சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

Opposition Syrian National Coalition to attend Geneva talks

எதிர்த்தரப்பு சிரிய தேசியக் கூட்டணி ஜெனீவா பேச்சுக்களில் பங்கு பெறுகிறது

By Alex Lantier 
20 January 2014

Use this version to printSend feedback

சிரிய தேசியக் கூட்டணி (SNC), சிரிய ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவினால் ஆதரவளிக்கப்படும் இஸ்லாமியவாத கிளர்ச்சியின் முன்னிலையில் செயல்படும் புலம்பெயர்ந்தோர் குழு ஜெனீவாவில் புதனன்று ஆரம்பமாகும் பேச்சுக்களில கலந்து கொள்ள சனிக்கிழமை அன்று வாக்களித்தது.

இஸ்தான்பூலில் கூடிய 75 உறுப்பினர் கொண்ட சிரிய தேசியக் கூட்டணி 58 -14 என்ற கணக்கில் மாநாட்டில் பங்கு பெற வாக்களித்தது. இருவர் வாக்களிக்கவில்லை, ஒரு வாக்கு வெற்றுச்சீட்டாக வாக்களிக்கப்பட்டது.

அக்கூட்டணி, வாக்கெடுப்பிற்கு முன், வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் அசாத் பதவி அகற்றப்பட முனைவோம் என்றும், தாங்கள் ஒரு புதிய சிரிய அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவோம் என்றும் உத்தரவாதங்கள் வழங்கவேண்டும் என கோரியுள்ளது. ஜனவரி 12 நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி உள்ளடங்கிய சிரிய நண்பர்கள் குழுஎதிர்த்தரப்பிற்கு ஒரு அறிக்கையை கொடுத்தது. “அசாத்தும் அவருடைய நெருக்கமான உதவியாளர்களும் தங்கள் கைகளில் இரத்தம் தோய்ந்தவர்கள். இவர்கள் சிரியாவில் பங்கு எதையும் பெறமாட்டார்கள்.” என்று அது எதிர்த்தரப்பிற்கு கூறிஅரசியல் வழிவகையில் பங்கு பெற ஒரு பிரதிநிதிக்குழுவைஅனுப்புமாறும் கோரியது.

இவ்வகையில் வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் தமது செல்வாக்கற்ற இஸ்லாமியவாத பினாமிகள் போர்க்களத்தில் வெற்றி பெறுவதில் தோல்வியுற்றதால், இராஜதந்திர முறை மூலம் ஒரு நவகாலனித்துவ ஆட்சியை சிரிய மக்களின் மீது சுமத்தும் முயற்சியை ஜெனீவா பேச்சுக்கள் பிரதிபலிக்கிறது.

கடந்த வாரம் ஜெனீவா II பேச்சுக்களில் பங்கு பெறுமா எனக் கூற மறுத்த சிரிய தேசியக் கூட்டணி அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் கொடுத்த கட்டளைகளைப் பின்பற்றுகிறது. இஸ்தான்பூலில் சிரிய தேசியக் கூட்டணி வாக்கெடுப்பு பற்றி அறிவிக்கையில், அதன் தலைவர் அஹ்மத் ஜர்பா அசாத்தைக் கண்டித்தார்: “நாங்கள் சிரியாவில் இருந்து இக்குற்றவாளியை அகற்ற ஜெனீவா பேச்சுக்களில் சேருகிறோம்.” என்றார்.

அமெரிக்க வெளிவிவகார செயலர், ஜோன் கெர்ரி சிரிய தேசியக் கூட்டணி   பங்குபெற வாக்களித்திருப்பதுதைரியமான செயல், ஜெனீவா II கூட்டம்ஒரு நல்ல எதிர்காலத்திற்கு இறுதியில் வழிவகுக்க பாதையை அமைக்கும்.” என்றார்.

பிரித்தானிய வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக்கும் சிரிய தேசியக் கூட்டணியின்  முடிவைப் பாராட்டி பின்வருமாறு கூறினார்: “பேச்சுக்களின் நோக்கம் ஓர் அரசியல் மாற்றத்திற்கு உடன்பட்டு மோதலுக்கு முடிவு காண்பதாகும். தேசியக் கூட்டணிக்கு மாறாக, சிரிய ஆட்சி இந்த நோக்கத்திற்கு இன்னும் உடன்படவில்லை. எவ்விதமான பரஸ்பரம் ஒத்துக்கொள்ளப்பட்ட உடன்பாடும் அசாத் சிரியாவின் எதிர்காலத்தில் எவ்வித பங்கும் பெறமுடியாது என்பதே.”

ஈரானுடன் சிரிய ஆட்சியின் முக்கிய நட்பு நாடான ரஷ்யாவும் ஜெனீவா பேச்சுக்களுக்கு ஆதரவு கொடுக்கிறது. சிரிய தேசியக் கூட்டணியின் வாக்களிப்பு ஒரு சரியான முடிவுஎன்ற ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி மிகைல் போக்டனோவ் அறிவித்தார். மேலும் பேச்சுவார்த்தை அரங்கிற்குச் சென்று மற்றும் அரசாங்கத்துடன் உரையாடல் செய்வதற்கான அவசியம் பற்றி நாம் தொரடர்ச்சியாக கூறி வந்தோம்என்றார்.

ஆயினும்கூட ஜெனீவாவில் ஒரு உடன்பாடு அடையப்பட முடியுமா என்பது தெளிவாக இல்லாததுடன் அல்லது இது சிரியாவில் நடக்கும் சண்டையில் என்ன தாக்கத்தை  கொடுக்கும் என்பதும் தெரியவில்லை. சவுதிஅரேபியா மற்றும் CIA ஜெனீவா பேச்சுக்களை எதிர்க்கும் சிரியாவிற்குள் இருக்கும் இஸ்லாமிய எதிர்த்தரப்பு கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்குகின்றன. அசாத் ஆட்சி, இஸ்லாமிய சக்திகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் நோக்கம் இல்லை என்று குறிப்புக் காட்டிவிட்டது.

அமெரிக்க ஆதரவுடைய எதிர்த்தரப்பு ஆயுதக்குழுக்கள் நேற்று பேச்சுவார்த்தைகளை கண்டித்து, சிரிய தேசியக் கூட்டணியின் முடிவான பேச்சுக்களில் கலந்து கொள்வது என்பதையும் கண்டித்தனர். இஸ்லாமிய முன்னணித் தலைவர் அபு ஒமார் சிரியாவின் வருங்காலம்இங்கு வீரத்தின் தளத்தில் வடிவமைக்கப்படுவதுடன் போர்முனையில் குருதியால் கையெழுத்திடப்படுமே தவிர தங்களைக்கூட பிரதிநிதித்துவப்படுத்த முடியாதவர்கள் கலந்துகொள்ளும் வெற்று மாநாடுகளால் அல்லஎன தெரிவித்தார்.

அசாத் அதிகாரத்தைக் கைவிடுவாரா என்பது பற்றி ரஷ்ய அதிகாரிகளுக்கும் அசாத்திற்கும் நடந்த அழுத்தமான விவாதங்கள் குறித்து முரண்பாடுடைய தகவல்கள் நேற்று வெளிவந்துள்ளன. ரஷ்யாவின் Interfax செய்தி நிறுவனம், சிரியாவுக்கு விஜயம் செய்திருந்த ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர்களிடம், “நாம் சரணடைய விரும்பினால், ஆரம்பத்தில் சரணடைந்திருப்போம். இதுவல்ல இப்பொழுது விவாதத்தில் உள்ள விடயம். யார் தேர்தலில் பங்குபெறுவது என்பது பற்றி சிரியாவின் மக்கள் மட்டுமே முடிவெடுக்கமுடியும்என அசாத் தெரிவித்ததாக அறிவித்தது

அசாத்தின் அலுவலகம் பின்னர் அறிக்கை ஒன்றை சிரிய அரசாங்கத் தொலைக்காட்சி நிலையத்திற்கு வெளியிட்டு Interfax இன் தகவல்துல்லியமானது அல்லஎனக்கூறியது. அசாத்Interfax உடன் நேர்காணலை நடத்தவில்லைஎன்றும் அது கூறியது. Interfax உம் தனது அறிக்கைக்கான ஆதாரம் அசாத் தான் என்று கூறவில்லை.

வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளின், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்தை உருவாக்கும் இப்புதிய முயற்சி கிட்டத்தட்ட சிரியா மீது அமெரிக்கத் தாக்குதலுக்கு இட்டுச்சென்ற செப்டம்பர் போர் நெருக்கடி தொடர்ந்தும் கொதிநிலையில் உள்ளது என்பதையே காட்டுகிறது. சிரியா மீதான தாக்குதலை அமெரிக்க அரசாங்கம் மக்கள் எதிர்ப்பினால் ஒத்துவைத்தது. அதேபோல் வெளியுறவுக் கொள்கைவகுப்பாளர்களின் கவலைகளான அவ்வாறான தாக்குதல் அது சீனாவை எதிர்கொள்ளும் ஆசிய முன்னுரிமைக்கும்குறுக்கே நிற்கும் என்பதையும் கருத்திற்கொண்டது. மாறாக ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்துப் பேச்சுக்களை தொடங்கியது.

ஆனால் இப்பொழுது அசாத்தின் முக்கிய நட்பு நாடுகளான ரஷ்யாவும் ஈரானும் ஆழ்ந்த அமெரிக்க அழுத்தத்தின் கீழ் உள்ள நிலையில் ஏகாதிபத்திய சக்திகள் மீண்டும் அசாத் அகற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை முடுக்கிவிட்டு, தங்கள் ஆதரவை எதிர்த்தரப்பிற்கு அளித்துள்ளன. ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ருஹானி அமெரிக்காவுடன் ஈரானிய உறவுகளை சீராக்க முற்பட்டு, அமெரிக்கா ஈரானின் பொருளாதாரத்தை நெரிக்கும் சர்வதேச பொருளாதாரத் தடைகளை அகற்றுவதற்கு பதிலீடாக வாஷிங்டனுக்கு ஈரானின் பரந்த எண்ணெய் வளங்களை வழங்கவும் வெளியுறவுக் கொள்கையில் உதவவும் முன்வந்துள்ளளார்.

மேற்கு ஆதரவுடைய எதிர்ப்புக்களை அண்டைநாடான உக்ரைனில் எதிர்கொள்கையில், மாஸ்கோவும் எதிர்வரவிருக்கும் சொச்சி (Sochi) ஒலிம்பிக்கில் அமெரிக்காவிற்கும் சவுதியின் உளவுத்துறைக்கும் நெருக்கமான செச்சேனிய இஸ்லாமியக்குழுக்கள் குண்டுத்தாக்குதல்களை நடாத்தலாம் என்ற அச்சம் காரணமாக சொச்சி நகரை சுற்றி நிறைய இடங்களை மூடிவைத்துள்ளது.

வாஷிங்டன் இப்பிராந்தியத்தில் முன்னெடுக்கும் நவ காலனித்துவ தன்மையுடைய கோரிக்கைகளுக்கு மத்தியிலும், பெரிதும் தோற்கடிக்கப்பட்ட எதிர்த்தரப்பினரின் அளவிற்கதிகமான கோரிக்கைகள் இருந்த போதிலும்கூட மாஸ்கோவும் தெஹ்ரானும் அசாத்தை ஜெனீவா II பேச்சுக்களில் பங்கு பெற அழுத்தம் கொடுத்துள்ளன.

வாஷிங்டன் தற்பொழுது ஈரான் ஜெனீவா பேச்சுக்களில் கலந்துகொள்ளக்கூடாது என்று மறுத்தாலும்தகவல் அறிந்த ஈரானிய ஆதாரங்கள் Al Monitor இடம், தெஹ்ரான் பேச்சுக்கள் வெற்றிபெற வேண்டும் என நோக்கம் கொண்டுள்ளது. “ஜெனீவாவில் எவர் கூடினாலும், சிரியா பற்றிய எத்தகைய தீர்விற்கும் ஈரான் முக்கியம் என்பதை அறிவர். இந்நாடுகள் எங்கள் முயற்சிகளைத் தேவைப்படுகின்றன, நாங்கள் உண்மையில் மாநாடு நல்ல முடிவிற்கு வர எங்கள் பங்கை செய்யத் தயாராக உள்ளோம்எனவும் தெரிவித்துள்ளன.

ஈரானிய வெளியுறவு மந்திரி ஜவாட் ஜரிப் இம்மாதம் முன்னதாக மத்திய கிழக்கில் துருக்கி, லெபனான், ஈராக், ஜோர்டானிற்கு பயணித்து சிரியப் போர் குறித்து விவாதித்தார். சிரிய இஸ்லாமிய எதிர்த்தரப்பிற்கு முக்கிய ஆதரவான துருக்கிய அரசாங்கம் ஜரிப்புடன் பேசியபின் ஜெனீவா பேச்சுக்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளது.

மாஸ்கோ வியாழன் அன்று முதலில் ஜரிப், பின்னர் சிரிய வெளியுறவு மந்திரி வாலிட் முயல்லெமை வெள்ளியன்று சந்தித்தது. முயல்லெம் கிரெம்ளினுக்கு ஒரு திட்டத்தை போர் நிறுத்தம் மற்றும் அலெப்போவில் உள்ள எதிர்த்தரப்பு சக்திகளுடன் கைதிகள் பறிமாற்றம் என்பவற்றை முன்வைத்தார்.

இத்திட்டம் வெற்றிபெறும் என நான் நம்புகிறேன், அனைத்துத்தரப்பினரும் தங்கள் கடமைகளை செய்தால்.” என முயல்லெம் கூறினார். “இது பிற நகரங்களுக்கு உதாரணமாக அமைய வேண்டுமென நாம் விரும்புகிறோம்.”

அமெரிக்கக் கொள்கை இன்னும் ஆத்திரமூட்டும் தன்மையுடையது. அதன் அல் குவேடா மற்றும் எதிர்த்தரப்பு சக்திகளுக்கு இடையிலான தொடர்புகளும் அவற்றை டமாஸ்கஸில் அதிகாரத்தில் இருத்த முயல்வது நன்கு தெரிந்ததும், அமெரிக்க நட்பு நாடுகளால் உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டதுமாகும்.

ஜனவரி 13 வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தகவல்படி, ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினின் உளவுத்துறை அமைப்புக்கள் சிரியாவிற்கு அதிகாரிகளை அனுப்பி சிரியாவில் போரிடும் எதிர்த்தரப்புப் பயங்கரவாதப் பிரிவில் சேர்ந்துள்ளதாக கருதப்படும் கிட்டத்தட்ட 1,200 ஐரோப்பியர்களை கண்காணிக்க அசாத்தின் உதவியை நாடியுள்ளன. அவர்கள் அதன்பின் திரும்பி ஐரோப்பாவிற்குள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவர் என்ற அச்சங்கள் உள்ளன.

ஜேர்னலிடம் பேசிய ஸ்பெயினின் அதிகாரிகள், கூட்டங்கள் நடைபெற்றன என்பதை உறுதிப்படுத்தினர்: “ஆம், தகவல்கள் பரிமாற்றம் நடந்துள்ளது. ஸ்பெயின் எப்பொழுதும் இந்த பயங்கரவாதிகள் காட்டும் ஆபத்து குறித்து அதன் கவலைகளைத் தெரிவித்துள்ளதுஎன்றனர்.

ஜேர்னல் கட்டுரை வெளிவந்த அன்று தன்னுடைய ஜனாதிபதி உரையில் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், சிரியாவில் போரிடப் பயணித்துள்ள 700 பிரெஞ்சு இளைஞர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.