சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

With Iran accord, US shifts tactics, not predatory aims

ஈரான் உடன்படிக்கையோடு, சூறையாடும் நோக்கங்கள் இல்லாமலா, அமெரிக்கா தந்திரோபாயங்களைத் திருப்புகிறது

Keith Jones
16 January 2014

Use this version to printSend feedback

ஜனவரி 20இல், ஈரானின் சிவில் அணுசக்தி திட்டங்களை நிறுத்தி வைக்கும் ஒரு ஆறு மாதகால உடன்படிக்கை நடைமுறைக்கு வரும். ஈரானை இராணுவ பலங்கொண்டு மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வந்த பின்னர், வாஷிங்டன் தற்போது "சமரசத்திற்கான ஒரு வாய்ப்பை" வழங்க விரும்புவதால் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் மற்றும் ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றுடன் இந்த இடைக்கால உடன்படிக்கையில் பேரம்பேச இணைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறுகிறார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் தீர்க்கமான மூலோபாய நோக்கங்களைப் பின்தொடர்வதற்கு ஒரு தந்திரோபாயமாக மட்டுமே "சமரசத்தை" முயன்று வருகிறது. அந்த நோக்கங்களை அது இறுதியில் யுத்தத்தின் மூலம் அடைய முயலக்கூடும். ஈரான் மீது இப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் அச்சுறுத்தலை வாஷிங்டன் ஆழ்ந்த மற்றும் நிரந்தர விட்டுகொடுப்புகளுக்கு அழுத்தமளிப்பதற்கான ஓர் இன்றியமையா கூறாக காண்கிறது.

கடந்த செப்டம்பரில் சிரியா மீதான ஒரு தாக்குதலில் இருந்து வாஷிங்டன் பின்வாங்கிய பின்னர், ஈரானுடன் இராஜாங்கரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பியமை இரண்டு சூறையாடும் கணக்கீடுகளால் உந்தப்பட்டுள்ளது. முதலாவதாக, மத்திய கிழக்கில் மற்றொரு அமெரிக்க யுத்தமானது "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்" இருந்து, அதாவது, சீனாவை தனிமைப்படுத்தும் மற்றும் இராணுவரீதியில் எதிர்க்கும் முயற்சிகளில் இருந்து, அபாயகரமாக பின்னுக்கு தள்ளப்படும் என்பதாகும்.

இரண்டாவது, அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு ஈரானிய முதலாளித்துவ ஆட்சியாளர்களை இழுத்து வர முடியும், அதன் எண்ணெய் துறை மற்றும் செல்வ வளத்தை அமெரிக்க பெருநிறுவனங்களின் ஆதாயங்களுக்காக மறுபங்கீடு செய்ய முடியும், மற்றும் அதன் மூலோபாய இடத்தை அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் மத்திய கிழக்கைலெபனானில் இருந்து ஆப்கானிஸ்தான் வரையில்ஸ்திரப்படுத்த பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதாகும்.

அந்த இடைக்கால அணுசக்தி உடன்படிக்கையோடு, வாஷிங்டன் ஈரானிடமிருந்து பெரும் விட்டுக்கொடுப்புகளை வசூலித்துள்ளது. இந்த ஏற்பாடுகள் ஒரு இறையாண்மை அரசு மற்றும் அணுசக்தி பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஒரு நாடு என இரண்டு விதத்திலும் ஈரானின் உரிமைகளை நசுக்குகிறது. அந்த உடன்படிக்கை ஈரானின் 5 சதவீதத்திற்கு குறைந்த யுரேனிய செறிவூட்டுதலைத் தடுக்கிறது, ஈரானின் 20 சதவீதத்தில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் பாதியை வெளியேற்றுகிறது, தெஹ்ரான் அதன் அராக் கடினநீர் அணுஉலையை செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதைத் தடுக்கிறது, மற்றும் அந்நாட்டின் சிவில் அணுசக்தி திட்டத்தை முன்பில்லாத விதத்தில் உள்ளார்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்துகிறது.

இதற்கு கைமாறாக, அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளிகளும் சுமார் 7 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான "தடைகளைத் திரும்ப எடுக்கும் உதவியை" ஈரானுக்கு வழங்குகின்றன. இந்த தொகை—7 பில்லியன் டாலர்விதிக்கப்பட்ட தடைகள் மூலமாக வெறும் ஆறு வாரங்களில் எண்ணெய் இறக்குமதிகளில் ஈரான் இழந்த தொகை ஆகும்! அனைத்திற்கும் மேலாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளைப் பாதியாக குறைத்துள்ள மற்றும் அந்நாட்டை உலக வங்கியியல் அமைப்புமுறைக்கு வெளியே உறைய வைத்திருக்கும் முக்கிய தடைகள் முழுவதுமாக நடைமுறையில் உள்ளன.

இந்த தடைகள் யுத்தம் இல்லாத சமயங்களில் முன்பொருபோதும் திணிக்கப்பட்டிராத மிக கடுமையான தடைகளாகும். அந்த தடைகளே வலிய மோதலுக்குச் செல்லும் ஒரு நடவடிக்கையாக உள்ளன, அது பாரபட்சமின்றி ஈரானிய சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளை இலக்கில் கொள்கிறது. அவை ஈரானிய பொருளாதாரத்தைச் சீரழித்துள்ளதோடு, அரசு வருவாயை வீழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது, மேலும் 40 சதவீத பணவீக்கத்திற்கு எரியூட்டி பாரிய வேலை இழப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. மருந்துப் பொருட்கள் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்களின் இறக்குமதியை அவை தடுத்ததன் மூலமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வாஷிங்டனின் ஈரானிய கொள்கையானது, சிரியாவில் அதன் சுன்னி இஸ்லாமிய கைப்பாவைகள் மூலமாக அது நடத்தியுள்ள பிரிவினைவாத யுத்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த புள்ளி, ஈரானுடன் அதன் உடன்படிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்ட போது, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அதன் பிரச்சாரத்தை ஒப்புக் கொண்டதன் மூலமாக வாஷிங்டனாலேயே அடிக்கோடிட்டு காட்டப்பட்டது.

சிரியாவில் யுத்தம் குறித்து நடைபெறவிருக்கின்ற மாநாட்டில், ஈரான் விவகாரங்கள் நீக்கப்படும் என்று திங்களன்று ஒபாமா நிர்வாகம் அறிவித்தது. அமெரிக்கா ஆதரவளிக்கும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு பாதி இடங்களை வழங்கும் ஒரு "இடைக்கால அரசை" கொண்டு டமாஸ்கஸின் அதிகாரத்தை மாற்றுவதற்கு ஈரான் உடன்பட்டால், அம்மாநாட்டில் கலந்து கொள்ள தெஹ்ரானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு விவகாரத்துறை செயலர் ஜோன் கெர்ரி தெரிவித்தார்.

அதேவேளையில், வாஷிங்டன் ஆத்திரமூட்டும் விதத்தில் சிரியாவில் உள்ள அதன் கைப்பாவைகளுக்கு அதன் இராணுவ உதவிகளை அதிகரித்தது. வாஷிங்டனின் உதவிகள் அனேகமாக அல் கொய்தா குழுக்களுக்குச் செல்லும் என்றும், சிரியாவில் அதன் யுத்த உந்துதலினால் ஏற்படும் "துணை பாதிப்பாக" அமெரிக்காவிற்குள் பயங்கரவாத தாக்குதல்கள் "திரும்பி வருவதை" ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கலாம் என்றும் ஒபாமா நிர்வாகம் பார்ப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு நாடாக இருந்தாலும், ஒரு முழு அளவிலான சிவில் அணுசக்தி திட்டத்தை கட்டுப்பாடற்ற உரிமையோடு ஈரானால் பெற முடியும் என்பதால், ஈரானுடனான தற்போதைய தற்காலிக உடன்படிக்கையானது ஈரானின் அணுசக்தி திட்டத்தை வரம்புக்கு உட்படுத்தும் ஒரு "இறுதி" உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளுக்குக் களம் அமைக்க கூடியதாக உள்ளது.

அவர்கள் தோல்வி அடைய அங்கே "50க்கு 50” வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்ததோடு சேர்ந்து, தற்காலிக உடன்படிக்கைக்கு இட்டு சென்ற பேச்சுவார்த்தைகளை விட இந்த பேச்சுவார்த்தைகள் "மிகவும் கடினமானதாக" இருக்குமென்று ஒபாமா மற்றும் கெரி ஏற்கனவே அறிவித்துள்ளனர். அவ்வாறான ஒரு தோல்வியின் விளைவாக "அமெரிக்கா ஒரு நடவடிக்கையில் இறங்குமென்று" (அதாவது கடுமையான தடைகள் மற்றும் யுத்தத்திற்கான நாட்கள் எண்ணப்படும் என்பதை) வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர் தொடர்பு செயலர் ஜே கார்னே திங்களன்று அறிவித்தார்.

அமெரிக்காவைப் பொறுத்த வரையில், அணுசக்தி பிரச்சினை என்பது எப்போதுமே மிரட்டுவதற்கு மற்றும் ஈரானைத் தனிமைப்படுத்துவதற்கு மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் பின்புலத்தை அமைப்பதற்கு, தேவைப்பட்டால் இராணுவரீதியில் இறங்குவதற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாக இருந்த ஷாவின் காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரத்தை எது தூக்கியெறிந்ததோ அந்த 1979 ஈரானிய புரட்சியோடு, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒருபோதும் தன்னைத்தானே சமரசப்படுத்திக் கொள்ளவில்லை என்பதே இறுதி பகுப்பாய்வாக உள்ளது.

ஈரானிய புரட்சி ஒரு பலம் வாய்ந்த ஏகாதிபத்திய-எதிர்ப்பு எழுச்சியாக இருந்தது. இருந்தாலும், ஸ்ராலினிச டூடெஹ் கட்சியும் (Tudeh Party) மற்றும் குட்டி முதலாளித்து "இடது" வகைப்பட்ட குழுக்களும் ஈரான் இன்னும் சோசலிசத்திற்கு தயாராகவில்லை என்று வலியுறுத்தி, தொழிலாள வர்க்கத்தை தேசிய முதலாளித்துவத்திற்கு திட்டமிட்டு அடிபணிய செய்தனர். அதற்கு மூச்சுவிட கிடைத்த இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி, முதலாளித்துவம் அந்த மக்கள் இயக்கத்திற்கு கடிவாளமிட மற்றும் இடதை கண்மூடித்தனமாக ஒடுக்க மற்றும், தொழிலாள வர்க்க சக்தியின் மற்றும் சுய-அமைப்புகளின் அனைத்து வெளிப்பாடுகளையும் அழிக்க அயாத்துல்லாஹ் ஹொமெனியின் (Ayatollah Khomeini) தேசியவாத-மதகுருவாத ஆட்சியை பயன்படுத்தியது.

35 ஆண்டுகளாக, அந்த இஸ்லாமிய குடியரசின் ஆட்சியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முழக்கமிட்டு வந்தனர். ஆனால் அவர்களின் எதிர்ப்பு எப்போதும் இரு-முகமாக இருந்து வந்துள்ளது, அது தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கான ஈரானிய முதலாளித்துவத்தின் சொந்த சக்தியை ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் வரம்புகளின் மீது நிலைநிறுத்துவதற்கான அவர்களின் கடுஞ்சினத்தில் வேரூன்றி இருந்தது.

அன்றைய காலத்திலிருந்து வேறுபட்டு இப்போது, ஈரானிய ஆட்சி வாஷிங்டனுடன் பொருந்தி நிற்க விரும்புகிறது. 2001இல், அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்த போது தெஹ்ரான் வாஷிங்டனுக்கு உளவு சேதிகள் வழங்கியதோடு, புஷ் நிர்வாகம் காபூலில் அதன் கைப்பாவை ஆட்சியாளராக ஹமீத் கர்சாயை பதவியேற்ற அதற்கு உதவியது. இஸ்ரேல் அரசை அங்கீகரிக்கும் மற்றும் அப்பிராந்தியத்தில் இஸ்ரேலின் பிரதான இராணுவ எதிர்ப்பாளர்களுக்கு, அதாவது பாலஸ்தீன குழு ஹமாஸ் மற்றும் லெபனிய ஷியைட் போராளிகள் ஹெஸ்பொல்லாவிற்கு, ஆதரவை வெட்டும் என்ற ஒரு "பிரமாண்ட பேரத்தை" தெஹ்ரான் 2003இல் முன்மொழிந்தது.

வாஷிங்டனின் அணியில் ஒருங்கிணைந்து நிற்பதற்கான முயற்சியில், ஈரானிய முதலாளித்துவம் சந்தை-சார்பு சீர்திருத்தங்களை வேகப்படுத்தவும் மற்றும் புரட்சிக்குப் பின்னர் சமூக சலுகைகளாக என்ன மிஞ்சி இருக்கின்றதோ அவற்றை நீக்கவும் முயன்று வருகிறது. ஏகாதிபத்திய சக்திகளின் நவ-காலனித்துவ சதிக்கு எதிராக மத்திய கிழக்கு முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெடிப்பார்ந்த எதிர்ப்பு அங்கே மேலெழுந்து வருகின்றது.

தற்காலிக அணுசக்தி உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், அடுத்த வாரம் ஸ்விட்சர்லாந்தில் நடக்கவிருக்கின்ற உலக பொருளாதார மாநாட்டிற்கு ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி பயணிப்பார் என்றும், அங்கே அவர் மேற்கத்திய வர்த்தகங்கள் மற்றும் அரசியல் மேற்தட்டை ஈர்ப்பார் என்றும் தெஹ்ரான் அறிவித்துள்ளது. ஈரானின் பாரிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களைச் சிறப்பு சலுகைகளோடு அணுகுவதற்கு ஆதரவு தெரிவித்து, அவரது அரசாங்கம் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய எரிசக்தித்துறை பெருநிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது.

ஏகாதிபத்தியத்தை இடைவிடாது எதிர்க்கக்கூடிய மற்றும் கடந்த நூற்றாண்டின் உலக யுத்தங்களை விட மிகப் பெரிய சீரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய புதிய யுத்தங்களுக்குள் மனிதயினத்தை தள்ளுவதில் இருந்து தடுக்கக்கூடிய ஒரே சக்தி, ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்தப்பட்ட சர்வதேச தொழிலாளர் வர்க்கம் மட்டுமே ஆகும்.