சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Fire at Quebec retirement home kills dozens

கியூபெக் ஓய்வு இல்லத்தில் தீ டஜன் கணக்கானவர்கள் பலி

By Keith Jones 
25 January 2014

Use this version to printSend feedback

வியாழன் மாலை கியூபெக் L’Isle-Verte ல் ஒரு மூத்த குடிமக்கள் வாழும் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்து கொடூர உயிரிழப்பை விளைவித்துள்ளது. எட்டுபேர் வெள்ளி பிற்கல் வரை இறந்துவிட்டனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. முப்பது பேரைப் பற்றித் தகவல் இல்லை.

30 பேரில் சிலர் தீவிபத்து இரவன்று வெளியே சென்றிருக்கலாம் என்னும் வாய்ப்பு உள்ளபோது, பெரும்பாலான தகவல் அற்றவர்கள் இறந்துவிட்டனர் என்றுதான் கொள்ள வேண்டும்.

52ம் பிரிவு, மூத்தோர் இல்லத்தின் இடிபாடுகளில் தேடும் முயற்சிகள், கடுமையான குளிர்நிலையால், வலுவான காற்றுக்களால், மற்றும் தீப் பகுதியில் அடர்ந்த பனிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளி அதிகாலை வரை நெருக்கடிகால தொழிலாளர்கள் எரிந்துகொண்டிருந்த நெருப்போடு போராட வேண்டியிருந்தது. இப்பொழுது அவர்கள் நீராவியைப் பயன்படுத்தி பனியை கரைக்கின்றனர்; அதுவோ கிட்டத்தட்ட 1 அடி பருமானாக உள்ளது.

மூன்று மாடி Résidence de Havre ல் வசிக்கும் மூத்தோர் பலர் எண்பதுகளிலும் அதற்கும் மேலான வயதிலும் இருந்தனர்; அதிகம் அவர்களால் நகர முடியாது. அவர்கள் சக்கர நாற்காலி அல்லது நடக்க உதவும் கருவிகளைத்தான் அங்குமிங்கும் செல்ல நம்பியிருந்தனர், சிலர் அல்சைமர் நோயாலும் அவதிப்பட்டனர்.

தீக்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் தீயணைப்பவர்களும் மற்ற நெருக்கடித் தொழிலாளர்களும், மூத்தோர் அமைப்புக்களும், இல்லத்தின் பழைய பகுதியில் நீர் தெளிக்கும் முறை (sprinkler system) இல்லாதது குறித்துக் குறிப்பிட்டுள்ளனர்; அதுதான் கொடூர உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

மூத்தோர் இருக்கும் இடங்களில் மட்டும் தெளிப்பு முறை தேவை என்று கியூபெக் அரசாங்கம் கூறுகிறது ஏனெனில் மூத்தோருக்கு நகருவது இயலாது.

தெளிக்கும் முறை இல்லாத நிலையில், தீ விரைவாக 1997ல் கட்டப்பட்ட தனியார் மூத்தோர் இல்லத்திற்கு பரவியது; அனைத்து நலிவுற்ற வசிப்போரையும் காலி செய்வது இயலாமற் போய்விட்டது.

இல்லத்தின் புதிய பகுதி, 2002ல் கட்டப்பட்டது, தெளிப்புமுறையைக் கொண்டுள்ளது, எனவே தீயினால் அதிக பாதிப்பு அங்கு இல்லை.

தீயணைப்புத் துறை நிறுவனங்கள், மரண விசாரணை அதிகாரி மற்றும் மூத்த வக்கீல்கள் நீண்டகாலமாக கனடாவின் மாநில அரசாங்கங்கள் அனைத்து மூத்தோர் இல்லங்களும் தெளிப்புமுறைகளைக் கொண்டிருக்க உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். “தெளிப்புமுறைகள் உயிர்களைக் காப்பாற்றும்” என்று குளோப் அண்ட் மெயிலிடம் கியூபெக் தீயணைக்கும் படைத் தலைவர்கள் சங்கத்தைச் சேர்ந்த Alain St-Hilaire கூறியுள்ளார். “அவை தீ பரவுவதைத் தடுக்கும். அவை அணைத்துவிடாது, ஆனால் நாம் இன்று காணும் தோற்றங்களைக் காணாமல் தடுத்திருக்கும்.”

மாநிலத்தின் தனியார் மூத்தோர் இல்ல செயலர்கள் சிலரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவான Quebec Association for Elder Care Facilities உடைய தலைவர் Yves Desjardins, தன்னுடைய சங்கம் மூத்தோர் இல்லங்கள் தெளிப்புமுறையைக் கொள்ளுதல் கட்டாயம் ஆக்கவேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுக்கும் என்றார். “ஒவ்வொரு முறையும் பெரும் சோகம் வரும்போது, விவாதம் மீண்டும் வருகிறது. அதன்பின் மில்லியன் கணக்கான பணம் மூத்தோர் இல்லப் பராமரிப்புக்களுக்கு செலவழிக்கப்பட்டிருக்கும் ஆதலால், மக்கள் மிருதுவாகி, மீண்டும் நடக்காது என நினைக்கின்றனர்.”

வெள்ளியன்று ன்டரியோவின் சுகாதார மந்திரி Deb Matthews, மாநிலத்தின் லிபரல் அரசாங்கம் பழைய ஓய்வூதிய மருத்துவப் பணிமனைகளுக்கான தெளிப்பு முறைகளை நிறுவுவதற்கான காலக்கெடுவை முன்னே கொண்டுவருவது குறித்து பரிசீலிப்பதாக கூறினார். கடந்த ஆண்டு ன்டரியோ அனைத்து பணிமனைகள், இயலாதவர் இல்லங்கள் மற்றும் மூத்தோர் இல்லங்கள் தானியங்கி தெளிக்கும் முறைகளை நிறுவ வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கிய முதல் கனேடிய மாநிலம் ஆயிற்று; ஆனால் இவை பத்து ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்டன.

வியாழன் தீ L’Isle-Verte ஐ பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது; இது கியூபெக் நகரத்தில் இருந்து கிழக்கே 230 கி.மீ. தொலைவில் உள்ளது. 1500 பேர் கொண்ட கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் Résidence de Havre மூத்தோர் இல்லத்தில் இருப்பவர்களில் ஒருவரை நெருங்கிய குடும்ப உறுப்பினராகக் கொண்டுள்ளனர்.

மட்டமான தீயணைக்கும் கருவிகளும் சோகத்திற்குக் காரணம் எனலாம் L’Isle-Verte உடைய தன்னார்வ தீயணைக்கும் துறையின் உறுப்பினர்கள் செய்தி தெரிவிக்கப்பட்டு எட்டு நிமிடங்களுக்குள் எரியும் இல்லத்திற்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் -20 செல்சியஸ் குளிர்நிலை அவர்கள் கருவிகளையே உறையச் செய்துவிட்டது.

தீ தொடங்கிய போது இல்லத்தில் இருவர் மட்டுமே பணி செய்து கொண்டிருந்தனர்; கியூபெக் அரசாங்கத் தேவைகளை இது நிறைவு செய்தது. செய்தி ஊடகத் தகவல்கள்படி, இவர்கள் வசிப்பவர்களை மீட்க தீர முயற்சிகளைக் கொண்டனர், அவர்கள் அறைகளை உரக்கத் தட்டினர், கட்டிடமோ விரைவில் தீயாலும் புகையாலும் சூழப்பட்டது.

இருபது இல்லத்தில் வசிப்போர் தீயில் இருந்து தப்ப முடிந்தது.

தொடர்ந்த தீவிர குளிரினால், நெருக்கடித் தொழிலாளர்கள் வெள்ளி பின்பகுதியில் தங்கள் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

L’Isle-Verte நீர்ப் பற்றாக்குறையையும் கொண்டுள்ளது; இதற்கும் வரும் தண்ணீர் தீயணைக்கும் தண்ணீரால் குறைந்துவிட்டது. வசிப்பவர்கள் நீர் நுகர்வைக் குறைத்து, கொதிநீர் மட்டுமே குடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கியூபெக் மாநில பொலிசாரின் (QPP) செய்தித் தொடர்பாளர் தீ ஒரு மின்சா சூடேற்றும் கருவியால் ஏற்பட்டது என்பதை உறுதிபடுத்த மறுத்துவிட்டார்.

வியாழன் அன்று பேசிய கியூபெக்கின் தொழில்துறை மந்திரி Agnes Maltais மாநிலத்தின் Parti Quebecois அரசாங்கம் இத்தகைய துன்பியல் இனி வராமல் காக்கும் என்று உறுதியளித்தார். “நடைமுறையில் தோல்வி இருந்தால், நாங்கள் செயல்படுவோம்” என்றார் Maltais. பின்னர் வர், கட்டுப்பாட்டு மாற்றங்களை அறிவிக்குமுன் அரசாங்கம் மரண விசாரணை அதிகாரி மற்றும் QPP விசாரணைகளின் முடிவிற்குக் காத்திருக்கும் என்றார்.

கியூபெக்கின் பிரதமர் Pauline Marois வெள்ளியன்று தான் சுவிட்ஸர்லாந்து டாவோஸில் உலகப் பொருளாதார அரங்கில் நடக்கும் உலகின் நிதிய உயரடுக்கை ஈர்க்கும் முயற்சிகளைக் குறைத்து L’Isle-Verte க்கு விரைவில் பயணிக்கப் போவதாக தெரிவித்தார்.

L’Isle-Verte தீ, கடந்த ஏழு மாதங்களில் கியூபெக்கை தாக்கும் இரண்டாவது பெரும் சோக நிகழ்வாகும். கடந்த ஜூலையில் ஒரு எண்ணெய் ஏற்றி செல்லும் ஒரு ரயில் தடம் புரண்டு Lac-Mégantic இன் மையத்தில் வெடித்த போது 47 பேர் கொல்லப்பட்டனர். Lac-Mégantic பேரழிவு பெருநிறுவன செலவு வெட்டுதல் அரசாங்க கட்டுப்பாடு தளர்த்துதலின் நேரடி விளைவாகும்; இதில் ஒரு மனிதன் ரயில் இயக்குவதும், மோசமான உள்கட்டமைப்பு, எளிதான வகையில் ஆபத்தா பொருட்களை எடுத்துச் செல்கையில் வெடிக்கும் டாங்கர் கார் வகைப் பயன்பாடு ஆகியவையும் இருந்தன.

கட்டுரையாளர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்.

The background to the Lac-Mégantic disaster: Deregulation, profit and the Canadian rail industry