சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Ariel Sharon, war criminal (February 26, 1928-January 11, 2014)

ஏரியல் ஷரோன், போர்க் குற்றவாளி (பெப்ரவரி 26, 1928 – ஜனவரி 11, 2014)

By Jean Shaoul
13 January 2014

Use this version to printSend feedback

முன்னாள் இஸ்ரேலியப் பிரதம மந்திரியும் தளபதியும் மற்றும் குற்றம் சாட்டப்படாத போர்க்குற்றவாளியுமான ஏரியல் ஷரோன் சனிக்கிழமை ஜனவரி 11, 85 வயதில் இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டது. ஜனவரி 2006இல் ஒரு தொடர் பாரிசவாத தாக்குதல்களுக்கு பின் கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் உணர்வற்றநிலையில்(comatose) படுத்திருந்தார்.


ஏரியல் ஷரோன்

அந்நேரத்தில் ஊழலுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவருக்குச் சிகிச்சையளித்த வைத்தியர்களின் ஆலோசனையையும் மீறி அவருடைய குடும்பம் வலியுறுத்தியதின் பேரில் அவர் உயிருடன் வைக்கப்பட்டிருந்தார். இதேவேளை உறவினர்கள் அவருடைய நிதி விவகாரங்களை ஒழுங்குபடுத்தினர்.

ஷரோன் அவருடைய ஆத்திரமூட்டல், கொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு கொள்கைகளுக்காக மில்லியன் கணக்கானவர்களால் நியாயமான முறையில் கடிந்துரைக்கப்பட்டார். இவற்றிற்காக அவர் தனது இராணுவ, அரசியல் வாழ்வு முழுவதும்பாலஸ்தீனியர்களை படுகொலை செய்பவர்என்ற புனைப்பெயரையும் சம்பாதித்தார். இது பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலின் அண்டை அரபு நாட்டினர்களுக்கு எதிராக அவர் நடத்திய தொடர்ந்த கொடூரங்களின் விளைவாகும். மிக இழிந்த அவருடைய செயல் லெபனிய பாசிச Phalange உடன் கூட்டுச் சேர்ந்து பெய்ரூட்டிலிருந்த அகதி முகாம்களான சப்ரா, ஷாட்டிலாவில் 3,000 பாலஸ்தீனியர்களை செப்டம்பர் 1982ல் படுகொலை செய்ததாகும். இது லெபனான் மீது இஸ்ரேலிய படையெடுப்பினையும் ஆக்கிரமிப்பையும் தொடர்ந்து நடந்தது.

இஸ்ரேலிய அரசாங்கம் நியமித்த கஹான் ஆணைக்குழு (Kahan Commission) பாதுகாப்பு மந்திரி மற்றும் ஆக்கிரமிப்பு படைகளின் தலைவர் என்னும் முறையில் இந்தக் காட்டுமிராண்டித்தனமான குற்றத்திற்குசொந்தப் பொறுப்பை கொண்டுள்ளார் என முடிவு கூறியது. ஆனால் அவர் மீது குற்றவிசாரணை நடாத்தப்படாததுடன், அவர் இஸ்ரேலிய மந்திரிசபையில் தொடர்ந்தும் இருந்தார்.

வேறு எந்த அரசியல்வாதியையும் விட, ஷரோன் இஸ்ரேலிய விரிவாக்கக் கொள்கையை உருவாக்கி முன்னெடுத்தவராவார். இக்கொள்கைக்கான செலவு இன்றும், தொடர்ந்து நேரடியாக பாலஸ்தீனிய மக்களாலும், சமூகநலச் செலவுக் குறைப்புக்கள், இராணுவமயமாக்கப்பட்டதும் பெருகிய முறையில் ஜனநாயக விரோத அரசாங்கத்திற்கு நிதியளிக்க மறைமுகமாக இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தாலும் கொடுக்கப்படுகின்றன.

ஷரோனுடைய பெரிய இஸ்ரேல் கொள்கையுடன் ஒருங்கிணைந்திருந்தது  வகுப்புவாத, இனவாத சமய அரசியலுக்கு ஆதரவளிப்பதாகும். இதில் இனச்சுத்திகரிப்பு என்று பாலஸ்தீனியர்கள் மீது கணக்கிலடங்கா தாக்குதல்கள், இஸ்ரேலின் சொந்த அரபு மக்கள் மற்றும் குடியேறும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை அடங்கும். ஷரோனால் தொடரப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளில் பெரும்பகுதியின் விளைவாக செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையேயான இடைவெளி வளர்ந்துவிட்ட நிலையில், அரசாங்கம், வலதுசாரி குடியேறியவர்கள் மற்றும் தீவிர தேசியவாத வெறியர்களை அதிகளவில் நம்பியுள்ளது. அவர்கள் பாசிச போக்குகளை இஸ்ரேலுக்குள் வெளிப்பட அடித்தளத்தை கொடுக்கின்றனர். வீழ்ச்சியடையும் வாழ்க்கைத்தரம் மற்றும் பெருகும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றை ஒட்டிய சீற்றத்தினை பிற்போக்குவழிகளில் திசைதிருப்ப தீவிர தேசியவாதம் ஊக்குவிக்கப்படுகிறது.

ஷரோன் இறந்துவிட்டாலும், அவருடைய கசப்பான மரவு உயிர்வாழ்கின்றது. இது இஸ்ரேலின் அரசியல் ஆளும்தட்டினரின் கொள்கைகளில் இணைந்துள்ளது. ஷரோன் உருவாக்கிய லிகுட் கட்சி மற்றும் அதில் இருந்து பிரிந்த கடிமா (அவர் பின்னர் தன் சொந்த அரசியல் அமைப்பாக்கியது) ஆகியவை பெருகிய முறையில் இஸ்ரேலிய தொழிலாளர்களுடன் மோதலுக்கு வந்தன. ஏனெனில் அவற்றின் அதிக செலவுடைய குருதி கொட்டும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போராலும் அத்துடன் அவர்களுடைய பிற்போக்குத்தன சமூகக் கொள்கைகள் இணைந்ததாலும்.

ஷரோனுடைய இறப்பிற்கான பிரதிபலிப்பு மிகவும் துருவப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது. ரமல்லாவில் பாலஸ்தீனியர்களிடையே செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு மூத்த பத்தா அதிகாரியான ஜிப்ரில் ரஜுப் ஷரோனை 2004ல் பாலஸ்தீனியத் தலைவர் யாசீர் அரபாத்தின் இறப்பிற்குக் குற்றம் சாட்டினார். “ஷரோன் ஒரு குற்றவாளி, அரபாத் படுகொலைக்கு காரணமானவர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னே ஒரு போர்க் குற்றவாளியாக அவரைக் காணலாம் என நம்பியிருந்தோம்என்றார் அவர்.

காசாவில் ஒரு ஹமாஸ் தலைவரான கலில் அல்-ஹய்யா : “ஏரியல் ஷரோனை பல பாலஸ்தீனிய தலைமுறைகளை கொன்று, அழித்து துன்புறுத்திய நபர் என்று நாங்கள் நினைவில் கொள்ளுவோம்.” எனக்கூறினார்.

ஷரோனுடன் நெருக்கமான உறவை நிறுவிக் கொண்ட பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ், இஸ்ரேலுடனான பாலஸ்தீனிய அதிகாரத்தின் உறவுகள் பாதிக்கக் கூடாது என்பதற்காக அவருடைய இறப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேலுக்குள்ளே உள்ள வலதுசாரிகள் அவரைப் பாராட்டினர், பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தெனியாகு அவரைமுதலிலும் முக்கியமானதுமாக அவர் ஒரு தீரமிக்க படைவீரர், மிகச் சிறந்த இராணுவத் தளபதி, இஸ்ரேலின் பாதுகாப்பில் ஆரம்பத்தில் இருந்தே முக்கியபங்கு கொண்டவர் என்றார். Haaretz பத்திரிகை, இஸ்ரேலின் பெயரளவிலான தாராளவாத ஆளும்பிரிவின் சார்பில், ஷரோனின் பங்கைபாலஸ்தீனியர்களை படுகொலை செய்தவர், “முரண்பாடுகளில் முக்கியமானவர் என ஒப்புக் கொண்டபோதும், “பல தவறுகள் இருந்தும், ஷரோன் போன்ற தலைவர்கள் இல்லாமலிருந்தால் இஸ்ரேல் வறியதாகத்தான் இருந்திருக்கும்என்றது.

காசாவில் இருந்து வெளியேறி கடிமா கட்சியை 2005ல் அமைத்ததற்காக அவரைத் தாராளவாதிகள் புகழ்ந்து, நடைமுறையில் சமாதானவாதி எனச் சித்தரித்துள்ளனர். கடிமா ஒரு சிறிய பாலஸ்தீனிய நாடு நிறுவப்பட ஆதரவு கொடுத்துள்ளதுடன் ,இஸ்ரேலின் யூத பெரும்பான்மையை தக்கவைக்கமக்கள்த்தொகை மாற்றமும்தேவை எனக்கூறியுள்ளது.

காசாவிலிருந்து பின்வாங்கியது பாலஸ்தீனியர்களுடன் சமாதானத்திற்காக ஒரு நடவடிக்கை என்பதற்கு முற்றிலும் மாறாக, நிரந்தரமாக ஜெருசேலம் மற்றும் மேற்குகரையின் ஆகக்குறைத்தது பாதியளவையாவது இணைக்கும் நிலத்தை பறிப்பதற்குக் அமெரிக்கா கொடுத்த ஆதரவிற்கு ஒரு மறைப்பை கொடுத்துள்ளது. இது காசா மீது 2006 மற்றும் 2008-09இல் முழுஅளவு இராணுவத்தாக்குதலையும் முற்றுகையையும் சுமத்தியதன் மூலம் இன்னும் பெரிய இடரை அனுபவிக்க பாதை அமைத்தது.

சர்வதேச அரங்கில் உத்தியோகபூர்வ மட்டங்களில் ஷரோனின் இறப்பை ஒட்டி சற்று ஓரளவு அமைதியின்மை உள்ளது. இழிவுள்ளதாக இருந்தாலும், அவருக்கு கொடுக்கப்படும் பாராட்டுக்கள் சற்றே மட்டுப்படுத்தப்பட்டே உள்ளன. ஏகாதிபத்திய அரசியல்வாதிகள் பொதுவாக அவரைப் பெரும் நாட்டுப்பற்று உடையவர் எனப் பாராட்டியுள்ளனர். அவருடைய குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டுள்ளபோதும், இவற்றிற்காக ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேயர் ஆகியோரும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு விசாரணையை சந்தித்திருக்க வேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாஇஸ்ரேல் பிரதம மந்திரி ஷரோனுக்கு இறுதிவிடையளித்துள்ளது. நாட்டிற்கான அவருடைய பங்களிப்பிற்கு மதிப்பளிப்பதற்காக நாம் இஸ்ரேலிய மக்களுடன் இணைந்துகொள்கின்றோம்என்றார்.

ஷரோன் பிரதம மந்திரியாக இருக்கும்போது பதவியில் இருந்த புஷ், “தைரியமுடைய இம்மனிதரை அறிந்துகொண்டதாலும், அவரை நண்பர் என்று அழைப்பதில் பெருமைப்படுவதாக தெரிவித்தார். இதேபோல் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் மற்றும் அவருடைய மனைவி முன்னாள் வெளிவாவகார செயலருமான ஹில்லாரியும் ஷரோன் அவருடைய வாழ்வை இஸ்ரேலுக்குக் கொடுத்தார், “அவருடன் சேர்ந்து இயங்கியது, அவருடன் வாதிடுவது ஒரு பெருமைப்படவேண்டிய ஒன்று மற்றும் அவருக்குப் பிரியமான நாட்டிற்கு நல்ல பாதையைக்காண முயன்றதை எப்பொழுதும் பார்த்தோம்என்றனர்.

பிரித்தானியப் பிரதம மந்திரி டேவிட் காமெரோன்தைரியமான, சிக்கலான முடிவுகளை எடுத்ததற்கு ஷரோனைப் பாராட்டி, இவைசமாதானத்தைத் தொடர்வதற்கு செய்யப்பட்டனஎன்றும் கூறி இஸ்ரேலிய வரலாற்றில் மிக முக்கியமான மனிதர்களில் ஒருவர் என்று விவரித்தார்.

அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி ஒரு படி மேலே சென்று, இப்போர்வெறியர் ஒரு சமாதானத்திற்குப் பாடுபட்டவர் என்றார். மறைந்த இஸ்ரேலிய தலைவருடன் அமெரிக்க வேறுபாடுகள் கொண்டது இரகசியம் இல்லை என்ற அவர், “ஷரோன் பிரதம மந்திரியாக வந்து வரலாற்றின் போக்கை சமாதானத்தின் பக்கம் வளைக்க முயன்றதை மறக்க முடியாது என்றார்.

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அவரை சமாதானத்திற்குப் பாடுபட்டவர் என்று பாராட்டி, ஒரு நீண்ட இராணுவ, அரசியல் வாழ்க்கைக்கு பின், “அவர் பாலஸ்தீயர்களுடன் பேச்சுவார்த்தை என்ற தேர்வை எடுத்தார் என்றார்.

இக்கருத்துக்களில் கூறப்படாத உள்ளடக்கம் என்னவெனில், தற்போதைய இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தெனியாகு பாலஸ்தீனிய மக்களுடன் ஏதேனும் ஒரு வகை உடன்பாட்டை கண்டு, ஏகாதிபத்தியவாதிகள் பிராந்தியத்தில் தங்கள் நலன்களை பாதுகாக்கும் கொள்கைகளை தொடர விட வேண்டும் என்பதாகும். ஆனால், இஸ்ரேலுக்குள் ஷரோனின் இறப்பு வலதுசாரி தீவிரவாதிகளால் நாட்டு வெறிக்கூச்சலை ஒருங்கிணைக்கவும், பாலஸ்தீனியர்களுடன் உடன்பாடு காண்பதைத் தவிர்க்கவும் பயன்படுத்தப்படும். நெத்தெனியாகுதான் உடன்பாட்டின் அதிக விதிகளை கட்டளையிடுவார் என்றாலும் அதைத்தான் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கெர்ரி சுமத்த முற்படுகிறார்.

திங்களன்று அரச இறுதிக் கிரியைகளுக்கு நெத்தெனியாகு உத்தரவிட்டுள்ளார். இது சமய ஆணையான ஒரு நாளுக்குள் கிரியை நடத்தப்பட வேண்டும் என்பதை மீறுகிறது. ஆனால் ஷரோனுடைய இகழ்வின் காரணமாக அதிக அரசாங்க, அல்லது அரச தலைவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படவில்லை. ஒபாமா நிர்வாகம் துணை ஜனாதிபதி ஜோசப் பிடனையும், ரஷ்யா அதன் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவையும், பிரித்தானியா முன்னாள் பிரதம மந்திரி டோனி பிளையரையும் அனுப்புகின்றன.

அவர்களின் தயக்கம் எப்படி இருந்தாலும், ஷரோனை நாட்டுப்பற்றுமிக்கவர், சமாதானப்பிரியர் என்று கூறியதும், அவருடைய குற்றங்களை இழிந்த முறையில் காற்றில் பறக்க விட்ட வெள்ளை மாளிகையில் உள்ள தற்போதைய, முன்னாள் போர்க்குற்றவாளிகள், அவர்களுடைய நண்பர்கள் அனைவரும் டிரோன்கள் மூலம் படுகொலைகள், பொருளாதாரத் தடைகள், தவிர்க்க முடியாத போர்கள், இராணுவ மோதல்கள், ஆக்கிரமிப்புக்கள் என அவர் முன்னோக்கிக்காட்டிய பாதையைத் தொடருவர்.

********

கீழே ஷரோனின் இராணுவ, அரசியல் வாழ்க்கையை, முதலில் இரு பகுதிகளாக ஜனவரி 16, 18, 2006ல் அவர் உணர்வற்றநிலைக்கு சென்ற பாரிசவாத தாக்குதலுக்குப்பின் வெளியிட்ட கடுரையை இத்துடன் இணைத்துள்ளோம்.

ஏரியல் ஷரோன் : ஓர் அரசியல் மதிப்பீடு