சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German government extends its military mission in Africa

ஜேர்மனிய அரசாங்கம் அதன் ஆபிரிக்க இராணுவ நடவடிக்கையை விரிவாக்குகிறது

By Ulrich Rippert 
22 January 2014

Use this version to printSend feedback

Süddeutsche Zeitung, Spiegel Online ஆகியவற்றின் தகவல்கள்படி, ஆபிரிக்காவில் ஜேர்மனியின் பங்கை பெரிதும் விரிவுபடுத்த விரும்புகிறது. ஆளும் அரசாங்கக் கூட்டணியான கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளும் சமூக ஜனநாயகவாதிகளும் ஆபிரிக்க நாடான மாலியில் ஜேர்மனியின் நடவடிக்கையில் ஒரு பாரிய அதிகரிப்பிற்கு தயாராகிக்கொண்டு இருக்கின்றன.

இதுவரை இராணுவம் (Bundeswehr) பிரான்ஸ்-ஜேர்மன் படைப்பிரிவின் ஒரு பகுதியாக மாலியில் கிட்டத்தட்ட 20 துருப்புக்களை ஈடுபடுத்தியுள்ளது. அவற்றின் தற்போதைய பணி மாலி இராணுவத்திற்கு பயிற்சி வழங்குவதுடன் நிற்கிறது. ஜேர்மனிய படையினர் முன்பு ஆயுதமற்று பிரெஞ்சுப் பாதுகாப்பில் இருந்தனர்.

இப்புதியதிட்டம் ஆயுதமேந்திய ஜேர்மனிய படையினர் முகாம்கள் மற்றும் தலைநகர் பமாகோ விமான நிலையத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் பயிற்சித் திட்டத்தை வலுவான இராணுவ செயற்பாடு என்றழைக்கப்படுவதாக மாற்றுவது ஆகும்.

மாலியில் ஜேர்மன் இராணுவம் கூடுதலாக ஈடுபடுத்துவதின் நோக்கம் பிரெஞ்சு படைகளுக்கு சற்று விடுதலையளிக்கும் நோக்கம் கொண்டது. இதன்மூலம் அது மத்திய ஆபிரிக்க குடியரசில் (CAR) கூடுதல் கவனத்தைச் செலுத்தலாம். பிரான்ஸ் தற்பொழுது மாலியில் பல ஆயிரக்கணக்கான படையினரை கொண்டுள்ளபோதும், சமீபத்திய வாரங்களில் இஸ்லாமியக் குழுக்களிடம் இருந்து அங்கு எதிர்ப்பு தீவிரமாக அதிகரித்துள்ளது.

மாலிக்கு ஜேர்மனிய ஆதரவை தவிர, பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு மத்திய ஆபிரிக்கக் குடியரசில் பிரெஞ்சு இராணுவ செயற்பாடுகளுக்கு இப்பொழுது ஐரோப்பிய உதவி கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. பிரஸ்ஸல்ஸின் முடிவிற்குப்பின், இராணுவ நடவடிக்கைக்கான திட்டம் உடனடியாக ஆரம்பித்தது. இதன்மூலம் தனித்தனி ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் துருப்புக்கள் கடமை, அளவு பற்றிய பங்களிப்பு குறித்து நிர்ணயிக்கலாம். இதற்கான ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் ஒன்றும் உடனடியாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் தன் பங்கை ஜேர்மனி அதிகப்படுத்த விரும்புகிறது. போரிடும் துருப்புக்களை பயன்படுத்துவது இதுவரை திட்டமிடப்படவில்லை என்றாலும், ஜேர்மனிய விமானப்படை ஐரோப்பிய ஒன்றிய பணியின் செயற்பாடுகள் பலவற்றை எடுத்துக்கொண்டு, துருப்புக்களையும் பொருட்களின் போக்குவரத்திற்கும் ஆதரவு கொடுக்கும். விமானப்படையின் (Luftwaffe) ஏயர்பஸ் A310 விமானங்கள் ஏற்கனவே அத்தகைய நடவடிக்கைகளுக்கு தயாரிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.

ஆபிரிக்காவில் அதன் கூடுதல் இராணுவ ஈடுபாட்டை அடுத்த, பேர்லின் பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவிக்கு விரைகிறது. இந்த நிலைமை டிசம்பர் மாத ஐரோப்பிய உச்சிமாநாட்டில் இருந்த நிலைமையைவிட சற்றே வேறுவிதமாக இருக்கின்றது. அப்பொழுது பிரெஞ்சு ஜனாதிபதி ஆபிரிக்க நடவடிக்கைகளுக்கு இராணுவ உதவி கேட்டபோது சான்ஸ்லர் மேர்க்கெல்: முடிவு எடுக்கும் வழிவகையில் நாங்கள் தொடர்பு கொண்டிராத எந்த இராணுவ நடவடிக்கைக்கும் நாங்கள் நிதியோ ஆதரவையோ தரமுடியாது. என அப்பட்டமாக பதில் கூறினார்

சான்ஸ்லரின் மனமாற்றத்திற்கு காரணம் கடந்த செவ்வாயன்று எலிசே அரண்மனையில் நடந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி ஹாலண்ட் அறிவித்த கடுமையான சமூகத் தாக்குதல்கள் ஆகும். அங்கு அவர் முன்வைத்த பொறுப்பான உடன்பாடு எனப்படுவது, பேர்லினுடைய நெருக்கமான ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டது. அது நிகழ்ச்சிநிரல் 2010 மற்றும் ஹார்ட்ஸ் சட்டங்களில் உள்ளடங்கியுள்ள சமூகநல, தொழிற்துறை சட்டங்களின் மீதான தாக்குதல்களை அடித்தளமாக கொண்டுள்ளது. அது ஹெகார்ட் ஷ்ரோடர்(1998-2005) தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி-பசுமைக்கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

இச்சட்டத்திற்கு தன்னுடைய பெயரைக் கொடுத்த சமூக ஜனநாயக கட்சியினதும் மற்றும் IM Metall தொழிற்சங்க உறுப்பினரான பீட்டர் ஹார்ட்ஸ், போருக்குப் பிந்தைய ஜேர்மன் அரசு நிறுவப்பட்ட பின்னர் மிக விரிவான சமூக வெட்டுக்களை முன்னெடுத்தார். இவர் பாரிஸில் பிரான்சுவா ஹாலண்டுடன் சமீபத்திய வாரங்களில் அதன் அணுகுமுறை குறித்து நீண்ட விவாதங்களைக் நடாத்தியுள்ளார். ஹாலண்ட் அறிவித்துள்ள பல சிக்கன நடவடிக்கைகள் ஹார்ட்ஸ் ஆணைக்குழுவில் இருந்து வந்தவையாகும்.

வணிகங்களும் சுய வேலை பார்ப்பவர்களும் வரிகள் மற்றும் சமூகப்பாதுகாப்பு பங்களிப்புக்களில் மொத்தம் 35 பில்லியன் யூரோக்கள் கொடுப்பதில் இருந்து 2017 வரை விலக்குப் பெறுவர். அதே நேரத்தில், ஹாலண்ட் வேலையின்மை நலன்களிலும் மற்றும் RSA (Revenue of Active Solidarity) மூலம் சமூகநலச் செலவுகளிலும் நீண்டகால தாக்கம் கொண்ட வெட்டுக்களை அறிவித்துள்ளார். இது பற்றிய விபரங்கள் இந்த வருட இளவேனில் காலத்தில் சட்டம்மூலம் உறுதிப்படுத்தப்படும்

பிரான்ஸ் தன் ஆளுமையை பாதுகாத்து தன் விதிகளை தன் கைகளிலேயே வைத்திருக்க வேண்டும் என்றால், அது தன் பொருளாதார வலிமையை மீட்க வேண்டும் என்றார் ஹாலண்ட். எனவே தொழிலாளர் செலவுகளில் கணிசமான வெட்டுக்கள்  பிரான்சின் போட்டித்தன்மையை வலுப்படுத்தத் தேவையாகும் என அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் மீண்டும் ஹாலண்ட் ஜேர்மனியுடன் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். இம்முறை சமூகநலன்புரி அமைப்புமுறை சீர்திருத்தத்தை திட்டமிட்டு, தொடர்ந்து நடத்தப்போவதாகவும் இதுவரை போல் அவ்வப்போது என்று இல்லை எனவும் கூறினார். தொழிலாள வர்க்கத்திற்கு இந்த அப்பட்டமான அச்சுறுத்தல் ஜேர்மனியில் முதலாளிகள் சங்கத்தனதும் அரசாங்கத்தினதும் பாராட்டுடன் வரவேற்கப்பட்டது.

முந்தைய சமூகநல வெட்டுக்கள் ஏற்கனவே பிரெஞ்சு மக்களிடைய கடுமையான எதிர்ப்பைத் தூண்டியுள்ள நிலையிலும், ஜனாதிபதியின் செல்வாக்கு மிகவும் குறைவாக சரிந்துள்ள நிலையிலும், ஹாலண்ட் அரசாங்கத்திற்கு அதன் தொழிலாள வர்க்கத்துடனான மோதலுக்கு பேர்லின் ஆதரவை அளிக்கிறது.

மாலி மற்றும் மத்திய ஆபிரிக்காவில் ஜேர்மனிய இராணுவத்தின் ஆதரவு என்பது இப்பின்னணியில் காணப்பட வேண்டும். இது பிரெஞ்சு ஜனாதிபதியை அவருடைய வெளிநாட்டு முன்னணி நிலைக்கு ஆதரவு கொடுக்கப் பயன்படுத்தப்படுவதுடன், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கடுமையான சமூகத் தாக்குதல்களை நடத்தவும் நன்கு உதவுகிறது.

மாலி மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசின் அகதிகளை இஸ்லாமிய பயங்கரவாதங்களில் இருந்து காப்பாற்ற இது ஒரு மனிதாபிமான உதவி நடவடிக்கை என்னும் ஜேர்மன் வெளியுறவுமந்திரி பிராங்க் வால்ட்டர் ஸ்ரைன்மையர் (சமூக ஜனநாயகக் கட்சி-SPD) உடைய கூற்றுக்கள் பாசாங்குத்தன, வெற்றுத்தனமான பிரச்சாரம் ஆகும்.

வடக்கு மாலியில் இப்பொழுது தீவிரமாக இயங்கும் இதே இஸ்லாமியவாதிகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவால் 2011ல் முயம்மர் கடாபியின் லிபிய ஆட்சிக்கு எதிராகப் போரிட முக்கிய நட்பு அமைப்புக்களாக கருதப்பட்டனர். சிரியாவில் மேற்கு சக்திகள் இதேபோன்ற பிற்போக்குத்தன சக்திகளைத்தான் பஷர் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றி மேற்குசார்புடைய கைப்பாவை ஆட்சியை நிறுவ முற்படுகின்றனர்.

மாலிப் போர் இப்பொழுது ஆப்கானிஸ்தானத்தைப்போல் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்னும் கருத்துடன் எதையும் கொண்டிருக்கவில்லை. மாறாக இது கணிசமான புவியியல், பொருளாதார நலன்களுக்காக நடத்தப்படுகிறது.

இப்போர் ஆபிரிக்காவை மீண்டும் புதுப்பிக்கப்பட்ட காலனித்துவ முறையின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லிபியாவிற்கு எதிரான நேட்டோ போருடன் ஆரம்பித்தது. முழு சாகேல் பகுதியைப் போல் மாலியும் செழிப்பான தாதுப்பொருட்கள் மூலவளங்கள் உள்ளன. மாலி மற்றும் சாகேலுடன் நெருக்கமான பொருளாதாரப் பிணைப்புக்களைக் கொண்டுள்ள சீனாவுடனான போட்டிக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகள் அவற்றை தங்களுக்கு பாதுகாத்துக்கொள்ள முயல்கின்றன.

போரின் நவ காலனித்துவத் தன்மை மிகத் தெளிவாக வெளிப்படுகையில், ஜேர்மனியின் ஆதரவு பிரெஞ்சுத் தொழிலாளர்களுக்கு எதிராக ஹாலண்ட் அரசாங்கத்தை வலுப்படுத்தும் நோக்கமும் தெளிவாக வெளிப்படுகிறது. பேர்லின் அரசாங்கத்துடன் இடது கட்சி சார்ந்துள்ளது இன்னும் தீர்மானகரமானதாகும்.

வார இறுதியில் இடது கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் லீபிக்கும் பசுமைக்கட்சி அரசியல்வாதியான ஆக்நீஸ்கா ப்ரக்கரும் கூட்டு மூலோபாய அறிக்கை ஒன்றை சமாதான சார்புடைய வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் வெளியிட்டு, நம் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் உள்நாட்டில் அதிகமான வேலைகளை செய்ய வேண்டும் என்றது. இந்த அறிக்கை மனித உரிமைகளை வலுப்படுத்த சமாதானக் கொள்கை தேவை என்று கூறுகிறது.

மேலும் கூட்டறிக்கையின்படி, எம்மை பொறுத்தவரை, ஜேர்மன் இராணுவத்தின் வெளிநாட்டுப்பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஆணை இருக்க வேண்டும். அதாவது ஐ.நா. ஆணை இருந்தால் போரில் ஈடுபடுவது முற்றிலும் சாத்தியம்.

இடது கட்சியின் அறிக்கை தொடர்கிறது: ஜேர்மன் இராணுவத்தின் அனைத்து போர் நடவடிக்கைகளும் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இதில் ஜேர்மனி ஐ.நா. ஆணையின் கீழ் நடக்கும், .நா. பட்டயத்தின் ஏழாம் அத்தியாய இராணுவ செயல்களும் அடங்கும். இத்தகைய அமைதிவாத சொற்றொடர்கள் மனித உரிமைகள் என்ற போலி மறைப்பில் இப்பொழுது ஏகாதிபத்தியப் போருக்கான வெளிப்படையான ஆதரவாகின்றன.