சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Japan scrambles fighters amid escalating tensions with China

சீனாவுடனான அழுத்தங்கள் அதிகரிப்பிற்கு இடையே ஜப்பான் போர் விமானங்களை நிலைநிறுத்துகிறது

By Peter Symonds 
8 January 2014

Use this version to printSend feedback

வடகிழக்கு ஆசியாவில் உயர் அழுத்தங்களின் மற்றொரு அடையாளமாக ஜப்பான் நேற்று கிழக்கு சீனக் கடலில் (சென்காகு என்று ஜப்பானிய மொழியிலும் டியோயு என்று சீன மொழியுலும் அறியப்படும்) மோதலுக்குட்பட்ட தீவுகளுக்கு அருகே சீன பொதுச்சேவை  விமானங்களை எதிர்கொள்ள போர்விமானங்களை அனுப்பியதாக அறிவித்துள்ளது. Y-12 பிரோபொல்லர் விமானம் சீனாவிற்குத் திரும்பிச் செல்ல முன்னர் சென்காகு/டியோயு தீவுகளைச் சுற்றியுள்ள வான்பகுதியில் செல்லாது ஜப்பானிய பாதுகாப்பு அடையாளப் பகுதி zone (ADIZ) இனுள் நுழைந்தது.

இந்நிகழ்வு சீனா தனது ADIZ ஐ கடந்த நவம்பரில் மோதலுக்குட்பட்ட தீவுகள் உள்ளடங்கிய கிழக்கு சீனக் கடல் பகுதியில் அறிவித்தற்கு பின்னர் முதலாவதாகும். இது அமெரிக்கா மற்றும் ஜப்பானில் ஆக்கிரோஷ விடையிறுப்பைத் தூண்டியுள்ளது. ஒபாமா நிர்வாகம் உடனடியாக அமெரிக்க விமானங்கள் புதிய சீன நடைமுறையை புறக்கணிக்கும், அணுசக்தித்திறன் உடைய B52 குண்டு வீசும் விமானங்ககளை அப்பகுதியில் சீன அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் பறக்க விடும் என்று அறிவித்தது. அமெரிக்க நட்பு நாடுகள் ஜப்பானும் தென்கொரியாவும் ஒரு தவறு அல்லது தவறான கணிப்பு வெளிப்படையான மோதலைப் பெருக்கும் சாத்தியத்தை உருவாக்கும் ஆபத்தை அதிகரித்துபோதும் இதைப்பின் பற்றின.

இந்த சூடேறிய பூகோளஅரசியல் சூழ்நிலையில், ஜப்பானிய அரசாங்கமும் நேற்று தான் 280 தனித்திருக்கும் தீவுகளை அரசாங்க சொத்துக்கள் எனப் பதிவு செய்யும் மற்றும் இதனால் அவற்றின்நிர்வாகம் மேம்பாடு அடையும்என அறிவித்தது. ஜப்பானின் முந்தைய முடிவான செப்டம்பர் 2012ல் சென்காகு/டியோயுதீவுகளில் மூன்றை தேசியமயமாக்குதல் என்பது சீனாவிடம் இருந்து வலுவான எதிர்ப்புக்களைத் தூண்டி, இரு நாடுகளுக்கும் இடையே பாரிய அழுத்தங்களை அதிகரித்தது.

280 தீவுகளில் ஏதேனும் பிரச்சனைக்குள்ளானதா என்பது இன்னும் தெரியவில்லை. ஏனெனில் அவை இருக்குமிடங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஹாங்ஹாங்கை தளமாக கொண்ட South China Morning Post  பத்திரிகையிடம் இத்தீவுகள் அனைத்தும் ஜப்பானைச் சுற்றி இருப்பவை என ஜப்பானில் உள்ள பெருங்கடல் கொள்கையின் தலைமையகம் கூறியது. எதற்கும் பிற நாடுகள் போட்டியிடவில்லை. ஆனால் செய்தித்தாள் கருத்துப்படி, சில சீன பகுப்பாய்வாளர்கள்ஜப்பானின் இந்த நடவடிக்கை அதன் கடல்-சக்தியை அதிகரிக்கும் நடவடிக்கை எனக் கருதுகின்றனர்.”

ஜப்பானிய அரசாங்கம் இம்முடிவு கபடமற்றது எனச் சித்தரித்தாலும், இதுதீவுப்பாதுகாப்புஎன்ற ஜப்பானின் இராணுவ மூலோபாயத்தை மறுநிலைநோக்கு கொள்வதுடனும் மற்றும் சீன தரைக்கு அருகே உள்ள ஜப்பானின் தெற்கு தீவுத்தொடரில் இராணுவத்தை பலப்படுத்துவது என்பது தொடர்புபட்டது. டிசம்பர் 2012ல் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, வலதுசாரி தாராளவாத ஜனநாயக கட்சியின் (LDP) அரசாங்கம் பாதுகாப்புச் செலவுகளை முதல் தடவையாக ஒரு தசாப்தத்தில் அதிகரித்துள்ளதுடன், ஜப்பானிய ஆயுதப்படைகள் மீதுள்ள அரசியலமைப்பு, சட்டபூர்வ தடைகளை அகற்ற முற்படுகிறது.

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஐந்து ஆண்டு கால பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தில் கடற்படையின் கணிச விரிவாக்கம் அடங்கியுள்ளது. இதைத்தவிர 7 புதிய அழிக்கும் கப்பல்களும் இன்னும் 6 நீர்மூழ்கிக் கப்பல்களும் சேர்க்கப்படுகின்றன. ஒரு புதிய இருபுறமும் இருக்கும் கடற்படைப்பிரிவு தோற்றுவிக்கப்படும்; “அது விரைவில் இறங்கி, கைப்பற்றி தீவுகளை படையடுப்புக் காலத்தில் மீண்டும் காப்பாற்றும்.” கடலோர கண்காணிப்பும் விரிவாக்கப்படும், ஆளில்லாத டிரோன்கள் மற்றும் E2C எச்சரிக்கை விமானப்பிரிவு தெற்கில் ஓகினாவாவில் நிலைகொள்ளச்செய்யப்படும்.

ஜப்பானின் மறு இராணுவவாத ஊக்கத்திற்கு தனது ஆசியாவில் முன்னுரிமை கொடுத்தல்கொள்கை மூலம் நேரடியாக அமெரிக்கா பொறுப்பேற்கின்றது. ஜப்பானிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள அமெரிக்கத் தளங்கள் பென்டகனின் போர்த் தயாரிப்புக்களுக்கு மையம் ஆகும். ஜப்பானின் சொந்த இராணுவக் கட்டமைப்பு அமெரிக்காவின் மிக நெருக்கமான ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது. இது அக்டோபர் மாதம் ஜப்பானிய, அமெரிக்கப் பாதுகாப்பு, வெளியுறவு மந்திரிகள் கூட்டத்திற்குப்பின் வந்த கூட்டு அறிக்கையில் தெளிவாகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒபாமா நிர்வாகத்தின்முன்னுரிமை ஜப்பான் போன்ற அதன் முக்கிய நட்பு நாடுகளை சீனா மீது இன்னும் ஆக்கிரோஷ நிலைப்பாட்டை எடுக்க ஊக்கம் கொடுத்து, போர் ஆபத்தை பெரிதும் அதிகரித்துள்ளது. முந்தைய ஜனநாயக் கட்சி (DJP) ஜப்பானிய அரசாங்கம் சீனாவுடன் சென்காகு/டியோயு தீவுகள் குறித்து இராஜதந்திர மோதல்களை 2010இலும், மீண்டும் 2012ல் அவை தேசியமயமாக்கப்பட்ட பின்னும் தூண்டியது. இது அச்சம் நிறைந்த சூழ்நிலையை ஏற்படுத்தி, LDP அதிகாரத்தை அடைய அதனைப் பயன்படுத்திக்கொண்டது.

பிரதம மந்திரி ஷின்ஜோ ஏபே சீனாவுடன் அழுத்தங்களை இன்னும் தூண்டும் வகையில் ஜப்பானின் இழிந்த யாசுகுனி நினைவாலயத்திற்கு (போரில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் இடம்) டிசம்பர் 26ல் சென்றார். 2005ல் இருந்து முதல் தடவையாக பதவியில் இருக்கும் பிரதமர் இவ்வாறு செய்தது, சீனா, தென் கொரியா இன்னும் பரந்த சர்வதேசரீதியாக பரந்த விமர்சனத்தை தூண்டியது. இந்த நினைவாலயம் தண்டிக்கப்பட்ட ஜப்பானியப் போர்க்குற்றவாளிகளின் ஆன்மாக்களுக்கு ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல், இதனுடன் தொடர்புபட்ட அருங்காட்சியகம் 1930, 1940களில் ஜப்பானின் இராணுவவாதத்தை பெருமைப்படுத்தி அதன் குற்றங்களைக் குறைத்துகாட்டுகின்றது.

ஏபேயின் வருகையுடைய அரசியல் விளைவு கடந்த வாரம் பிரித்தானியாவில் சீன, ஜப்பானிய தூதர்களின் விந்தையான கருத்துப்பரிமாற்றத்தில் தொடர்ந்தது. இது பெய்ஜிங் மற்றும் டோக்கியோவிற்கு இடையே மோசமான மோதலின் அடையாளம் ஆகும். ஒவ்வொன்றும் மற்றதை வோல்டிமோர்ட் பிரபு நாட்டுடன் (ஹாரி பொட்டர் நாவல்களில் இறுதியான தீமையாக உருவமாக காட்டப்படும்) ஒப்பிட்டு, இராணுவவாதத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் குற்றம் சாட்டுகிறது.

கடந்த வாரம் டெய்லி டெலகிராப்பில் எழுதிய சீன தூதர் லியு ஜியோமிங்இராணுவ வாதம் ஜப்பானின் வோல்டிமோர்ட் போல் உள்ளதுஎன அறிவித்தார். யசுகுனி நினைவாலயம்நாட்டின் ஆன்மாவின் மிக இருண்ட பகுதிகளைப் பிரதிபலிக்கிறது.” இக்கட்டுரை இன்னும் பரந்த அளவில், பெய்ஜிங் ஆட்சியின் ஜப்பானிய எதிர்ப்பு என்னும் தேசவெறியின் வழியாக இருந்து, தன் சொந்த இராணுவக் கட்டமைப்பை நியாயப்படுத்தி, உள்நாட்டில் சமூக நெருக்கடியில் இருந்து திசை திருப்பி, வெளிநாடுகளில் இராஜதந்திர உத்தியாக செயல்படுத்துகிறது. பிரித்தானியாவிற்கு அத்தனை மறைப்பு இல்லாத முறையீட்டுடன் லியு முடிக்கிறார். பிரித்தானிய அமெரிக்கத் தலைமையிலான போர்கள் அனைத்திலும் கடந்த இரண்டு தசாப்தங்களாக பங்காளியாக உள்ளதுடன், “பிராந்திய உறுதிப்பாடு மற்றும் உலக சமாதானத்தைக் பாதுகாக்கஇரு நாடுகளுக்கும் இடையே இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் இருந்த உடன்பாட்டை புதுப்பிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

ஜப்பானின் தூதர் கீச்சி ஹயாஷி திங்களன்று தன் கட்டுரையை டெலிகிராப் பத்திரிகையில் வெளியிட்டார். அது சீன இராணுவ விரிவாக்கத்தை பிராந்திய அழுத்தங்களுக்குக் குறைகூறி, ஜப்பான் மறு இராணுவவாதம் கொண்டுள்ளது என்பதை மறுத்தது. யசுகுனி நினைவாலயத்திற்கு ஏபே வருகை எத்தகைய ஆத்திரமூட்டும் முக்கியத்துவத்தையும் கொள்ளவில்லை என்று கூறியது. சீனாவை மீண்டும்இப்பிராந்தியத்தில் வோல்டிமோர்ட் பங்கு வேண்டாம் என்று எச்சரித்து, ஆயுதப் பெருக்கம், அழுத்தங்களை அதகிரிக்க வேண்டாம் என்றும் கூறியது. மோசமாகும் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு இடையே, ஏபே அரசாங்கம் சீன எதிர்ப்பு உணர்வை தூண்டி அதன் இராணுவவாதத்தை நியாயப்படுத்தவும், சமூக அழுத்தங்களை திசைதிருப்பவும் பயன்படுத்துகிறது.

கட்டுரைகளில் இருக்கும் இராஜதந்திர நெறியில்லாத வார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள விரோதப்போக்கின் ஆழத்தைக் காட்டுகிறது. மோசமான நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பு மந்திரி சக் ஹெகல் ஜப்பானியப் பாதுகாப்பு மந்திரி இட்ஸ்நோரி ஓனோடெராவிற்கு சனியன்று தொலைபேசியில்ஜப்பான் அதன் அண்டை நாடுகளுடன் உறவுகளை முன்னேற்றுவிக்க நடவடிக்கைகளின் தேவையை அடிக்கோடிட்டுகாட்ட வேண்டும்என்றார்இக்கருத்துக்கள் அமெரிக்க வெளிவிவகாரத்துறையின் கருத்துக்களை எதிரொலிக்கின்றன. அது யசுகுனி நினைவாலயத்திற்கு ஏபேயின் விஜயம் குறித்து தனது அதிருப்தியைவெளிப்படுத்தியிருந்தது.

சீனா மீதான ஜப்பானின் ஆக்கிரோஷ நிலைப்பாட்டிற்கு வேண்டுமென்றே ஊக்கம் கொடுப்பதில் அமெரிக்கப் பங்கு இருக்கையில், இக்கருத்துக்கள் பாசாங்குத்தனத்தின் உச்சக்கட்டம் ஆகும். வாஷிங்டன் ஏபேயின் நினைவாலய விஜயம் குறித்த முக்கிய கவலை, அது குறிப்பாக தென் கொரியா உட்பட ஆசியாவில் பிற நாடுகளை விரோதம் கொள்ளச் செய்யும் மற்றும் டோக்கியோவுடனும் சியோலுடனும் நெருக்க இராணுவ உறவுகளை வளர்க்க வேண்டும் என்னும் அமெரிக்க முயற்சிகளுக்குக் குறுக்கே வரும் என்பதாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் எழுச்சியடையும் ஆபத்து மற்றும் போர்களுக்கான முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளது. இது மீண்டும் தன் இராணுவ வலிமையைப் பயன்படுத்தி ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் தன் மேலதிக்கத்தைத் தொடர விரும்புகிறது.