சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Delhi’s AAP government resigns

டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் இராஜினாமா செய்தது

By Kranti Kumara
19 Febuary 2014

Use this version to printSend feedback

மிகப் பெரிய மகாநகரமும், 22 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்தியாவின் தேசிய தலைநகர் பிராந்தியமுமான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் (AAP - சாமானிய மனிதரின் கட்சி) 49 நாட்கள் கொந்தளிப்போடு பதவியில் இருந்த பின்னர் கடந்த வெள்ளியன்று இராஜினாமா செய்தது. ஊழல்-ஒழிப்பு கண்காணிப்பு அமைப்பு (ombudsman) அல்லது ஜன் லோக்பால் ஒன்றை உருவாக்கும் ஒரு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிடாமல் தடுத்ததன் மூலமாக, இந்தியாவின் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸூம் பாரதீய ஜனதா கட்சியும் (பிஜேபி) தமது அரசாங்க நிகழ்ச்சிநிரலை முடங்க செய்துவிட்டதாக கூறி, ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அவரது இராஜினாமாவை சமர்ப்பித்தார்.

அரசியல் ஸ்தாபகத்தின் மீதிருக்கும் மக்களின் ஆழ்ந்த வெறுப்பையும் கோபத்தையும் கைப்பற்றும் முயற்சியில், காங்கிரஸ் மற்றும் பிஜேபி இரண்டும் இணைந்து அவரது அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்கி விட்டதாக கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார். அதற்கு பழிதீர்க்கும் விதமாக, அவர் முன்னாள் டெல்லி முதல் மந்திரிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதோடு, எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் கூடி வேலை செய்ததற்காக இந்தியாவின் பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி, அவருக்கு முன்னாள் இருந்த முரளி தியோரா, மற்றும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

கெஜ்ரிவாலின் விளக்கம் சுய-ஆதாயத்திற்காக இருந்தது. கடந்த வார நெருக்கடி 14 மாதத்திற்கு முன்னர் தொடங்கப்பட்ட AAPஆல் அரங்கேற்றப்பட்டுள்ளதற்கு எல்லா அறிகுறிகளும் உள்ளன. டெல்லி அதிகாரத்தின் மீதிருக்கும் கட்டுப்பாட்டை விட்டு, அதனைஅதுவே ஒரு தேசியக் கட்சியாக மாற்றுவதற்கும், வரவிருக்கின்ற அனைத்திந்திய நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு முக்கிய சக்தியாக எழுவதற்குமான அதன் முயற்சிகளை அதிகரிக்க முடியுமென்று அது கணக்கிடுகிறது.

டெல்லி அரசின் அரசியலமைப்பு தலைவர், லெப்டினண்ட்-கவர்னர், ஜன் லோக்பால் சட்டமசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் அவரது ஒப்புதல் இருக்க வேண்டுமென்று பகிரங்கமாக அறிவித்திருந்தார். ஆனால் AAP வளைந்து கொடுக்காமல் அதை அவரது அலுவலகத்திற்கு பரிசீலனைக்கு அனுப்ப மறுத்ததோடு, காங்கிரஸ் மற்றும் பிஜேபி இரண்டும் அரசியலமைப்பின் அடித்தளத்தில் சட்டமன்றத்தை முடக்குவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று வலியுறுத்தும் என்று நன்கு அறிந்திருந்தும் அது டெல்லி சட்டமன்றத்தில் அதை நிறைவேற்ற முனைந்தது.

அது இந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் வரவிருக்கின்ற தேசிய தேர்தலுக்கான 20 வேட்பாளர்களின் முதல் பட்டியலை அறிவிக்க சிறிதும் நேரம் தாழ்த்தவில்லை என்றபோது, AAPஇன் நகர்வுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தன என்பது மேலும் உறுதியானது. அரசில் இடம்பெற்றிருந்த முன்னாள் அதிகாரத்துவ அதிகாரிகள், ஒரு வங்கியாளர் மற்றும் தேசிய மக்கள் இயக்க கூட்டணியின் மேதா பட்கார் உட்பட சுற்றுச்சூழல், வறுமை ஒழிப்பு, மற்றும் "ஊழல்" ஒழிப்பில் ஈடுபட்டுவரும் முக்கிய பிரச்சாரகர்கள் அந்த வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பிரதம மந்திரி ஆவதற்கான தனிப்பட்ட ஆசை இல்லை என்று கெஜ்ரிவால் மறுத்து வருகின்ற போதினும், முன்னாள் முதல் மந்திரியும் AAPஇன் வழிகாட்டியுமான அவர் வருங்கால பிரதம மந்திரியாக ஆவதற்கு பரவலாக வற்புறுத்தப்பட்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சி மற்றும் பிஜேபி இரண்டுமே கெஜ்ரிவாலின் இராஜினாவை ஒரு "நாடகமாக" குறிப்பிட்டுள்ளன. இருந்த போதினும், அவை இரண்டுமே திடீரென முன்னுக்கு வந்த AAPஇன் முதல் தொடக்கத்தின் முடிவை, அவற்றின் சொந்த காரணங்களுக்காக, வரவேற்றுள்ளன.

சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழங்கிய வாக்குகளே ஆம் ஆத்மி கட்சியை அதிகாரத்தில் நிலைக்க வைத்திருந்து என்றபோதினும், இந்தியாவின் முன்னணி பெரு-வணிக கட்சியும் தேசிய கூட்டணி அரசாங்கத்தில் மேலாதிக்கம் செலுத்தும் பங்குதாரருமான அது கெஜ்ரிவாலை கண்டித்து வந்தது. அவர் ஆட்சி செலுத்துவதில் ஒருபோதும் தீவிர அக்கறை காட்டவில்லை," என்று காங்கிரஸ் செய்திதொடர்பாளர் சந்தீப் தீட்ஷித் கூறினார். கெஜ்ரிவால் "அரசியலமைப்பை நிலைகுலைக்க முயன்றதோடு, அவர் ஒரு பூசிமொழுகும் பொய்யர்," என்று கூறிய தீட்ஷித்தின் அன்னை கடந்த டிசம்பர் வரை டெல்லியில் காங்கிரஸ் கட்சி அரசாங்க முதல் மந்திரியாக இருந்த ஷீலா தீட்ஷித் ஆவார். அவர் காங்கிரஸைத் தாக்கும் போது, நாக்கின் மேல் பல்லைப் போட்டு பொய் கூறினார்," என்றார்.

இந்து மேலாதிக்கவாத பிஜேபி'இன் ஒரு முக்கிய தலைவரான அருண் ஜெட்லி, ஆம் ஆத்மி கட்சியெனும் "பெருந்தொல்லை" முடிவுக்கு வந்ததை வரவேற்றார். டெல்லி அரசாங்கங்களிலேயே ஆம் ஆத்மி கட்சி அரசாங்கமே மிக மோசமானதென்று அவர் குறிப்பிட்டார்.

இராஜினாமா செய்கையில், கெஜ்ரிவால் காங்கிரஸால் நியமிக்கப்பட்ட லெப்டினண்ட் கவர்னரிடம் டெல்லி சட்டமன்றத்தை கலைக்கவும், புதிய தேர்தல்கள் நடத்தவும் வலியுறுத்தினார். அதற்குமாறாக இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் (UPA) ஆறு மாதங்களுக்கு "ஜனாதிபதி ஆட்சியை" நடைமுறைப்படுத்தி உள்ளது. டெல்லியில் இரண்டாவது முறையாக படுமோசமாக தேர்தல் தோல்வி அடைந்தால் அது காங்கிரஸின் தேசிய தேர்தல் பிரச்சாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்ற அச்சத்தில், அந்நிலைமையைத் தவிர்க்க காங்கிரஸ் கவலை கொண்டிருந்தது.

அரசாங்க ஊழலுக்கு எதிரான போராட்டமே ஆம் ஆத்மி கட்சிக்கான அடிப்படைக் காரணமென்று கூறி உரத்த கூப்பாடிட்டு வரும் அக்கட்சி, பேராசை மிக்க ஒரு முதலாளித்துவ கட்சியாகும்.

அறநெறியின் காவலனாக மற்றும் ஊழல் ஒழிப்பாளனாக தன்னைத்தானே நியமித்துக் கொண்டு, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியானது ஜனரஞ்சகவாதம், சட்ட மந்திரியால் ஆபிரிக்க பெண்களுக்கு எதிரான இனவாத சட்டவிரோத அடாவடித்தன சோதனைகள் மற்றும் கெஜ்ரிவால் தலைமையிலேயே நடந்த வீதி ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றால் குறிக்கப்பட்டு இருந்தது. (பார்க்கவும்: ஒரு மாதம் பதவியில் இருந்த பின்னர் டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் தள்ளாடுகிறது)

AAP இன் திடீர் உயர்வு பிஜேபி மற்றும் காங்கிரஸ் உடனான பாரிய அதிருப்தியில் வேரூன்றி உள்ளது. அவற்றின் கொள்கைகள் இந்திய பில்லியனர்கள் மற்றும் பல கோடி மில்லியனர்களின் ஒரு சிறிய அடுக்கிற்கு நம்பவியலாத அளவிற்கு செல்வத்தைக் கொண்டு வந்து சேர்த்த அதேவேளையில் பெருந்திரளான ஜனங்களின் பசி, தேவை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மைக்கு எதிராக செயல்பட்டன. டெல்லியின் ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் கணிசமான ஆதரவை ஆம் ஆத்மி கட்சியால் பெற முடிந்தது என்றால் அதில் ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவற்றின் மீதான ஒரு குற்றப்பத்திரிக்கையும் உள்ளது. ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒடுக்கியதோடு, நவ-தாராளவாத "சீர்திருத்தங்களை" நடைமுறைப்படுத்திய பல தேசிய அரசாங்கங்களுக்கு முட்டு கொடுத்தனர். 2004இல் இருந்து 2008 வரையில் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்தமையும் அவற்றில் உள்ளடங்கும். மேலும் அவர்கள் அரசு அமைத்த மாநிலங்களிலும், முதலீட்டாளர் சார்பு கொள்கைகள் என்று அவர்கள் எதை குணாம்சப்படுத்தினார்களோ அதை அவர்களே தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களை விலையாக கொடுத்து பின்பற்றினார்கள்.

ஆம் ஆத்மி கட்சி, ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தின் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. UPA அரசாங்கம் எவ்வாறு பொது சொத்துக்களை பெரு வணிகங்களுக்கு அடிமட்ட விலைக்கு விற்றுள்ளதென பல மோசடிகள் அம்பலமான பின்னர், 2011-12இல் டெல்லியில் அந்த இயக்கம் பாரிய போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தியது. ஊழலுக்கு எதிராக துவேஷமாக இருந்த அதேவேளையில், ஆம் ஆத்மி கட்சி எப்போதும் அரசியல்வாதிகள் மீது அதன் கோபத்தை ஒருமுகப்படுத்தி உள்ளதே அன்றி அவர்களின் பணபட்டுவாடா செய்யும் பெரு வணிகங்கள் மீது அல்ல. மேலும் முதலாளித்துவ பண பரிவர்த்தனையில், அதாவது அரசியல் தலைவர்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலதனத்தின் முகவர்கள் என்பதைத் தவிர வேறொன்றுமாக இல்லாத ஒரு சமூக அமைப்புமுறையில், ஊழலின் உண்மையான வேர்களை அது கவனமாக நிராகரித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சி, தற்போது கழிவுத்தொட்டியாக உள்ள இந்திய தேசிய அரசியலில் தன்னைத்தானே பலப்படுத்த முனைந்துள்ளதோடு, அது முன்னரைவிட வெளிப்படையாக முதலாளித்துவம் மற்றும் பெரு வணிகங்களுக்கான அதன் ஆதரவை எடுத்துக்காட்டி வருகிறது.

இந்தியாவின் இரண்டு மிக முக்கிய வணிக தரகு குழுக்களில் ஒன்றான இந்திய தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைமையோடு திங்களன்று பேசுகையில், கெஜ்ரிவால் அறிவித்தார்: நாங்கள் முதலாளித்துவத்திற்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் நாங்கள் போலி-முதலாளித்துவத்திற்கு (Crony-capitalism) எதிரானவர்கள்," என்றார்.

மார்கரெட் தாட்சரால் வழங்கப்பட்ட ஓர் உரையில் விடுபடாமல் இருந்த சந்தை வனப்புரையைப் பயன்படுத்தி கெஜ்ரிவால் CII'க்கு தெரிவித்தார், ஓர் ஆணித்தரமான அறிவிப்பை வெளியிடுகிறோம் ... அரசாங்கம் வணிகத்திற்கு எதிராக வணிகம் செய்யாது. அது தனியார் துறையிடம் விடப்படும்."

"நிறைய போட்டியை உடனடியாக சந்தித்துள்ள துறைகளை அரசாங்கம் தனியார்மயமாக்கும்" என்று கூறிய கெஜ்ரிவால், வேளாண் விலை நிர்ணயத்திற்கான ஆதரவு மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கவும் அவரது ஆதரவை அறிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் வழிகாட்டி கூறினார், வேளாண் துறையில் விலை நிர்ணயம் முக்கியமானதாகும். விவசாயிகள் மீதான கட்டுப்பாடு நீக்கப்படும்; நாங்கள் வேளாண் துறை மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவோம்."

அதுபோன்றவொரு நகர்வு சிறு விவசாயிகளை திவாலாக்கும் என்பதோடு பெந்திரளான ஜனங்கள், குறிப்பாக நல்ல தரமான தானியங்களுக்காக மற்றும் உற்பத்திக்காக, விலைவாசி உயர்வால் அச்சுறுத்தப்படுவார்கள்.

ஆம் ஆத்மி கட்சியின் ஊழல்-எதிர்ப்பு பிரச்சாரத்தின் நிஜமான இலக்கு சிறிய அரசாங்க அதிகாரிகள் தானேயொழிய அரசாங்க கொள்கைக்கு உத்தரவுகள் பிறப்பிக்கும் வணிக அமைப்புகள் அல்ல என்பதை தெளிவுபடுத்தி, கெஜ்ரிவால் ஒரு மோதலுக்கு தயாராக இருக்கின்ற வணிக வர்க்கத்தின் ஒரு சித்திரத்தைச் சித்தரித்தார். அவர் CII'க்கு தெரிவித்தார், வணிக சமூகம் "தொடர்ந்து நசுக்கப்படுகின்ற மற்றும் இடர்பாட்டிற்கு உள்ளாகும் அபாயத்தின் கீழ் இருந்து வருகிறது ... நாம் வர்த்தகர்களை ஊக்குவிக்கும் ஒரு சூழலை உருவாக்க வேண்டுமே அல்லாமல், அவர்களை அதைரியப்படுத்தும் சூழலை உருவாக்க கூடாது."

கெஜ்ரிவால் தொடர்ந்து கூறினார், அரசாங்கத்தின் தலையீடு மிக குறைந்தளவே இருக்குமாறு, மறுதிருத்தம் செய்யப்பட வேண்டிய நிகழ்முறைகள் என்ன என்பதை எனக்கு கூறுமாறு தொழிலதிபர்களை நான் கேட்டு கொள்கிறேன்."

அனைத்து விதத்திலும் மண்டியிட்ட விதத்தில், ஆம் ஆத்மி கட்சியின் நன்கறியப்பட்ட செய்தி தொடர்பாளர் கட்சியின் பொருளாதார திட்டத்தை எழுத உதவுமாறு இந்திய பெருநிறுவன தலைவர்களை கேட்டு கொண்டார். இந்த தலைவர்கள் தான், மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கினர் நாளொன்றுக்கு 2 டாலருக்கு குறைவான வருமானத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், சமூக செலவினங்களில் இந்தியா மிக அதிகளவிலான பணத்தைச் "செலவிடுகிறது" என்று எப்போதும் குறை கூறி வருபவர்கள். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் எங்களோடு இணைந்திருக்க மற்றும் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு கூற எங்களோடு இணைந்து நில்லுங்கள் என்று கோருவதே இங்கே எங்களின் நோக்கமாகும்," என்றார்.

டெல்லியின் தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்களை குறைக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தற்காலிக முறைமைகளும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் முகேஷ் அம்பானி போன்ற அரசாங்க நன்கொடைகளில் இருந்து விகிதாச்சாரமின்றி ஆதாயமடைந்த விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில வியாபாரிகள் மீதான அவர்களின் வார்த்தைஜால தாக்குதல்களும் இந்தியாவின் வணிக மேற்தட்டின் பிரிவுகளைக் கதற செய்திருந்தது. பெருநிறுவன ஊடகங்களில் பல, ஆம் ஆத்மி கட்சியை "சோசலிஸ்டாக" இடிந்துரைத்து இருந்தன.

ஆனால் சமூக அதிருப்தியை கட்டுப்படுத்துவதிலும், தனியார்மயமாக்கல் மற்றும் நெறிமுறை தளர்த்துவதற்கு அழுத்தம் அளிப்பதிலும் ஆம் ஆத்மி கட்சி ஒரு உபயோகமான கருவியாக இருக்க முடியுமென்பதை இந்திய பெருநிறுவன மேற்தட்டிற்கு மறுஉத்தரவாதம் வழங்குவதில் கெஜ்ரிவால் CIIக்கு ஆற்றிய உரை நிறைய உதவி செய்துள்ளது.

"எங்களுக்கு திருப்திகரமாக உள்ளது," கோத்ரேஜ் குழுமத்தின் சேர்மேன் ஆதி கோத்ரெஜ் ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் கூறினார். அவர் (கெஜ்ரிவால்) தனியார் நிறுவனமுறையில் நம்பிக்கை கொண்டிருப்பதாக விளங்கப்படுத்தினார். அதுவொரு முதல் உரையாக இருந்தது." அவர் வணிக சார்புடையவராவார், அதற்கு மீண்டும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது" என்று நுகர்பொருள் பண்டங்கள் நிறுவனமான மரிகோவின் சேர்மேன் ஹார்ஷ் மரிவாலா தெரிவித்தார்.