சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama defends police state spying

ஒபாமா பொலிஸ் அரசு உளவுவேலைகளை பாதுகாக்கிறார்

Eric London and Barry Grey
18 January 2014

Use this version to printSend feedback

வெள்ளியன்று நீதித்துறையில் உரையாற்றுகையில், ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்க மக்கள் மீதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மில்லியன் கணக்கான மக்கள் மீதும் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் பொலிஸ் அரசு உளவுவேலையை மற்றும் தேசிய பாதுகாப்பு முகமையை (NSA) பொருத்தமற்ற முறையில் பாதுகாக்கும் ஓர் உரையை வழங்கினார்.

அந்த உரையானது பொய்கள் மற்றும் வரலாற்று பொய்மைப்படுத்தல்களை நடைமுறைப்படுத்துவதாக இருந்தது. ஒரு பலத்த கண்டனங்களோ அல்லது ஜனாதிபதியின் மீது உடனடியாக விசாரணை வேண்டுமென்ற முறையீடுகளோ இல்லாமல் அதுபோன்ற ஒரு உரையை வழங்க முடிகிறதென்ற உண்மையானது, அமெரிக்க ஆளும் வர்க்கமும் அரசியல் ஸ்தாபகமும் எந்தளவிற்கு சர்வாதிபத்திய ஆட்சியின் திசையில் சென்றிருக்கின்றன என்பதற்கு ஒரு அறிகுறியாகும்.

அவரது 45 நிமிட நேர உரையில், ஒபாமா ஓரிடத்தில் கூட நான்காம் அரசியலமைப்பு திருத்தம் குறித்து குறிப்பிடவில்லை. அந்த அரசியலமைப்பு திருத்தமானது, உத்தரவாணை இல்லாத மற்றும் ஏதேச்சதிகாரமான "தேடல்கள் மற்றும் கைப்பற்றுதல்களுக்கு" மிக தெளிவாக தடை விதிக்கிறது, அதாவது துல்லியமாக அமெரிக்க குடியரசின் ஸ்தாபக தந்தைகளால் கற்பனையும் செய்து பார்த்திருக்க முடியாத அளவிற்கு NSA மற்றும் ஏனைய உளவுத்துறை முகமைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனவோ அவற்றிற்கு தடை விதிக்கிறது.

மாறாக, அந்த உரை பலமுறை இராணுவ-உளவுத்துறை உபகரணங்களுக்கான புகழுரைகளால் குறிக்கப்பட்டிருந்தது.

“NSAஇல் உள்ளவர்கள் நமது அண்டை சமூகத்தவர்கள், அவர்கள் நம்முடைய நண்பர்கள், குடும்பத்தினர்,” என்று கூறிய ஒபாமா, “நம்முடைய உளவுத்துறை சமூகம் சட்டத்தைப் பின்பற்றுகிறது, அதில் தேசப்பற்றுடையவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,” என்றும் சேர்த்துக் கொண்டார். “சாமானிய மக்களின் அந்தரங்க விடயங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட நெறிமுறைகளை NSA செயல்முறை பின்பற்றுவதாகவும்," அவர் அறிவித்தார்.

உளவுவேலை திட்டங்கள் நமக்கு கூடுதலான பாதுகாப்பு வழங்குகிறது என்று நான் உணர்ந்ததால் மட்டுமல்ல, மாறாக நமது உளவுத்துறை சமூகம் சட்டத்தை மீறியுள்ளது அல்லது சக குடிமக்களின் உள்நாட்டு சுதந்திரங்கள் மீது பாய்கிறது என்று குறிப்பிடும் அளவிற்கு எனக்கு தெரிந்த வரையில் அவ்வாறு அதில் எதுவும் இல்லை என்பதாலும் மற்றும் [NSA திட்டங்களின்] முதன்மை மீளாய்விலும் அவ்வாறு எதுவுமில்லை என்பதாலும் தான் என்று ஒபாமா வலியுறுத்தினார்.

மற்றொரு அப்பட்டமான பொய்யில் அவர் கூறினார், அமெரிக்க குடியானவர்களின் அனைத்து தொலைபேசி அழைப்புகளைப் பதிவு செய்து NSA சேகரிப்பதானது, "சாமானிய அமெரிக்கர்களின் தொலைபேசி விடயங்களை அது ஆராய்கிறது என்பதாகாது" என்றார். "உங்களது தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளைக் கேட்க, அல்லது உங்களது மின்னஞ்சலைப் படிக்க NSA அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யவில்லை" மற்றும் "நம்முடைய தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தாத சாதாரண மக்களை அமெரிக்கா உளவு பார்ப்பதில்லை,” என்று அறிவித்தார்.

முன்னாள் NSA ஒப்பந்ததாரர் எட்வார்ட் ஸ்னோவ்டென் அந்த முகமையின் நடவடிக்கைகள் குறித்து கடந்த ஜூனில் தகவல்களை வெளியிடத் தொடங்கிய பின்னர், ஒட்டுமொத்த அமெரிக்க மக்களின் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள பெரும்பான்மையினரின் தொலைபேசி விபரங்கள், குறிஞ்செய்திகள், தொடர்பு பட்டியல்கள், கடன் அட்டை விபரங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்ட தகவல்களைக் கைப்பற்றியது குறித்து ஒரு வெளியீடு மாற்றி மற்றொரு வெளியீட்டில் விபரங்கள் வெளிப்பட்டுள்ளன. பங்கரவாதத்தோடு அல்லது ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளோடு எந்த தொடர்பும் இல்லாத சாதாரண மக்களின் கடிதங்களை கண்காணித்தது மற்றும் லைசன்ஸ் பிளேட்களைப் பின்தொடர்ந்தது ஆகியவற்றின் மீது அறிக்கைகள் வெளியாகி உள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள தனிநபர்களின், அரசுகளின் மற்றும் வணிகங்களின் தொடர்புகளைத் தாக்கியதன் மூலமாக மற்றும் வெளிவேடத்திற்கு நண்பர்களைப் போல் காட்டிக் கொண்டு அவர்கள் மீதும் மற்றும் எதிரிகள் போலிருப்பவர்கள் மீதும் இணையவழி யுத்தமுறையை நடத்தியதன் மூலமாக, உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டாளராக அமெரிக்க அரசு அம்பலப்பட்டுள்ளது. இணையத்தின் பிரதான தொலைத்தொடர்பு இணைப்புகளில் இருந்து தகவல்களை உருவி எடுத்ததன் மூலமாக நடைமுறையில் அனைத்து மின்னணு தொடர்புகளையும் கைப்பற்றுவதில், திட்டங்கள் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றவியல் நடவடிக்கைக்கு மற்றும் இதை மேற்பார்வையிடுபவர்களுக்கு ஒபாமா ஒரு பாதுகாப்பு போர்வை வழங்கினார்.

அமெரிக்க மக்கள் மீதான இன்றைய NSA இன் தன்னிச்சையான உளவுவேலைகளை பிரிட்டிஷ் துருப்புகளின் இயக்கங்களைக் கண்காணிக்க அமெரிக்க புரட்சியாளர்களின் முயற்சிகளோடு ஒப்பிட்டு, அவர் அவரது உரையைத் தொடங்கினார். மக்களின் வீடுகளில் நுழைய மற்றும் தேடல் நடத்த மற்றும் அவர்களின் தனிப்பட்ட ஆவணங்களைக் கைப்பற்ற ஆக்கிரமிப்பு துருப்புகளுக்கு அனுமதியளித்து பிரிட்டிஷ் பேரரசு வழங்கியிருந்த பொதுவான உத்தரவாணைகள், பிரிட்டிஷ் கொடுங்கோன்மைக்கு எதிரான காலனித்துவ அமெரிக்க குடிமக்களின் முக்கிய குறைகளில் ஒன்றாக இருந்தது என்பதை அவர் குறிப்பிடவில்லை. புதிய அமெரிக்க அரசால் இத்தகைய துஷ்பிரயோகம் நடத்தப்படக்கூடாது என்பதைத் தடுக்கவே, ஸ்தாபகர்கள் நான்காம் அரசியலமைப்பு திருத்தத்தை வரைந்தனர்.

அந்த திருத்தத்தின் மொழி மிக தெளிவாக உள்ளது. தனிநபர் அந்தரங்கத்தின் மீது ஏதேச்சதிகார மீறல்களைத் தடுக்க அது, சூழ்நிலைக்கு ஏற்ற விதத்தில் அல்லது "தேசிய பாதுகாப்பு" என்ற அடித்தளத்தின் மீது, எந்தவொரு விதிவிலக்கையும் உள்ளடக்கி இருக்கவில்லை.

அவரது உரையில், ஒபாமா, மக்கள் மீதான பொலிஸ் அரசு உளவுவேலைகளை நியாயப்படுத்த 9/11 மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" ஆகியவற்றை, மீண்டும் ஒருமுறை, வலியுறுத்த ஆரம்பித்தார். பாரிய உளவுவேலை வலையம் பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாக்கும் ஒரு அபிலாஷையால் முற்றிலுமாக உந்தப்பட்டிருந்தது என்ற மதிப்பிழந்த புராணத்தை மீண்டும் தொடர்ந்தார். இந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டமென்று கூறப்படுவது ஏன் ஒவ்வொரு அமெரிக்கரையும் உளவு பார்க்க மற்றும் பெயரளவிற்கான அமெரிக்க கூட்டாளிகள் உட்பட வெளிநாட்டு தலைவர்களின் தொலைபேசிகளை ஊடுருவ வேண்டிய அவசியத்தை அரசிற்கு உருவாக்கி உள்ளதென்பதை விளக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அல்லது லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான யுத்தங்களில் அமெரிக்க பகடை சக்திகளாக சேவை செய்துள்ள அல் கொய்தாவுடன் இணைந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அமெரிக்கா செய்துவரும் நிதியுதவி மற்றும் இராணுவ உதவியின் எதார்த்தத்தோடு, "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்பதைக் கட்டங்கட்டவும் அவர் எவ்வித முயற்சியும் செய்யவில்லை.

காங்கிரஸ் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கிய தொடர்ச்சியான பொய்களில் NSA மற்றும் ஏனைய அமெரிக்க உளவுத்துறை முகமைகள் மாட்டி இருந்த போதினும், அவற்றின் தலைமையில் இருக்கும் அவரது சக-சதியாளர்களுக்கு சிறிதும் தயக்கமின்றி, பாதுகாப்பு வழங்கிய அதேவேளையில், ஒபாமா ஸ்னோவ்டென் மீது ஒரு வக்கிரமான தாக்குதலைத் தொடங்கினார். “அரசின் கொள்கையை நிராகரிக்கும் எந்தவொரு தனிநபரும் இரகசிய தகவல்களை பகிரங்கமாக வெளியிடுவதை அவரது கைகளில் எடுத்துக் கொண்டால், பின்னர் நம்முடைய மக்களை நம்மால் பாதுக்காக்க முடியாது அல்லது வெளியுறவு கொள்கையை வழிநடத்த முடியாது.” “நம்முடைய விரோதிகளுக்கு விடயங்களை அம்பலப்படுத்தியதற்காக", அதாவது தேசதுரோகத்தில் ஈடுபட்டமைக்காக, ஸ்னோவ்டென் குற்றவாளியாவார் என்று குறிப்பாக சுட்டிக்காட்டும் அளவிற்கு அவர் சென்றார்.

பொலிஸ் அரசு உளவுவேலை நடவடிக்கைகளை அம்பலப்படுத்த ஸ்னோவ்டெனின் தைரியமான மற்றும் நெறிமுறைப்பட்ட முடிவு இல்லாது இருந்திருந்தால், மக்கள் இன்னமும் இருட்டில் தான் இருந்திருப்பார்கள். ஸ்னோவ்டெனின் அம்பலப்படுத்தல்கள் வெளியானதில் இருந்து ஒபாமா செய்துள்ளவை, உத்தியோகபூர்வ வேட்டையாடலில் தொடங்கி இரகசியங்களை வெளியிட்ட அந்த இளைஞரை ரஷ்யாவில் தஞ்சம் கோர செய்த இராஜதுரோக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியது வரையில், உளவுத்துறை முகமைகளுக்கு சேதமில்லாமல் தடுக்கவும் மற்றும் "சீர்திருத்தம்" மற்றும் "வெளிப்படை தன்மை" என்ற போலி பேச்சுக்களோடு மக்கள் கோபத்தை தணிக்கவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

அவரது வெள்ளிக்கிழமை உரை இன்று வரையிலான இத்தகைய முயற்சிகளின் உச்சகட்டமாக இருந்தது. அதன் அடிப்படை நோக்கம், திட்டங்களில் சிலவற்றை சட்டபூர்வமாக்க மற்றும் அமைப்புரீதியிலானதாக ஆக்கும் ஒரு முயற்சியில் அவற்றில் ஒரு சில மேற்பூச்சு மாற்றங்களை அறிவிப்பதற்காக இருந்தது.

தொலைபேசி மெட்டாடேட்டாக்கள் சேகரிப்பதற்கு இரகசிய வெளிநாட்டு உளவுவேலை கண்காணிப்பு நீதிமன்றத்தின் (FISA) அங்கீகாரத்தை தற்காலிகமாக கோர வேண்டும் (34 ஆண்டுகளாக இருந்து வரும் FISA நீதிமன்றம், உளவுவேலைகளுக்கான வெறும் 11 கோரிக்கைகளை மட்டுமே நிராகரித்துள்ளது) மற்றும் சேமிக்கப்பட்ட NSA தொலைபேசி உரையாடல்களில் செய்யப்படும் தேடல், இருதுருவத்தில் பிரிந்து நிற்கும் இலக்கில் வைக்கப்பட்ட தனிநபர்களோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பவை சீர்திருத்தங்கள்" என்றழைக்கப்படுபவைகளில் உள்ளடங்கும்.

தொலைபேசி மெட்டாடேட்டா தரவுகளஞ்சியங்கள் NSAஇன் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு வேறெங்கேனும் சேமிக்கப்படும் என்றும், குறிப்பிட்ட வரையறுக்கப்படாத விடயங்களின் மீது FISA நீதிமன்ற கருத்துரையாடல்களில் பங்கெடுக்க வெளியிலிருந்து ஒரு அரசு குழு அமைக்கப்படுமென்றும் அவர் முன்மொழிந்தார்.

ஒபாமா ஒப்புதல் வழங்கிய இத்தகைய அனைத்து அர்த்தமற்ற மாற்றங்களும், NSAஇன் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் விருப்பத்தினால் அல்ல, அவை மக்கள் தொடர்பு மீதான கவனிப்புகளால் உந்தப்பட்டுள்ளன. அவர் வாதிட்டார், “அமெரிக்க மக்களின் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் நம்பிக்கையைத் தக்க வைக்க" அவை அவசியமாகும்.

NSAஇன் இரகசிய நடவடிக்கைகள் மற்றும் வெறுமனே முத்திரை குத்தும் FISA நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் இருட்டில் நிறுத்தப்படுவார்கள். மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தங்களின் குற்றங்களுக்கான தண்டனைகளில் இருந்து தாங்கள் விதிவிலக்காக உள்ளோம் என்பதை அறிந்து, காங்கிரஸ், நீதிமன்றங்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவோடு, தங்களின் விருப்பம் போல் பொய் கூறுவதைத் தொடரும் பாசிச உளவுத்துறை அதிகாரத்துவவாதிகளின் கரங்களில் அனைத்து அதிகாரங்களும் தங்கி இருக்கும்.

அமெரிக்காவில் அதிர்ச்சியூட்டும் வகையில் தீவிரமடைந்துவரும் சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி தான் இத்தகைய பொலிஸ் அரசு தயாரிப்புகளுக்கான நிஜமான உந்துசக்தியாக உள்ளது. நாட்டின் மொத்த செல்வ வளத்தின் 35 சதவீதத்தை 1 சதவீத பெரும் பணக்காரர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர், 85 சதவீதத்தை மேலே உள்ள 20 சதவீதத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர், மற்றும் அடியிலுள்ள உள்ள 40 சதவீதத்தினர் 0.2 சதவீதத்தை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர் இத்தகைய ஒரு சமூக அமைப்புமுறையில் ஜனநாயகம் பொருத்தமற்று உள்ளது; மேலும் மொத்த அமெரிக்கர்களில் பாதிப் பேருடைய மொத்த செல்வ வளத்தை விட மிகப் பணக்கார 400 தனிநபர்களின் செல்வ வளம் மிக அதிகமாக உள்ளது.

அனைத்திற்கும் மேலாக, ஒபாமா நிர்வாகம் தொழிலாள வர்க்கத்தை இன்னும் மேலதிகமாக வறுமைக்குள் தள்ள மற்றும் இன்னும் கூடுதலாக செல்வத்தை மிக மேலே உள்ளவர்களுக்கு கைமாற்ற, நிதியியல்-பெருநிறுவன பிரபுத்துவத்தின் சார்பாக, ஒரு உந்துதலை முன்னெடுத்துள்ளது. NSA குறித்த அவரின் உரையை வழங்கிய அதேநாளில், ஒபாமா இருகட்சிகளின் ஒப்புதலோடு கூடிய ஒரு புதிய வரவு-செலவு திட்டத்தில் கையெழுத்திட்டார், அது 50 சதவீதத்திற்கு அதிகமான நிதிகளை இராணுவத்திற்கு ஒதுக்கிய அதேவேளையில் சமூக செலவினங்களை இன்னும் கூடுதலாக வெட்டுகிறது. இதற்கிடையில், நீண்டகால வேலைவாய்ப்பற்றோர்களுக்கான உதவிகள் நீக்கப்பட்டுள்ளன, ஜனநாயக கட்சியினரும் குடியரசு கட்சியினரும் உணவு மானிய கூப்பன் திட்டங்களில் இருந்து மேலும் கூடுதலாக 9 பில்லியன் டாலரை வெட்ட தயாராகி வருகின்றனர்.

ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் அவர்கள் நடத்தி வரும் சமூக எதிர்புரட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கம் எழுச்சி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அஞ்சி உள்ளனர். மக்கள் ஒடுக்குமுறை மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கான பொலிஸ் அரசு அதிகாரங்களைக் கட்டி எழுப்புவது தவிர்க்கவியலாமல் உள்ளதால் அவர்கள் அதற்கு தயாரிப்பு செய்து வருகின்றனர்.

ஒபாமாவின் உரை அடிக்கோடிட்டதைப் போலவே, அமெரிக்க ஆளும் மேற்தட்டைப் பொறுத்த வரையில், அரசியலமைப்பும் அதன் உரிமைகள் மசோதாவும் நடைமுறையில் ஒன்றுக்கும் உதவாத ஆவணங்களாக மாறி உள்ளன. சர்வாதிகாரத்திற்கான தயாரிப்புகள் மிக மிக முன்னேறி உள்ளன, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளோ மரணகதியிலான ஆபத்தில் உள்ளன.

உழைக்கும் மக்கள் அவசியமான தீர்மானங்கள் எடுத்தாக வேண்டும். தங்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாக்க, முதலாளித்துவத்திற்கு ஒரு முடிவு கட்டும் முடிவை அவர்கள் எடுத்தாக வேண்டும். முதலாளித்துவமும் ஜனநாயகமும்  மாற்றியமைக்க முடியாத வகையில் எதிரெதிராக உள்ளது. ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு, தொழிலாள வர்க்கத்திடம் மற்றும் உண்மையான ஜனநாயக மற்றும் சமத்துவவாத போக்குகளின் மீது சமூகத்தை மறுஒழுங்கமைப்பதற்கு ஒரு பாரிய சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மீது தங்கி உள்ளது.