சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US-South Korean war games threaten to inflame Korean Peninsula

அமெரிக்க-தென் கொரியப் போர் பயிற்சிகள் கொரிய தீபகற்பத்தை எரியூட்டசெய்கின்றன

By Peter Symonds 
18 January 2014

Use this version to printSend feedback

கொரிய தீபகற்ப அழுத்தங்கள் மீண்டும் அமெரிக்கா, தென் கொரிய இராணுவங்கள் அவற்றின் ஆண்டுக் கூட்டுப் போர் பயிற்சிகளான Key Resolve, Foal Eagle ஆகியவற்றை நடத்த தயாராகையில் தீவிரமடையக்கூடும். Key Resolve இரண்டு வாரங்களுக்கு ஒரு கணிணியால் உருவமைக்கப்பட்ட பயிற்சிகள் பெப்ருவரி கடைசியில் இருந்துநெருக்கடி நிர்வாகம்மீது கவனம்செலுத்தி வடகொரியாவை இலக்கு கொள்ளும். Foal Eagle ஒரு மாபெரும் அணிதிரட்டலாக, கடந்த ஆண்டு 10,000 அமெரிக்க இராணுவத்தினரும் கிட்டத்தட்ட 200,000 தென்கொரிய துருப்புக்களுடன் சேர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பலவகை பயிற்சிகளை மேற்கொண்டது.

முந்தைய ஆண்டுகளைப் போலவே வடகொரிய ஆட்சி பயிற்சிகள் நடத்தக்கூடாது எனக் கோரியது. கொரியா அமைதியான முறையில் மீண்டும் ஒன்றிணையவேண்டும் என்பதற்கான குழுவின் செய்தித் தொடர்பாளர் புதன் அன்று, “புத்தாண்டு ஆரம்பத்தில் நம்பிக்கை மிகுந்த சூழலை மாசுபடுத்தும் வகையில் துப்பாக்கிகள் நிறைந்த போர்ப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.” எனக்கூறினார். அமெரிக்கா மற்றும் தென் கொரியா இரண்டுக்கும் பயிற்சிகளை நிறுத்த அழைப்பு விடுத்த அவர், அவைதீபகற்பத்தின் நிலைமையை மோசமாக்கலாம், வடக்கு-தெற்கு உறவுகளை ஒரு பேரழிவிற்கு உட்படுத்தலாம்என்றும் எச்சரித்தார்.

ஆனால், அந்த நேரத்தில் வட கொரியாவின் தேசியப் பாதுகாப்பு ஆணைக்குழு வியாழன் அன்று இரு கொரியாக்களும்அவதூறுபேசுவதில்லை என உடன்படவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தது. அது நாங்கள் லூனர் புத்தாண்டு விடுமுறை ஜனவரி 30ல் ஆரம்பிக்கையில், இருபுறத்தாரும் ஒருவரை ஒருவர் குறைகூறல் ஆத்திரமூட்டல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்த கணிசமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முறையாக தென்கொரிய அதிகாரிகளுக்கு முன்மொழிவதாக.” கூறியது. ஆணைக்குழு, போர் பயிற்சிகள் நிறுத்தப்பட்டால், தென்கொரிய ஜனாதிபதி பார்க் க்யூன்-ஹையின் கடந்தவார அழைப்பான, கொரியப் போரால் பிரிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மீண்டும் ஒன்று சேரவேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது.

தென் கொரியா சமரச நோக்கம் கொண்ட கருத்தை நிராகரித்தது; மேலும் அமெரிக்காவுடன் கூட்டுப் பயிற்சிகளை இரத்து செய்யும் கருத்து எதையும் நிராகரித்தது. ஐக்கியப்படுத்தலுக்கான அமைச்சரகச் செய்தித் தொடர்பாளர் கிம் ஈயூ டோ, வடகொரியா தீபகற்பத்தில் சமாதானத்தை விரும்பினால் அணுஆயுத களைவிற்கானநடைமுறைநடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோரினார். “வடகொரியா எங்கள் வாடிக்கையான பயிற்சிகளை தனது ஒரு இராணுவ ஆத்திரமூட்டலுக்கான சாக்குப்போக்காக பயன்படுத்துமானால், எங்கள் இராணுவம் இரக்கமின்றி பதிலடி கொடுக்கும்.”

கடந்த ஆண்டு அமெரிக்க, தென் கொரிய பயிற்சிகள் ஆபத்தான முறையில் கொரியத் தீபகற்பத்தை எரியூட்டின. இது நீண்டகாலமாகவே ஆசியாவில் ஒரு போர்ஆபத்து பகுதியாக உள்ளது. வட கொரிய அணுவாயுத சோதனைக்குப் பின் அமெரிக்கத் தலைமையிலான பொருளாதாரத் தடைகளை அடுத்து, பியோங்யாக் ஆட்சி தொடர்ந்து தென்கொரியா, அமெரிக்காவிற்கு எதிராக யுத்தம் செய்வதாக ஒரு தொடர் ஆத்திரமூட்டும் வெற்று அச்சுறுத்தல்களை விடுத்துக்கொண்டிருக்கின்றது.

வட கொரிய வார்த்தைஜாலங்கள், ஒபாமா நிர்வாகத்தினால் தமக்கு சாதகமாக்கப்பட்டுள்ளன. இது B52, B-2 குண்டுவீசும் விமானங்களை தென் கொரியாவிற்கு பலத்தை காட்டும் ஆத்திரமூட்டும் அடையாளமாக அனுப்பியது. இவற்றைத் தொடர்ந்து F22 ராப்டர் போர்விமானங்கள் இரண்டு அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு அழிக்கும் விமானங்களும் தொடர்ந்தன. இதுபற்றி CNN, இவை பென்டகனின் நடவடிக்கை நூலில்(the playbook) இருந்து படிப்படியாக முன்கூட்டியே எழுதப்பட்ட திட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என எடுத்துக்காட்டியது.

வாஷிங்டன் அதன் நடவடிக்கைகள் முற்றிலும் பாதுகாப்பிற்கு என்று வலியுறுத்தினாலும், அணுத்திறன் உடைய விமானங்களை தென் கொரியாவிற்கு அனுப்பியது வட கொரியாவை அச்சுறுத்த என்பது மிகவும் தெளிவு. அதே நேரத்தில் ஒபாமா நிர்வாகம் வாய்ப்பைப் பயன்படுத்தி வடகிழக்கு ஆசியாவில் ஏவுகணை எதிர்ப்பு முறைகளை அதிகரிக்கபோவது குறித்து அறிவித்துள்ளது. இந்நடவடக்கைகள் முக்கியமாக சீனாவிற்கு எதிராக நோக்கம் கொண்டனவே தவிர வடகொரியாவின் திறனற்ற ஆயுதங்களுக்கு எதிராக அல்ல.

கடந்த ஆண்டு Foal Eagle போர் பயிற்சிகள் மிகஅதிகளவில் அமெரிக்க, தென்கொரிய இராணுவத்தினர் ஈடுபட்டது என்பது மட்டும் இல்லாமல், பரப்பிலும் மிகவும் பரந்தது ஆகும். இரண்டு மாதங்களாக, அமெரிக்க கொரியப் படைகள் கருத்துப்படி, “ஒருதொடர் தனித்தனி இடைத்தொடர்புடைய கூட்டு மற்றும் இணைந்த தளப் பயிற்சிகள் நடந்துள்ளன..... தரையில், வானில், கடலில், அதிரடிப்படை மற்றும் சிறப்பு நடவடிக்கைகளும் அதில் உள்ளடங்கியிருந்தன.”

இந்த ஆண்டு பயிற்சிக்கு முன்னதாக பென்டன் ஜனவரி 7இல் தான் 800 கூடுதல் துருப்புக்களை தென் கொரியாவிற்கு 9 மாதச் சுழற்சி முறையில் அனுப்பும் என அறிவித்துள்ளது. 28,500 அமெரிக்க துருப்பினர் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொரியத் தீபகற்பத்தில் இந்த அளவு சற்றேதான் அதிகப்படுத்தும் என்றாலும், இயந்திரவகை பிரிவுகள் 40மிக நவீன M1A2 ஆப்ரஹாம் டாங்குங்கள், மற்றும் கவச வாகனங்களுடன் வருகிறது.

இந்த அறிவிப்பு அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி வாஷிங்டனில் தென் கொரிய வெளியுறவு மந்திரி யுன் ப்யூங்சேயைச் சந்திக்கையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக சமீபத்திய வாரங்களில் நடந்துள்ள நிகழ்வுகள் பற்றி இருநாடுகளும்மிகவும் உறுதியாக ஒன்றுபட்டுள்ளன, “வட கொரியாவின் சவால் குறித்து ஆழ்ந்த கவனத்தைக் காட்டுகின்றனஎன்று ப்யோங்யாங்கில் கெர்ரி கூறினார்.

கெர்ரியின் கருத்துக்கள் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் யுன்னின் கடந்த மாத உள்சதியின் பின் வந்துள்ளது. அதில் அவருடைய சிறிய தகப்பனான ஜாங் சோங் தாயே மரணதண்டனைக்குள்ளானார். அவர் பொதுவாக ஆட்சியில் இரண்டாம் தலைவர் எனக் கருதப்பட்டார். ஜாங்கை பகிரங்கமாக அகற்றியதே பியோங்     யாங்கில் உள்ள ஆழ்ந்த அரசியல் உறுதியற்ற தன்மையின் அடையாளம் ஆகும். அமெரிக்கத் தலைமையிலான பொருளாதாரத் தடைகளுடன் சேர்ந்து இது கடுமையான பொருளாதார, சமூக நெருக்கடியை முகங்கொடுக்கிறது.

பென்டகன் அதன் மேலதிக துருப்புக்கள்நீண்டகாலமாக திட்டமிடப்பட்டவைஎன்று கூறினாலும், நடவடிக்கை வட கொரிய ஆட்சியை அதன் உள் கொந்தளிப்புக்காலத்தில் அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் வந்துள்ளது. வியாழன் அன்று Dong-A Ilbo இற்குக் கொடுத்த நேர்காணலில், அமெரிக்காவின் தென்கொரியாவிற்கான தூதர் சுங் கிம் வாஷிங்டனும் சியோலுமஒருங்கிணைப்பை வலுப்படுத்தியுள்ளனஅதையொட்டி பியோங்யாக்கின்உள்வெடிப்புபொருத்தமாக பதிலளிக்கப்படும் என்றார். வடகொரிய நெருக்கடியில் தலையீடும் நோக்கத்தையும் அவர் குறிப்பிட்டு, ஒன்றுபட்ட கொரியா என்பது அனைத்து தென்கொரியர்களின் இதயத்தில் உயிர்ப்பான விருப்பம் ஆகும்என அறிவித்தார்.

தென்கொரிய அரசாங்கம் தற்போதைய மலிவான வடகொரிய தொழிலாளர் தொகுப்பை சுரண்டுவதை விரிவுபடுத்த ஆர்வத்துடன் இருக்கிறது. இது இப்பொழுது வட கொரியாவின் கேசாங் தொழில்துறை வளாகத்துடன் மட்டுப்படுத்துள்ளது. ஜனாதிபதி பார்க் கடந்த ஆண்டு அழுத்தங்களுப் பின் மூடப்பட்ட தொழில்வளாகம் மீண்டும் திறக்க பேச்சுக்களை நடத்தியுள்ளார். இது கிட்டத்தட்ட 50,000 தொழிலாளர்களை 123 ஆலைகளில் கொண்டுள்ளதுடன், முக்கியமாக உடைகள், காலணிகள் மற்றும் வீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. வட கொரியா சமீபத்தில் தான் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக மேலும் 14 சிறப்புப் பொருளாதாரப் பகுதிகளை திறக்கும் என்று கூறியுள்ளது.

வட கொரியாவில் ஆட்சிமாற்றம், ஒருஉள்வெடிப்பு குறித்த ஒபாமா நிர்வாகத்தின் அக்கறை, “ஆசியாவிற்கு முன்னுரிமை கொடுத்தலுடன் பிணைந்துள்ளது. அது சீனச்செல்வாக்கை பிராந்தியம் முழுவதும் தணித்து அதை இராணுவத்தால் சூழும் ஒரு விரிவான மூலோபாயமாகும். அமெரிக்கா தென்கொரியாவுடன் கொண்டுள்ள உடன்பாடு இந்தமுன்னுரிமையின்முக்கியக் கூறுபாடு ஆகும். அது அமெரிக்க இராணுவப் படைகள் சீன நிலப்பகுதிக்கு மிக அருகே இருத்தப்பட உதவும். பியோங்யாங்கில் ஆட்சிமாற்றம் அல்லது கொரியாக்களின் மறுஇணைப்பு என்பது சீனாவின் வடக்கு எல்லையில் அமெரிக்காவின் நட்பு நாட்டை இருத்தும்.

பர்மா மற்றும் ஈரான் போக்கிரி நாடுகள்என அழைக்கப்படுவதுபோல், ஒபாமா நிர்வாகம் வட கொரியாவில்உணவைக்கொடுத்து அடிபோடும்அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா பியோங்யாங்மீது பொறுப்பற்ற முறையில் பொருளாதாரத் தடைகள் மற்றும் சியோலுடனான அதன் இராணுவ உறவுகள் மூலம் அழுத்தத்தை தக்க வைத்துள்ளது. அதே நேரத்தில் வடகொரியா பெய்ஜிங் உடனான தனது சார்புநிலையை வாஷிங்டனை நோக்கி மாற்ற விரும்பினால் ஒரு சமாதானமாகப்போகும் சாத்தியங்கள் உள்ளதாக கூறுகின்றது.