சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Fifty years since Johnson's declaration of the “War on Poverty”

ஜோன்சனின் "வறுமைக்கு எதிரான யுத்த" பிரகடனத்தில் இருந்து ஐம்பது ஆண்டுகள்

Tom Mackaman
8 January 2014

Use this version to printSend feedback

1964 ஜனவரி 8இல் நாட்டிற்கு வழங்கிய அவரது முதல் உரையில், ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் அமெரிக்காவில் வறுமை, வேலையின்மை மற்றும் பட்டிணியை முடிவுக்குக் கொண்டு வர அழைப்புவிடுத்தார். “இந்த நிர்வாகம் இன்று, இங்கே, இப்போதே, அமெரிக்காவின் வறுமைக்கு எதிராக நிபந்தனையற்ற யுத்தப்பிரகடனம் செய்கிறது," என ஜோன்சன் தனது உரையில் அறிவித்தார். அந்த உரை, அவருக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த ஜோன் கென்னடியின் படுகொலைக்கு ஏழு வாரங்களுக்கு உள்ளாகவே வழங்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குள், ஒட்டுமொத்தமாக "தலைச்சிறந்த சமூகம்" என்றழைக்கப்படும் பல சட்டங்களையும், திட்டங்களையும் காங்கிரஸ் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இவற்றில் இருந்தவை: மருத்துவ பராமரிப்பு (Medicare) மற்றும் மருத்துவ உதவியை (Medicaid) உருவாக்கிய 1965 சமூக பாதுகாப்பு சட்டம், அது முறையே முதியோருக்கு மருத்துவ காப்பீடு வழங்கியதோடு ஊனமுற்றோர் மற்றும் ஏழைகளுக்கான மத்திய மருத்துவ காப்பீட்டையும் அறிமுகப்படுத்தியது. 1964 பொது உரிமைகள் சட்டம், அது ஒரு நூற்றாண்டிற்கு நெருக்கமான காலத்திற்கு முன்னர் மறுமலர்ச்சி சகாப்தத்திலிருந்து இருந்து வந்த அமைப்புமுறையிலான இனவாதத்தை தீர்க்க கொண்டு வரப்பட்ட முதல் முக்கியத்துவம் மிக்க சட்ட மசோதாவாகும். மேலும் பல்வேறு தொழில் பயிற்சிகள், நகர்புற அபிவிருத்திகள், கல்வி மற்றும் ஊட்டச்சத்துக்கான அரசு நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றோடு மழலையர் கல்வி திட்டமான ஹெட் ஸ்டார்ட் மற்றும் உணவு மானிய கூப்பன் திட்டம் ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.

ஜோன்சன் அவரது சட்டமன்ற நிகழ்ச்சிநிரலை அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒரு வரலாற்று பரிசோதனையாக முன்வைத்தார். “நமது அமைப்புமுறையின் வெற்றியை நிரூபிக்க, 1964இல் நமக்கு ஒரு பிரத்தியேக சந்தர்ப்பத்தையும் பொறுப்பையும் பெற்றுள்ளோம்... நாம் தோற்றோமானால்... பின்னர் வரலாறு மிகச் சரியாக கடுமையாக நமக்கு தீர்ப்பு வழங்கும்," என்றார்.

வரலாறு அதன் தீர்ப்பை வழங்கி உள்ளது. வறுமைக்கு எதிரான யுத்தமானது வறுமை மற்றும் பட்டனியை வேருடன் களைந்தெறிவதற்கு அருகாமையில் கூடவரவில்லை. அது தோல்வியுற்றது ஏனென்றால் அது அமெரிக்காவிற்கும் அல்லது வெளிநாடுகளுக்குள் இருந்த வர்க்க ஆட்சியின் அஸ்திவாரங்களை தொடமுடியாமல்போனது. ஜோன்சனின் திட்டங்கள் பணக்காரர்களுக்கு வரி வெட்டுக்களை உள்ளடக்கி இருந்த போதினும், அமெரிக்காவின் செல்வ வளத்தோடு ஒப்பிட்டால் (ஜோன்சன் அவரது பார்வையாளர்களுக்கு "பூவுலகில் மிகச் செல்வசெழிப்பான தேசம்," என்று நினைவுபடுத்தினார்) இத்திட்டத்திற்கு வெறும் ஆதாரவளங்களே பயன்படுத்தப்பட்டிருந்தது. பிரமாண்டமான ஆதாரவளங்கள் அமெரிக்க யுத்த எந்திரத்திற்குள் திருப்பி விடப்பட்டிருந்தது. வறுமைக்கு எதிரான யுத்தம், இறுதியாக, ஜோன்சனின் உரையைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் முன்னிலைக்கு வந்திருந்த அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியால் முற்றாக அரித்து தள்ளப்பட்டது.

உலகளாவிய பொருளாதாரத்தின் மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்தினால் அந்த தலைசிறந்த சமூகம் சாத்தியப்பட்டிருந்தது. 1964இன் இறுதியளவில், அப்போதும் அமெரிக்கா உலகின் தொழில்துறை உற்பத்திகளில் 40 சதவீதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. எவ்வாறிருந்த போதினும், ஒரு சமீபத்திய பொருளாதார வரலாற்று தகவலின்படி, 1950'களின் இறுதியின் தொடக்கத்தில், அமெரிக்கா ஆண்டுக்கு 3 பில்லியன் டாலரை விட அதிகமான செலுத்துமதி நிலுவை பற்றாக்குறையால் கலங்கி போயிருந்ததுடன், மேலும் "பாரியளவில் தங்கம் மற்றும் டாலர் உலகின் ஏனைய நாடுகளுக்கு வெளியேற" தொடங்கியது. 1960களில் அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்த போதினும், ஜப்பானிய மற்றும் மேற்கு ஜேர்மனிய பொருளாதாரங்கள் முறையே மூன்று மடங்கு மற்றும் இரண்டு மடங்கு வேகத்தில் வளர்ந்தன. முதலில் இருக்கும் ஆதாரவளத்திற்கு பொருத்தமான உற்பத்திகுறைவு நிகழ்முறையாக தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அமெரிக்க தொழில்துறையின் வீழ்ச்சி, குறிப்பாக வடக்கு நகர்புற பகுதிகளில் வெளிப்பட்டு இருந்தது. “4 மில்லியன் தொழிலாளர்கள், 13 சதவீத நமது தொழில்துறை திறன் இன்றும் பயன்படுத்தப்படாமல் உள்ளது," என்று குறிப்பிட்டு 1950களின் இறுதியில் ஏற்பட்ட மந்தநிலைக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னர், ஜோன்சன் அவரது உரையில் இதை மறைமுகமாக ஒப்பு கொண்டார்.

தொழில்துறை வீழ்ச்சியின் முதல் அறிகுறிகளை மாற்றுவதற்கு வரியை வெட்டுவதே சிறந்த கருவியென கென்னடி, ஜோன்சன், மற்றும் அவர்களின் ஆலோசகர்கள் நம்பினர். “அனைத்திற்கும் மேலாக, இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் புதிய வேலைகளை மற்றும் புதிய சந்தைகளை உருவாக்க தனியார் செலவின ஓட்டத்திற்குள் நாம் 11 பில்லியன் டாலர் வரி குறைப்புகளை திறந்துவிட வேண்டும்," கென்னடியின் மத்திய நிதிக்கொள்கையை முன்னெடுத்து செல்கையில், இது ஜோன்சன் கூறியது. “இந்த நாடு நகர்வதற்கு இப்போது ஒரு வரி வெட்டு நமக்கு அவசியமாகும்." 1964 அமெரிக்க நிதிய சட்டம் உச்சவரம்பு வரி விகிதத்தை 91 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக குறைத்தது, நிகர வரிவெட்டில் கிடைத்த 30 சதவீதத்தை வருமானத்தை மேல்மட்டத்திலுள்ள 2 சதவீத வரிசெலுத்துவோரிடம் ஒப்படைத்தது. பெருநிறுவன வரிகளும் குறைக்கப்பட்டன.

செல்வ செழிப்பான பிரிவினருக்கு வரி வெட்டுக்களை வழங்குவது தொழில்துறையில் முதலீட்டை அதிகரிக்க அவர்களை முன்நடத்தி செல்லும் என்ற இந்த தர்க்கம், 1960'களில் தோல்வி அடைந்தது. அந்த தசாப்தத்தில் பெருநிறுவன இலாபங்கள் 65 சதவீதம் உயர்ந்தன. இருந்த போதினும் பெருநிறுவனங்களும் செல்வந்த பங்குதாரர்களும் (stockholders) அதிகளவில் ஆதாரவளங்களை வெளிநாடுகளுக்கும் மற்றும் நிதியியல் ஊகவணிகத்திலும் திருப்பிவிட்டனர், இதை தான் வரலாற்றாசிரியர் அல்பிரட் சான்ட்லெர் 1965-1969இன் இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் "அளவுக்கு மீறிவிட்டன" என்று குறிப்பிடுகிறார். 1960களில் வெளிநாடுகளில் அமெரிக்க பெருநிறுவனங்களின் தொழில்துறை முதலீடு 500 சதவீதம் உயர்ந்தது. பங்குபத்திரங்களை நீண்டகாலத்திற்கு மற்றும் நிலையாக வைத்திருக்கும் பாரம்பரியம், படிப்படியாக, குறுகிய கால இலாபங்களை அடையும் ஒரு நுகர்வு மூலோபாயத்தால் இடம் மாற்றப்பட்டது.

ஹனோய் மற்றும் ஹவானாவில் இருந்தவர்களால் செய்யப்பட்ட நேரடி ஆக்கிரமிப்பானாலும் சரி ஊடுருவலானாலும் சரி, சுதந்திரத்திற்கான பாதையை பாதுகாப்பதற்கு" கென்னடியின் கீழ் மூன்று ஆண்டுகள் இராணுவ செலவுகளை அதிகரித்ததன் மூலமாக பெறப்பட்ட இராணுவ பாதுகாப்பு மற்றும் மேலாதிக்கத்தின் அளவை" தக்கவைக்க அவரது உரையில் ஜோன்சன் உறுதியளித்தார். ஆயினும் கென்னடி-ஜோன்சன் ஆண்டுகளின் பாரிய இராணுவ முதலீடுகள், ஆதாரவளங்களை உற்பத்திக்கான உபயோகத்தில் இருந்து வெளியேற்றியதோடு, அமெரிக்க எல்லைகளைக் கடந்தும் பெருமளவிலான டாலர்களை வெளியேற்றியதன் மூலமாக அமெரிக்க பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பங்களிப்பு செய்தது.

ஆகஸ்ட் 1964இல் ஜோன்சன் நிர்வாகம் ஆகஸ்ட் 1964இல் டோன்கின் வளைகுடா சம்பவத்தை போர் அறிவிப்பிற்கான போலிக்காரணமாக உருவாக்கினார். மேலும் அதற்கடுத்த தசாப்தத்தில் வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கா அண்ணளவாக 700 பில்லியன் டாலர் செலவிட்டது. காலனித்துவ எதிர்ப்பு தேசிய விடுதலை முன்னணி மற்றும் வடக்கு வியட்நாமை தோற்கடிப்பதில் தோல்வியடைந்த முயற்சியில் அனேகமாக 3 மில்லியன் தென்கிழக்கு ஆசியர்களும், அவர்களோடு 58,000 அமெரிக்க படையினரும் கொல்லப்பட்டனர். வியட்நாம் யுத்தத்திற்கான செலவுகளுக்கும் வறுமைக்கு எதிரான யுத்தத்திற்காக செலவிடப்பட்ட செலவுகளுக்கும் இடையிலான தொடர்பு ஜோன்சனின் விமர்சகர்களால் வரையறுக்கப்பட்டது, அவர்களில் மார்டின் லூதர் கிங்கும் இருந்தார். அவர், “ஒவ்வொரு எதிரி படையினனை கொல்வதற்கும் அமெரிக்கா 500,000 டாலர் செலவிட்டது, அதேவேளையில் ஏழை என்று வகைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் நாம் வெறுமனே ஐம்பத்தி மூன்று டாலர்கள் மட்டும் செலவிட்டுள்ளோம்," என்று குறிப்பிட்டார். 1960களின் இறுதியில், அமெரிக்காவில் பத்தில் ஒரு வேலை பாதுகாப்புத்துறை வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டுடன் இணைந்திருந்தது.

ஜோன்சனின் மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்த நிகழ்ச்சிநிரல் அமெரிக்காவின் பெரும் செல்வ வளத்தால் சாத்தியமானது என்ற போதினும், தொழிலாளர் வர்க்கத்தின் போர்குணத்தன்மையின் காரணத்தால் அது அரசியல் ரீதியாக அவசியமானதாக பார்க்கப்பட்டது. 1950களின் இறுதி மற்றும் 1960களின் தொடக்கத்தில், எஃகுத்துறை, வாகனத்துறை, மின்சாரம், விமான போக்குவரத்து, மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகள் உட்பட பிரதான தொழில்துறைகளை வேலைநிறுத்தங்கள் பற்றிக் கொண்டிருந்தன, அதேவேளையில் ஆசிரியர்களும் அரசு தொழிலாளர்களும் தொழிலாளர்களின் உரிமைகளைக் கோர தொடங்கி இருந்தனர். தெற்கில் ஜிம் கிரோவ் தீண்டாமைக்கு எதிராக மற்றும் வடக்கில் நகர்புற வறுமைக்கு எதிராக கறுப்பின தொழிலாளர்களின் மற்றும் இளைஞர்களின் பாரிய போராட்டம், ஜனநாயக கட்சியின் தலைமைக்கு இன்னும் அதிகமான எச்சரிக்கை கொடுப்பதாக இருந்தது. ஜனநாயக கட்சியின் தெற்குபகுதி மற்றும் அதன் பெரு நகர அரசியல் அமைப்பினால் நிலைமைகள் மேற்பார்வையிடப்பட்டு வந்தன.

எவ்வாறிருந்த போதினும் தலைசிறந்த சமூகத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களால் தொழிலாள வர்க்கத்தின் போர்குணமிக்க போராட்டத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. பொது உரிமைகள் போராட்டங்களின் அமைதிவாத குணாம்சம் 1960களின் இறுதியில் எழுந்த பாரிய நகர்புற எழுச்சிகளுக்கு பாதை அமைத்தது. மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்திய நோக்கங்களுக்கு எதிரான எதிர்ப்பிற்குள் திரும்பினர். மேலும் 1970களின் தொடக்கத்தில், 1945-46க்குப் பின்னர் எழுந்த மிகப் பெரிய வேலைநிறுத்த அலை நாட்டை மூழ்கடித்தது.

தலைச்சிறந்த சமூகத்தின் தாராளவாத சீர்திருத்தவாதத்தின் தோல்வி, 1970களின் ஊதியத்திற்கான வேலைநிறுத்தங்கள், மற்றும் உலகளாவிய நிலையில் இருந்து அமெரிக்க முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சி, வர்க்க உறவுகளில் ஒரு கூர்மையான மாற்றத்திற்கு களம் அமைத்தது.

நிதிய ஊகவணிகம் மற்றும் பணக்காரர்கள் தனிப்பட்ட செல்வத்தை அடைவதை நோக்கி ஆதாரவளங்களை திருப்பிவிடுவதென்பதே இரண்டு பிரதான கட்சிகளின் முக்கிய உள்நாட்டு கொள்கையாக மாறி இருந்தது. தொழில்துறையின் பெரும்பாலான பிரிவுகள் 1970களில் இருந்து மூடப்பட்டன, அது நகரங்களையும் ஒட்டுமொத்த பிராந்தியங்களையும் பேரழிவுக்கு உள்ளாக்கியது. அதற்குப் பின்னர் வெற்றிபெற்று வந்த நிர்வாகங்களும் காங்கிரஸ்களும் செல்வந்தர்களுக்கு வரி வெட்டுக்களை வழங்கியதோடு, ஒரு தொழில்துறை மாற்றி ஒரு தொழில்துறையின் மீது கட்டுப்பாடுகளைத் தளர்த்த தொடங்கின. 1980களில், இது தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவுகளுக்கு எதிராக ஓர் இரக்கமற்ற பிரச்சாரத்தோடு இணைந்திருந்தது.

இத்தகைய நிகழ்முறைகளில் இருந்து கொழுத்து வளர்ந்த ஆளும் அடுக்குகள், சமூக திட்டங்களுக்கான எந்தவொரு அரசு செலவையும் பொறுக்க முடியாதபடிக்கு அவர்களின் தனிப்பட்ட செல்வ செழிப்பிலிருந்து கழிக்கப்படுவதாக பார்க்க தொடங்கின.

1970களின் இறுதி வாக்கில், இரண்டு கட்சிகளுமே 1930கள் மற்றும் 1960களின் சீர்திருத்த கொள்கைகளை பின்வாங்கசெய்வதில் வெற்றி கண்டன. ஆனால், முக்கியமாக கடந்த சீர்திருத்தங்களோடு இணைந்திருந்ததால், ஜனநாயக கட்சி இத்தகைய தாக்குதல்களை நடத்துவதில் மிகவும் செயலூக்கத்தோடு இருந்துள்ளது. புதிய உடன்படிக்கையில் (New Deal) இருந்து ஜனநாயக கட்சியின் பிரான்க்லின் டெலானோ ரூஸ்வெல்ட் கீழ் கொண்டு வரப்பட்ட சார்ந்திருக்கும் குழந்தைகளுடனான குடும்பங்களுக்கான நல உதவி (Aid to Families with Dependent Children) என்று முன்னர் அழைக்கப்பட்ட, “நலத்திட்டம்" என்று பொதுவாக அறியப்படும் மத்திய அரசின் திட்டம், தலைச்சிறந்த சமூகத்தில் ஜோன்சனால் பரந்தளவில் விஸ்தரிக்கப்பட்டு, 1996இல் ஜனநாயக கட்சியின் பில் கிளிண்டனால் அழிக்கப்பட்டது. பராக் ஒபாமா அந்த தலைச்சிறந்த சமூகத்தின் முக்கிய சீர்திருத்தமான மருத்துவ பராமரிப்பை "சீர்திருத்தம்" என்ற பொய்யான பெயரில் இப்போது அவரது தாக்குதலுக்கு இலக்காக கொண்டுள்ளார்.

இந்த தாக்குதல்கள் ஈவிரக்கமின்றி உள்ளன. மிக சமீபத்தில், உணவு மானிய கூப்பன்கள் மீதான செலவுகளைக் குறைக்க மற்றும் நீண்டகால வேலைவாய்ப்பின்மை காப்பீடுகளை வெட்ட ஒபாமா குடியரசு கட்சியினருடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ஒட்டுமொத்தமாக ஏறத்தாழ 60 மில்லியன் அமெரிக்கர்களை பாதிக்கும் இத்தகைய வெட்டுக்கள், கணக்கிடவியலா மனித அவலங்களுக்கு இட்டு செல்கின்றன, இவை தனிப்பட்ட அமெரிக்க பில்லினியர்களிடம் உள்ள தொகையை விட மிக குறைந்த பணத்தைத் தான் "சேமிக்கும்". வர்க்க பிளவின் மற்றொரு பக்கத்தில், பெடரல் ரிசேர்வ் பங்குச்சந்தைகளை புதிய உயரங்களுக்கு ஓட்டிச் சென்று, நிதிய மோசடியாளர்களுக்கு இலவச கடன்களின் மூடியை திறந்துவிட்டுள்ளது.

தற்போது, வறுமையை முடிவுக்கு கொண்டு வர ஜோன்சன் சூளுரைத்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் இரண்டும் 50 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட, ஆறில் ஒருவர், உத்தியோகபூர்வ வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஒரு நாட்டில் அதன் அதிகரிப்பை உறுதிப்படுத்தும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். கருச்சிதைக்கப்பட்ட வறுமைக்கு எதிரான யுத்தம்" நீண்டகாலத்திற்கு முன்பிருந்து தொழிலாள வர்க்கத்தின் மீதான சமூக மற்றும் அரசியல் யுத்தம் என்பதால் மாற்றப்பட்டு உள்ளது, அதில் பெருமளவிலான செல்வ வளம் சமூகத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு பரிமாற்றப்பட்டுள்ளதோடு, அடிமட்டத்திலுள்ள மக்கள் அனுபவிக்கும் பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக அவலங்கள் "புதிய வழமையாக" அறிவிக்கப்படுகின்றன.

இந்த இலாப அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் வறுமையை இல்லாதொழிக்க வாய்ப்பே இல்லை என்பதை மறுக்கவியலாதபடிக்கு கடந்த அரை நூற்றாண்டு எடுத்துக்காட்டி உள்ளது. நிதியியல் மற்றும் பெருநிறுவன செல்வந்த தட்டின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவும், மற்றும் சோசலிச அடித்தளங்களில் பொருளாதார வாழ்வை மறுஒழுங்கமைக்கவும் பாரிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல்ரீதியாக ஒன்றுதிரட்டுவதன் மூலமாக மட்டுமே இந்த அவசர கடமையை பூர்த்திசெய்யமுடியும்.