சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The Socialist Equality Party candidates for the European election

சோசலிச சமத்துவக் கட்சியின் ஐரோப்பித் தேர்தலுக்கான வேட்பாளர்கள்

By our correspondent 
16 January 2014

Use this version to printSend feedback

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (Partei fur Soziale Glechheit -PSG) மற்றும் பிரித்தானிய சோசலிச சமத்துவக் கட்சியும் மே 25, 2014இல் நடக்க இருக்கும் ஐரோப்பிய தேர்தலுக்கு வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

இவற்றின் கூட்டறிக்கையின்படி, தேர்தல்களில் கட்சியின் நோக்கம் பெரும்பாலான மக்களின் இழப்பில் இலாபத்தின் உந்துதல் என்பதற்கு மாறாக, ஐரோப்பா முழுவதும் இருக்கும் தொழிலாளர்களை சமூக சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் ஒரு சோசலிச சமூகத்திற்காக போராடுவதாகும். இந்த தேர்தல் பிரச்சாரம், ஐரோப்பா முழுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியமைக்க பயன்படுத்தப்படும்.

PSG நாடு முழுவதும் வாக்குப்பதிவிற்கு 7 வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. தற்பொழுது PSG ஆதரவாளர்கள் ஜேர்மனியில் வாக்குச்சீட்டில் அதன் பெயர் இடம்பெறத் தேவையான ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை சேகரிக்கின்றனர். WSWS வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஆதரவு கையெழுத்திற்காக படிவங்களை வலைத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நண்பர்கள், தெரிந்தவர்கள், சக ஊழியர்கள் என கையெழுத்துக்களை பெறுவதற்கு அழைப்பு விடுகிறோம். இப்படிவங்களை பின்னர் PSG இற்கு அனுப்பிவிடவும்.


உல்ரிச் ரிப்பேர்ட்
(62)

உல்ரிச் ரிப்பேர்ட் (62) PSG இன் தலைவரும் அதன் முதன்மை வேட்பாளரும் ஆவார். ரிப்பேர்ட் PSG யின் முன்னோடி அமைப்பான சோசலிச தொழிலாளர் கழகத்தின் (Bunds Sozialistischer Arbeiter, BSA) நிறுவன உறுப்பினராவார். இவர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக செயல்படுபவர். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வேதச ஆசிரியர் குழுவில் உறுப்பினராக இருப்பதுடன் முந்தைய பல பாராளுமன்ற மற்றும் ஐரோப்பிய தேர்தல்களில் வேட்பாளராக இருந்திருக்கிறார். இரண்டு மகள்களுக்கு தந்தையான ரிப்பேர்ட் பேர்லினில் வசிக்கிறார்.


கிறிஸ்தோப் வான்ட்ரையர்

கிறிஸ்டோப் வான்ட்ரையர் (32) PSG யின் துணைத் தலைவரும், உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றுகிறார். இவருடைய கவனம் கிழக்கு, தென்கிழக்கு ஐரோப்பிய அரசியல் நிகழ்வுகளாகும். இவர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் குறைவான வயதில் இணைந்து, சிறிது காலத்திற்கு சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் இளைஞர்கள் இயக்கத்திற்கு (IYSSE) ஜேர்மனியில் தலைமை தாங்கியிருந்தார். வான்ட்ரையர் பேர்லினில் வசிக்கிறார், பல ஆண்டுகள் போதைப்பொருள் பாவனைப் பிரச்சினைகள் உடையவர்களுக்கு உளவியல் வல்லுனராக இருந்துள்ளார்.



எலிசபெத் சிம்மர்மான் மோட்லர்

எலிசபெத் சிம்மர்மான் மோட்லர் (56) PSG இன் தேசிய நிர்வாகக் குழுவின் உறுப்பினரும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் 1975 முதல் இருந்து அங்கத்துவம் வகித்துவருகிறார். அவருடைய இளம்வயதில் வியட்நாம் போர், சிலியில் 1973இல் வலதுசாரி இராணுவ ஆட்சி மாற்றம் போன்றவற்றால் அரசியல்மயப்படுத்தப்பட்டார். அவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு வாடிக்கையாக தொழில்துறை வளர்ச்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வெயர்மாட், அகதிகள் கொள்கை பற்றி எழுதுகிறார். இவர் பாராளுமன்ற, ஐரோப்பிய தேர்தல்களில் PSG இற்காக பலமுறை வேட்பாளராக நின்றிருக்கிறார். சிம்மர்மான்-மோட்லர் ஓர் எழுதுவினைஞராக பணிபுரிவதுடன், டியூஸ்பேர்க் நகரில் வசிக்கிறார்.


மரியான ஆர்னெஸ்

மரியான ஆர்னெஸ் (61) பிராங்க்பேர்ட்டில் ஒரு நிறுவனத்தில் தொழில்நுட்ப விளக்கம் அளிப்பவராக வேலைசெய்கிறார். இவர் 1973ல் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் சேர்ந்தார். இத்தாலியின் நிகழ்வுகள் பற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் வாடிக்கையாக எழுதுகிறார். சுவிட்சர்லாந்து பேர்னில் பிறந்த இவர் ஹெஸ்ஸவில் 35 ஆண்டுகளாக வசிக்கிறார். ஆர்னெஸுக்குத் திருமணம் ஆகி, வயதுவந்த ஒரு மகன் உள்ளார்.


டீட்மார் கைசென்கெர்ஸ்டிங்

டீட்மார் கைசென்கெர்ஸ்டிங் (46) PSG இன் தேசிய நிர்வாகக் குழுவில் ஓர் உறுப்பினராவார். வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் கட்சிப் பணிக்குத் தலைமை தாங்குகிறார். ஸ்ராலினிசத்தின் உடைவு மற்றும் பேர்லின் சுவர் வீழ்ச்சி அடைந்த காலமான 1989இல் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இவர் சேர்ந்தார். உலக சோசலிச வலைத் தளத்திற்கு வாடிக்கையாக எழுதுவதுடன், பல ஐரோப்பிய, தேசிய தேர்தல்களில் PSG இன் வேட்பாளராக நின்றுள்ளார். கைசென்கெர்ஸ்டிங் ரூர் பகுதியில் வளர்ந்து, வசிக்கிறார், இரு மகன்களுக்கு தந்தை ஆவார். இவர் டியூஸ்பேர்க்கில் ஆசிரியராக பணிபுரிகிறார்.


ஹெல்முட் ஆர்னெஸ்

ஹெல்முட் ஆர்னெஸ் (64) Hoechst AG இல் 35 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தார். இப்போது அவர் ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு வயதிற்கு வந்த மகன் ஒருவர் உள்ளார். இவர் PSG நிர்வாகக் குழுவிலும், இதன் முன்னோடியான BSA இன் நிர்வாகக் குழுவிலும் 40 ஆண்டுகள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஓர் உறுப்பினராக உள்ளார். கட்சியின் பல பாராளுமன்ற, ஐரோப்பிய தேர்தல்களிலும், 2003, 2008 ஹெஸ்ஸ மாநிலத் தேர்தல்களிலும் பிரதிநிதியாக நின்றுள்ளார்.


என்ரிக் பாஸ்டியான்

என்ரிக் பாஸ்டியான் (49) ஒரு மருத்துவ தாதியும், PSG யின் நிர்வாகக் குழுவின் உறுப்பினருமாவார். இவர் கிழக்கு ஜேர்மனியில் வளர்ந்ததுடன், ஜேர்மனிய ஜனநாயகக் குடியரசு (GDR). சரிந்தபின் சில ஆண்டுகளுக்கு பின்பு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைந்தார். பாஸ்டியன் இப்பொழுது PSG யின் பேர்லின் மாநில பிரிவினை வழிநடத்துகிறார். இவர் கட்சியின் வேட்பாளராக பல கூட்டாட்சித் தேர்தல்களில் நின்றுள்ளார். மூன்று குழந்தைகளுக்கு தந்தையான பாஸ்டியன் பேர்லினில் வசிக்கிறார்.