சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Polish filmmaker Krzysztof Kieślowski revisited: Camera Buff (1979)

போலந்து திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோப் கிலோவ்ஸ்கியின் Camera Buff (1979) திரைப்படம் பற்றிய மறு ஆய்வு.

By Dorota Niemitz 
3 February 2014

Use this version to printSend feedback

மறைந்த போலந்து நாட்டு இயக்குனரும் திரைக்கதை ஆசிரியருமான கிறிஸ்டோப் கிலோவ்ஸ்கியின் Krzysztof Kieślowski (1941-1996) படைப்புக்கள் சமீபத்தில் Netflix மற்றும் பிற ஆன்லைன் வடிவங்களில் காணக்கிடைப்பதால், பரந்த அளவிலான ரசிகர்கள் இவரது படைப்புகள் குறித்து அறிந்துகொள்ள முடிகிறது.


Camera Buff

கிலோவ்ஸ்கியின் தொழில் வாழ்க்கை 1970களில், போலந்திலிருந்த ஸ்ராலினிச ஆட்சியின் கீழ் துவங்கி, அந்த ஆட்சியின் பொறிவுக்கு பிறகு (இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து ஒரு அறுவை சிகிச்சையின்போது, இவர் இறந்தார். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன், அலுவல்ரீதியாக இவர் 1994ல் திரைப்பட இயக்கத்திலிருந்து ஓய்வுபெற்றார்.) சில வருடங்கள் தொடர்ந்தது. கிலோவ்ஸ்கியின் படைப்புக்களில், “முன்பு” மற்றும் “பின்பு” என - இரண்டு காலகட்டத்துடனும் தொடர்புடைய சிக்கல்களும் பிரச்சனைகளும் இருக்கின்றன. ஆயினும், குறிப்பாக இவரது ஆரம்பகாலகட்ட படைப்புக்களில், சமூக யதார்த்தத்தை சித்தரிக்கின்ற ஒரு உண்மையான முயற்சியைக் காண முடியும். அதில், வாழ்க்கையை தீவிரமாகவும் மனித நேயத்தோடும் அணுகும் ஒரு வெளிப்படையான விருப்பம் இருந்தது.

இந்த விமர்சகருக்கு, இன்றும் அதிர்வினை உண்டாக்குகிற ஒரு கனிவான படைப்பான, இயக்குனரது 1970ம் வருடத்தின் Camera Buff ஐ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

Camera Buff ல் (போலந்தில் “Amator”, உண்மையில், “Amateur”) போலந்து நகரின் ஒரு சிறு கிராமப்புறவாசியான உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பிலிப் (Jerzy Stuhr) தனது முதல் குழந்தை பிறப்பினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு 8 mm கமிரா வாங்குவதற்காக பணம் சேமிக்கிறான். அவன் ஒரு புதிய அப்பாவாக, தனது குழந்தையின் வளர்ச்சியை ஆவணப்படுத்தும் ஆர்வத்தோடு இருக்கிறான். ஒரு உள்ளூர் கட்சி அதிகாரி அவரது நிறுவனத்தின் 25வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களை படம்பிடிக்க கேட்டுக் கொள்ளும்போது, இவனது இந்த திரைப்பட ஆசை, விரைவில் பெரிய அளவினதாக மாறுகிறது.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்பட சங்கத்தினை பயன்படுத்திக் கொண்டு, தொழிற்சாலையின் இயக்குனர்கள், இவனது முயற்சிகளுக்கான பணத்தினை ஏற்பாடு செய்கின்றனர், மேலும் ஒரு முக்காலி மற்றும் படத்தொகுப்பு உபகரணங்களுடன், பிலிப்பால் ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிகிறது. இவன் நகரின் பெரிய தொழிற்சாலை வளாகத்தில், ஒரு உள்ளூர் சர்வாதிகார உயரடுக்கினை சேர்ந்த பொறுப்பாளர் ஒருவரது அரசியல் மற்றும் சமுதாய யதார்த்தத்தினை சித்தரிக்க முயற்சிக்கிறான்.   

முதலில் வேலையால் பாதிக்கப்பட்டபோதிலும், விரைவில், ஊடகத்திற்காக ஒரு கத்துக்குட்டியின் ஆர்வத்துடன் இந்த புதிய வேலையில் பிலிப் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான்.

எப்பொழுதும் கவனிப்பின்றி கடந்து சென்ற பொருட்கள், திடீரென கணிசமான கலை ஆர்வத்தின் மூலங்களாகின்றன. காமிராவின்  வில்லை மூலமாக பார்க்கப்பட்ட இருண்ட, சாம்பல் நிற தொழிற்சாலை காட்சிகள், புறாக்கள் ரொட்டித்துண்டுகளை உண்பதுபோன்று, வேறுபட்ட வடிவங்களையும் அர்த்தத்தையும் பெறுகின்றன; ஒரு நண்பன் ஒரு வேனை ஓட்டுவதும் அவனது அம்மாவுக்கு ஹலோ சொல்வதும், அவள், உயரமான இடத்தில் இருக்கும் அவர்களுடைய வீட்டிலிருந்து அவனைப் பார்த்து கையசைப்பது சங்க சந்திப்பில் ஸ்ராலினிச பிரமுகர்கள் இடைவெளி எடுத்துக் கொள்வது; மற்றும் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பணியமர்த்தப்பட்ட கேளிக்கையாளர்களுக்கு மூடப்பட்ட கதவுகளுக்கு பின்னால் பணம் செலுத்தப்படுவது போன்றவை.
Camera Buff

பிலிப் உருவாக்கும் காட்சிகளுக்கு, அவற்றை உருவாக்க உதவுபவர்கள் மற்றும் அதில் படம்பிடிக்கப்படுபவர்களுக்கு, சிறந்த அர்த்தம் இருக்கிறது. (இந்த ஒருநபர் திரைப்பட சங்கம் விரைவில் ஒரு பரபரப்பான தேன்கூடு போல் ஆகிறது) வேன் ஓட்டியின் அம்மாவின் புகைப்படங்கள் அவளது இறப்புக்கு பின், அவளது மகனுக்கு விலைமதிப்பில்லா உடமையாகிறது

நீ செய்திருப்பது மிக அழகானது, மிக அழகானது. நான் நெகிழ்ந்து போய்விட்டேன். நான் போக வேண்டி இருக்கிறது என்று பிலிப்பின் ஆவணப்படமான “The Worker”-ல் முக்கிய அம்சம் வகிக்கும் ஒரு தொழிற்சாலை பணியாளர் கூறுகிறார்.

ஆயினும், குறிப்பாக அவன் பதிவு செய்யும் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள், குறிப்பிட்ட சமுதாய யதார்த்தங்களை வெளிப்படுத்துவதைக் காட்டிலும், துல்லியமாக அவற்றை மறைப்பதற்காகவே என்றாலும், பிலிப்பின் ஆவணப்பட பேராசை விரைவில் அவனை  சிக்கலுக்குள் தள்ளுகிறது

ஆயினும்கூட, அந்த நகரின் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை ஆவணப்படுத்துவதை பிலிப் தொடர்கிறான். மோசமாக கட்டப்பட்ட மரச்சாமான், நிலையற்ற கதவு கைப்பிடிகள் மற்றும் ஒரு மருத்துவமனையில் மயக்க மருந்தின்மை கரணமாக ஒரு நோயாளியின் அலறல் உள்ளிட்ட சில படங்கள் பாதுகாக்கப்படுகிறது.

பிலிப் முதலாவதாக தனது விழா விருதுகளை வெல்ல ஆரம்பிக்கும்போது, அவனது கட்சி முதலாளிகளால் மட்டுமல்லாமல், உயர் நிலை தொலைக்காட்சி தயாரிப்பாளர்களாலும் தணிக்கையால் பிலிப் அச்சுறுத்தப்படுகிறான். இது, ஒரு திரைப்பட படைப்பாளியாக கிலோவ்ஸ்கி எதிர்கொண்ட சிக்கல்களையே மிக நன்றாக பிரதிபலித்திருக்கக் கூடும். குறிப்பாக திரைப்படத்தின் இந்த பகுதியில், ஸ்ராலினிச போலந்தில் சமத்துவமின்மையின் வளர்ச்சியினை Camera Buff  வெளிப்படுத்திக் காட்டுகின்றது.

துரதிர்ஷ்டவசமாக, பிலிப்பின் குடும்ப வாழ்க்கையின் பின் விளைவுகளும் உள்ளன. அவனது மனைவி ஐரினா (Małgorzata Ząbkowska) அவளது கணவன் பெறுகிற அரசியல் மற்றும் தனிப்பட்ட கவனங்களை பாராட்டவில்லை என்பதுடன் அவளது திருமண வாழ்க்கையில் அமைதியை விரும்புகிறாள். அவள், பிலிப் அவனது திரைப்பட முயற்சிகளைக் கைவிடவில்லையென்றால், தான் பிரிந்துவிடுவதாக அச்சுறுத்துகிறாள்.

நேர்மையாக கலைத்தன்மையோடு, கலைஞர்களால் உணரப்படுகிற அரசியல் மற்றும் சமுதாய அழுத்தங்கள் உள்ளிட்ட நவீன திரைப்படங்களை காண்பது அரிதானது.


Camera Buff
 (Polish title "Amator," literally, "Amateur"

இலைமறை காய்மறைவான உள்ளுணர்விற்காக கிலோவ்ஸ்கி விமர்சகர்களால்  குற்றம்சாட்டப்பட்டார், மேலும் உண்மையில், ஆன்மீகம் மற்றும் அருவமான அறநெறியை அறிமுகப்படுத்தினார் எனலாம், அவற்றுள் சில Camera Buff விலும், இவரது பிற்கால படங்கள் பலவற்றிலும் (No End, The Double Life of Veronique, Three Colors) ஊர்ந்து செல்கின்றன. ஆயினும், இந்த விமர்சகரின் கருத்தில், அவரது முதல் ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்கள் சமுதாய ரீதியாக சிக்கலான திரைப்படங்களின் உண்மையான எடுத்துக்காட்டுகள்.

1977 ல் Andrzej Wajda -ன் Man of Marble உள்ளிட்ட, வளர்ந்து வரும் கருத்து வேறுபாடு கொண்ட போலந்து திரைப்பட படைப்பு காலகட்டத்தில், அவரது நண்பர்கள் சிலர் உள்ளிட்ட, பலரால் ஸ்ராலினிச ஆட்சிக்குநியாயமானவராக இருக்க முயற்சித்ததற்காக கிலோவ்ஸ்கி விமர்சிக்கப்பட்டார் குறிப்பாக, 1979-ல் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழவில் Camera Buff விற்காக இவர் விருது பெற்ற பிறகு. ”இவரது நண்பர்கள் இவரை கம்யூனிஸவாதிகளது கண்ணீரின் நாட்டு பாடல்கள் பாடும் இசைப்பாடகர் என்று அழைக்க ஆரம்பித்தனர் என்பதை  கிலோவ்ஸ்கியின் நண்பரும் சக திரைப்பட இயக்குனருமான அக்னிஷ்கா ஹாலந் என்பவர்  நினைவு கூர்ந்தார்.

இன்னொரு நன்கறியப்படும் போலந்து திரைப்பட இயக்குனரான  கிறிஸ்டோப் ஷனுசி, Camera Buff-ல் நடிப்பதுடன், சிறு நகரின் கத்துகுட்டி திரைப்பட சங்கங்களை பார்வையிடுகிறார். உண்மையில், ஷனுசி  தன்னை உழைக்கும் வர்க்க மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வகையில் தயார்படுத்திக் கொண்டார்.

கிலோவ்ஸ்கி குறித்து உலக சோசலிச வலைத் தளம் 2002ல்  பின்வருமாறு குறிப்பிட்டது: பல சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய திரைப்பட இயக்குனர்கள் போன்று, ஸ்ராலினிசத்தின் ஊழல் மற்றும் கொடுங்கோன்மை இருந்த போதிலும், கிலோவ்ஸ்கியால் உண்மை மற்றும் கலைத்துவ நேர்மை மற்றும் மனித நேயத்தை கொண்டுவர முடிந்தது. எவ்வாறாயினும், அதிகாரத்துவத்தின் உருக்குலைவு, இவரது மனப்பாங்கின் தீவிர மட்டுப்படுத்தல்களை வெளிக்காட்டியது. இவரது கடைசி திரைப்படங்கள் (Veronique, the Colors) இரக்கமற்றதாக, அருவமாக, மற்றும் சலிப்பூட்டுவதாக இருந்தது. அந்ததீவிர மட்டுப்படுத்தல்கள் தற்போது ஒரு தீவிர கம்யூனிசத்திற்கு எதிரான அக்னிஷ்கா ஹாலந்தின்  Wajda, மற்றும் பிற, மூத்த போலந்து திரைப்பட இயக்குனர்களின் படைப்புகளில் உணரும்படியும் உள்ளது.

ஆசிரியர் மேலும் பரிந்துரைப்பவை:

An essentially unprincipled approach