சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama’s phony campaign against inequality

சமத்துவமின்மைக்கு எதிரான ஒபாமாவின் போலி பிரச்சாரம்

Andre Damon
10 January 2014

Use this version to printSend feedback

வியாழனன்று ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகை உரையில் அவருடைய "பொருளாதார வாக்குறுதி மண்டலம்" என்றழைக்கப்படுவதை அறிவித்து ஒரு கச்சேரியை அரங்கேற்றினார். அது அமெரிக்காவில் உழைக்கும் மக்களின் அவலநிலைமைக்கு அவரது நிர்வாகம் மற்றும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் ஆத்திரமூட்டும் மற்றும் இழிவார்ந்த மனப்போக்கை வெளிப்படுத்தியது.

சமத்துவமின்மைக்கு எதிரான நிர்வாகத்தின் பிரச்சாரம் என்று கூறப்பட்டதன் பாகமாக அந்த சம்பவம் அரங்கேறியது. “வாக்குறுதி மண்டலங்கள்" என்பதற்கு அப்பாற்பட்டு, அந்த நிகழ்வின் மொத்த சாராம்சம், நீண்டகால வேலைவாய்ப்பின்மை சலுகைகளை மீளிருப்பு செய்வது மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தில் சிறிதளவு உயர்வு கொண்டு வருவதை உள்ளடக்கி இருந்தது.

வறுமை விகிதம் உயர்ந்து வருவதோடு சமூக சமத்துவமின்மை வரலாற்று அளவுகளில் நிற்கின்ற நிலையில், பெரு மந்தநிலைமைக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மிக ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு இடையே உரையாற்றுகையில், அமெரிக்காவில் சமூக நெருக்கடியின் ஒரு புறநிலையான விளக்கத்தை வழங்க ஒபாமா எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை. அவர் வறுமை, வேலைவாய்ப்பின்மை, பசி அல்லது நிதியியல் மேற்தட்டிற்கும் ஏனைய மக்களுக்கும் இடையிலான பரந்த பிளவின் மீது எந்தவொரு புள்ளிவிபரங்களையும் வழங்கவில்லை. அவரது பதவிகாலத்தின் போது சமூக நெருக்கடி ஏன் மோசமடைந்துள்ளது என்பதையும் கூட அவர் விளங்கப்படுத்த முயற்சிக்கவில்லை.

அவரது குறிப்புரைகள் மேலோட்டமாக, அவசரகதியில், இடையிடையே நகைச்சுவை துணுக்குகளோடு இருந்தது. அவர் அறிவித்த பிலடெல்பியா, லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் சான் அன்டோனியோ, மற்றும் தென்கிழக்கு கென்டக்கி மற்றும் ஒக்லஹோமாவின் சோக்டாவ் தேசம் ஆகிய வறுமையில் உள்ள சுற்றுப்புற பகுதிகளான அந்த ஐந்து "வாக்குறுதி மண்டலங்கள்" குறித்து அவர் எந்த உறுதியான விபரங்களையும் வழங்கவில்லை.

ஒபாமா நிர்வாகத்தால் தாக்குமுகப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் பொதுக் கல்வி மீதான தாக்குதலுக்கு ஒரு முன்மாதிரியாக மாறியுள்ள மற்றும் மில்லியன் கணக்கான டாலர் பெருநிறுவன நன்கொடைகளில் செயல்படும் ஒரு நன்கொடை சார்ந்த பாடசாலையான ஹார்லெம் சிறுவர் மண்டலத்தின் ஒரு மாணவர் குழுவின் முன்னால் நின்றிருந்தார். அரசு பள்ளிகளை நன்கொடை சார்ந்த பள்ளிகளாக மாற்றும் இயக்கத்தின் ஒரு பிரதான பிரபலமான, அந்த பாடசாலையின் தலைமை செயலதிகாரி ஜியாபெரி கனடா, 2010 ஆவணப்படமான Waiting for “Superman” என்பதில் தோன்றி இருந்தார். அது வறுமை மற்றும் நிதிப் பற்றாக்குறையால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு அரசு பாடசாலை ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியர்களையும் குற்றஞ்சாட்டியது. ஒபாமா அவரது "வாக்குறுதி மண்டலங்களுக்கு" கனடாவை ஒரு முன்மாதிரியாக சுட்டிக் காட்டினார்.

ஒபாமா கென்டக்கியில் இருந்து வந்திருந்த குடியரசு செனட்டர்கள் ராண்ட் போல் மற்றும் மிட்ச் மெக்கோனெல்லின் பிரசன்னத்தைக் குறிப்பிட்டார். காங்கிரஸில் உள்ள மிகவும் பழமைவாத கொள்கை உடைய குடியரசு கட்சியினரில் ஒருவராக ஹெரிடேஜ் ஆக்சன் நெட்வோர்க்கால் பட்டியலிடப்பட்ட போல், அமெரிக்கா முழுவதும் குறைந்த வரி "பொருளாதார கட்டுப்பாடற்ற மண்டலங்களை" அமைப்பதற்கான அவரது முன்மொழிவோடு ஒபாமாவின் "வாக்குறுதி மண்டலங்கள்" ஒத்திருப்பதாக Fox News'க்கு தெரிவித்தார். "ஒன்றை பாராட்டுவதற்கான சிறந்த வடிவம் அதை அப்படியே பின்பற்றுவதாகும் என்பதை அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள்,” என்று போல் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

ஊதியங்களைக் குறைக்க, வேலைகளை வேகப்படுத்த மற்றும் சாதனையளவிற்கு இலாபங்களைக் குவிக்க மற்றும் தலைமை செயலதிகாரிகளின் சம்பளங்களை உயர்த்தி கொள்ள, இந்த பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி உள்ள பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டை எவ்விதத்திலும் விமர்சிப்பதை ஒபாமா தவிர்த்தார். அவரது முனைவு வியாபார-நேசம் கொண்டதென்பதைத் தெளிவுபடுத்த அவர் அவரது வழியில் பயணித்தார். “இந்த மாதம் வெள்ளை மாளிகையில் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு, ஒருமுறை அல்ல, மாறாக இரண்டுமுறை விருந்தளிக்க உள்ளேன்,” என்று அவர் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை அதன் "வாக்குறுதி மண்டலங்கள்" திட்டங்கள் மீது ஒரு உண்மைநிலை அறிக்கை வெளியிட்ட அடுத்த நாள் இந்த உரை வெளியானது. அந்த முனைவானது, பல்வேறு வர்த்தகத்திற்கு சார்பான, அரசு கல்விக்கு விரோதமான திட்டங்களை மீண்டும் தொகுத்தளிப்பது அல்லாமல் வேறொன்றுமில்லை என்பதை அது தெளிவுபடுத்தியது. “வர்த்தகங்களை ஈர்க்க மற்றும் வேலைகளை உருவாக்க வாக்குறுதி மண்டலங்களாக உருவாக்கப்பட்ட பகுதிகளில் முதலீடு மற்றும் பணியமர்த்தல் வரிகளை வெட்ட மற்றும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஒபாமா முன்மொழிந்துள்ளதோடு காங்கிரஸைக் கூட்டவும் அழைப்புவிடுத்துள்ளார்,” என்று கூறி அந்த உண்மைநிலை அறிக்கை முடிந்திருந்தது.

அமெரிக்காவில் நிபந்தனையற்ற ஒரு வறுமைக்கு எதிரான யுத்தம் என்பதை ஜனாதிபதி ஜோன்சன் பிரகடனம் செய்ததில் இருந்து இப்போது ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன,” என்று குறிப்பிட்டு, வறுமை மற்றும் வேலையின்மையைக் களைந்தெறிவதற்கான லிண்டன் ஜோன்சனின் ஜனவரி 1964 அழைப்பை நினைவுபடுத்தி ஒபாமா அவரது குறிப்புரைகளைத் தொடங்கினார். அப்போது, ஜோன்சன் வறுமையை நீக்குவதை முதலாளித்துவ அமைப்புமுறைக்கான ஒரு பரிசோதனையாக குறிப்பிட்டார். ஆனால் வறுமையை முடிவுக்கு கொண்டு வருவதில் அந்த அணுகுமுறை அருகில் கூட வராமல் தோல்வி அடைந்ததைக் குறித்து தற்போதைய ஜனாதிபதி ஒன்றுமே கூறவில்லை.

ரூஸ்வெல்டின் புதிய உடன்படிக்கையின் சமூக சீர்திருத்தங்களை விரிவாக்கிய, வறுமையைக் கணிசமான அளவிற்கு குறைத்த மருத்துவ பராமரிப்பு மற்றும் மருத்துவ காப்பீடு மற்றும் உணவு மானிய கூப்பன்கள் போன்ற அரசு திட்டங்களை ஜோன்சனின் மாபெரும் சமூகம் உருவாக்கி இருந்தது, அதேவேளையில் ஒபாமா அனைத்திற்கும் அரசிடம் பதிலில்லை", “எவ்வளவு பணத்தாலும்" சமூக பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது, மற்றும் "வித்தியாசங்களைச் செய்வது" தான் சிறப்பாக செய்யக்கூடியதாகும் என்று அறிவித்ததன் மூலமாக துல்லியமாக அவரது முன்மொழிவுகளின் குணாம்சத்தை சிறியளவில் சமிக்ஞை காட்டினார்.

ஒபாமாவின் ஜனாதிபதி பதவிகாலத்தின் முதல் மூன்று ஆண்டுகளில், நாட்டின் மக்கள்தொகையில் மூன்று பங்கினருக்கு நெருக்கமாக, 31.6 சதவீத மக்கள், குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்காகவாவது பெடரலின் வறுமை கோட்டிற்கு கீழ் வீழ்ந்துள்ளனர் என்பதை மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் அறிவித்த அதே நாளில் தான் ஒபாமா அவரது உரையை வழங்கி இருந்தார்.

மில்லியன் கணக்கான அமெரிக்க மக்களுக்கு வலியையும், இழப்புகளையும் ஏற்படுத்தி இருந்த சிக்கன கொள்கைகளை அவரது நிர்வாகம் தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். உணவு மானிய கூப்பன் தேட்டங்களின் மீது கடந்த நவம்பரில் நடைமுறைப்படுத்தப்பட்ட 5 பில்லியன் டாலர் வெட்டுகளின் மேலேயே 9 பில்லியன் டாலர் வெட்டுக்களைக் கொண்டு வர காங்கிரஸில் உள்ள ஜனநாயக கட்சியினர் உடன்பட்டிருப்பதாக வியாழனன்று பரவலாக செய்திகள் குறிப்பிட்டன.

சமத்துவமின்மை மீதான வெள்ளை மாளிகையின் வனப்புரை முன்னெடுப்பானது நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற வரவு-செலவு உடன்படிக்கையோடு பொருந்தி நிற்கிறது. அந்த உடன்படிக்கை ட்ரில்லியன் டாலர்களை ஒதுக்கீட்டு வெட்டுகளைக் கொண்டிருக்கும் அதேவேளையில் அது பெடரல் தொழிலாளர்களின் ஓய்வூதிய தேட்டங்களை வெட்டுவது மற்றும் பிற்போக்குத்தனமான நுகர்வு வரிகளைத் திணிப்பது ஆகியவற்றையும் கொண்டிருந்தது.

டெட்ராய்ட் நகர தொழிலாளர்களின் ஓய்வூதிய மற்றும் மருத்துவ தேட்டங்களை வெட்ட மற்றும் டெட்ராய்ட் கலை கூடத்தின் கலை படைப்புகளை விற்க திவால்நிலைமையைப் பயன்படுத்த டெட்ராய்ட் அவசரகால மேலாளர் Kevyn Orr'இன் திட்டங்களை இந்த நிர்வாகம் ஆதரித்துள்ளது.

இதற்கிடையில், பிரபலமாக ஒபாமாகேர் என்று அழைக்கப்படும் கட்டுபடியாகிற மருத்துவ காப்பீடு, மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் மருத்துவ தேட்டங்களை வெட்டவும் காப்பீடு மற்றும் மருத்துவத்துறை தொழில்துறை பெருநிறுவனங்களின் இலாபங்களை அதிகரிக்கவும் செய்யப்படும் ஒரு மோசடியாக ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வருகிறது. அது சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்கள் போன்ற பிரதான சமூக திட்டங்கள் மீதான ஒரு தாக்குதலின் முதல் படியாக உள்ளது. திட்டங்களை வெட்டவும் மற்றும் இறுதியாக தனியார்மயப்படுத்தவும் குடியரசு கட்சியினரோடு சேர்ந்து ஒபாமா சூழ்ச்சிகள் செய்து வருவதோடு, பொதுமக்கள் உபயோகிக்கும் திட்டங்களிலும் அவர் ஆத்திரமூட்டும் விதத்தில் செயல்படுத்துகிறார்.

சமூக சமத்துவமின்மை மீது அறிவிக்கப்படும் ஒருமுனைப்பானது, ஒபாமா நிர்வாகத்தின் வலதுசாரி சமூக கொள்கைகள், அதன் சட்டவிரோத உள்நாட்டு உளவுவேலை திட்டங்கள், இராணுவவாதம் மற்றும் யுத்தத்தின் அதன் வெளியுறவு கொள்கைகள் மீது அதிகரித்து வரும் மக்கள் கோபத்திற்கு இடையே அதன் பிம்பத்திற்கு மறுவாழ்வு கொடுப்பதை நோக்கமாக கொண்ட ஒரு சந்தைப்படுத்தும் மூலோபாயமாகும். இந்த போலி பிரச்சாமானது, துரித உணவு மாதிரியிலான போராட்டங்களோடு மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தில் ஓர் உயர்வு கோரும் தரகு வேலைகளோடு இணைக்கப்பட்ட விதத்தில் தொழிற்சங்கங்களால் ஒத்துழைக்கப்படுகின்றன, அவை தாராளவாத மற்றும் போலி-இடது வட்டங்களில் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கூட்டாளிகளாலும் ஆதரிக்கப்பட்டது.

இந்த தந்திரத்தைக் கொண்டு, ஜனநாயக கட்சியினர் 2014'இன் மத்தியில் வரும் தேர்தல்களில் அவர்களின் வாய்ப்புகளைக் காப்பாற்றி வைக்க முடியுமென்றும் மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வளர்ச்சியை நிறுத்தி வைக்க முடியுமென்றும் நம்புகின்றனர்.

ஆனால் முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்வியை எந்தவிதமான சூழ்ச்சியும், ஏமாற்றுதனமும் மூடிமறைக்க முடியாது. வறுமைக்கு எதிரான யுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஐம்பது ஆண்டுகளானது இந்த இலாப அமைப்புமுறைக்குள் வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் சுரண்டல் உள்ளார்ந்து உள்ளன என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.

பெருநிறுவன இலாபங்கள் மற்றும் ஒரு ஒட்டுண்ணித்தனமான மேற்தட்டால் தனிநபர் செல்வ வள திரட்சிக்காக அல்லாமல் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதை அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்புமுறையைக் கொண்டு இந்த அமைப்புமுறைக்கு முடிவு கட்டுவதற்கான ஒரு போராட்டத்தினால் அல்லாமல் கடந்தகாலத்தின் சமூக வெற்றிகளைக் காப்பாற்ற முடியாது என்பது முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு இன்று தெளிவடைந்து வருகிறது. இதில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே அவசர பணியாகும்.