சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Western-backed Ukrainian opposition seizes power in fascist-led putsch

மேற்கத்தைய ஆதரவு உக்ரேனிய எதிர்த்தரப்பு பாசிசத் தலைமையிலான சதி மூலம் அதிகாரத்தை கைப்பற்றுகிறது

By Chris Marsden 
24 February 2014

Use this version to printSend feedback

அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய சக்திகள் உக்ரேனில் சனிக்கிழமையன்று தீவிர-வலது சக்திகளின் ஆட்சி சதிக்கு வழிவகுத்தன. எதிர்த்தரப்பு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அரைகுறை சட்ட முகப்பை அளிக்கும், வெளியுறவு மந்திரிகளான ஜேர்மனியின் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர்,  பிரான்சின் லோரோன்ட் ஃபாபியுஸ், போலந்தின் ராடோஸ்லா சிகோர்ஸ்கி கீவில் சுமத்திய பேச்சுவார்த்தகள் மூலமான உடன்பாடு, அது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை.

வெள்ளி அன்று உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை 10 நாட்களுக்குள் அமைக்கத்தயார், அதில் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இருப்பர், 2004 அரசியலமைப்பு அமெரிக்க ஆதரவு ஆரஞ்சுப் புரட்சிக்குப் பின் இயற்றப்பட்டது மீண்டும் வரும், தனக்கு பாதுகாப்புப் படைகள்மீது கட்டுப்பாடு இராது என்பதை ஒப்புக் கொண்டார். டிசம்பர் மாதம் பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறும், அதுவரை யானுகோவிச் ஜனாதிபதியாக, அதிகாரமற்ற வெறும் தலைவராக இருப்பார் எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்தக் கையெழுத்திடப்பட்ட உடன்பாடு பயனற்றதாகிப் போய்விட்டது.

பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் போலந்து, அமெரிக்கா பின்னணியில் இணைந்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் உதார் கட்சியின் விட்டாலி கிளிட்ஷ்கோ, தன்னலக்குழு உறுப்பினர் யூலியா திமோஷெங்கோவின் தந்தைநாட்டுக் கட்சியின் ஆர்செனி யாட்சென்யுக் மற்றும் பாசிச ஸ்வோபோடாவின் ஒலே தியானிபோக் ஆகியோருடன் நெருக்கமாக செயல்பட்டனர். எதிர்த்தரப்பு, தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு உதவிட மிகப் பெரிய பாசிசக் குண்டர்களை நம்பியிருந்த நிலையில், பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்ட உடன்பாட்டை அவர்களால் அடைய முடியவில்லை.

வெள்ளி இரவு ஒப்பந்தம் கையெழுத்தான பின்,  அவர் அங்கு இருந்தால், நேட்டோ போரின் முடிவில் லிபியாவில் கொலை செய்யப்பட்ட முயம்மர் கடாபியின் விதிதான் தனக்கும் நேரும் என்ற தெளிவான அச்சத்தில் யானுகோவிச் தலைநகர் கீவில் இருந்து தப்பி ஓடினார்.

சுமார் 25,000 எண்ணிக்கையில் இருந்த எதிர்த்தரப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், டிமிட்ரி யாரோஷ் தலமையில் இருக்கும் வெளிப்படையான பாசிச வலது பிரிவு உட்பட தீவிர வலது குழுக்களின் தலைமையில் உள்ளனர். இவர்கள் போராளிகளை அமைத்து, தலைநகரைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தனர், ஜனாதிபதியின் நிர்வாகத்தையும் பாராளுமன்றத்தையும் சூழ்ந்து கொண்டனர்.

எதிர்க்கட்சிகளின் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட,  யானுகோவிச்சிற்கு ஆதரவை நிறுத்திவிட்ட முன்னாள் பிராந்திய கட்சியின் ஆதரவு பெற்ற பாராளுமன்றம் திமோஷெங்கோவை விடுத்தலை செய்ய வாக்களித்தது; அவர் ஆரஞ்சு புரட்சிக்குப்பின் பிரதம மந்திரியாக இருந்தார். பாராளுமன்றம் அவருக்கு பண மோசடிக்காக விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைதண்டனையையும் இரத்து செய்தது. அவர் எதிர்த்தரப்பாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்த கிழக்கு நகரான கார்கிவ் இல் இருந்து கீவிற்கு பறந்து வந்தார்.

சட்ட மன்ற உறுப்பினர்கள் யானுகோவிச்சை சட்டத்திற்கு புறம்பான முறையில் அகற்றினர். அவர்மீது பெரிய குற்ற விசாரணை நடத்த பாராளுமன்றம் 328—0 என வாக்களித்தது; இதற்கு அரசியலமைப்பு நீதிமன்ற ஒப்புதல் தேவை என்றாலும் நடைமுறையில் உண்மை எனப் போயிற்று. இதன்பின் பாராளுமன்றம் ஆர்சன் அவகோவை உள்துறை மந்திரி, ஒலெக்சாந்தர் டர்சிநோவை பாராளுமன்ற சபாநாயகர் என நியமித்தது; இருவரும் தந்தை நாட்டு கட்சியினர் ஆவர். டர்சிநோவ்க்கு தற்காலிக ஜனாதிபதி அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அவர் எம்.பி.க்களிடம் அவர்கள் செவ்வாய்க்குள் ஒரு அரசாங்கத்தை அமைக்கலாம் என தெரிவித்தார்.

முன்னாள் மந்திரிகளைக் கைது செய்யவும், அரச பாதுகாப்பிற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; வக்கீல் அலுவலகம் “முன்னாள் அரச தலைவர்கள் செய்தவை உட்பட உக்ரேனிய மக்களுக்கு எதிரான தீவிர குற்றங்களை விசாரிக்க வேண்டும்,” என்றும் உத்தரவிடப்பட்டது.

நிறுவப்பட்டுள்ள ஆட்சியின் வலதுசாரித் தன்மைக்கு மற்றொரு அடையாளமாக, பாராளுமன்றம் உக்ரேன் மட்டுமே உத்தியோகபூர்வ மொழி என வாக்களித்து; மக்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கினரை, முக்கியமாக ரஷ்ய மொழி பேசுவோரை வாக்கிழக்கச் செய்துள்ளது.

சூழ்நிலையின் தன்மை நச்சுப்பாய்ந்த வடிவில் இருக்கையில், உக்ரேனிய சபாட்டின் மதகுரு Moshe Reuven Azman கீவில் உள்ள யூதர்கள் நகரத்தை விட்டு, முடிந்தால் நாட்டை விட்டே நீங்குமாறு அழைப்பு விடுத்தார். அவர், “யூத நிறுவனங்களை தாக்கும் விருப்பங்களின் இடைவிடா எச்சரிக்கைகள் பற்றிய கவலையை” மேற்கோளிட்டார்.

யானுகோவிச் ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ள கார்கோவிற்கு வெள்ளியன்று பிற்பகுதியில் பறந்து சென்றதாகத் தெரிகிறது; அவருடைய சொந்த விமானம் பாதுகாப்புப் படைகளால் நிறுத்தப்பட்டன என்றும் கூறப்படுகிறது. ஜனாதிபதியின் சொந்த பேச்சாளர் ஞாயிறன்று யானுகோவிச் எங்கு இருக்கிறார் என தனக்குத் தெரியாது என்றார்.

உக்ரேன் நிகழ்வுகள் ஒரு சதி என விவரித்து, முன்கூட்டிப் பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி உரையை அவர் வெளியிட்டார்; அது, “1930களில் நடந்தவை மீண்டும் நடைபெறுகின்றன; அப்பொழுது நாஜிக்கள் ஜேர்மனி, ஆஸ்திரியாவில் பதவிக்கு வந்தனர்.” எம்.பி.க்கள், “அடிக்கப்பட்டனர், கற்களால் தாக்கப்பட்டனர், மிரட்டப்பட்டனர்” என்று அவர் சேர்த்துக் கொண்டார், பாராளுமன்ற சபாநாயகர் வோலோடிமிர் ரைபக் உடல்ரீதியாக தாக்கப்பட்டு, இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டார் என்று தெரிவிக்கிறது.

ஐரோப்பிய சக்திகளும் வாஷிங்டனும் இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் உந்து சக்திகளாக, உக்ரேனை ரஷ்ய செல்வாக்கு மண்டலத்தில் இருந்து உடைக்கும் நோக்கத்தில் உள்ளன. இவை நீண்டகால பூகோள-அரசியல் விழைவுகளான —முதலில் ஜேர்மனியுடையது, உக்ரேனை தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவேண்டும், பின்னர் 1991 சோவியத் ஒன்றியம் சரிந்ததில் இருந்து அமெரிக்கா, ரஷ்யாவை தனிமைப்படுத்தி ஒதுக்குதல்— என்பவற்றை பூர்த்தி செய்வதில் வெகுதூரம் சென்றுள்ளன.

ஒரு சில ஆயிரம் பாசிச குண்டர்கள், பணம், மற்றும் அதிகாரத்திற்காக ஒன்று சேர்ந்துள்ள “எதிர்த்தரப்பினால்” இத்தகைய சதியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ய முடிந்ததற்கு காரணம், யானுகோவிச்சின் ஆட்சி ஊழல் மிகுந்து, மக்கள ஆதரவற்று இருந்ததுதான். இது, ரஷ்யாவுடன் உடன்பாடு கொண்ட ஒரு தன்னலக் குழுவின் பிரிவைத் தவிர வேறு எதையும் பிரதிபலிக்கவில்லை; அதுவோ, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புத்தன்மையாவதை விட தன்னுடைய சொந்த செல்வ செழிப்பை அதிகரிக்க ரஷ்யாவுடனான கூட்டு உகந்ததாக கருதுகிறது.

வாஷிங்டன், பேர்லின் பாரிஸ் உடைய விரோத நடவடிக்கைகளை அகற்ற, யானுகோவிச் ரஷ்யாவை நம்பியிருந்தது மோசமாக தோல்வியடைந்தது விட்டது. கடந்த நவம்பரில் யானுகோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்பு உடன்பாட்டில் கையெழுத்திடுவதை இரத்து செய்த பின், ரஷ்யா 15 பில்லியன் மதிப்புடைய உக்ரேனிய பத்திரங்களை வாங்குவதற்கு ஒப்புக் கொண்டது. ரஷ்யாவின் பேச்சு வார்த்தையாளர் விளாடிமீர் லுகின், ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து கையெழுத்திட்ட உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்துவிட்டார். வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், ஐரோப்பிய சக்திகள் “எதிர்த்தரப்பை கட்டுப்படுத்த வேண்டும், உக்ரேனின் இறையாண்மை மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கிற்கு நேரடி அச்சுறுத்தலை இதன் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் மற்றும் கொலையாளிகள் வழிநடத்துகின்றனர்” என்றார்.

ஆனால் உக்ரேன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து மாஸ்கோ கிட்டத்தட்ட பின்வாங்கிய நிலையில்தான் உள்ளது. ரஷ்யாவின் தன்னலக்குழுக்களின் நலன்களை தவிர விளாடிமீர் புட்டினின் ஆட்சி வேறு எதையும் தந்திரோபாய முறைகளில் ஆணையிடவில்லை  என்ற உண்மை நிரந்தரமாகி வருகிறது. செல்வச் செழிப்பு உடைய ரஷ்ய தன்னலக்குழுவினரும், உக்ரேனிய தன்னலக் குழுவினர் போலவே அழுகிய தன்மை கொண்டவர்கள்.

உக்ரேனிய கிழக்கு மாவட்டங்களான, டோன்ட்ஸ்க், கார்க்கிவிவ், லுகன்ஸ்க், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், கிரிமியா, செவஸ்டோபோல் அடங்கியவை, தன்னாட்சி கோருவோம் என, இல்லாவிடின் சுதந்திரமே கோருவோம் என அச்சுறுத்தியுள்ளன. இவை ரஷ்யாவின் பாராளுமன்றத்தின் வெளியுறவு குழுவின் தலைவர் அலெக்சி புஷ்கோவுடன் பேச்சுக்களை நடத்துகின்றன.

இவைகள் நாட்டின் மிக முக்கிய பொருளாதார அடிப்படையிலான தொழில்துறை பகுதிகள் ஆகும். ரஷ்ய தேசியப் பாதுகாப்பிற்கு கிரிமியா, குறிப்பாக நுண்னுணர்வு கொண்ட பகுதியாகும், ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை செவஸ்டோபோலில் உள்ளது.

உக்ரேன் நெருக்கடி இப்பொழுது தீர்க்கப்பட வேண்டிய இரு வரலாற்று ரீதியாக தீர்மானிக்கப்பட்டுள்ள மற்றும் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு சான்றாக உள்ளது.

முதலாவதாக, இந்த நெருக்கடியின் எந்தக் கட்டத்திலும் உக்ரேனிய தொழிலாள வர்க்கம் தன் நலன்களை காக்க ஒரு சுயாதீன நிலைப்பாட்டை எடுக்கும் வாய்ப்பைக் கொள்ளவில்லை. இது, நிகழ்வுகளில் போட்டியிடும் தன்னலக்குழுக்கள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் மேலாதிக்கத்திற்கு வழிவிட்டது; அவை இப்பொழுது நாட்டை பிளவுபடுத்த அச்சுறுத்தி வரும் உள்நாட்டுப் போர், ஏன் உக்ரேன்மீது ஆதிக்கம் என்னும் பெரிய போரைக்கூடக் கொண்டுவரும்.

ஏகாதிபத்திய சக்திகளின் சூழ்ச்சியை நிறுத்தவும், பாசிச கூலிக்காரர்களை தோற்கடிக்க்க்கூடிய திறன் கொண்ட ஒரே சமூக சக்தி, சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும்.

இரண்டாவதாக, தொழிலாள வர்க்கம் திரும்பிப் போராடாத நிலை, பல தசாப்தங்களாக அதன் அரசியல் நனவின் மீதான ஸ்ராலினிசத்தின் நீடித்த தாக்குதலுடன் பிணைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் நிகழ்வுகளை ஆணையிட முடிந்தது, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, மிகைல் கோர்பச்சேவ் மற்றும் போரிஸ் யெல்ட்சினின் கீழ் ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவ மீட்சியை மேற்கொண்டதன் நேரடி விளைவு ஆகும்.

இது புட்டினின் தலைமையின் கீழ், ரஷ்யாவின் மாபியா கும்பல்கள் ஆட்சி அமைக்க அடிப்படையை கொடுத்து, முன்னாள் சோவியத் குடியரசுகளை ஏகாதிபத்திய சக்திகளின் சூறையாடும் அபிலாஷைகளுக்கும் பாதையை திறந்து விட்டது.