சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

“Geneva II” and the US regime-change drive in Syria

ஜெனிவா II” பேச்சுவார்த்தையும், சிரியாவில் அமெரிக்க ஆட்சி மாற்றத்திற்கான உந்துதலும்

Patrick O’Connor
23 January 2014

Use this version to printSend feedback

சிரியா நெருக்கடி மீது புதனன்று தொடங்கிய பேச்சுவார்த்தைகளில், ஜெனிவா II பேச்சுவார்த்தைகளின் நோக்கம் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தை நீக்குவதும், ஒரு அமெரிக்க சார்பு கைப்பாவை அரசை நிறுவுவதுமாகும் என்ற ஒபாமா நிர்வாகத்தின் வலியுறுத்தல் மேலாதிக்கம் செலுத்தியது.

ஒரு காலனியாதிக்க பிரபுவைப் போல, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி அறிவித்தார், நாங்கள் ஒரேயொரு சாத்தியக்கூறை மட்டுமே காண்கிறோம், அதாவது பரஸ்பர சமரசத்தோடு உருவாக்கப்படும் ஒரு இடைக்கால அரசாங்கம் குறித்து பேசுவது."

பரஸ்பர சமரசம்" என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆணையின் கீழ் உருவாகும் ஒரு தீர்மானத்தை அர்த்தப்படுத்தும் என்பதை கெர்ரி தெளிவுபடுத்தினார். அதாவது பஷார் அசாத் அந்த இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மாட்டார், அவர் தொடர்ந்து கூறினார், தனது சொந்த மக்களுக்கு ஒரு காட்டுமிராண்டித்தனமான விடையிறுப்பைக் காட்டிய ஒரு மனிதர் ஆட்சி செலுத்த சட்டபூர்வ தன்மையைப் பெறுவதற்கு அங்கே வழியே இல்லை, வாய்ப்பே கிடையாது, என்றார்.

இத்தகைய முரட்டுத்தனமான இறுமாப்பு, உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் கடைபிடிக்கப்படும் அமெரிக்க கொள்கையின் தனிமுத்திரையாகும். அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் புவிசார் அரசியல் நலன்களுக்கு இடையூறாக காணப்படும் எந்தவொரு அரசாங்கமும், வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, நிலைகுலைக்கப்பட அல்லது தூக்கியெறியப்பட இலக்கில் வைக்கப்படுகிறது. கெர்ரி பேசிக் கொண்டிருந்த அதேவேளையில், அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய ஐரோப்பிய கூட்டாளிகளால் ஆதரிக்கப்படும் உக்ரேனில் உள்ள அதிதீவிர வலதுசாரி மற்றும் பாசிச சக்திகள், ரஷ்யாவுடன் மிக நெருக்கமாக இருப்பதாக கருதப்படும் ஒரு அரசாங்கத்தை பதவியிலிருந்து இறக்கும் நோக்கில் போராட்டங்களைத் தீவிரப்படுத்தின.

சிரியாவில், வன்முறைகளைப் பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தைச் செய்ய வாஷிங்டன் சுமார் மூன்று ஆண்டுகள் செலவிட்டுள்ளது. அமெரிக்காவும் மற்றும் ஐரோப்பா, சவூதி அரேபியா மற்றும் கடாரில் உள்ள அதன் கூட்டாளிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் உட்கூறுகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு கிளர்ச்சிக்கு நிதியுதவி செய்துள்ளன. அந்த கூறுகள் இன மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிராக அட்டூழியங்களைப் புரிந்துள்ளன. அந்த மோதலில் 100,000த்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, மில்லியன் கணக்கானவர்களை அது இடம்பெயர செய்துள்ளது. அதுவொரு பிராந்தியம் தழுவிய உள்நாட்டு யுத்தமாக அபிவிருத்தி அடைய அச்சுறுத்தி வருகிறது.

சிரியாவில் அமெரிக்க பிரச்சாரமானது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு எதிரான சட்டவிரோத அமெரிக்க யுத்தங்களைப் பின்தொடர்கிறது. அந்த யுத்தங்கள் அவ்விரு நாடுகளையும் பேரழிவுக்கு உட்படுத்தியதோடு, மில்லியன் கணக்கானவர்கள் இல்லை என்றாலும், பல பத்தாயிரக் கணக்கான மக்களின் உயிரிழப்புகளுக்கு வித்திட்டது. லிபியாவில் கடாபியைத் தூக்கியெறிவதற்கான அமெரிக்க தலைமையிலான யுத்தமும் அதே வரிசையில் வருகிறது.

ஒபாமா நிர்வாகம் சிரியாவில் அதன் பிரச்சாரத்தை மிக பகிரங்கமாக, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்ற வனப்புரைகளில் மூடி மறைக்கிறது. சிரிய அதிகாரிகளின் கருத்துக்களுக்கு விடையிறுக்கையில் அவர்கள் "எதிர்ப்பு" சக்திகள் என்று அழைக்கப்படுபவைகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டுமென்ற வலியுறுத்தலை எதிர்க்கின்றனர் அந்த ஆட்சி ஆத்திரமூட்டும் வார்த்தைஜாலங்களில்" ஈடுபட்டு வருவதாகவும், பன்முகமாக, உள்ளார்ந்த விதத்தில் மற்றும் அனைவருக்குமான உரிமைகளை மதிக்கும் விதத்தில் சிரியாவின் எதிர்காலத்திற்கான ஒரு நேர்மறையான பார்வையை அமைக்க" அது தவறி வருவதாகவும் வெளியுறவுத்துறை குற்றஞ்சாட்டியது.

கடந்த செப்டம்பரில், ஒபாமா நிர்வாகம் சிரியாவிற்கு எதிராக ஓர் இராணுவ தாக்குதலைத் தொடங்கும் விளிம்பில் இருந்தது. ஆனால் பரந்த மக்கள் எதிர்ப்பை முகங்கொடுத்திருந்த நிலையில், 2011இல் லிபியாவில் அது ஏற்படுத்தி இருந்ததைப் போன்றவொரு சர்வதேச கூட்டணியை அதனால் ஜோடிக்க இயலாமல் ஆனதும் இறுதியாக பின்வாங்கியது. இறுதிநேர தந்திரோபாய திருப்பமாக, சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் கையிருப்பை அழிப்பதை உள்ளடக்கிய, ரஷ்யாவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஓர் உடன்படிக்கைக்கு வாஷிங்டன் உடன்பட்டது. எவ்வாறிருந்த போதினும், இந்த "ஜெனிவா II பேச்சுவார்த்தைகள் வாஷிங்டன் அதன் அடிப்படை மூலோபாயத்தில் இருந்து பின்வாங்கவில்லை என்பதையே தெளிவுபடுத்துகின்றது.

அதன் நலன்களை பின்தொடர்வதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வழிமுறையானது அடாவடித்தனம் மற்றும் பொய்களை உள்ளடக்கி உள்ளது. 11,000 கைதிகளைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தமை உட்பட அசாத் ஆட்சி "தொழில்துறை அளவிலான படுகொலைகளை" நடத்தியுள்ளது என்ற சரியான நேரத்திலான குற்றச்சாட்டின் மீது சமீபத்திய வெளிப்பாடுகள் அடித்தளத்தைக் கொண்டுள்ளன. அமெரிக்க ஊடகங்கள் கட்டாரால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் வேரூன்றிய இழிவார்ந்த குற்றச்சாட்டுகளால் நிரம்பி உள்ளன. சிரியாவிற்குள் இஸ்லாமியவாத போராளிகளைக் குவித்து வைப்பதில் கட்டார் ஒரு பிரதான பாத்திரம் வகித்துள்ளது. ஆதாரங்கள் என்று கருதப்படும் அனைத்தும் "சீசர்" என்ற இரகசியபெயரைக் (codename) கொண்ட ஒரு நடவடிக்கையின் குற்றச்சாட்டுக்களில் இருந்து தருவிக்கப்படுகின்றன. அவர் செப்டம்பர் 2011இல் இருந்து சிரிய எதிர்ப்பு குழுக்களோடு இணைந்து வேலை செய்து வந்துள்ளார்.

சிரியாவிற்குள் நிலவும் நிலைமைகளின் மீது "சீசரின்" ஆதாரம் எந்தளவிற்கு நம்பக்கூடியதாக இருக்கிறதென்றால், இடம்பெயர்த்தக் கூடிய ஈராக்கிய இரசாயன ஆயுத ஆய்வகங்கள் குறித்து நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட எதிர்தரப்பு உளவாளி "Curveball வழங்கிய கட்டுக்கதைகள் அளவிற்கு உள்ளது, மேலும் அது தான் 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு முந்தைய சூழலில் வெள்ளை மாளிகையால் ஊக்குவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டின் கோடைகால இறுதியில் அமெரிக்கா யுத்தத்திற்கான தயாரிப்பு செய்திருந்த நிலையில், டமஸ்கஸின் புறநகர் கூத்தாவில் நடந்த இரசாயன தாக்குதல்களுக்கு சிரிய அரசே பொறுப்பாகுமென்று கெர்ரியும் ஏனைய மூத்த நிர்வாக அதிகாரிகளும் குற்றஞ்சாட்டினர். அந்த விஷவாயு தாக்குதல் கெர்ரி சிரிய எதிர்ப்பு பிரமுகர்களைச் சந்தித்துவிட்டு வந்த சில நாட்களில் நடந்தது. அவர்கள் பல மாதங்களாக இராணுவரீதியில் பின்வாங்க தள்ளப்பட்டிருந்தார்கள் என்பதோடு அமெரிக்காவிடமிருந்து மேலதிகமாக நேரடியான இராணுவ உதவியை வேண்டி நின்றிருந்தனர்.

அந்த விஷவாயு தாக்குதல் சிரிய படைகளால் நடத்தப்பட்டதென்ற வாஷிங்டனின் வாதம் முற்றிலும் பொய்களென்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் இரசாயன ஆயுத ஆய்வாளர்களின் ஒரு கடந்த மாத அறிக்கை, கூத்தா படுகொலை நடந்து சில தினங்களுக்குள் நடந்த உறுதிசெய்யப்பட்ட பல தாக்குதல்கள் உட்பட, பல்வேறு சரீன் வாயு தாக்குதல்கள் எதிர்ப்பு போராளிகள் படைகளால் நடத்தப்பட்டன என்பதை விவரித்தது. மேலும் கடந்த மாதம், புலனாய்வு இதழாளர் செமொர் ஹெர்ஷ் அந்த சம்பவம் மீதான உளவு தகவல்களில் ஒபாமா நிர்வாகத்தின் திரித்தல்களை அம்பலப்படுத்தினார்.

இப்போது, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் ஆய்வாளர் ரிச்சார்ட் லாயட் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பயிலகத்தின் பேராசிரியர் தியோடர் போஸ்டல் ஆகிய இரண்டு அமெரிக்க வல்லுனர்கள், வாஷிங்டனின் வாதங்களைக் கூடுதலாக தகர்க்கும் விதமாக ஓர் அறிக்கை எழுதி உள்ளனர். அவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30இல் வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட டமஸ்கஸின் ஒரு வரைபடத்தைப் பயன்படுத்தி இருந்தனர். அது அரசு மற்றும் எதிர்ப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த அப்போதைய பகுதிகளை வேறுபடுத்தி காட்டியது. அதைக் கொண்டு லாயட் மற்றும் போஸ்டல் அந்த இரசாயன ஆயுதங்கள் இலக்கிலிருந்து 20 கிலோமீட்டருக்குள் இருந்து வந்திருக்க வேண்டுமென்றும், அது செலுத்தப்பட்ட ஒவ்வொரு இடமும் எதிர்ப்பினரின் பிடியிலிருந்த பகுதியிலிருந்து வந்ததற்கான சாத்தியக்கூறு இருந்ததையும், சிரிய அரசோ அல்லது இராணுவமோ அதற்கு பொறுப்பாக முடியாது என்பதையும் ஆய்வின் இறுதியில் சுட்டிக்காட்டி இருந்தனர்.

மெக்கிளாட்ச் செய்தி சேவைக்கு (McClatchy News Service) போஸ்டல் தெரிவித்தார்: இந்த ஆய்வை நான் தொடங்கிய போது, எதுவாக இருந்தாலும் சிரிய அரசு அந்த தாக்குதலுக்குப் பின்னால் இருந்திருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கண்ணோட்டமாக இருந்தது. ஆனால் இப்போது எதுவாக இருந்தாலும் அதை நான் உறுதியாக கூற முடியாமல் இருக்கிறேன். நிர்வாகத்தின் சொல்லாடல், எதார்த்தத்திற்கு மிக நெருக்கத்தில் கூட இல்லை.

சிரியாவிற்கு எதிரான சமீபத்திய குற்றச்சாட்டுகள், அந்த சரீன் வாயு குறித்த பொய்கள் அளவிற்கு கூட நம்பத்தகுந்தவையாக இல்லை.

அமெரிக்க வெளியுறவு கொள்கையின் ஆத்திரமூட்டல்களும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைக் காப்பாற்றுகிறோம் என்ற அப்பட்டமான போலித்தனமும், உக்ரேனில் நடந்துவரும் சம்பவங்களில் மேலதிகமாக அம்பலப்பட்டு உள்ளன. ரஷ்ய தரப்பிலான அரசை ஆட்சியை விட்டு இறக்குவதை நோக்கமாக கொண்ட எதிர்ப்பு போராட்டங்கள் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் ஊதிவிடப்படுகின்றன. அவ்விரு நாடுகளுமே எதிர்ப்புகளுக்குள் பாசிச அமைப்புகளால் வகிக்கப்படும் முன்னணி பாத்திரத்தைக் குறித்து அக்கறையற்று உள்ளன. இந்த குழுக்கள் இரண்டாம் உலக யுத்தத்தில் உக்ரேன் ஆக்கிரமிப்பின் போது நாஜிக்களோடு சேர்ந்து வேலை செய்த மற்றும் அந்நாட்டில் யூதர்களின் இனப்படுகொலைகளை நடத்துவதற்கு உதவிய கம்யூனிச-விரோத பகடை சக்திகளின் நேரடி வம்சாவளியில் இருந்து வந்தவை ஆகும்.

இன்று நவ-பாசிசவாதிகள், மூத்த அமெரிக்க அதிகாரிகளால் முக்கிய ஆட்சியியல் வல்லுனர்களாக பாராட்டப்படுகின்றனர். வெறும் ஒருசில வாரங்களுக்கு முன்னர், செனட்டர் ஜோன் மெக்கென் ஸ்வோபோடா கட்சியின் (சுதந்திர கட்சி) தலைவரும் இழிபெயர்பெற்ற யூத-விரோத கொள்கையாளருமான Oleg Tyagnibok'ஐ பகிரங்கமாக சந்தித்தார்.

உக்ரேன் மற்றும் சிரியாவின் நெருக்கடியானது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சூறையாடும் பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களை முன்னெடுக்க அதிதீவிர வலதுசாரி சக்திகளைக் கண்மூடித்தனமாக ஊக்குவிக்கும் ஒபாமா நிர்வாகத்தின் விருப்பத்தை எடுத்துக்காட்டுகின்றது.