சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Corporate criminals, billionaires gather for World Economic Forum in Davos

டாவோசில் உலகப் பொருளாதார அரங்கில் பெருநிறுவனக் குற்றவாளிகளும் பில்லியனர்களும் கூடுகின்றனர்

By Andre Damon 
23 January 2013

Use this version to printSend feedback

உலகப் பொருளாதார அரங்கின் (WEF) 44வது ஆண்டுக் கூட்டம் புதன் அன்று ஆரம்பித்தது. 2,000 க்கும்மேற்பட்ட பெருநிறுவன நிர்வாகிகள், பாரிய முதலீட்டாளர்கள், அரசாங்கத் தலைவர்கள், மத்திய வங்கியாளர்கள் மற்றும் பிரபல்யமானவர்களும் சுவிஸ் அல்பைன் சுற்றுலா இடமான டாவோஸில் கூடினர்.

செல்வம் மற்றும் பேராசையின் வருடாந்த கொண்டாட்டம், உலகின் பெரும் செல்வந்தர்களுக்கு மிகச்செழிப்பான ஆண்டைத் தொடர்ந்து வந்துள்ளது. பங்குச் சந்தை விலைகளும் பெருநிறுவன இலாபங்களும் புதிய உயரங்களுக்குச் சென்றதுடன், நிதிய உயரடுக்கின் வங்கிக் கணக்குகளிலும் இலாபங்களிலும் பாரிய அதிகரிப்பை கண்டன. அதே நேரத்தில் சிக்க நடவடிக்கைகள், ஊதியக் குறைப்புக்கள், பணிநீக்கங்கள் மற்றும் வாழ்க்கைத்தரங்கள் மீதான தாக்குதல்கள் பல மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் தள்ளியுள்ளது.

அரங்கம் கூடுவதற்குமுன், பிரித்தானிய அறக்கட்டளை நிறுவனம் ஆக்ஸ்பாம் சமூக சமத்துவமின்மை குறித்த அதிர்ச்சி தரும் அதிகரிப்பை ஆவணப்படுத்தி ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கை உலகின் 85 பெரும் செல்வந்தர்கள் உலகின் மக்கள் தொகையில் வறிய 50 சதவிகிதத்தினரைவிட அதாவது 3.5 பில்லியன் மக்களைவிட அதிக செல்வத்தை கொண்டிருப்பதாகத் தகவல் கொடுத்துள்ளது

டாவோஸ் மாநாடு, புதிய உலக நிதியப் பிரபுத்துவத்தின் தோற்றத்தின் உருவகம் ஆகும். இந்த ஆண்டுக்கூட்டத்தில் பங்கு பெற்றவர்களில் 80 பில்லியனர்களும் நூற்றுக் கணக்கான மில்லியனர்களும் இருந்தனர்.

ஆரம்பநாளின் ஒலிக்குறிப்பு, “வலுவற்ற நம்பிக்கையுணர்வுஆகும் என்று பங்கேற்பாளர்கள் பற்றிய மதிப்பீடு ஒன்று குறிப்பிடுகிறது. 2014ல் இன்னும் அதிக சிறப்பான காலம் இருக்கும் என்னும் பொது எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், டாவோஸில் பிரதிநிதித்துவப்படுத்தும் உயரடுக்குகள் சமூகத்தை அப்பட்டமாக கொள்ளையடிப்பதின் சமூக, அரசியல் விளைவுகள் பற்றிய அச்சமும் உள்ளது.

ஜனவரி 22ல் இருந்து 25 வரை நடக்கும் மாநாடு, உத்தியோகபூர்வமாக, “உலகை மறுவடிவமைத்தல்: சமூகம், அரசியல், வணிகத்தின் மீதான விளைவுகள்என்ற தலைப்பை ஏற்றது. இது 1,500 வணிக நிர்வாகிகள், 48 பிரதம மந்திரிகள் மற்றும் ஜனாதிபதிகள், 21 மத்திய வங்கிகளின் தலைவர்கள் ஆகியோரை ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் இருந்து வந்தவர்களில் வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி, வர்த்தக செயலர் பென்னி பிரிட்ஜ்கர், கருவூல செயலர் ஜாகோப் லூ மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புத்தலைவர் ஜீனா மக்கார்தி ஆகியோர் உள்ளனர்.

நவீன கண்டுபிடிப்புக்களை ஒழுங்குபடுத்துதல், “ஐரோப்பாவின் போட்டித்திறன் இடைவெளியை மூடுதல், “உயர்கல்விமுதலீடா அல்லது வீணா?”, “குடியேற்றம்வரவேற்பதா அல்லது இல்லையாபோன்ற குழு விவாதங்கள் செல்வம் படைத்தவர்கள், சக்திவாய்ந்தவர்களுக்கு நடக்கும் கேளிக்கைகளுக்கு இடையே நடக்கின்றன. வாஷிங்டன் போஸ்ட் எழுதியுள்ளபடி, “பகலில் அதிகளவு தகவல்களை பெற்றபின், மாலைகளில் உங்கள் வழக்கமான விருந்துக் காட்சிகள், புகழ்பெற்றவர்களைக் காணல், இரவு பனிச்சறுக்கல்கள் போன்றவையும் நிறைய மதுபான நுகர்வும் உள்ளன.”

டாவோசின் செல்வாக்குப்படைத்த Belvedere Hotel மட்டும் 1,594 பாட்டில்கள் ஷாம்பெயின், பிரோசெக்கோ மற்றும் 3,088 பாட்டில்கள் சிவப்பு, வெள்ளை ஒயின் வாங்கியுள்ளது என்று BBC கூறுகிறது. வசதியேற்படுத்தி தரும் விதத்தில் இதுஐந்து நாட்களில் தலைமை நிர்வாகிகள், பிரதம மந்திரிகள், ஜனாதிபதிகளால் நிறைந்த 320 விருந்துகளுக்கும், அதன் 126 அறைகளுக்கும் ஒழுங்குபடுத்தியுள்ளது.

இதில் பங்கு பெறுபவர்கள் கொண்டாட காரணம் உள்ளது. உலகின் மிக அதிக செல்வம் படைத்த 300 பேர் தங்கள் நிகர மதிப்பு $524பில்லியன் கடந்த ஆண்டு வளர்ந்ததைக் கண்டனர் என்று புளூம்பேர்க் நியூஸ் கூறுகிறது. புளூம்பேர்க் கட்டுரை, “டாவோஸ் பில்லியனர்கள் செல்வ ஆதாயத்தை 2014 பங்குகள் ஏற்றத்தில் காண்கின்றனர் என்ற தலைப்பில் பில் கேட்ஸ் கடந்த ஆண்டின் மிகப் பெரிய ஆதாயம் அடைந்தவராவர். அவருடைய சொத்துக்கள் மதிப்பு $15.8 பில்லினில் இருந்து $78.5 பில்லியன் என அதிகரித்து, உலகின் பெரும் பணக்காரர் என்னும் இடத்தை மீண்டும் பெற்றார் குறிப்பிட்டுள்ளது.

இம்மாநாடு, 1971ல் ஜேர்மனிய வணிகப் பேராசிரியர் கிளவ்ஸ் ஷ்வாப் ஆல் நிறுவப்பட்டது. அவர் ஐரோப்பா முழுவதும் இருந்த நூற்றுக்கணக்கான பெருநிறுவன நிர்வாகிகளை ஐரோப்பிய மேலாண்மை அரங்குஎன அவர் அழைத்த மாநாட்டிற்குக் கூப்பிட்டார். ஆனால் நிகழ்வு, 1987இல் உலக பொருளாதார அரங்கு என  மாற்றப்பட்டது. அது ரேகன், தாட்சரின் கீழ் தனது முதல் அரசியல் பிற்போக்குத்தனத்தின் காலகட்டத்தை அடைந்து, கீழிருந்து மேலே செல்வம் மறுபகிர்வின் அதிகரிப்புடன் இணைந்து நின்றது.

டாவோஸில் கூடிய நூற்றுக்கணக்கான பெருநிறுவன நிர்வாகிகளில், கணிசமான பிரதிநிதிகள் வங்கிகளில் இருந்து வந்தனர். அவர்களுடைய ஊக, மோசடிச் செயல்கள்தான் 2008 நிதிய நெருக்கடியைத் தூண்டியது. கோல்ட்மன் சாஷ்ஸ் எட்டு பிரதிநிதிகளையும் (Lloyd Blankfein தலைமை நிர்வாகி உட்பட), சிட்டிக்ரூப் மற்றும் HSBC ஏழு பேரைத் தனித்தனியேயும், மற்றும் ஜேபி மோர்கன் சேஸ் தலைமை நிர்வாகி ஜேமி டைமன் உட்பட ஆறு பேரையும் அனுப்பியிருந்தன.

புதன்கிழமை அரங்கில், “சர்வதேச நிதிய முறை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பாதுகாப்பானதாக இருக்கிறதா?” என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டவர்களில், HSBC தலைவர் டுக்லாஸ் பிளின்ட், பார்க்ளேஸ் தலைமை நிர்வாகி ஆன்டனி ஜேன்கின்ஸ் ஆகியோர் இருந்தனர். பார்க்ளேஸ் உலகின் முக்கிய வட்டி விகிதமான லைபர் என்றழைக்கப்படும் அதாவது லண்டன் வங்கிகளுக்கு இடையேயான கடன் கொடுக்கும் விகிதத்தை சட்டவிரோதமாக திரித்தற்கான தண்டனையாக 450 மில்லியன் டாலர்களை 2012இல் கொடுத்தது. HSBC இதேபோன்ற குற்றச்சாட்டுக்களை தீர்க்க, 500 மில்லியன் டாலர்களையும், போதைப்பொருள் வியாபாரத்திலிருந்து வந்த பணமாற்ற குற்றச்சாட்டினை தீர்க்க இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன்களும் கட்டுப்பாட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

உலக அபாயங்கள்என்ற அதன் ஆண்டு அறிக்கையில் அரங்கு வருமான ஏற்றத்தாழ்வை முக்கிய அச்சுறுத்தல் என்று பட்டியலிட்டு, இந்த அபாயம் உலகில் எதிர்வரவிருக்கும் தசாப்தத்தில் தீவிர சேதத்தை ஏற்படுத்தும் காரணியாக இருக்கலாம்என எச்சரித்தது. WEF தலைமைப் பொருளாதாரவாதி ஜேனிபெர் பிளாங் எகிப்து, துனிசியாவில் நடந்த 2011எழுச்சிகளை பற்றிக் குறிப்பிட்டு, “அதிருப்தி சமூகத்தின் இழையை அழிக்க இட்டுச்செல்லக்கூடும், குறிப்பாக இளைஞர்கள் தங்களுக்கு வருங்காலம் இல்லை என நினைத்தால்என்றார்.

சர்வதேச நாணய நிதியின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட் இதேபோன்ற கருத்தை பைனான்சியல் டைம்ஸுக்குக் கொடுத்த பேட்டியில் வழங்கி பெருகும் பொருளாதார சமத்துவமற்ற நிலைஉறுதிப்பாட்டிற்கும், நீடிக்கும் தன்மைக்கும் ஏற்றது அல்லஎன எச்சரித்தார். போப்பாண்டவர் பிரான்ஸிஸும் இதே போன்ற எச்சரிக்கையை வெளியிட்டார்.

ஆனால் மாநாட்டில் எவரும் தொழிலாள வர்க்கத்தின் நிலையை சீர்படுத்துவதற்வோ, மேலிருந்து செல்வம் கீழே பகிரப்படவோ திட்டம் எதையும் முன்வைக்கவில்லை. மாறாக முக்கிய சொற்றொடராக கட்டமைப்பு சீர்திருத்தம்(structural reform) என்பது இருந்தது; இது தொழிலாளர்களின் அனைத்துப் பாதுகாப்புக்களையும் நீக்குவது, சமூகநலன்புரி அரசில் எஞ்சியிருப்பவற்றை அகற்றுவது மற்றும் பெருநிறுவன இலாபங்களை கட்டுப்படுத்தும் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, சுகாதார விதிகளை அகற்றுவது பற்றிய மறைமுக வார்த்தையாகும்.

அரங்கிற்கு வந்த 1344 வணிக நிர்வாகிகளை மதிப்பீடு செய்யும் செயல் PricewaterhouseCoopers ஆல் செய்யப்பட்டது. அது, பெருநிறுவனங்களின் பெரும் கவலை, “கூடுதல் கட்டுப்பாடுமற்றும் அரசாங்க பற்றாக்குறைகள் (அதாவது, சமூகநலச் செலவுகள்) ஆகும். நிர்வாகிகளின் 72 சதவீதத்தினர் கூடுதல் கட்டுப்பாடு பொருளாதார வளர்ச்சிக்கு தடை என்றனர், 71 சதவீதத்தினர் "அதிகமான" சமூகநலச் செலவுகள் மற்றும் அரசாங்க கடன்கள் பற்றி புகார் கூறினர் எனக் குறிப்பிட்டது.