சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French President Hollande announces Lebanese arms deal in Saudi Arabia

பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் சௌதி அரேபியாவில் லெபனிய ஆயுத ஒப்பந்தத்தை அறிவிக்கிறார்

By Rosa Shahnazarian
3 January 2014

Use this version to printSend feedback

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் ஞாயிறு மற்றும் திங்கள் அன்று சௌதி மற்றும் லெபனிய அதிகாரிகளைச் சந்திக்க சௌதி அரேபியாவிற்கு பயணித்திருந்தார். அவருடன் 30 உயர்மட்ட வணிகத் தலைவர்களும், வெளியுறவு மந்திரி லோரென்ட் ஃபாபியுஸ், பாதுகாப்பு மந்திரி Jean-Yves Le Drian உட்பட நான்கு மந்திரிகளும் சென்றிருந்தனர்.

ஹாலண்ட் தனித்தனி பேச்சுக்களை, பட்டத்து இளவரசர் சல்மன் பின் அப்துல் அஜிஸ், சௌதி மன்னர் அப்துல்லா இபின் அப்த் அல் அஜிஸ் அல் சௌத், முன்னாள் லெபனிய பிரதம மந்திரி சாட் ஹரிரி மற்றும் சிரிய எதிர்த்தரப்பு தலைவர் அஹ்மத் ஜர்பா ஆகியோருடன் நடத்தினார்.

ஹாலண்ட் விஜயத்தின் முக்கிய நோக்கம், சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிராக தொடரும் எதிர்த்தரப்பு சுன்னி சக்திகளின் குறுங்குழுவாத போரை ஆதரித்தல், அண்டை நாடான லெபனானில் உள்ள சுன்னிப் படைகளுக்கு நிறைய ஆயுதம் அளித்தல் ஆகியவையாகும். அவர் சௌதி அரேபியாவுடன் ஆயுத ஒப்பந்தத்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார், அது லெபனிய இராணுத்திற்கு பிரெஞ்சு ஆயுதங்களை வாங்க 3 பில்லிலயன் டாலர்கள் அரச மானியம் வழங்க உறுதியளித்துள்ளது. இந்த மானியம் லெபனானின் முழு இராணுவ வரவு-செலவு திட்டத்தைப்போல் இரு மடங்கு ஆகும், இதுவும் சிரியா போன்று ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனித்துவ நாடாகும்.

முன்னாள் லெபனிய நிதி மந்திரி மகம்மது சாட்டா கடந்த வெள்ளியன்று ஒரு கார் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, லெபனானின் நிலைமை நிகழ்ச்சி நிரலில் முதல் இடத்தில் உள்ளது. இரு தலைவர்களும் இப்பிராந்தியத்தில் ஈரான் பங்கு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். பிற முக்கிய தலைப்புக்களில் சிரிய உள்நாட்டுப்போர், இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதல், எகிப்திய நிலைமை மற்றும் சௌதி அரேபியா, பிரான்ஸுக்கு இடையே வளர்ந்து வரும் வர்த்தக உறவுகள் ஆகியவை அடங்கும்.

ரியாத்தில் பிரெஞ்சுத் தூதரகத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஹாலண்ட் “சிரியக் கூட்டணிக்கு ஆதரவை” உறுதிப்படுத்தினார். அவர் இரு நாடுகளும் “மத்திய கிழக்கில் சமாதானம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை நிலவ உழைப்பதில் பங்கு பெறும்” என்றார்.

ஹாலண்ட் தனது வெளியுறவு மந்திரியுடன் சேர்ந்து, லெபனான் எதிர்கால இயக்கத்தின் தலைவர், முன்னாள் பிரதம மந்திரி பில்லியனர் சாட் ஹரிரி உடன் ஞாயிறன்று 40 நிமிடப் பேச்சுக்களை நடத்தினார். ஏற்கெனவே கூட்டத்திற்கு முன்பு ஃபாபியுஸ், ஹாலண்ட் லெபனானுடன் பாரிஸுடைய நட்பை வலியுறுத்துவார் என்றும் லெபனானின் “ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கான” அழைப்பை விடுப்பார் என்றும் கூறினார்.

ஹரிரி, லெபனிய இராணுவத்திற்கு ஆயுதம் அளிக்கத் தயாராக இருக்கும் பிரான்சை புகழ்ந்து, “வரலாற்றுத் தன்மை, முன்னோடியில்லாத அளவிலான” ஆயுத உடன்பாட்டிற்கு மன்னர் அப்துல்லாவுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஹாலண்டும் அவருடைய பாதுகாப்பு மந்திரியும், சிரிய தேசிய எதிர்த்தரப்பு கூட்டணி மற்றும் புரட்சிப் படைகளின் (NCSR) தலைவர் அஹ்மத் ஜர்பாவையும் சந்தித்தனர்.

ஃபாபியுஸ், தான் ஜனவரி 22 ஜெனீவா 2 மாநாட்டில் எதிர்த்தரப்பு பங்குபற்றுவதை அங்கீகரிப்பதாக ஜர்பாவிடம் கூறினார். பிரான்ஸ் “நிதானமான எதிர்தரப்பிற்கு ஆதரவு கொடுக்கும் என்று உறுதியளித்து விந்தையான முறையில் அசாத்தின் நலன்களுக்கு உதவும் பயங்கரவாதிகளை ஆதரிக்காது என்றும் கூறினார்; அவர் அடிப்படை வாதிகளின் அச்சுறுத்தலை “நிதான எதிர்த்தரப்பிற்கு அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்துகிறார்” என்றும் கூறினார்.

இது ஒரு இழிவாகத் தப்பும் வகையாகும். சிரியாவில், சவுதி அரேபியா, ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ் ஆகியவை அல் குவேடாவுடன் பிணைந்துள்ள இஸ்லாமியவாத சுன்னி போராளிகள், மற்றும் கிரிமினல் கும்பல்களை ஆதரித்துள்ளன என்னும் உண்மையை மறைக்கிறது.

அமெரிக்கா தனது கொள்கையை மாற்றி சிரியாவின் முக்கிய பிராந்திய நட்பு நாடான ஈரானுடன் பேச்சுக்களை துவக்குமுன், சென்ற ஆண்டு சிரியாவிற்கு எதிரான விமானத் தாக்குதல்களுக்கு ஆக்கிரோஷமாக அழுத்தம் கொடுத்த பிரான்ஸ், பிற்போக்கு சிரிய “எழுச்சியாளர்களுக்கு” தொடர்ந்து உதவியை அளிக்கிறது. பஷர் அல் அசாத் அதிகாரத்தில் இருப்பதை ஏற்காத ஒரு அரசியல் தீர்வு தேவை என ஹாலண்ட் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.

சௌதி முடியாட்சியின் நிதியில், பாரியளவிலான பிரெஞ்சு ஆயுதங்களை லெபனானுக்கு அனுப்புவது, அதன் முன்னாள் காலனி அரசியலில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் புதுப்பிக்கப்பட்ட தலையீட்டை பிரதிபலிக்கிறது.

ஹாலண்டும் ஃபாபியுசும், பிராந்திய உறுதிப்பாடு மற்றும் லெபனானின் சுதந்திரத்தை வலியுறுத்துவது விஜயத்தின் தன்மையை மறைக்கும் நோக்கம் கொண்டது. உண்மையில், முன்னாள் பிரெஞ்சுக் காலனிகளில் முன்னோடியில்லாத ஆயுத விற்பனைகள் சிரியா, லெபனான் இரண்டிலுமே ஏகாதிபத்திய ஆதரவு மோதலில் பிரான்சின் பங்கு தீவிரமடைந்துள்ளதை பிரதிபலிக்கிறது.

பிரெஞ்சு ஆயுதத் தொழில்துறை, சௌதி மக்கள் இழப்பில் தன் இலாபத்தில் ஏற்றம் கொள்ளகிறது. உலகின் மிகச்செழிப்பான எண்ணெய் இருப்புக்களுக்கு தாயகமாக இருந்தாலும், சௌதி சமூகம் மகத்தான சமூக சமத்துவம் இன்மையில்தான் உள்ளது. மக்களில் கால்வாசிப்பேர் வறுமையில் உள்ளனர்; இளைஞர் வேலையின்மை 30% என உள்ளது; பெரும்பாலான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் எண்ணெய் வயல்கள் மற்றும் கட்டுமான துறைகளில் மிக இழிந்த நிலைமைகளில் பணி புரிகின்றனர்.

ஊழல் மிகுந்த, பெரும் செல்வம் படைத்த சௌதிஅரச குடும்பமோ, மறுபுறம் பல பில்லியன் டாலர்கள் மீது தங்கள் பிற்போக்குத்தன நோக்கங்களுக்காக ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது. விக்கிலீக்ஸ் வெளியிடும் தந்தித்தகவல்கள் சிறிய அளவு சௌதி இளவரசர்கள்1990களில் 1 மில்லியன் பீப்பாய்களுக்கான அன்றாடப் பணத்தை வருமானமாகக் கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது. அரச குடும்பத்தின் பிற ஆயிரக் கணக்கான உறுப்பினர்கள் சிறு உதவித் தொகைகளைப் பெற்றனர்.

சௌதி முடியாட்சி, நாட்டின் இலாபங்களில் மற்றொரு பகுதியையும் பிராந்தியத்தில் தன் செல்வாக்கை செலுத்தப் பயன்படுத்துகிறது --  அமெரிக்கா, பிரான்ஸ் இன்னும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் விழைவுகளுக்கு ஒரு கருவியாகப் பயன்படுகிறது.

அமெரிக்கா இப்பொழுது ஈரானுடன் நேரடிப் பேச்சுக்கள் என்னும் திசையில் அதன் பிராந்திய தந்திரோபாயத்தை திருப்பியுள்ளது; ஆனால் அதன் கொள்கைகளின் விளைவுகள் ஒரு மோதல் வடிவில் தொடர்கின்றன; அது பிராந்தியம் முழுவதையும் போட்டிப் பிரிவுகள், பழங்க்குடிமக்கள் குழுக்களுக்கு இடையே உள்நாட்டுப் போர் என இழுக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

சௌதி அரேபியா தொடர்ந்தும் சிரிய எதிர்த்தரப்பிற்கு ஆதரவு கொடுத்து, கடந்த ஆண்டு ஈராக், மற்றும் லெபனானில் பரவிவிட்ட மோதலுக்கு எரியூட்டுகிறது. சௌதி முடியாட்சி அமெரிக்க கொள்கை மாற்றத்தை தன்பொருளாதார, அரசியல் நிலைமைக்குத் தீவிர அச்சுறுத்தல் என்று காண்கிறது, அத்துடன் ஈரான் மற்றும் சிரியாவுடனான எந்த மேற்கத்திய உடன்பாட்டிற்கும் கட்டுப்பட மறுத்துள்ளது.

அசாத், "இந்த நெருக்கடியில் இருந்து பிழைக்க பின்னர் அவர்களுக்கு எதிராக திரும்ப வேண்டும் என்னும் உண்மையை செளதி முடியாட்சி உண்மையில் புரிந்துகொள்ள முடியாதது என்று வாஷிங்டன் டி.சி. ஐ சார்ந்த Institute of Gulf Affairs உடைய இயக்குனர் அலி அல் அஹ்மத் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார். “அவர்கள் இந்த சாத்தியப்பாட்டை நிராகிரிக்கின்றனர், அசாத்தை அகற்ற தங்களால் இயன்றதை செய்யத் தயாராக உள்ளனர்.”

சிரிய மோதலில் எதிர்த்தரப்பில் நிற்கும் ஹெஸ்புல்லா, பிரெஞ்சு சௌதி ஆயுத ஒப்பந்தம் தான் முதன்மை இலக்கு தான்தான் என வலியுறுத்தியுள்ளது. ஹெஸ்புல்லா தலைமையில் மார்ச் 8 கூட்டணிக்குள் இருக்கும் ஆதாரம் ஒன்று, An Naham செய்தித்தாளிடம் “சௌதியின் மானியம் சுலைமானுக்குக் இடப்பட்டுள்ள ஆணை விரிவடைவதுடன் பிணைந்துள்ளது; சௌதி அரேபியா ஹெஸ்புல்லாவை எதிர்கொள்ளும் இராணுவத்தை கட்டுப்படுத்த இலக்கு கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைக்கேல் சுலைமானைப் பற்றி, அல் அக்பரில் அதன் தலைமை ஆசிரியர் இப்ராகிம் அல் அமின் எழுதியுள்ள கடுமையான கட்டுரையில், அவரை பிரான்ஸ், சௌதி அரேபியாவின் விருப்பங்களை சுமத்த முற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. “ரியாத்திற்கு நீங்கள் கடந்த முறை  வந்தபோது, உங்களிடம் செய்யவேண்டியதைக் கூறிய ஆணை, இராணுவத்தின் கடமை ஹெஸ்புல்லாவுடன் போரிடுவது என்று கூறியது – அவர்களிடம் இருந்து ஆயுதங்களைக் களைந்து, சிரியாவிற்கு அவர்களைச் செல்ல முடியாமல் செய்வது என. இராணுவத்திற்கு உதவ இது முன்னிபந்தனை என்று அவர் உங்களிடம் கூறினார்” என அல் அமின் எழுதினார்.

மற்றொரு அல் அக்பர் கட்டுரை 3 பில்லியன் டாலர்கள் நன்கொடை ஹெஸ்புல்லா இல்லாத அமைச்சரவை அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையில் கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறது. இந்த நன்கொடை, சுலைமானின் முந்தைய அறிவிப்பான அவருடைய விருப்பம் ஒரு “நடுநிலை அரசாங்கத்தை” அமைத்தல் என்பதற்கு மாறாக ஜனவரி முதல் வாரத்தில் அது ஹெஸ்புல்லா இல்லாமல் அமைக்கப்பட வேண்டும் என்ற அவருடைய விருப்பத்துடன் பிணைக்கிறது.

மார்ச் 8 பிரதிநிதிகள் அல் அக்பரிடம் “செயல்படும் அரசாங்கத்தை அமைக்கும் முடிவு இப்பிராந்தியத்தில் சௌதி அரேபியா நடத்தும் போரின் ஒரு பகுதியாகும்; இது சிரியாவில் இருந்து ஈராக் வரை, லெபனான், பஹ்ரைனை உள்ளடக்கி நடக்கிறது.” அவர்களை அரசாங்கத்தில் இருந்து ஒதுக்கினால், பிரதம மந்திரியின் தலைமையகத்தை முற்றுகை இடுவதாக அச்சுறுத்தியுள்ளனர்.