சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French president’s New Year message: an agenda for militarism and class war

பிரெஞ்சு ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி: இராணுவவாதம் மற்றும் வர்க்கப் போருக்கான ஒரு திட்டநிரல்

By Pierre Mabut
8 January 2014

Use this version to printSend feedback

ஆளும் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் டிசம்பர் 31 அன்று தொலைக்காட்சியில் வழங்கிய உரையில் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை வழங்கினார். 2013 இல் தனது அரசாங்கம் நடத்திய நவ-காலனித்துவ போர்களை தம்பட்டமடிக்கும் விதமாக, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள், மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீதான ஒரு போர் அறிவிப்பாகக் கருதக் கூடிய ஒன்றை அவர் அறிவித்தார்.

பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் நீதி ஆகியவற்றின் விதிகளை மதிப்பதற்கு அவர் விடுத்த அழைப்பு வெற்றுத்தனமானதாக இருந்தது. உண்மையில் பிரான்ஸ் 2013 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் சேர்ந்து வேலை செய்து, சிரியாவுக்கு எதிரான ஒரு போரைத் தொடக்குவதில் --இப்போர் ஈரானுடனும் இன்னும் ரஷ்யாவுடனுடனுமான போராக அதிகரிக்கக் கூடிய ஆபத்தைக் கொண்டிருந்தது-- கிட்டத்தட்ட வெற்றி கண்டது. ஹாலண்டின் சிக்கன நடவடிக்கை கொள்கைகளும் புலம்பெயர்ந்தவர்களுக்கு விரோதமான கொள்கைகளும் அவரது அரசாங்கத்தை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலத்தின் மிகவும் அவப்பெயர் பெற்ற அரசாங்கமாக ஆக்கியிருக்கிறது என்பதுடன் அடுத்த மார்ச்சில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய தேர்தல்களில் நவ-பாசிச தேசிய முன்னணி (National Front) தான் மிக அதிக வாக்குகளைப் பெறக் கூடிய ஒரு சூழலையும் உருவாக்கி அளித்திருக்கிறது.

இந்தக் கொள்கைகள் நாசகரமான தாக்கத்தைக் கொண்டுவந்திருக்கின்ற நிலையிலும் கூட, அவற்றையே இன்னும் அதிகமாக வழங்குவதைத் தவிர ஹாலண்ட் வேறெதுவும் செய்வதற்கில்லை என்பது, முதலாளித்துவமும் பிரான்சின் முதலாளித்துவ இடது கட்சிகளும் திவால் கண்டிருக்கும் நிலைக்கு சான்று கூறுகிறது.

ஒரு யுத்தத் தலைவராக தன்னை முன்நிறுத்திக் கொள்வதின் மூலம் தனது பிரபலத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் ஒரு முயற்சியாக, அவர், மாலி, சிரியா, மத்திய ஆபிரிக்க குடியரசு என படுபயங்கரமான சர்வதேச நெருக்கடிகளின் சமயத்தில் பிரான்ஸ் தனது கடமையை நிறைவேற்றியிருக்கிறது என்று அறிவித்தார். தனது உரைக்கு வம்பிழுக்கும் வாய்வீச்சு கொண்டு அவர் மசாலா சேர்த்துக் கொண்டார்: அமைதியை நிலைநாட்டுவதில் பிரான்ஸ் எப்போதும் முன்னிலையில் நிற்கும், அதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இது அதன் பெருமையும் கடமையும் ஆகும். அதனால் தான் பயங்கரவாதத்திற்கு எதிராக போராட நாம் மாலியில் தலையிட்டோம். சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவே நாம் செயல்பட்டோம். மனித உயிர்களைக் காப்பதற்காக மத்திய ஆபிரிக்காவில் நின்று கொண்டிருக்கிறோம்.

ஆபிரிக்காவின் வறுமைப்பட்ட மக்களை பலிகடாவாக்கி அக்கண்டத்தின் வளங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஏகாதிபத்தியங்கள் போடும் போட்டியின் ஒரு பகுதியே அங்கு அவரது தலையீடுகள் என்ற உண்மையைபெருமை மற்றும் கடமை க்கான இத்தகைய இரத்தக்கறை படிந்த முறையீடுகளால் மறைத்து விட முடியாது.

சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவே பிரான்சும் அமெரிக்காவும் அங்கு தலையீடு செய்ததை இவர் ஆதரித்தார் என்ற கூற்று ஒரு அப்பட்டமான பொய் ஆகும். இந்த இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதே பிரான்ஸ் மற்றும் அதன் கூட்டாளிகளால் ஆயுதமளிக்கப்பட்ட ஜிகாதி பினாமி பிடைகள் தான் என்பதற்கான சான்றுகள் மலையளவு இருக்கின்றன. சிரிய இராணுவம் அதன் சொந்த மக்களுக்கு எதிராக சரின் வாயுவை பயன்படுத்தியதாகக் கூறிய போலிக் குற்றச்சாட்டுகள் எல்லாம் ஒரு நேட்டோ தலையீட்டைத் தூண்டுவதற்கும் ஏகாதிபத்திய ஆதரவுத் தலையீட்டை இராணுவத் தோல்வியை சந்திப்பதில் இருந்து மீட்டெடுப்பதற்குமான வகையில் வடிவமைக்கப்பட்டவையாக இருந்தன.

இதுதான் ஒரு பொறுப்புடைமை ஒப்பந்தம் என்று ஹாலண்ட் அழைத்த, அவரது தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் ஆலோசனைகளுக்கு தொனியமைத்துக் கொடுத்தது. அதன்படியே, வேலை பாதுகாப்பு தொடர்பாக 2013 ஜனவரியில் எட்டப்பட்ட தேசிய தொழிற்துறை ஒப்பந்தத்தை (l’Accord national interprofessionnel -ANI) பேசி முடித்ததற்காக சமூகப் பங்காளிகளுக்கு - அதாவது, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் முதலாளிகளுக்கு - அவர் தலை வணங்கினார்.

முதலாளிகள் ஊதியங்களைக் குறைத்து தொழிலாளர் விதிகளை ஒதுக்கி வைத்து மற்றும்  சம்பளத்துக்குரிய வேலைநேரக் குறைப்புகளை பாரிய அளவில் அமல்படுத்துவதன் மூலம்நோய்வாய்ப்பட்ட தொழிற்சாலைகளில் போட்டித்திறனை அதிகரிக்க வழிவகை செய்துதரும் ஒரு சட்டத்திற்கு இது இட்டுச் சென்றது. அதுமுதலாக வேலைகள் தொடர்ச்சியாக ஓய்வு ஒழிச்சலின்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டில் பாரிஸ் அருகிலுள்ள ஒல்னே என்ற இடத்தில் உள்ள PSA வாகன உற்பத்தித் தொழிற்சாலை மூடப்பட்டதை - இத்தொழிற்சாலையில் 3,000 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தார்கள் - இதற்கான முக்கிய உதாரணமாகக் கூறலாம்..

இதற்கு எல்லா தொழிற்சங்கங்களும் ஒப்புக் கொண்டன. சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் கொள்கையின் வரிசையில் போலி-இடது குழுவான Lutte Ouvrière (தொழிலாளர் போராட்டம்) இன் ஒரு உறுப்பினரின் தலைமையிலான CGT தொழிற்சங்கம் இதற்கு பொறியமைவு செய்து கொடுத்தது. இந்த ஆலைமூடலை விலக்கிவிடமுடியாதது என்று அது விவரித்தது.

ஹாலண்டின் பொறுப்புடைமை ஒப்பந்தம் பிரெஞ்சு முதலாளிகள் கூட்டமைப்பின் (Medef) தலைவரான பியர் கட்டாஸின் கவலைகளை தீர்க்கும் மூன்று விடயங்களை எடுத்துரைத்தது. முதலாளிகளின் செலவினங்களில் அதீதமான சமூகச் செலவினக் குறைப்புகளுக்காய் செலுத்தப்படும் வரிச் செலுத்தங்களில் பில்லியன் கணக்கான யூரோக்களை வெட்டுவதற்கு அவர் உறுதியளித்தார். அத்துடன் முதலாளிகள் தமது நடவடிக்கைகளில் குறைவான தளைகளை எதிர்கொள்வார்கள் - அதாவது தொழிலாளர்களைச் சுரண்டுவதில் அவர்களுக்கு இன்னும் அதிகமான நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

இதற்கான பிரதிபலனாக வேலைகளை உருவாக்குவதற்கு முதலாளிகள் கொடுக்கும் வாக்குறுதிகளுடன் இந்தத் தாக்குதல் பிணைக்கப்படவிருப்பதாக ஹாலண்ட் கூறிக் கொண்டார்.

நாங்கள் இந்த ஆட்டத்திற்கு தயார் என்று கட்டாஸ் உற்சாகம் பொங்கக் கூறினார். நவம்பரில் ஹாலண்டுக்கு Medef அனுப்பிய திட்டம் தான் இது என்பதால் இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. Medef ஐ பொறுத்தவரை இது எந்த வேலை பாதுகாப்பும் அற்ற ஒரு பெரும் அளவிலான மலிவு ஊதியத் துறையை உருவாக்குவதாக உருப்பெறுகிறது.

வேலைவாய்ப்பற்றவர்களை வேலைக்கு நிர்ப்பந்திக்கும் அரசாங்க மானியம் பெற்ற ஒப்பந்தங்களை (contrats aidés) ஹாலண்ட் உருவாக்கிக் கொண்டிருப்பதில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இப்போது கிடைக்கப் பெறும் வேலைகளில் அநேகமானவை குறுகிய கால ஒப்பந்த வேலைகளாகவோ அல்லது தற்காலிக முகமை வேலைகளாகவோ இருக்கின்றன. இதில் இரண்டாவது வகையானது 1994 முதல் இரட்டிப்பாகி 580,000 ஆக ஆகியிருக்கிறது.

ஜனவரி 6 அன்று Le Monde க்கு அளித்த நேர்காணலில் கட்டாஸ் கூறினார்: “எனக்குத் திருப்தி. நாட்டை முடக்கத்தில் இருந்து வெளியில் கொண்டு வருவதற்கான ஒரு திட்டத்தை அவர் [ஹாலண்ட்] தொடக்கி வழி காண்பிக்கிறார். அந்த வழி எங்களைப் பொறுத்தவரை உகப்பானதாகவே இருக்கிறது.” ”எங்களது முதுகில் பாறாங்கற்களைப் போல் உட்கார்ந்திருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தடைகள், முட்டுக்கட்டைகள், தவறான எண்ணங்கள், மற்றும் பிடிவாதங்களில் இருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டால் மில்லியன் கணக்கான வேலைகளை உருவாக்க முடியும் என்று அவர் கூறிக் கொண்டார்.

வணிகங்களுக்காக ஹாலண்ட் வெட்ட எதிர்பார்க்கப்படும் தொகையளவை கட்டாஸ் அப்பட்டமாய் முன்வைத்தார்: தொழிலாளர்களுக்கான செலவினங்களில் 50 பில்லியன் யூரோக்கள் வெட்டு; அடுத்த ஐந்து ஆண்டுகாலத்தின் வரிகளில் 50 பில்லியன் யூரோக்கள் வெட்டு. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பின் அளவு ஐரோப்பிய சராசரி 40 சதவீதமாக இருக்கும் நிலையில் பிரான்சில் 46 சதவீதமாக இருப்பதை அவர் குறைகூறினார். இவ்வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொதுச் செலவினங்களில் 100 பில்லியன் யூரோக்களை சேமிப்பதே மிகச் சிறப்பானதாக இருக்கும் என்று கூறிய கட்டாஸ், குறிப்பாக குடும்ப நல உதவிகள் மற்றும் நோய்வாய்ப்படல் காப்பீடை வெட்டுவதற்கான இலக்குகளாய் தனிப்படுத்திக் காட்டினார்.

நெருக்கடியின் சுமையை சமூகத்தின் உற்பத்தியாளர்களது முதுகில் சுமத்தியதில் ஏதோ தனது அரசாங்கத்திற்கு எந்த பொறுப்பும் இல்லாததைப் போல ஹாலண்ட், நெருக்கடி நாம் எதிர்பார்த்திருந்ததை விடவும் நெடியதாகவும், ஆழமாகவும் ஆகி விட்டிருந்தது தான் தொழிலாளர்களின் மீதான அவரது புதிய தாக்குதலுக்குக் காரணம் என்று கூறி அதை நியாயப்படுத்தினார். ஆயினும் பங்குச் சந்தையோ 2013 ஆம் ஆண்டில் 18 சதவீதம் வெடிப்புடன் அதிகரித்திருந்தது.

வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை 17,800 அதிகரித்திருப்பதாக நவம்பர் மாதத்திற்கான சமீபத்திய வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை விவரத்தில் தெரிய வந்திருப்பதானது 2013 ஆம் ஆண்டுக்குள்ளாக அதிகரித்துச் செல்லும் வேலைவாய்ப்பின்மையை தலைகீழாக்கிக் காட்டுவதாக ஹாலண்ட் அளித்த தேர்தல் வாக்குறுதிகளைப் பொய்யாக்கி இருக்கிறது. உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை 3.29 மில்லியனை எட்டியிருக்கின்ற நிலையில், இனியும் பதிவு செய்யாத வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் உண்மையில் இது 5 மில்லியனை எட்டக் கூடியதாகும்.

2014 ஆம் ஆண்டு உறுதியான முடிவுகளுக்குரிய ஆண்டாக இருக்கும் என்று எச்சரித்த ஹாலண்ட் எல்லாவற்றுக்கும் முதலாய் பொதுச் செலவினங்களைக் குறைப்பதற்காய் சபதம் பூண்டார். சேவைகளில் PS அரசாங்கம் ஏற்படுத்தும் வெட்டுகளுக்கான பொறுப்பு உள்ளூர் அரசாங்கங்களிடம் தள்ளி விடப்படும்.

2012 இல் போட்டித்திறனுக்கான வரி வரவு (crédit d’impôt pour la compétitivité et l’emploi -CICE) என்ற பேரில் ஹாலண்ட் முன்னதாய் முதலாளிகளுக்கு அளித்த கையளிப்பானது இப்போது ஒரு ஆண்டிற்கு 20 பில்லியன் யூரோக்கள் செலவு வைக்கிறது. இத்தொகை ஜனவரி 1 முதலான விற்பனை வரி (VAT) அதிகரிப்பின் மூலமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டோரின் சட்டைப்பைகளில் இருந்து எடுக்கப்படுகிறது. 19.6 சதவீத வரிவிதிப்பைப் பெற்ற அநேக பொருட்கள் மற்றும் சேவைகளின் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. போக்குவரத்து மற்றும் சமையல் ஆகியவை இப்போது 7 சதவீதத்திற்குப் பதிலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. சமீபத்திய பொறுப்புடைமை ஒப்பந்தம் மூலமாகவும் தொழிலாளர் இதேபோன்ற அதிகரிப்புகளை எதிர்பார்க்கலாம்.