகாப்புப் பிரிவின் (SBU) தலைவர், புதன் அன்று முந்தைய 24 மணிநேரத்தில் 1,500 தோட்டாக்கள் 100,000 சுற்று வெடிமருந்துகள் பொலிஸ், இராணுவ நிலையங்களில் இருந்து கைப்பற்றப்பட்டன என்றார். “நெருப்பு வைக்கும் தாக்குதல்கள், கொலைகள், கடத்தல், மக்களை மிரட்டல் என்று குற்றம் சார்ந்த இலக்குகளை அடைவதற்கு வன்முறைகள் வேண்டுமென்றே பயன்படுத்தப்டுகிறது என்றார் அவர்.

“இவை அனைத்தும் குண்டுபோடும் சுடுகலன்களை பயன்படுத்தி நடக்கின்றன, இவை பயங்கரவாதத்தின் அடையாளம் மட்டும் அல்ல; இவை குறிப்பான பயங்கரவாதச் செயல்கள் ஆகும். தங்கள் நடவடிக்கையினால், தீவிரவாத மற்றும் அதிதீவிரவாத குழுக்கள் மில்லியன் கணக்கான உக்ரேனிய மக்களின் வாழ்விற்கு உண்மையான அச்சுறுத்தலைக் கொடுக்கின்றனர்.”

ஒரு வீடியோ அறிக்கையில் ஜனாதிபதி யானுகோவிச், எதிர்த்தரப்பு தலைவர்களை “நீங்கள் தீவிரவாத கூறுபாடுகளிடம் இருந்து பிரிந்து கொள்ளவும்” என்று முறையீடு செய்தார். தன்னுடைய ஆலோசகர்கள் “இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கோருவதாகவும்” தான் நிதானத்தைக் காட்டுவதாகவும் அவர் கூறினார். எதிர்த்தரப்பு, மக்களை ஆயுதங்கள் எடுக்க ஊக்கம் கொடுக்கும்போது “கோட்டை மீறுகிறது” என்றும் அவர் கூறினார். சமீபத்திய நடவடிக்கைகள் ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகள் என்றும் அவர் கண்டித்தார்.

கீவில் நேட்டோ சார்புடைய அரசாங்கம் சுமத்தப்படுவது அதன் மூலோபாய நலன்களுக்கு நேரடி அச்சுறுத்தல் என்று காணும் மாஸ்கோ இக்குற்றச்சாட்டை எதிரொலித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சரகம் புதன் அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு, கீவின் நிகழ்வுகளை “பழுப்புப் புரட்சி” (brown revolution) என்றது; இது 1933ல் ஜேர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்தை எடுத்துக் கொண்டதின் குறிப்பு ஆகும். வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கீவில் நடக்கும் வன்முறைக்கு, மேற்கத்தைய அரசாங்கங்கள் வலதுசாரி தீவிரவாதிகளுக்கு “சட்டத்திற்கு புறம்பாக நடக்க” ஊக்கம் அளிப்பதால் விளைந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில் போலந்து பிரதம மந்திரி டொனால்ட் டஸ்க், உக்ரேன்  உள்நாட்டுப்போரின் விளிம்பில் நிற்கிறது என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் பிரிவினை நேரலாம் என்றும் எச்சரித்தார். “சமரசம் அடையப்படவில்லை என்றால் என்ன ஆகும்?” என அவர் பாராளுமன்றத்தில் கேட்டார். “நாம் குழப்பத்தையும், நாட்டுப்பிரிவினையையும் ஒருவேளை உள்நாட்டுப் போரையும் காண்போம், இதன் தொடக்கத்தையே இப்பொழுது காண்கிறோம்.” என்றார்.

நேற்று பின்னிரவில் ஜனாதிபதியின் வலைத் தளத்தில் வந்த அறிக்கை ஒன்று யானுகோவிச் ஓர் சமாதான உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டார் என்றும், “குருதி கொட்டுதல் நிறுத்தப்படுதலை நோக்கமாகக் கொண்ட பேச்சுக்களை தொடக்க மற்றும் நாட்டில் நிலைமையை உறுதிப்படுத்த அது உதவும்” என்றும் கூறப்பட்டுள்ளது. வேறு விவரங்கள் அளிக்கப்படவில்லை.

இந்த அறிவிப்பு யானுகோவிச் நெருக்கடிக்குழு உறுப்பினர்களை சந்தித்தபின் வந்துள்ளது; அது மூன்று முக்கிய எதிர்த்தரப்புத் தலைவர்களையும் – கிளிட்ஷ்கோ, யாட்சென்யுக் மற்றும் தீவிர வலதுசாரி தேசியவாதி ஓலே டையானிபோக் --  பாராளுமன்றத் தலைவர் மற்றும் உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளையும் கொண்டுள்ளது. யாட்சென்யுக் ஒரு சமாதானம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் “இன்று அதிகாரிகள் திட்டமிட்ட சுதந்திர சதுக்கத்தை தாக்குதல் நடக்காது” என்றும் அறிவித்தார்.

உக்ரேன்  அரசாங்க நெருக்கடி பற்றிய முந்தைய குறிப்பில், புதன் அன்று யானுகோவிச் நாட்டு ஆயுதப்படைகளின் தலைவரை நீக்கியது அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்” ஒரு பகுதியாக ஒழுங்கை மீட்பதற்கு அரசாங்கம் துருப்புக்களை தெருக்களுக்குள் அனுப்பும் அச்சுறுத்தலுடன் வந்துள்ளது.

யானுகோவிச் அரசாங்கத்தின் ஸ்திரமற்ற தன்மை அடிப்படையில் அதன் வலதுசாரிப் போட்டியாளர்களிடம் இருந்தும் வருகிறது என்னும் உண்மை, சோவியத் ஒன்றியக் கலைப்பின் வேளையில் அரச சொத்தை தனியார் மயமாக்கியபோது, தங்களை வளப்படுத்திக்கொண்ட ஒரு குறுகிய, ஊழல் மிகுந்த தன்னலக்குழுவின் அரசியல் கருவியாக இவை இருப்பதில் இருந்து எழுவதாகும்.