சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The David Miranda ruling and the attack on press freedom

டேவிட் மிராண்டா மீதான தீர்ப்பும், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலும்

Julie Hyland
26 February 2014

Use this version to printSend feedback

கடந்த ஆகஸ்டில் ஹீத்ரூ விமான நிலையத்தில் டேவிட் மிராண்டா சட்டத்திற்குட்பட்டே கைது செய்யப்பட்டார் என்ற தீர்ப்பின் ஆழ்ந்த பிற்போக்குத்தனமான உள்ளடக்கத்தோடு முழுமையாக ஒருவர் உடன்பட வேண்டுமானால், அவர் இலண்டன் உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட ஒருசில வாதங்களை மட்டுமே பார்க்க வேண்டும்.

நீதிபதி லாஸ் பிரபு, நீதிபதி திரு. ஓஸ்லெ மற்றும் நீதிபதி திரு. ஓபன்ஷா ஆகியோரால் கடந்த புதனன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் பயன்படுத்தப்பட்ட வசனங்கள், இந்த ஒரு சம்பவத்திற்கும் அப்பாற்பட்டு கடந்து செல்கிறதுஅந்த தீர்ப்பே இதழியல் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு முன்னுதாரணமற்ற தாக்குதலாகும். "சுதந்திர பத்திரிகைதுறை" சார்ந்த எந்தவொரு கருத்தும் சட்டத்திற்குப் புறம்பானதென அவர்கள் குறிப்பிடுகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிராக" மற்றும் "தேசிய பாதுகாப்பு" என்ற போலியான அடித்தளத்தில், பிரிட்டிஷ் அரசு அதன் குற்றங்களை மூடிமறைக்க மற்றும் இனி வரவிருக்கின்ற விடயங்களைச் சட்டபூர்வமாக மாற்ற முடிவெடுத்துவிட்டால் அதன் பிடியிலிருந்து யாரும் தப்பித்து விட முடியாது.

மிராண்டா, முன்னாள் கார்டியன் இதழாளரும், தேசிய பாதுகாப்பு முகமையின் (NSA) இரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோவ்டெனின் நெருங்கிய கூட்டாளியுமான கிளென் கிரீன்வால்டின் பங்காளியாவார். தேசிய பாதுகாப்பு முகமை (NSA) மற்றும் பிரிட்டனின் அரசு தகவல்தொடர்பு தலைமையகத்தால் (GCHQ) பாரியளவில் உளவு பார்க்கப்பட்ட தகவல்களை வெளியிடுவதில் கிரீன்வால்டுடன் ஒத்துழைத்த திரைப்பட இயக்குனர் லாரா போட்ராஸூடம் மிராண்டா பேர்லினில் இருந்தார். பின்னர் அவர் பிரேசிலுக்கு வரும் வழியில், மகாநகர பொலிஸால் ஒன்பது மணி நேரம் கைது செய்யப்பட்டு இருந்தார். அப்போது அவரது மடிக்கணினி, தொலைபேசி மற்றும் பாதுகாக்கப்பட்ட சேமிப்பு சாதனங்கள் பயங்கரவாத சட்டம் 2000இன் கீழ் கைப்பற்றப்பட்டன.

அந்த சட்டம் டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. அது இங்கிலாந்து எல்லைகளுக்குள் எந்தவொரு தனிநபரையும் கைது செய்ய, மற்றும் குற்ற நடவடிக்கைக்கான எந்தவொரு சந்தேகமும் இல்லை என்றாலும் கூட அவர்களின் உடைமைகளைப் பரிசோதிக்க பொலிஸை அனுமதிக்கிறது. இதழியல் சார்ந்த பொருட்களைக் கைப்பற்ற அந்த சட்டத்தின் விதிகள் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை மிராண்டாவின் கைது நடவடிக்கை குறிக்கிறது.

அந்த சட்டம் முறைகேடாக பயன்படுத்தபட்டது என்ற அடிப்படையில் மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் தீர்மானத்தால் வரையறுக்கப்பட்ட அவரது கருத்து சுதந்திர உரிமையில் பொலிஸ் நடவடிக்கைகள் அத்துமீறி தலையிட்டது என்ற அடிப்படையில் அந்த நடவடிக்கையைச் சட்டத்திற்குப் புறம்பானதாக மிராண்டா சவால் செய்திருந்தார்.

அவர் கைது செய்யப்பட்டமை "பத்திரிகை சுதந்திரத்தில் மறைமுகமான தலையீடு செய்ததாகும்" என்று உயர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது, ஆனால் அது தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு "மிகவும் அவசியப்படுவதாக" கூறி தீர்ப்பளித்தது.

அடிப்படை ஜனநாயக உரிமைகள் ஒரு சர்வ வல்லமை படைத்த அரசுக்கு அடிபணிய செய்யப்பட்டமை, அந்த தீர்ப்பின் மூலமாக ஒரு நிரந்தர தளையாக மாறி உள்ளது.

"அதுபோன்ற வெளியீடுகள் தேசிய பாதுகாப்பைப் பாதிக்க கூடுமென்று ஓர் அரசு அதிகாரி கூறினார் என்பதற்காக அந்த தகவல்களை வெளியிடக் கூடாதென்பது, பொறுப்பான இதழியலின் மிக முக்கிய பாரம்பரியங்களுக்கு முரணானதாகும்" என்று கீர்ன்வால்டு கூறி இருந்தார்.

லாஸ் பிரபு, "உண்மை தான், ஆனால் மிக பலவீனமான வாதமென்று" கூறி அதை நிராகரித்தார். தேசிய பாதுகாப்பு விடயங்களைப் பொறுத்த வரையில் இதழாளர்களுக்கு எந்த "அரசியலமைப்புரீதியிலான பொறுப்புணர்வும்" இல்லை என்பதோடு, அவர்கள் உளவுத்துறை தகவல்களின் ஒட்டுமொத்த "வளைவு சுளிவுகளை" அறிய மாட்டார்கள். ஆகவே எந்த மாதிரியான தகவல்களை வெளியிடுவது "வாழ்வை அல்லது பாதுகாப்பை" ஆபத்திற்குட்படுத்தும் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியாது என்று அவர் தீர்ப்பளித்தார்.

அரசு மட்டுமே அதுபோன்றவொரு தீர்மானத்தை எட்ட முடியுமென தெளிவுபடுத்தி, பிரிட்டிஷ் கேபினெட் மந்திரி ஓலிவர் ரோபின்ஸ், துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பொலிஸ் மீது தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பயங்கரவாத சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதைப் பொறுத்த வரையில், நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டது: மிராண்டா "ஓர் இதழாளர்" கிடையாது, மேலும் அவர் கொண்டு சென்ற திருடப்பட்ட GCHQ உளவுத்துறையின் தகவல்கள் "இதழியல் துறைசார் பொருட்களும்" அல்ல, அல்லது அது அத்தகைய பொருட்கள் தான் என்றாலும் கூட, அவை பலவீனமான அர்த்தத்தில் அவ்வாறு இருந்தன."

திருடப்பட்ட" பொருட்கள் என்று கூறப்பட்ட பல மேற்கோள்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. நவீன கால பிரிட்டனின் ஓர்வெல்லியன் உலகில் NSA/GCHQஆல் சட்டவிரோதமாக திரட்டப்பட்ட, சேகரிக்கப்பட்ட தகவல்கள் அவ்வாறு குறிப்பிடப்படுவதில்லை, மாறாக அது போன்ற நடவடிக்கைகளை வெளிப்படுத்திய ஸ்னொவ்டெனின் வெளியீடுகள் தான் அவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.

பத்திரிகை சுதந்திரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பைப் பொறுத்த வரையில் லாஸ் குறிப்பிட்டார், இந்த விடயத்தில், தெளிவாக இரண்டாவதாக உள்ளதன் தரப்பில் தான் சாய வேண்டியதாக உள்ளது," என்றார்.

அதற்கும் கூடுதலாக, ஒருவரை கைது செய்ய மற்றும் அவரது உடைமைகளைப் பரிசோதிக்க அவரை பொலிஸ் ஒரு பயங்கரவாதியாக சந்தேகித்திருக்க வேண்டுமென்பது அவசியமில்லை, அவர் "தோற்றத்தில் அவ்வாறு தெரிகிறார்" என்று முடிவெடுத்தாலே போதுமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சான்றாக, நீதிபதி ஓஸ்லெயின் கருத்துப்படி, பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஒரு பொலிஸ் அதிகாரி "ஊகித்தாலே போதும் அல்லது உள்ளுணர்வைக் கொண்டே" நடவடிக்கை எடுக்கு முடியும்.

மிராண்டா கொண்டு சென்ற பொருட்களின் "இயல்பை உறுதிபடுத்துவது" மற்றும் "அதை வெளியிடுவதன் (அல்லது மேலதிகமாக வெளியிடுவதன்) அல்லது பரப்புதலின் விளைவுகளைக் குறைப்பதே" மிராண்டா கைது செய்யப்பட்டதன் உண்மையான நோக்கமென்பதை லாஸ் ஒப்புக் கொண்டார். மேலும் இது 2000 சட்டத்தின் கீழ் "முறையாக வந்து விழுவதாகவும்" ஒப்புக் கொண்டார்.

மிராண்டாவைக் கைது செய்வதற்கான முடிவில் எந்த "ஊகமும்" சம்பந்தப்படவில்லை. கைது நடவடிக்கைக்கு முன்னதாக மிராண்டா மற்றும் கிரீன்வால்ட் இருவரையும் பாதுகாப்பு சேவைகள் கண்காணித்து வந்தது மற்றும் மிராண்டா கைது செய்யப்படுவதை உறுதிப்படுத்த பல நாட்கள் முன்னரே எல்லையோர பொலிஸிற்கு மூன்று முறையீடுகள் அனுப்பப்பட்டுள்ளன என்ற ஆதாரத்தை உயர் நீதிமன்றம் செவிமடுத்தது. கடைசி முறையீடு அதிர்ச்சியூட்டும் விதத்தில் இவ்வாறு குறிப்பிட்டது: மிராண்டா கொண்டு செல்வதாக கருதப்பட்ட பொருட்களின் திட்டமிட்ட வெளியீடு "ஓர் அரசாங்கத்தின் செல்வாக்கைப் பாதிக்கும் வகையில் உள்ளது, ஓர் அரசியல் மற்றும் சித்தாந்த காரணத்தை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக செய்யப்படுகிறது. ஆகவே இது பயங்கரவாத வரையறைக்குள் வருகிறது..."

உயர் நீதிமன்ற தீர்ப்பு புலனாய்வு இதழியலை மற்றும் இரகசியங்களை வெளியிடுவதை மட்டும் குற்றமாக்கவில்லை, மாறாக அதுபோன்ற தகவலைப் பெறும் எவரொருவரையும்இங்கே இந்த விடயத்தில் கார்டியன் பத்திரிகையைகுற்றவாளி ஆக்குகிறது. ஈராக் மீது நடத்தப்பட்ட ஒரு முன்கூட்டிய யுத்தத்தை நியாயப்படுத்துவதற்கு "உளவுத் தகவல்களைப்" பொய்மை படுத்துவதற்கு பொறுப்பான, அசாதாரண முறையில் சரணடைய செய்தல் மற்றும் சித்திரவதை ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட, மற்றும் பாரிய சட்டவிரோத உளவுவேலைகளை நடத்திய பாதுகாப்பு சேவைகளால் அவற்றின் குற்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்த இருந்த ஒருவரை ஒரு "பயங்கரவாதியாக" முத்திரை குத்த முடிந்தது, பொலிஸால் கைது செய்யப்பட்டு, அவர்களின் உடைமைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன என்பதையே இது குறிக்கிறது.

அங்கே விதிவிலக்குகளே இல்லை என்பதோடு அவர்களின் நடவடிக்கையை நியாயப்படுத்த வேண்டிய அவசியமும் பொலிஸிற்கு அங்கே இல்லை. அதற்கு தேவைப்படுவதெல்லாம் ஓர் அரசாங்க மந்திரியின் மற்றும் பாதுகாப்பு சேவைகளின் வார்த்தைகள் தான். இதழியல் தகவல்களை வைத்திருப்பதற்கு அல்லது கருத்து சுதந்திரத்திற்கு அங்கே எந்த பாதுகாப்பும் இல்லை.

பிரிட்டனின் பொதுச்சட்டமே போதுமானதென அறிவித்து, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றதின் நீதி பரிபாலனத்தை எவ்விதத்திலும் சார்ந்திருக்க வேண்டிய" அவசியமில்லை என லாஸ் பிரபு நிராகரித்தார். அன்னிய நாட்டு சித்திரவதைகளில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் மீது "வெளியுறவுத்துறை தங்கியிருப்பதை எந்த கோட்பாடும் தடுக்கவில்லையென" 2004இல் தீர்ப்பளித்தவரும் லாஸ் பிரபு ஆவார் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

ஸ்னொவ்டென் ஆவணங்களை வெளியிட்டமை "பயங்கரவாதத்திற்கு" ஒப்பானதாகும் என்ற இங்கிலாந்தின் வலியுறுத்தலை, அல் ஜஜீரா இதழாளர்களை பயங்கரவாதிகளாக தண்டிக்க எகிப்திய இராணுவ ஆட்சியால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்" அதேபோன்ற வாதங்களோடு கிரீன்வால்டு ஒப்பிட்டதற்கு அங்கே பொருத்தமான காரணங்கள் உள்ளன.

எகிப்தைப் போலவே, பிரிட்டனில் அதிகரித்துவரும் மற்றும் பரந்து பரவிவரும் சமூக சமத்துவமின்மையின் அடிப்படையில், அதன் பொருளாதார ஒழுங்கமைப்பு செல்லுபடியாகாமல் உள்ளதை மற்றும் பாரியளவில் மக்களின் எதிர்ப்பை முகங்கொடுத்துள்ளதை அங்கே முதலாளித்துவம் உணர்ந்துள்ளது. மிராண்டா மீதான உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளிவருவதற்கு ஒரேயொரு தினத்திற்கு முன்னர், ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவ் பல்கலைக்கழக மாணவர்கள் ஸ்னோவ்டெனை பல்கலைக்கழகத்தின் தலைவராக வாக்களித்து தேர்ந்தெடுத்தனர்.

மிராண்டாவின் கைது நடவடிக்கை பயங்கரவாத சட்டத்தின் ஒரு "துஷ்பிரயோகம்" அல்ல என்பதை உயர் நீதிமன்றத்தின் வாதங்கள் தெளிவாக்குகின்றன. மாறாக, ஜனநாயக உரிமைகள் மீது யுத்தம் தொடுப்பதற்கு மற்றும் அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதற்கான நோக்கத்தோடு, அரச மிரட்டலின் ஒரு கருவியாக பயங்கரவாத சட்டம் கையாளப்பட்டது.

இதன் வரலாற்றுரீதியிலான தாக்கங்கள் நீண்டகாலத்திற்கு இருக்கக் கூடியவை. நாஜி ஆட்சியின் கீழான ஜேர்மன் இரகசிய போலீஸ் (Gestapo) இதுபோன்ற அதிகாரங்களை கொண்டிருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற போர்வையில், பிரிட்டனின் ஆளும் மேற்தட்டு நாஜி ஜேர்மனிக்கு இணையாக அதன் சொந்த அரசியல் பொலிஸ் சக்தியை ஸ்தாபித்துள்ளது.