சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Tokyo Filmex 2013

Transit, Ilo Ilo and Youth: Three films that rise above the average

மூன்று ஓரளவு சிறந்த திரைப்படங்கள்: Transit, Ilo Ilo and Youth

By John Watanabe
4 December 2013

Use this version to printSend feedback

கூடுதலாக சமீபத்திய ஆசிய வெளியீடுகளின் ஒரு திரை விழாவான Tokyo Filmex 2000இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் 14வது திரை விழா நவம்பர் 23 முதல் டிசம்பர் 1 வரை நடைபெற்றது. இதில் முக்கியமாக பல்வேறு திரை படைப்பாளிகளின் சமூக விழிப்புணர்வின் வாயிலாக வழக்கமான திரைப்படங்களைக் காட்டிலும் பல வித்தியாசமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. திரையுலகில் காணப்படும் தற்போதைய சுயநலம் மற்றும் சுய விழிப்புணர்விலிருந்து வேறுபட்ட சிலவற்றை அவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பலாம்

Transit

ஹன்னா எஸ்பியா இயக்கிய, Transit திரைப்படம் Tel Aviv இல் பிலிப்பைன் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீதான கண்டிப்பான இஸ்ரேலிய குடியேற்ற சட்டங்கள் பற்றிய ஒரு கதையை சித்தரிக்கிறது. இது அத்திரைப்பட விழாவில் நான் பார்த்த மிக வலுவான ஒரு திரைப்படம்

ஒரு இளம்பெண்ணான யாஏல் (Jasmine Curtis) தாயாரான ஜென்னட் (Irma Adlawan) உடன் வசித்துவருகின்றாள். ”அவளது தந்தை ஒரு இஸ்ரேலியர். அது பற்றி நாம் பேச வேண்டாம், அது ஒரு பழைய கதை.” இஸ்ரேலில் பிறந்து வளர்ந்த யாஏல், சிறிது பிலிப்பினோ மொழி பேசுகிறாள். தன்னை ஒரு இஸ்ரேலியராக உணர்வதோடு அதன் அங்கீகாரத்திற்காக ஏங்குகிறாள். ஆயினும், நடைமுறைக்கு வரும் புதிய சட்டத்தின் கீழ், அவள் பிலிப்பைன்ஸுக்கு நாடுகடத்தப்படலாம். ஏனென்றால், ஜெனட்டின் வதிவிட உரிமை ஏற்கெனவே முடிந்துவிட்டது

ஜென்னட்டின் சகோதரர் மோசெஸும் (Ping Medina) துணையை இழந்தவராவார். இவர் இஸ்ரேலில் பிறந்த ஹீப்ரூ மொழி பேசும் தனது நான்கு வயது மகனான ஜோஷ்வாவை ஜெனட்டுடன் விட்டுச்செல்கிறார். ஏனென்றால், ஐந்து வயதிற்கு கீழுள்ள அனைத்து குடிபெயர்ந்த குழந்தைகளும் நாடுகடத்தலால் அச்சுறுத்தப்படுகின்றனர். இவர் அச்சிறுவனை, குறைந்தபட்சம் ஜோஷ்வாவுக்கு ஐந்து வயதாகும் வரையாவது வீட்டிற்குள்ளேயே மறைத்து வைக்க திட்டமிடுகிறார். காவல்துறையினரால் கேள்வி கேட்கப்படும் சாத்தியம் காரணமாக, “இங்கு குழந்தைகள் கற்றுக்கொள்ளும் விஷயங்களில் முதலாவது எப்படி பொய் சொல்வது எனலாம்.


Transit

தனிநபர் விஷயம் மற்றும் சமூக விஷயம் இரண்டிலுமே, பிலிப்பினோ சமூகத்திற்கும் பிரதான இஸ்ரேல் சமூகத்திற்கும் இடையிலான உறவு குறித்த இதன் யதார்த்தமான சித்தரிப்பே Transit இன் வலுவான அம்சமாகும். ஜென்னட் ஒரு வீட்டு பணிப்பெண்ணாக பணியாற்றுகிறாள். அவளது முதலாளியம்மா அவளை தோண்டித்துருவும் குடியேற்ற அதிகாரிகளிடமிருந்து காப்பாற்றுகிறாள். சக்கர நாற்காலியில் கிடக்கும் எலியாவுக்கு (Yatzuck Azuz) ஆண் செவிலியராக மோசஸ் பணியாற்றுகிறார். அவர் சிறுவன் ஜோஷ்வாவுக்கு விவிலியத்தின் முதல் ஐந்து கருத்துக்களான டோராவை ஒப்பிப்பதற்கு கற்றுத்தருகிறார் ஜோஷ்வா வளர்ந்து, மத அங்கீகாரம் (bar mitzvah) பெற்று, மற்ற சிறுவர்களைப் போல் இருக்கவே விரும்புகிறான்.

குடியேறியவர்களை பாதுகாக்கும் ஒரு குழு புதிய சட்டத்திற்கு எதிராக கையெழுத்துகளை சேகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மோசஸ் அதிகாரிகளுடன் சம்பந்தப்படுவதை நினைத்து அஞ்சுகிறான். தங்களது சக குடிமக்கள் பற்றிய தகவல் தருவோருக்கு பிரதியுபகாரமாக தகவல் கொடுப்போரின் சட்டத்திற்குபுறம்பான நிலையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக, பிலிப்பீனியர்களுக்கு காவல்துறை செலுத்துகிற உதவியின் தற்போதைய விகிதத்தை நாம் அறிகிறோம்

ஒரு வலுவான வர்ணனை மூலம், முக்கிய காட்சிகள் மற்றும் ஏற்கெனவே காண்பிக்கப்பட்டவற்றுக்கு கூடுதல் விஷயங்களோடு ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் கதையும் விரிவதை பார்க்கிறோம்.

இறுதியாக ஜோஷ்வாவை அதிகாரிகள் கண்டுபிடித்து, அவன் நாடுகடத்தலை எதிர்கொள்கின்ற போது, அவனது தந்தை அவர்களிடம் கருணைக்காக கெஞ்சும் வேளையில் Transit இன் அந்த உச்சக்கட்ட, நெகிழ வைக்கும் காட்சி அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளன. அந்த தடுப்புக் காவல் மையத்தின் நடுவில், தான் எந்த அளவுக்கு யூதனாக இருக்கிறேன் மற்றும் தான் இந்த நாட்டிற்கு சொந்தமானவன் என்பதைக் காண்பிப்பதற்காகவே திடீரென, அச்சிறுவன் டோராவை பாட ஆரம்பிக்கிறான்.

ஊடகங்கள் மற்றும் அரசியல் நிர்வாகங்களால், அனைத்து இடங்களிலும் குடியேறியவர்கள் மற்றும் அகதிகளுக்கு எதிரான மோசமான பிரச்சாரத்தின் மத்தியில், இந்த மனிதாபிமான வேலை, வேரறுந்த நிலையில் தங்களது மொத்த வாழ்க்கையையும் செலவிட்ட மக்களை அணுகுவது, குறிப்பாக transitஇல் அது வலுவாகவும் வரவேற்பதாகவும் உள்ளது. எஸ்பியாவின் Transit திரைப்படம் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சகிப்புத்தன்மைக்கான மேலெழுந்தவாரியான கோரிக்கையாக இருப்பதுபோல் தெரிந்தாலும், குடியேறிவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பகுத்தறிவற்ற, காலம்கடந்த தேசிய அரச அமைப்புமுறை மற்றும் அதற்காக மனித இனம் செலுத்தும் விலை ஆகியவற்றை கடுமையாக விமர்சிப்பதே இதன் புறநிலை பங்களிப்பாக உள்ளது.

Ilo Ilo

பிலிப்பைன் குடியேறியவர்கள் பற்றிய இன்னொரு திரைப்படம் Ilo Ilo.  சிங்கப்பூரை கதைக்களமாக கொண்ட இத்திரைப்படம் எழுத்தாளரும் இயக்குனருமான ஆண்டனி சென்னின் (1984-ல் பிறந்தவர்) முதல் படமாகும். யதார்த்த வாழ்வில் பாராட்டப்படும், அதே சமயம் முரண்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் பரந்த சமூக நிகழ்போக்குடன்  தொடர்புடைய எழும் அவர்களது நல்ல மற்றும் கெட்ட குணாதிசயங்களை உள்ளடக்கியது


Ilo Ilo

இதன் கதை, 1997-98 இன் ஆசிய நிதி நெருக்கடியில் தவிக்கும் ஒரு நடுத்தர குடும்பமான  Lims ஐ மையமாகக் கொண்டது. தனது விற்பனையாளரான வேலையை இழந்ததையும், அத்தோடு பங்குச் சந்தையில் கணிசமான அளவுக்கு நஷ்டமடைந்திருப்பதையும் சேர்த்து தகப்பனான (Tian Wen Chen) கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவியிடம் (Yann Yann Yeo) இதுபற்றி மறைத்துவிடுகிறார்.

மனைவி தனது கணவனை குறைசொல்கிறாள், சண்டைபோடுகிறாள் மற்றும் குடும்பத்திற்கு புதிதாக பணியமர்த்தப்பட்ட பிலிப்பினோ பணிப்பெண்ணான தெரேசாவை (Angeli Biyani) ஆறுதலாக அணுகுவதுடன் அவளது 10 வயது மகன் ஜியாலியிடம் (Koh Jia Ler) பொறுமையற்று நடந்து கொள்கிறாள். தனது சொந்த குழந்தையை பிலிப்பைன்ஸிலேயே விட்டுவிட்டு வந்திருப்பவரான அவனது ஆண்ட்டி டெர்ரி” (தெரேசா) அவனை அக்கறையோடு கவனித்துக் கொள்கிறாள். அவனும் அவளோடு மிக இணக்கமாக வளர்ந்து வருகிறான். இதுவே அவனது அம்மாவிடம் பொறாமையை ஏற்படுத்துகிறது.

சில பரவலான, பொருளாதார அழுத்தங்களின் தாக்கங்கள் வெற்றியுடன் அணுகப்படுகிறது. ஜியாலின் தந்தை வேலை தேடுகிறார், இறுதியாக விற்பனைசாலையில் ஒரு கீழ்நிலை வேலை கிடைக்கிறது. வேலை நீக்க அறிக்கைகளை தட்டச்சு செய்யும் செயலாளராக பணியாற்றும் இவன் தாயார் இந்த முறை தாங்கள் பாதிக்கப்படுவோமா என்று மற்ற ஊழியர்களுடன் இரகசிய உரையாடலிலும் இணைந்துகொள்கிறாள். இதற்கிடையில் கட்டிடத்தின் அடுத்த வீட்டில் நடக்கும் ஒரு தற்கொலை டெர்ரியை உலுக்குகிறது. இந்த சம்பவங்கள் உண்மையை சித்தரிப்பதுடன் வலுவான அதிர்வினை ஏற்படுத்துகிறது.  

இறுதியாக, நிதிச்சிக்கல்கள் தாங்கமுடியாத அளவுக்கு செல்ல, தந்தை தன் மனைவியிடம் உண்மையை சொல்கிறார். ஆனால் அவர் வேலையில்லாமல் இருந்தது அவளுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது என்பது எங்களால் உணரக்கூடியதாக இருக்கின்றது. இப்போது பணிப்பெண்ணை அனுப்ப வேண்டியுள்ளது. பின், இறுதியாக மனைவி, டெர்ரியை ஒரு மனிதப்பிறவியாக அங்கீகரித்து, முதல் தடவையாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறாள். இதற்கிடையில் அடாவடித்தனமான சண்டைபோடும் குணமுள்ளவனாக தொல்லைபடுத்தி கவனத்தை ஈர்த்த ஜியாலியும் நம்பும்படியாக அதிக மிகவும் உணர்ச்சிபூர்வமானவனாக, பொறுப்புள்ள சிறுவனாக மாறியுள்ளான். அவனை தற்போது செவிலித்தாயிடமிருந்து பலவந்தமாக பிரிந்தாக வேண்டும்.

டோக்கியோவில் திரையிடலுக்கு பின் நடைபெற்ற ஒரு விவாதத்தில், இத்திரைப்படத்தில் பெரும்பாலானவை சுயசரிதை என்று சென் விளக்கினார். பல வருடங்கள் வேலையில் இருந்த தனது தந்தை வெளியேற்றப்பட்டதுடன் அவருக்கு மறுபடியும் எந்த ஒரு நல்ல வேலையும் கிடைக்கவில்லை  எனக்குறிப்பிட்டார். குடும்பத்தோடு எட்டு வருடங்களுக்கு முன் இருந்த பிலிப்பினோ பணிப்பெண்ணுடன் இருந்த பாசப்பிணைப்பை நினைத்து இப்போதும் மகிழும் சென், அவளைப் பற்றி இப்போது தனக்கு நினைவில் இருக்கும் ஒரே விஷயம் அவள் பிலிப்பைன்ஸில் Ilo Ilo  மாகாணத்தைச் சேர்ந்தவள் என்பதே என்று ஒப்புக்கொள்கிறார். இத்திரைப்படத்தின் பெயரும் அதுவே.

வெறுமையான, நடுத்தர வர்க்க விருப்புக்கள் மற்றும் பாசாங்குகள் ஆகியவற்றை Ilo Ilo விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றது. இவை மிக நெருக்கமான மனித உறவுகளையும் நஞ்சாக்க முடியும். இவற்றை வீசியெறிவது மற்றும் நமது எல்லைகளை ஒப்புக்கொள்வதன் மூலம், லிம் குடும்பம் போன்று அதிக நிறைவான மற்றும் மனிதாபிமானமுள்ள உறவுகளை நாம் பெற முடியும் என்று இத்திரைப்படம் சொல்வதுபோல் தெரிகிறது. அது அப்படியே இருந்தாலும், சென்னின் படைப்பு அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.

Youth

Tel Aviv ஐ மையமாகக் கொண்ட, மதசார்பற்ற, நடுத்தரவர்க்க குடும்பம் ஒன்றை மையப்படுத்திய Youth திரைப்படம் ஒரு மோசமான கடத்தலை மையமாகக்கொண்டது. ரொம் ஷோவாலின் திரைப்படம் யதார்த்தமாக இருப்பதுடன், இஸ்ரேலின் அதிகரித்துவரும் சமூக துருவப்படுத்தலை வெளிப்படுத்துவதோடு அரேபியர்களை தீங்கிழைப்பவர்கள் என்று ஒரே மாதிரியாக சித்தரிப்பவற்றுக்கு பலத்த அடிகொடுக்கிறது.



Youth

பெற்றோர் அதனை மறைத்தாலும், சகோதரர்கள் யாகி (David Cunio) மற்றும் ஷாவுல் (Eitan Cunio) ஆகியோர் தங்களது பண கவலையை உணர்கின்றனர். தற்போதுதான் ஆயுதப்படையில் கட்டாயமாக சேர்க்கப்பட்டிருக்கும் யாகி, தனது தாக்குதல் துப்பாக்கியை அணிவகுப்புக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்வதையும் தாண்டி உபயோகிக்க திட்டமிடுகிறான். தந்தைக்கு வேலையில்லை, மேலும் தாயார் மற்றும் ஷாவுலின் தற்காலிக வேலைகள் அனைத்துக்கும் போதுமானதாக இல்லை. குடும்பம் கடன்காரர்களிடம் தங்களது வீட்டை இழந்துவிடும் ஆபத்தில் இருக்கிறது. அதனால் ஷாவுலின் பள்ளியில் படித்த ஒரு பணக்கார பெண்ணை சகோதர்கள் கடத்தி, பணத்தை பெறுவதற்காக அவளை தங்களது குண்டு தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் இடத்தில் மறைத்து வைக்கின்றனர். திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை, மேலும் பணப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் வேளையில், அவர்கள் அந்த பெண்ணை விடுவிக்க கட்டாயப்படுத்தப்டுகிறார்கள்.

குறிப்பிடும்படியான ஒரு காட்சியில், பயந்து போன அந்த பெண் முகமூடியணிந்து தன்னை தாக்கியவர்களை அவர்கள் அரேபியர்களா என்று கேட்கிறாள். டோக்கியோவில், இந்த காட்சி பற்றி கேட்டபோது, இஸ்ரேலுக்குள் இருக்கும் அதிகரித்துவரும் சமூகப் பிளவினை வெளிப்படுத்திக் காட்டுவது மற்றும் அரேபியர்கள் குறித்த மோசமான பார்வைகளுக்கு பதில் சொல்வது ஆகியவை தனது நோக்கம் என்று ஷோவல் குறிப்பிட்டார். எனது பார்வையில் அந்த காட்சி வெற்றிகரமான ஒன்று. தங்களது முதல் நடிப்பு முயற்சியிலேயே இரட்டையர்களான குனியோ சகோதரர்கள் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்

மீண்டும், சுயசரிதைக்கான அம்சங்கள் சரியான அளவுக்கு பொருந்தியிருக்கும் இத்திரைப்படமும் இயக்குனரது முதல் திரைப்படம் ஆகும். நடுத்தர வர்க்கத்தின் பண கஷ்டங்கள் மற்றும் குடும்ப உறவுகளின் தாக்கம் ஆகியவை முதல் இடத்தில் உள்ளன. திரைப்படைப்பாளிகள் மிகவும் பழக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் பிரச்சனைகள் மற்றும் இந்த எல்லையின் வாயிலாக பணியாற்றுவதிதிலிருந்து வெளிவரும் தங்கள் முயற்சியில், சற்று புத்திசாலித்தனமான, நம்பும்படியான மற்றும் ஈர்க்கும்படியான படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆயினும், பரந்த பிரச்சனைகளுக்கான அவர்களது பொறுப்புகளை அறிந்துகொள்வதற்கு, மிக முழுமையான மற்றும் உணர்மையுடனான கலைத்துவ மற்றும் வரலாற்றுரீதியான முன்னோக்கு தேவைப்படுகின்றது.

Stray Dogs

இது தனக்கே உரித்தான சில சந்தர்ப்பங்களை கொண்டிந்தபோதிலும், நன்கறியப்படும் தைவான் திரைப்பட இயக்குனரான டிசை மிங் லியாங்கின் சமீபத்திய திரைப்படமான Stray Dogs மொத்தத்தில் பலவீனமாகவும் வெறுமையாகவும் இருக்கிறது. வீடற்ற ஒரு குடும்பத்தின் தினசரி வாழ்வினை இத்திரைப்படம் சித்தரிக்கிறது. 138 நிமிட இத்திரைப்படத்தில் அவர்கள் குறித்து நாம் எதுவும் அறிந்துகொள்ள முடியவில்லை. ஒரு அசைவற்ற கேமரா போன்ற நவீன சாதனங்கள், நீளமான காட்சிகள் மற்றும் உபரி வசனங்கள் ஆகியவை அநேகமாக இருபதாண்டுகளுக்கு முந்தையவை, மற்றும் இதன் கவனத்தை ஈர்க்காத ஒழுங்கின்மை”. இது வியாபார நோக்கில் படமெடுப்பதற்கு எதிரான ஒரு பகுதி எதிர்விளைவு போன்று இருக்கிறது. இப்போது இவை யாவும் முற்றிலும் சலிப்புடையதாகவும் சுய உணர்மையுடையதாகவும் கூடுதலாக அதிகரித்துவிட்டதால் Stray Dogs இனால் இவைபற்றி கூறுவதற்கு எதுவுமில்லை என்பதிலிருந்து விடுவிக்கிறது.



Stray Dogs

56 வயதேயான திசாய் (Vive L’Amour, The Hole) இது தனது கடைசி திரைப்படமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுவதுடன், திரைப்படைப்பாளி ஏதோ ஒன்று முட்டுச்சந்தில் நிற்பதாக உணர்கிறதுபோன்ற ஒரு வெளிப்பாட்டை கொடுக்கின்றது. இது துரதிர்ஷ்டவசமானதுதான், மேலும் கடந்த காலத்தில் குறிப்பிட்ட சமுதாய புரிதல்களை கூட திசாய் உணர்வுபூர்வமாக விளக்கியிருக்கிறார்.

விடயங்களை பற்றி கூறுவது கடினமாக இருக்கலாம், ஆனால் இன்றைய காலகட்டத்தின் பெரும் பிரச்சனைகளின் வரலாற்று மற்றும் சமுதாய வாழ்க்கையின் மூலகாரணங்களூடாக பணியாற்றுவதற்கு பதிலீடாக வேறேதும் இல்லை.