சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Goodyear workers’ fight for jobs threatened by union sellout

பிரான்ஸ்: குட்இயர் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் வேலைகளை விற்றுவிட அச்சுறுத்தும் நிலையில் போராடுகின்றனர்

By Pierre Mabut 
24 January 2014

Use this version to printSend feedback

குட்இயர் டன்லப் டயர்கள் பிரான்ஸ் (GDTF) இன் நிர்வாகம், ஸ்ராலினிச CGT தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், வேலைநிறுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பை முடிக்க ஜனவரி 22ம்திகதி உடன்பாட்டை அடைந்ததோடு, ஒரு வாரம் முன்பு ஆரம்பித்த வேலைநிறுத்தம், முடிவுக்கு வந்தது. முழுத் தொழிலாள வர்க்கமும் வேலை வெட்டுக்கள் மற்றும் ஆலை மூடல்களுக்கு எதிராக பரந்த போராட்டத்தை மேற்கொள்வதை நிறுத்தும் அக்கறையில், தொழிற்சங்கங்கள், அமியானில் ஆலையில் 1,173 வேலைகள் இழப்பிற்கு ஈடாக சற்றே கூடுதல் நிதிய இழப்பீட்டைத்தான் கோரின.

டைட்டன் டயர்ஸ் (Titan Tires) உடன் ஓர் உடன்பாடு இப்பொழுது ஏற்பட்டுள்ளது, அதன்படி அமியான் ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்களில் 333 பேர் மட்டும் மீண்டும் வேலையில் எடுத்துக் கொள்ளப்படுவர்; இது சந்தேகத்திற்கு இடமின்றி கடுமையான பணி நிலைமைகளின் கீழ் விவசாயத்திற்கான டயர்களை உற்பத்தி செய்யும். 2007ல் இருந்து, நிறுவனம் விரைவுப் பணி மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மையை நான்கு பணி நேர முறை (4 x 8) மூலம் சுமத்த முற்பட்டபோது, குட்இயர் தொழிலாளர்கள் சரியாக அதை நிராகரித்தனர்; நிறுவனம் முதலீட்டைத் திரும்பப் பெற்று உற்பத்தியை குறைத்துவிட்டது.

இப்பொழுது, Courrier Picard தகவல்படி, “இழப்பீடு, 2012ல் தன்னார்வமாக பணியில் இருந்து வெளியேறுதல் என்று நடைமுறைக்கு வராத திட்டத்தில் கூறப்பட்டதையும்விட ஒப்பிடுகையில் மட்டமானதுதான்.” 5 முதல் 9 ஆண்டுகள் பணிபுரிந்த தொழிலாளர்கள் 80,000 யூரோக்களையும், 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் 90,000 யூரோக்களையும் எனப் பெறுவர்.

France 2 தொலைக்காட்சி, CGT அதன் முந்தைய பணிநீக்க அளிப்பை மூன்று மடங்கு ஆக்கிவிட்டது என்றும் நீக்கப்பட்ட தொழிலாளர்கள் 120,000 யூரோக்கள் பெறுவர் என்றும் தகவல் கொடுக்கிறது.

ஜனவரி 6 ம் தேதி தொடங்கி, தொழிலாளர்கள் உற்பத்தியை நிறுத்தி, மனித வள இயக்குனர்களை ஆலையில் 30 மணி நேரம் பிணையாளிகளாகவும் வைத்து பேச்சுக்கள் தொடங்குவதை கட்டாயப்படுத்தினர். அவர்கள் எந்த ஆபத்தும் இல்லாமல் விடுவிக்கப்பட்டனர், ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதை போன்று, நிறுவனம் அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுக்களையும் கைவிட்டுள்ளது.

CGT ஆலை மூடலுக்கு அனைத்து சட்டபூர்வ எதிர்ப்பையும் கைவிட ஒப்புக் கொண்டுள்ளது, ஆனால் தனிப்பட்ட தொழிலாளர்கள், தொழிலாளர் நீதிமன்றங்களில் அதிக இழப்பீட்டுத் தொகைக்கு மேல்முறையீடு செய்யலாம் என நிறுவனத்துடன் ஒப்புக் கொண்டுள்ளது. இத்தகைய பண அளிப்புக்கள், குட்இயர் ஆலை மூடப்படுதல் பொருளாதார ரீதியாக நியாயமற்றது என்பது நிரூபணம் ஆனால்தான் என்ற நிபந்தனை இருக்கும்.

ஜனவரி மாத தொடகத்தில் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு GDTF உடைய பணிநீக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்து, திட்டவட்டமாக ஆலை முடலையும் ஏற்றது – இது பணிநீக்கங்களுக்கு எதிராக, சட்டரீதியாக ஏழாண்டு காலம் CGT போராடியபின் நடந்துள்ளது. ஆலையின் CGT பிரதிநிதி மிக்கேல் வாமன் முடிவுரையாக கூறினார்: “நாம் இனி எங்களது வேலைகளை காப்பாற்ற முடியாது என்னும் இந்த நிலையில், நாம் நம்முடைய குடும்பங்களின் நலனுக்காக மிக அதிகபட்ச பணத்துடன் வெளியேற விரும்புகிறோம்,.”

CGT உடைய பணிக்குழுவின் கூட்டுச்செயலர் பிராங்க் ஜூரெக் கூறினார்: “நாங்கள் அனைத்து நீதிமன்ற முடிவுகளையும் இழந்துவிட்டோம், எனவே எமது தந்திரோபாயமுறையை மாற்றுகிறோம்.”

CDTF ஐ பேச்சு மேசைக்குக் கொண்டுவந்து ஆலை மூடலுக்கு அனுமதிப்பதற்கான “தந்திரோபாயமுறை மாற்றம்” என்ற CGT யின் மூலோபாயம், நீதிமன்ற தீர்ப்புக்களை நம்பியிருத்தல் மற்றும் ஒரு பிற்போக்குத்தன சோசலிஸ்ட் கட்சி அராசங்கத்தை நோக்கிய தகவமைவின் தோல்வியைத்தான் காட்டுகிறது. தொழிலாள வர்க்கம் சோசலிஸ்ட் கட்சிக்கு எதிராக ஒரு சுயாதீனமான அரசியல்  போராட்டத்தை நடத்தினால்தான் வெற்றிகளை அடைய முடியும்.

தொழிலாளர்கள், பெருநிறுவன நிர்வாகம், அரசு மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு இடையிலான உடன்பாடுகளை தங்கள் வேலைகள் மற்றும் வாழ்க்கையை பாதுகாக்க சார்ந்திருக்க முடியாது, இவை அரசியல் பொய்கள் என்னும் உலக சோசலிச வலை தளத்தின் கொள்கைரீதியான நிலைப்பாடு நிரூபித்துக் காட்டப்பட்டிருக்கிறது. பணிநீக்க இழப்பீட்டு ஊதியங்கள் அதிகப்பட்சம் தற்காலிக நிவாரணத்தைத்தான் வழங்கமுடியும், ஆனால் ஆனால் 20 சதவீத வேலையின்மை விகிதம் உடைய ஒரு சிறுநகரில், தொழிலாளர்களுக்கோ அல்லது அவர்களது குழந்தைகளுக்கோ எந்த எதிர்கால வாய்ப்புக்களையும் அளிக்காது.

CGT ஆரம்பத்தில், சோசலிஸ்ட் கட்சியின் தொழில்துறை புத்துயிர்ப்பு மந்திரி Arnaud Montebourg தொழிற்சாலையை காக்கக் கூடிய சாத்தியமான இரட்சகராக காட்டியது, அமைச்சர், திமிர்த்தனமாக தொழிலாளர்களுக்கு உரையாற்றுகையில்: "நீங்கள் ஒரு நிலத்தை சுட்டெரிக்கும் கொள்கையை கடைப்பிடிப்பதனால் முதலீட்டாளர்களை கண்டுபிடிக்க முடியவில்லை" என்று கூறினார். இது போதும். குட்இயரும் CGT ம் ஒன்றையொன்று நோக்கி நகர வேண்டும் குடியரசு பரஸ்பர புரிந்துணர்வை பிரதிநிதித்துவப்படுத்துகிறது ... குட் இயர் நிதி முயற்சியை மேற்கொள்ள வேண்டும், CGT டைட்டான் வருகையை [வருங்கால வாங்குபவர்] தடுப்பதை நிறுத்த வேண்டும்.

2007ல் இருந்து CGT வக்கீல் பியோடர் ரிலோவ் மற்றும் மிக்கேல் வாமனுடைய முழுப் போராட்டத்தின் அடிப்படையும், அரசாங்கம் குட்இயர் தொழிலாளர்களுக்கு ஆதரவு தர அழுத்தம் கொடுக்கப்பட முடியும், நீதிமன்றங்கள் பணிநீக்கங்கள், ஆலை மூடல்களைத் தடுக்கப் பயன்படுத்த முடியும் என்பதாக இருந்தது. இந்த பிரமை, CGT மற்றும் போலி இடது சக்திகளால் பதவிக்கு வரவிருக்கும் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் இலாபம் தரும் நிறுவனங்களில் பணிநீக்கத்திற்கு எதிராக சட்டம் இயற்றுவார் என்ற கருத்தை தோற்றுவித்தன— உண்மையில், அவருடைய ANI என அழைக்கப்படும் வேலை பாதுகாப்புச் சட்டம், நிறுவனங்களுக்கு, தொழிலாளர் நீதிமன்றங்களின் பாதுகாப்பை கிழித்தெறிந்துள்ளது.

குட்இயரின் திட்டங்களை, CGT செயல்படுத்திய தொடர்சியான “தந்திரோபாயங்களால்” தடுத்து நிறுத்திவிட முடியவில்லை. நீதிமன்ற நுணுக்கங்கள் மீது தலையீடுகள், தொழிலாளர்களின் கூட்டுறவுத் திட்டங்கள், சமீபத்தில் உள்ளூர் PS சட்டமன்ற உறுப்பினர்கள் குட்இயர் மூடலுக்கான காரணங்களை நிர்ணயிக்க மோசடிப் பாராளுமன்ற விசாரணை நடத்துதல் —இந்த சிறிதும் பயனற்ற ஆலோசனை வழிவகை, ஆலை மூடப்படுவதை தடுத்து நிறுத்த அதிகாரத்தைக் கொள்ளவில்லை.

சோசலிஸ்ட் கட்சியின் அரசாங்கம், PSA ஒல்நே ஆலையை மூடி 3,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தபின்னர் இது தொடரப்படுகிறது.

ஜனவரி 6ல் வெளியிடப்பட்ட ஒரு குட்இயர் CGT அறிக்கை, இழிந்த முறையில் அரசாங்கத்தை, குட்இயர் தொழிலாளர்களுக்கு எதிரான "உண்மையான சதியை" மேற்கொள்கிறது என குற்றம் சாட்டியுள்ளது. அது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, போலி இடது குழுக்களான புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்றவை பகிர்ந்து கொள்ளும் PS அரசாங்கத்திற்கு ஆதரவு என்பது, தொழிற்சாலை மரண சாசனத்தில் கையெழுட்டதற்கு ஒப்பாகும் என்று ஒப்புக் கொண்டுள்ளது.

ஹாலண்ட் இன் ஜனாதிபதி வேட்புமனுவுக்கு ஆதரவளித்ததன் மூலம் நாம் நம் ஆலையை மூடுவதற்கு ஆதரவு கொடுத்து விட்டோம்” என அது எழுதுகிறது. “ஏனெனில் நிர்வாகம் (GDTF) ஹாலண்ட் அரசாங்கத்தின் உதவியுடன் மட்டுமே முன்னேறுகிறது.”

இது பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட ஒரு பரந்த அரசியல் போராட்டத்தின் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இத்தகைய போராட்டம், ஹாலண்டை ஆதரித்த தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் போலி இடது கட்சிகளுக்கு எதிராக நடத்தப்பட்டால்தான் சாத்தியமாகும்.

எனினும் குட்இயர் CGT இன் அறிக்கை, அரசியல் திவாலை மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை; மாறாக தொழிலாளர்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்ற CGT யின் பங்கை மூடி மறைக்கவும் முயல்கிறது. சோசலிஸ்ட் கட்சியின் நோக்கங்கள் தொழிற்சங்க அதிகாரத்துவம் அல்லது போலி இடது கட்சிகளுக்கு இரகசியம் அல்ல. அதன் முன்னுரிமை, கிரீஸ் மற்றும் பிற இடங்களிலும் தொழிலாளர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்கு ஆதரவளித்ததற்கும் அப்பால் பிரெஞ்சு பெருவணிகத்தின் போட்டித்தன்மையை அதிகரிக்க தொழிலாளர்கள் பணிநிலைமையை தியாகம் செய்யவேண்டும் என்பதாகும்.

தொழிற்சங்கங்கள் ஹாலண்டுடன் உடன்பாடு கொண்ட காரணத்தின் ஒரு பகுதி, ஒரு ஆலையை அடுத்து மற்ற ஆலையாக மூடலை எதிர்க்க, திவாலாகிப்போன தேசியவாத முன்னோக்கை உயர்த்திப்பிடித்தது இருந்தது; அதே நேரத்தில் பெருநிறுவன நிர்வாகம் மற்றும் அரச பிரதிநிதிகளுடன் திரைக்குப்பின்னால் ஆலை மூடலுக்குத் தயாரிப்புக்களை செய்கிறது.

வேலைகளுக்காக போராடுவதை கைவிட்டு, வெறுமே பணிநீக்க இழப்பீட்டிற்கு பேச்சு நடத்துவது, பெருநிறுவன மற்றும் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தும் தாக்குதலை தொடரவிடுவது என்பதுதான், தொழிற்சங்க அதிகாரத்துவம் மீண்டும் மீண்டும் கையாளும் மூலோபாயமாகும். இது ஒவ்வொரு ஆலையிலும் இதே பேரழிவு விளைவுகளைத்தான் கொடுத்துள்ளது. Contenental Tires – Clairoix, PSA Aulnay, Florange steel இன்னும் பலவும் என பட்டியல் நீள்கின்றது.

தொழிற்சாலை CGT, குட்இயர் அதன் உற்பத்தியை, போலந்து புதிய ஆலைக்கு மாற்றியதற்காக குற்றம் சாட்டியுள்ளது; ஆனால் போலந்து தொழிலாளர்களுடன் இணைந்து ஒரு கூட்டுப் போராட்டத்திற்கு அழைப்பு விடவில்லை. மாறாக குட்இயர் CGT, செப்டம்பர் 23 அன்று ஜனாதிபதி ஹாலண்டிற்கு ஒரு கடிதம் அனுப்பி, அவரை “பிரான்சில் தொழில்துறை, வேலைகளுக்கு ஆதரவான எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.