சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian parliament votes to create new Telangana state

இந்திய நாடாளுமன்றம் புதிய தெலுங்கானா மாநிலம் உருவாக்க வாக்களிக்கிறது

By Deepal Jayasekera
22 February 2014

Use this version to printSend feedback

இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் முட்டிமோதி கடுமையாக எதிர்க்கப்பட்ட சட்டத்தை நாடாளுமன்றம் மூலமாக நிறைவேற்றி உள்ளது. அது 85 மில்லியன் மக்கள் வாழும் மற்றும் அதிகளவில் தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஒரு தென்னிந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தைப் பிரித்து தெலுங்கானா என்ற ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குகிறது.

தெலுங்கானா உருவாக்கத்தை ஜனநாயகத்தின் வெற்றியாக, சமூக சமத்துவமின்மை மீதான ஒரு பலத்த அடியாக காங்கிரஸ் சித்தரித்து வருகிறது. இவை ஆத்திரமூட்டும் பொய்களாகும். இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளைக் கடைந்தெடுத்த வறுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மைக்குள் தள்ளிய அதேவேளையில் ஒரு சிறிய முதலாளித்துவவாதிகளின் அடுக்கிற்கு வார்த்தையால் கூறமுடியாத அளவில் செல்வ வளத்தைக் கொண்டு போய் சேர்த்துள்ள "சுதந்திர சந்தை" கொள்கைகளை பின்தொடர்ந்த ஒரு அரசாங்கத்தால் இந்த பொய்கள் கூறப்படுகின்றன.

இந்தியாவின் 29வது மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதென்றால், அதன் சொந்த கட்சிக்குள் எழுந்த ஒரு எதிர்ப்பை நசுக்கியதென்றால், அந்த முரட்டுத்தனத்திற்கு அப்பாற்பட்டு அது குறுகிய நோக்கமுடைய தேர்தல் கணக்கீடுகளைக் கொண்டிருந்தது.

ஆந்திர பிரதேசத்தின் பத்து வடமேற்கு மாவட்டங்களோடு ஒரு புதிய அரசு இயந்திரத்தின் உருவாக்கமானது வியாபாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் தொழில் வல்லுனர்களின் ஒரு சிறிய தெலுங்கானா அடுக்கிற்கு அரசாங்க பக்கபலம் மற்றும் தயவுகளை பெருமளவிற்குப் பெற வாய்ப்பளிக்கிறது. ஆனால் அப்பிராந்தியத்தின் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் சமூக மற்றும் ஜனநாயக அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய அது ஒன்றும் செய்யப் போவதில்லை. அனைத்திற்கும் மேலாக, ஆந்திராவைக் கூறுபோடுவதானது உழைக்கும் மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்த பயன்படுத்தப்படும், பயன்படுத்தப்பட உள்ளது. தெலுங்கானா அரசாங்கம் "குடியேறியவர்களுக்கு", அதாவது அப்பிராந்தியத்திற்கு வெளியில் பிறந்தவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பை வழங்காது என தெலுங்கானா கிளிர்ச்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ்வும் மற்றும் அவரது தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் (TRS) திரும்ப திரும்ப வலியுறுத்தி உள்ளனர்.

தெலுங்கானா உருவாக்கம் மற்றும் சீமாந்திரா மறுஒழுங்கமைப்பு (ஆந்திராவின் மீதமுள்ள 13 மாவட்டங்களைக் கொண்டு உருவாக்கப்பட உள்ள மாநிலத்தின் பெயர்) சம்பந்தமான பல முக்கிய சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னரே காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டம் அதன் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டமசோதாவிற்கு அழுத்தம் அளித்த நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொந்தளிப்பான காட்சிகள் நிலவின.

அரசாங்கம் பெப்ரவரி 13இல் அந்த சட்டமசோதாவை தாக்கல் செய்த போது, தெலுங்கானா ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களும், தெலுங்கானா எதிர்ப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான லோக் சபாவில் மோதிக் கொண்டனர். அந்த பூசலின் போது, தெலுங்கானா எதிர்ப்பாளரும் விஜயவாடாவில் இருந்து (ஆந்திராவின் மூன்றாவது மிகப் பெரிய நகரம்) தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன லகதாபட்டி ராஜகோபால் அவரது எதிர்ப்பாளர்கள் மீது மிளகு பொடியைத் தெளித்ததாகவும், ஒரு கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்பட்டது. மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் கத்தியை உருவியதாக குற்றஞ்சாட்டப்பட்டார். இவற்றின் விளைவாக, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லோக் சபா சபாநாயகர் மீரா குமார் தெலுங்கானா சட்டமசோதாவை எதிர்த்த பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை சபையிலிருந்து நீக்கிய போதினும், கடந்த செவ்வாயன்று விவாதம் மீண்டும் தொடங்கிய போது கூச்சல் குழப்பம் மீண்டும் வெடித்தது. இறுதியாக, காங்கிரஸ் உத்தியோகப்பூர்வ எதிர்கட்சியான இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) ஆதரவோடு, விவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தும், ஒரு குரல் வாக்கெடுப்புக்காக பதிவு செய்யும் வாக்கெடுப்பைத் தவிர்த்தும், இரண்டு நாடாளுமன்ற சபைகளிலும் முட்டிமோதி அதை நிறைவேற்றியது.

மற்றொரு ஜனநாயக விரோத நகர்வில், இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் ஆந்திர பிரதேசத்தை "ஜனாதிபதி" ஆட்சியின் கீழ் அல்லது மத்திய அரசின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து நிறுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. புதனன்று, அம்மாநில காங்கிரஸ் முதலமைச்சர் என். கிரண் குமார் ரெட்டி மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது பதவியிலிருந்தும் மற்றும் கட்சியிலிருந்தும் இராஜினாமா செய்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கானா உருவாக்க வேண்டுமென்று காங்கிரஸ் அதன் விருப்பத்தை அறிவித்ததில் இருந்தே, அங்கே மீண்டும் மீண்டும் அந்த விஷயத்தின் மீது பல போராட்டங்களும், ஆந்திர மேற்தட்டின் போட்டி கோஷ்டிகளின் எதிர்-போராட்டங்களும் இருந்து வந்துள்ளன. அவை பாரம்பரிய கட்சி அங்கீகாரங்களிலிருந்து விலகி தெலுங்கானா-ஆதரவு மற்றும் தெலுங்கான-எதிர்ப்பு என்ற போக்குகளில் உடைந்துள்ளன.

அப்பிராந்தியத்தில் நிலவும் வறுமை, மாநில மற்றும் தேசிய அளவுகளில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் உதாசீனத்தால் ஏற்பட்டதாக முறையிட்டு மக்கள் ஆதரவை ஒன்றுதிரட்ட தெலுங்கானா மேற்தட்டு முனைந்துள்ளது. கடற்கரை ஆந்திரா மற்றும் ராயல்சீமாவில் (சீமாந்திராவை உள்ளடக்கிய பகுதிகள்) உள்ள மேற்தட்டு தெலுங்கு பிராந்தியவாத உணர்வுகளுக்கு முறையிட்டும், தெலுங்கு போட்டியாளர்களின் பிரத்யேக மாநில வேலைவாய்ப்பு கொள்கை குறித்த மக்கள் அச்சங்களைத் தூண்டிவிட்டும் மற்றும் தற்போதைய மாநில தலைநகரான ஹைதராபாத்தின் மீதான தீர்மானங்களைத் தூண்டிவிட்டும் விடையிறுப்பு காட்டி உள்ளது.

அவர்களின் வாதங்கள் என்னவாக இருந்தாலும், ஆந்திர மேற்தட்டின் எந்தவொரு போட்டி கோஷ்டிகளுக்கும் உழைக்கும் மக்களின் தலைவிதி குறித்து அங்கே கவலை இல்லை. தெலுங்கானாவிற்கான அல்லது அதற்கு எதிரான அவர்களின் பிரச்சாரங்கள் அவர்களின் சொந்த தனிச்சலுகைகளைச் சுயநலத்தோடு பாதுகாப்பை அடிப்படையாக கொண்டுள்ளன. தெலுங்கானா மேற்தட்டு புது டெல்லியில் உள்ள மத்திய அரசுடன் மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்துடன் பேரம்பேசுவதில் அதன் இடத்தை பலப்படுத்திக் கொள்ள முடியுமென கணக்கிடுகிறது. தெலுங்கானாவை இழப்பது தேசிய அரசியலில் தங்களின் பேரம்பேசும் சக்தியைப் பலவீனப்படுத்துமென சீமாந்திரா மேற்தட்டு அஞ்சுகிறது.

ஹைதராபாத் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்குமென்ற விடயத்தில் இரண்டு போட்டி கன்னைகளுக்கும் இடையில் மிகவும் கசப்பான மோதல் உள்ளது. ஹைதராபாத் தெலுங்கானா பிராந்தியத்திற்குள் விழுகிறது. எட்டு மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஹைதராபாத் இந்தியாவின் ஆறாவது மிகப் பெரிய நகரமும், ஓர் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப மையமும் ஆகும். அது கூகுள், அமேஜான், டெல் மற்றும் மைக்ரோசாப்ட் உட்பட பல அமெரிக்க நிறுவனங்களின் இந்திய தளமாக சேவை செய்து வருகிறது.

ஆந்திர பிரதேச மாநில மொத்த அரசு வருவாயில் 44 சதவீதத்தை விட அதிகமான வருவாய்க்கு அந்நகரம் பொறுப்பேற்கின்ற நிலையில், இருதரப்பு கன்னைகளும் அதை கட்டுப்பாட்டில் பெற தீவிரமாக உள்ளன.

சீமாந்திரா மேற்தட்டின் கவலைகளைச் சாந்தப்படுத்தும் ஒரு முயற்சியாக, ஆந்திர பிரதேச மறுஒழுங்கமைப்பு சட்டம் 10 ஆண்டுகளுக்கு அந்நகரம் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்க அழைப்புவிடுக்கிறது. அந்த காலப்பகுதியில் சீமாந்திராவிற்கு ஒரு புதிய தலைநகர் உருவாக்கப்படும். ஹைதராபாத்தின் வருவாய்கள் இரண்டு மாநில அரசுகளுக்கும் இடையே அடுத்த பத்து ஆண்டுகளில் எவ்வாறு பகுக்கப்படும் என்பதைக் குறித்தோ அல்லது சீமாந்திராவிற்கு ஒரு தலைநகரை உருவாக்குவதில் மத்திய அரசு எவ்வளவு பணம் ஒதுக்கும் என்பதைக் குறித்தோ மத்திய அரசு இதுவரையில் தெளிவுபடுத்தவில்லை என்பதால், இந்த "சமரசம்" பிரிவினை எதிர்ப்பாளர்களைச் சமாதானப்படுத்த தவறி உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்திற்குள்ளே ஆந்திர பிரதேச பிரிவினையை வன்முறையோடு எதிர்த்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சீமாந்திரா மேற்தட்டு, ஹைதராபாத்தில் பெரும் வியாபார நலன்களைக் கொண்டுள்ளதோடு, அது அவர்களின் தெலுங்கானா போட்டியாளர்களின் கரங்களில் சென்று சேர்வதைத் தடுக்க தீர்மானமாக உள்ளது. நாடாளுமன்றத்தில் தெலுங்கானா ஆதரவாளர்கள் மீது மிளகுபொடியைத் தெளித்த ராஜகோபால், 150 பில்லியன் ரூபாய் (2 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான லாண்கோ குழும நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் ஆவார். அந்நிறுவனம் ஹைதராபாத்தில் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த தெலுங்கு தேச கட்சியின் (TDP) நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய நாடாளுமன்றத்திற்குள் கத்தியை உருவியதாக குற்றஞ்சாட்டப்பட்டவருமான எம். வேணுகோபால் ரெட்டி ராம்கே குழுமத்தின் இயக்குனரும், வளர்ச்சியாளரும் ஆவார். அந்த குழுமம் ஹைதராபாத்தில் பல மில்லியன் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்களை மற்றும் மருத்துவத்துறை நிறுவனங்களைச் செயல்படுத்தி வருகிறது.

ஆந்திர பிரதேசத்தின் முக்கிய ஆறுகளான கோதாவரி மற்றும் கிருஷ்ணா, தெலுங்கானாவிலிருந்து கடற்கரை ஆந்திராவிற்குள் பாய்வதால், மின் உற்பத்தி மற்றும் பாசனத்திற்கான நீர் வளம் என்பது மற்றொரு முக்கிய விவாதத்திற்குரிய பிரச்சினையாக உள்ளது. புதிய தெலுங்கானா நிர்வாகம் கடற்கரை ஆந்திராவிற்குள் நீர் வருவதைத் தடுத்து அதன் நலன்களுக்கு உகந்த விதத்தில் நீர் உற்பத்தியாகும் இடங்களைக் கட்டுப்பாட்டில் எடுக்குமென சீமாந்திரா மேற்தட்டு அஞ்சுகிறது.

தெலுங்கானா போராட்டத்திற்கு அரசியல் சட்டப்பூர்வதன்மை வழங்குவதில் இந்திய ஸ்ராலினிஸ்டுகள் பல தசாப்தங்களாக ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளனர். சந்திரசேகர ராவ் மற்றும் அவரது TMS தலைமையிலான ஒரு தனி தெலுங்கானா மாநில பிரச்சாரத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், பல்வேறு மாவோயிச குழுக்களும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்துள்ளன. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது சிபிஎம் ஆந்திராவைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அது இந்திய முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு ஆதரவான நிலைப்புள்ளியில் இருந்து அவ்வாறு செய்யவில்லை. தெலுங்கானா மாநில உருவாக்கம் மேற்கு வங்காளத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் ஒரு குர்காலாந்து மாநிலம் உருவாக்குவதற்கான அழுத்தத்தை ஊக்குவிக்கும் என்று அது அஞ்சுகிறது. 34 ஆண்டுகள் மேற்கு வங்காள அரசிற்கு தலைமை வகித்து 2011இல் ஆட்சியிலிருந்து இறங்கிய சிபிஎம், இந்திய அரசியலில் பல தசாப்தங்களாக மேற்கு வங்காள பிராந்திய முதலாளிமார்களுக்கான செய்திதொடர்பாளராக செயல்பட்டுள்ளது.

இந்திய முதலாளித்துவ ஆட்சியின் மறுகட்டமைப்பு மூலமாக புதிய மாநிலங்களின் உருவாக்கமானது, முதலாளித்துவ தோல்வியிலிருந்து எழும் பற்றியெரியும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் எதையும் தீர்க்கப் போவதில்லை. அது பல்வேறு பிராந்திய முதலாளித்துவ மேற்தட்டுக்களின் நலன்களுக்கு மட்டுமே சேவை செய்யும் என்பதோடு மொழிவாரி, பிராந்திய, ஜாதிய மற்றும் வகுப்புவாத பதட்டங்களை மேலும் தீவிரப்படுத்தும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Indian cabinet decision to bifurcate Andhra Pradesh sparks mass protests

Indian government to create Telangana state in southern India