சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spanish workers face years of mass unemployment

ஸ்பெயினின் தொழிலாளர்கள் பாரிய வேலையின்மையை ஆண்டுகளாக எதிர்கொள்கின்றனர்.

By Paul Mitchell 
9 January 2014

Use this version to printSend feedback

ஸ்பெயினின் பிரதம மந்திரி மரியனோ ரஜோய் விடுத்த ஒரு கிறிஸ்துமஸ் செய்தியில், “2014ம் ஆண்டு, கூடுதல் பொருளாதார செயற்பாடுகள், வளர்ச்சியுடன்” சற்று நல்ல ஆண்டாக இருக்கும் எனக் கூறினார். “அடுத்த ஆண்டு உங்களுக்கு முன் நான் மீண்டும் நிற்கையில், குறைவான மக்களே ஸ்பெயினில் வேலையின்றி இருப்பர்; அதிகம் பேர் உழைப்பர்.”

“ஜூன் 2007ல் இருந்து, முந்தைய ஆண்டு மாதத்தின் வேலையின்மை எண்ணிக்கையுடன் ஒவ்வொரு ஆண்டும் நிலைமை மோசம், மோசமாகிக் கொண்டு வந்தது.... ஆனால் இப்பொழுது முதல் தடவையாக இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் போக்கு மாறியது, ஓராண்டிற்கு முன் இருந்ததைவிடக் குறைந்த வேலையற்றோர் எண்ணிக்கைதான் உள்ளது. நவம்பர் மாதம் இப்போக்கு தக்க வைக்கப்பட்டுள்ளது” என்று ரஜோய் ஒப்புக் கொண்டார்.

இத்தகைய கூற்றுக்கள் அபத்தனமானவை. ரஜோய் தன் அறிக்கையை, பொருளாதார வளர்ச்சி விகிதம் மற்றும் வேலையின்மை புள்ளிவிவரங்களில் உள்ள மிக மிக அற்ப முன்னேற்றங்களில் தளம் கொண்டுள்ளார். நாட்டின் மொத்தமான 4.8 மில்லியன் வேலையற்றோர் பட்டியலில் 2,500 க்கும் குறைவானோரே நவம்பர் மாதம் பதிவு செய்தனர் என்ற உண்மையை சுட்டி! அவர் 2013 இல் 1.3 சதவீத பொருளாதார சுருக்கத்திற்குப் பின்னர் 2014 ல் ஒரு 0.7 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என முன்கணித்தார்.

ரஜோயின் நம்பிக்கை ஸ்பெயினின் தொழிலாளர்களிடம் எடுபடவில்லை -- “வேலை இல்லாதவர் நாடு” என்ற வீடியோவில் இது குறிப்பாகிறது; இது அவர் உரையை துவங்குமுன் சமூக வலைப் பின்னல்கள் ஊடாக காட்டுத்தீ போல் பரவியது.

உழைக்கும் மக்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 26% வேலையின்றி உள்ளனர்; இளைஞர்களிடையே இந்த எண்ணிக்கை 55%க்கும் மேலாக உள்ளது. நீண்டகால வேலையின்மை (12 மாதங்களுக்கும் அதிகமானது) 2007 முடிவில் 19%ல் இருந்து 2013ல் வேலையற்றோர் எண்ணிக்கையில் 50% ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 40% வேலையற்றோர் எந்தவித வேலையின்மை நலன்களையும் பெறவில்லை.

வேலையில் இருப்போர் தங்கள் ஊதியங்கள் 2010ல் இருந்து உண்மை மதிப்பில் 7%க்கும் அதிகமாக குறைக்கப்பட்டுவிட்டதையும், வேலைகள் நிரந்தரமற்று இருப்பதையும் காண்கின்றனர். 3 மில்லியன் ஸ்பெயின் மக்களுக்கும் மேலானவர்கள் மாதம் ஒன்றிற்கு 307 யூரோக்களுக்கும் குறைந்த தொகையில், “கடுமையான வறுமையில்” உள்ளனர். நாடு ஐரோப்பாவில் மிகப் பெரிய செல்வ இடைவெளி கொண்டவற்றுள் ஒன்றாக உள்ளது.

Price Waterhouse Coopers என்னும் ஆலோசனை நிறுவனத்தின் டிசம்பர் அறிக்கை ஒன்று ஸ்பெயினின் பொருளாதாரம் அதன் 2008 நெருக்கடிக்கு முன் இருந்த நிலைக்கு 2033 வரை திரும்பாது என்று தெரிவிக்கிறது. பொருளாதாரம் ஆண்டு ஒன்றிற்றகு 2% வளர்ச்சி அடைந்தாலும், வேலையின்மை 2007 எண்ணிக்கையான 7% அடைய கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகும். தற்போதைய கற்பனை செய்யமுடியாத 2.3% வளர்ச்சி விகிதத்தில் வேலையின்மை 2024 வரை 10%க்கும் கீழே குறையாது.

கடந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஆணையம் (EC), ஸ்பெயினை அதன் தொடர்ந்த “பொருளாதார சமச்சீரற்ற நிலைக்கு”, 11 இடர் காரணிகளில் 6ல் தேர்ச்சி அடையவில்லை எனக் குறைகூறியது —நாட்டின் உண்மையான திறமையான மாற்று விகிதம், ஏற்றமதிச் சந்தைகளில் உள்ள பங்குகள் இழப்பு, அதன் நிகர சர்வதேச முதலீட்டு நிலைமை, உயர்ந்த வேலையின்மை, பொது மற்றும் தனியார் கடன்.

பொதுக்கடன் கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் யூரோக்கள் என உள்ளது; விரைவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100% ஐ விடக் கூடுதல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது தசாப்தத்தில் மிக அதிக அளவு ஆகும், இப்பொழுதுள்ள தனியார் துறை கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 200 சதவீதமாக உள்ளது. ஜூன் 2012ல் 100 பில்லியன் யூரோக்கள் வங்கிப் பிணையெடுப்பின் பாதிப்பும் ஆகும். பைனான்சியல் டைம்ஸிடம் பேசிய ட்யூக் பல்கலைக் கழக பொருளாதாரப் பேராசிரியர் ஜூவான் ரூபியா ராமிரெஸ், “இங்கு ஆழம் தெரியாத பகுதியில் நீங்கள் உள்ளீர்கள்... உங்கள் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100% ஐ விட அதிகம் என்றால், உண்மையில் வெடிக்கும் காட்சிகள் எளிதில் வரும்” என எச்சரித்தார்.

ஐரோப்பிய ஆணையம், ஸ்பெயினை அது “ஐரோப்பிய குழு பரிந்துரை செய்த முயற்சிகளைவிட குறைவாகத்தான் எடுத்துள்ளது, குறிப்பாக 2014க்கு” என்று எச்சரித்துள்ளது; இது பற்றாக்குறை-குறைக்கும் இலக்குகளை குறைத்தலில் குறிப்பாக உள்ளது; ஏற்கனவே அவை இரண்டு ஆண்டுகளுக்கு தளர்த்தப்பட்டுள்ளன. 2010ல் இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஆகும், 2013ல் 6.5, 2014 ல்5.8%. 2015க்கு இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.2%, 2016ல் 2.8% ஆக உள்ளது.

ஐரோப்பிய ஆணையம், வரிகள் அதிகரிப்பு, செலவுகள் குறைப்பு என 2010ல் இருந்து செய்யப்பட்டவையே பற்றாக்குறையைக் குறைக்கப் போதுமானதாக இல்லை, “ஐரோப்பிய வரம்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%க்கு மேல் நிதியப் பற்றாக்குறை கூடாது என்பதை அடைய 35 பில்லியன் யூரோக்கள் வரவு-செலவுத் திட்ட நடவடிக்கைகளில் தேவை” என்று கோரியுள்ளது.

ஐரோப்பிய ஆணையம், இந்த நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கியுடன் தானும் முக்கூட்டு உறுப்பினராக பொறுப்பு கொண்டுள்ளது பற்றி கருத்துக் கூறவில்லை. முக்கூட்டுதான் ஸ்பெயினின் பொருளாதாரக் கொள்கையை கடந்த சில ஆண்டுகளாக ஆணையிட்டு வருகிறது.

ஐரோப்பிய ஆணையம், ஸ்பெயின் அரசாங்கத்திடம் அதன் சீரற்ற நிலைக்காக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1% அபராதம் உட்பட தடைகளை சுமத்தாது என்றது; ஆனால் தொழிலாளர் சந்தை சட்டங்களிலும் ஓய்வூதியங்களிலும் சீர்திருத்தங்களின் திறமை பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்கள், மற்றும் ஏற்றுமதிகளில் வளர்ச்சி என்பவை ஸ்பெயினின் பொருளாதார இடர்கள் அனைத்திற்கும் தீர்வு எனக் கூறப்படுகிறது. பொருளாதார மந்திரி லூயி டி குண்டோஸ் தொழிலாள வர்க்கத்தை வறுமைப்படுத்துவதுதான் இலக்கு என்பதைத் தெளிவுபடுத்தினார்; “தற்போதைய போட்டித் தன்மையில் இலாபம் நாணய மதிப்புக் குறைவினால் பெறப்படவில்லை, உள் மதிப்புக் குறைவினால், தொழிலாளர் செலவுகளைக் குறைத்தல்” என்னும் வழிவகையின் மூலம்; இதையொட்டி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தல், தேசிய கூட்டு ஒப்பந்தம் மாற்றப்பட்டு ஆலை அளவில் செய்வது எளிதாகிவிட்டது.

OECD என்னும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிதி இத்தாக்குதலை வரவேற்று, “2012 தொழிற்சந்தை சீர்திருத்தப் பரிசீலனை” கடந்த மாதத்தில், சீர்திருத்தங்கள் “சரியான திசையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கை... ஆனால் இன்னும் முயற்சிகள் தேவைப்படும்.... OECD ஸ்பெயினின் பணிநீக்கப் பணப் பட்டுவாடாக்கள் மிகத் தாராளமாக உள்ளன என்றும், குறைக்கப்பட வேண்டும், குறிப்பாக பெரிய நிறுவனங்களில் என்று புகார் கூறியுள்ளது.

மக்கள் கட்சி அரசாங்கம் கடுமையான மாத்திரையான உழைப்பு சீர்திருத்தங்களை இனிமைப்படுத்தும் வகையில் அவை பெரும்வேலைப் பாதுகாப்பிற்கு வகை செய்யும் என்கிறது, ஆனால் நவம்பர் மாதம் தோற்றுவிக்கப்பட்ட வேலைகளில் 7.6%தான் நிரந்தர ஒப்பந்தங்ள். ஓராண்டில் 298,000 நிரந்தர வேலைகள் இழக்கப்பட்டுவிட்டன, தற்காலிக ஒப்பந்தங்கள் 849,650 என்று உயர்ந்து விட்டன; இவற்றுள் மூன்றில் ஒரு பங்கு பகுதிநேர வேலைகள் ஆகும்.

இதுவரை ஸ்பெயினின் குறைந்த மீட்பு, ஏற்றுமதிகள் அதிகரிக்கப்பட்டதின் மூலம்தான் வந்துள்ளன; குறிப்பாக கார்த் தொழிலில்; இங்கு போர்ட், ஜெனரல் மோட்டார்ஸ், வோக்ஸ்வாகன் மற்றும் ரேனால்ட் ஆகியவை ஸ்பெயினில் உள்ள தங்கள் ஆலைகளின் தரங்களை உயர்த்தியுள்ளன, கொரியா போன்ற நாடுகளில் இருந்து தங்கள் உற்பத்தியை இங்கு மாற்றிவிட்டன.

ஆனால் முன்னாள் மெரில் லிஞ்ச் நிர்வாக இயக்குனரும் ஸ்பெயின் அரசாங்கத்தின் ஆலோசகருமான சீசர் மொலினாஸ், “நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய பெரும் முயற்சி கொண்டுள்ளன; ஏனெனில் அவை ஸ்பெயினில் கார்களை விற்க முடியாது. இந்நிகழ்வு நாடுகடத்தலே ஒழிய ஏற்றுமதி அல்ல; கார்கள் வெளிநாடுகளில் சில சமயம் நஷ்டங்களைக் குறைக்க அடக்க விலைக்கே விற்கப்படுகின்றன.” என எச்சரித்தார்.

மற்ற பொருளாதார வல்லுனர்கள், ஏற்றுமதிகள் மீட்பிற்கு நலிந்த தளம் ஏனெனில் உள்நாட்டுதேவை தேக்கத்தில் உள்ளது என்று எச்சரித்துள்ளனர். சில்லறை விற்பனைகள் 2008 பொருளாதார நெருக்கடிக்கு முன் இருந்தநிலையை விட இன்னும் கால் பகுதி குறைவாக உள்ளன.

ஸ்பெயின் நாட்டின் கார் செல்வாக்கு குழு Anfac ன் துணைத் தலைவர் மரியோ அர்மேரோ “ஸ்பெயின் கடந்த ஐந்து ஆண்டுகள் அதிக போட்டித்தன்மையில் உள்ளது. ஊதிய நிதானம், சில ஊதியக் குறைப்புக்கள் ஆகியவை உள்ளன. மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை இப்பொழுது மற்ற துறைகளை விட உயர்ந்துள்ளது.” என விளக்கினார்.

போர்டின் வாலென்சியா ஆலையின் புதிய ஊழியர்கள், உதாரணமாக பழைய ஊழியர்களை விட 16% குறைவாகப் பெறுகின்றனர்; தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்தான் நியமனம் பெறுகின்றனர். சமீப காலம் வரை அனைத்து கார்த் தொழில் ஒப்பந்தங்களும் நிரந்தரமாக இருந்தன.

ஸ்பெயினின் MCA-UGT உலோகத் தொழிலாளர் சங்கத்தின் கூட்டமைப்புச் செயலர் மரியனோ சீரேஜோ: “வருங்காலத்தில் இன்னும் தொழில் தோற்றுவிக்கப்படும் என்னும் உறுதிமொழி இருந்தால், வேலையை நாங்கள் தக்கவைத்துக் கொள்ள முடியும் வரை நாங்கள் தியாகங்கள் செய்ய பயப்படவில்லை.” என அறிவித்தார்.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 2,500 புதிய வேலைகள் கார்த்துறையில் தோற்றுவிக்கப்பட்டன என்றாலும், மொத்த தொழிற்துறை முழுவதிலும் 100,000 வேலைகள் இழக்கப்பட்டுவிட்டன.

ஜனவரி 1ம் திகதி, ஸ்பெயினின் 9 மில்லியன் ஓய்வூதியம் பெறுவோருக்கு, படிப்படியாக ஓய்வூதிய குறைவுகள் உண்டு என்னும் ஓய்வூதியச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. பணவீக்கத்திற்கு ஏற்றாற்போல் இயல்பாக ஓய்வூதியங்கள் அதிகரிப்பது நிறுத்தப்படும், புதிய தொகை “நீடித்திருக்கும் காரணி” உடன் தொடர்புபடுத்தப்படும், அதாவது வாழ்நாள் எதிர்பார்ப்புடன் பிணைக்கப்படும். மக்கள் நீண்ட காலம் வாழ்ந்தால், ஓய்வூதியம் குறைந்து கொண்டு போகும்.

IESE வணிகப் பள்ளி பேராசிரியர் Javier Díaz-Giménez, கருத்துப்படி, 2050 ஐ ஒட்டி புதிய விதிகளின் படி, 1000 யூரோக்கள் மாத ஓய்வூதியத்தின் உண்மை மதிப்பு 500 யூரோக்களுக்கும் குறைவாக இருக்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயினின் வரிவிதிப்பு முறையில்ரந்த தாக்கம் கொண்ட சீர்திருத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.