சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

Syria talks deadlocked as US-backed opposition demands regime change

அமெரிக்க ஆதரவுடைய எதிர்த்தரப்பு ஆட்சி மாற்றத்தைக் கோருவதால் சிரிய பேச்சுக்கள் தேக்கம்

By Chris Marsden 
28 January 2014

Use this version to printSend feedback

சிரியா பற்றிய ஜெனீவா II பேச்சுக்கள் சிரிய அரசாங்க பிரதிநிதிகள் கொள்கைகள் அறிவிப்பை முன்வைத்தபின் திங்கள் முற்பகல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இவ்வறிவிப்பில் அமெரிக்க ஆதரவுடைய எதிர்த்தரப்பு உட்பட ஓர் அமைப்பிற்கு அதிகாரம் மாற்றப்படும் எனக் கூறப்படவில்லை.

சீற்றத்தை காட்டிக் கொண்ட மேற்குசார்புடைய எதிர்த்தரப்பு தலைமை பேச்சுவார்த்தை நடத்தும் ஹடி அல் பஹ்ரா இந்த அறிவிப்பு ஜெனீவா கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது. இது ஒரு இடைக்கால ஆட்சியைத் தோற்றுவிப்பதை முக்கியமாக கொண்டுள்ளது என்று புகார் கூறினார்.

அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா முடியரசுகள் மற்றும் துருக்கி ஆதரவைக் கொண்டுள்ள சிரிய எதிர்த்தரப்பு 2012 ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற தீர்மானம் ஒன்று சிரியா இடைக்கால ஆட்சிக்குழுவை அமைத்து சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை மேற்கோளிட்டுள்ளது. ஆனால் பஷர் அல் அசாத்திற்கு இந்தப் பதவியில் இருந்து இறங்கவேண்டும் என்னும் இந்த இறுதி காலக்கேடு கடந்த வாரம் பேச்சுக்கள் ஆரம்பமாக முன்பே நிராகரிக்கப்பட்டுவிட்டது.

புதன் அன்று ஜெனீவா பேச்சுக்கள் ஆரம்பித்தபின், அதில் பேசிய அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெர்ரி பின்வருமாறு அறிவித்தார்: நாம் இங்கு உண்மை நிலையைச் சந்திக்க வேண்டும். பஷர் அசாத் அந்த இடைக்கால அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்.

சிரிய வெளியுறவு மந்திரி வாலிட் அல் முஹால்லெம் பதிலளித்தார்: உலகில் சிரியர்களை தவிர எவருக்கும் ஒரு ஜனாதிபதிக்கு, அரசியலமைப்பு அல்லது சட்டத்திற்கு சட்டபூர்வத்தன்மையை கொடுக்கவோ அல்லது அதை திரும்பப் பெறவோ அதிகாரம் கிடையாது.

இவருக்கு ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜேய் லாவ்ரோவ் உடைய ஆதரவு இருந்தது.

துணை வெளியுறவு மந்திரி பைசல் மெக்டாட் எதிர்த்தரப்பு அசாத் பதவியில் இருந்துவிலக வேண்டும் என வலியுறுத்துவது பேச்சுக்களைத் தடை செய்கிறது. இதில் பிரச்சினை இவர்களுக்கு சமாதானத்தில் விருப்பம் இல்லை, முன்னிபந்தனைகளுடன் வருகின்றனர் என்றார் அவர்.

எனவே திங்கள் வரை பேச்சுக்கள் அசாத்தின் பாத்திஸ்ட் ஆட்சியின் முற்றுகைக்கு உட்பட்ட எதிர்த்தரப்பின் தளமான ஹோம்ஸ் நகரத்திற்குள் உதவிக்குச் செல்லும் வாகனவரிசைகளை அனுமதிக்க உதவுமா என்பதுதான். கிட்டத்தட்ட 800 குடும்பங்கள் அங்கு பொறியில் அகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஞாயிறன்று மகளிர், குழந்தைகள் நகரத்தைவிட்டு நீங்க அனுமதிக்கும் இடைக்கால உடன்பாடு ஒன்று ஏற்பட்டது. ஆனால் எதிர்த்தரப்பு சக்திகள் மனிதாபிமான பாதைகள் இதற்குப் பதிலாகத் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தின. இந்த அடித்தளத்திலேயே முன்னாள் யூகோஸ்லேவியாவில் மேற்குதலையீடு ஆரம்பத்தில் நியாயப்படுத்தப்பட்டது.

எதிர்த்தரப்பு செய்தித்தொடர்பாளர் மோன்ஜெர் அக்பிக் இக்கோரிக்கைக்கு அமெரிக்க வெளிவிவகாரத்துறை செய்தித்தொடர்பாளர் எட்கர் வாஸ்க்வெஸின் ஆதரவைப் பெற்றார். ஆனால் மெக்டாட் எதிர்த்தரப்புக்குழுக்கள் உண்மையில் மகளிரையும் குழந்தைகளையும் ஹோம்ஸை விட்டு வெளியேறுவதில் இருந்து தடுக்கின்றன என்றார்.

அதேபோல் கிட்டத்தட்ட 50,000 அரசாங்கம் வைத்திருப்பதாகக் கூறும் காவலில் உள்ளவர்கள் விடுதலை பற்றிய எதிர்த்தரப்பு கோரிக்கைகள் குறித்தும் உடன்பாடு இல்லை. மேக்டாட் எதிர்த்தரப்பு கொடுத்துள்ளபட்டியலில் இருக்கும் எண்ணிக்கை மிகவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது, அரசாங்கம் சிறையில் எந்தக் குழந்தைகளையும் வைத்திருக்கவில்லை என்றார். எதிர்த்தரப்பினர் தாம் நூற்றுக்கணக்கான மக்களை கடத்தியுள்ள இஸ்லாமிய ஆயதக்குழுக்கள் மீது தான் கட்டுப்பாடு கொள்ளவில்லை என்று ஒப்புக் கொண்டது.

ஞாயிறன்று மேக்டாட் கூறினார்: இங்கு நாம் பயங்கரவாதம் பற்றி விவாதிக்க வந்துள்ளோம், ஒரு அதிகார மாற்றம் பற்றி அல்ல....சிரிய அரபுக் குடியரசு சிரிய மக்கள் வேறுஏதாவது கூறும் வரை தொடர்ந்து இருக்கும். இது ஒரு சிவப்புக் கோடு. டமாஸ்கஸின் சாவியை நாங்கள் கொடுக்க இங்கே வந்துள்ளோம் என எவரேனும் நினைத்தால், அவர்கள் தவறு.

திங்கள் அன்று வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கை சிரிய மக்கள் வெளியில் இருந்து சுமத்தப்படும் சூத்திரங்கள் இல்லாமல் ஒரு அரசியல் அமைப்புமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறுகிறது.

அசாத்திற்குக் கொடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை நிராகரிக்கப்படும் என்பதை நன்கு அறிந்த வாஷிங்டன் அழுத்தங்களை அதிகரிக்க, மத்தியக்கிழக்கில் இன்னும் உறுதி குலைக்க மற்றும் ஈரான் மீது அதிக அழுத்தம் கொடுக்க அதை பயன்படுத்துகிறது.

சமாதானப் பேச்சுக்களை நடத்தும் அதன் போலித்தனம் சிரிய எதிர்த்தரப்பிற்கு அன்றே ஆயுதமற்ற உதவியை அளித்தலை மீண்டும் தொடர விரும்பியதில் வெளிப்படையாயிற்று. இது அல்குவேடா தொடர்புடைய சக்திகள் விற்பனை நிலையங்களை கைப்பற்றி அமெரிக்கா பிரித்தானியா உட்பட மேற்குசக்திகள் தற்காலிகமாக எதிர்த்தரப்பிற்கு அவை கொடுக்கும் உதவியை நிறுத்த வேண்டும் எனக்கூறிய ஒரு மாதத்திற்குப்பின் நடைபெற்றுள்ளது.

பெயரிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் ஜெனரல் சலிம் இட்ரிஸ் தலைமையிலான சுதந்திர சிரிய இராணுவத்தின் தலைமை இராணுவக்குழுவின் கூட்டுழைப்புடன் சிரியாவிற்கு துருக்கி மூலம் உதவி அனுப்பப்படுகிறது என்று கூறினார்கள். அவர்கள் கடந்த மாதம் உதவிகள் நிறுத்தபட்டது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்றனர்.

ஜெனீவா பேச்சுக்கள் நடைபெற்ற நேரத்திலேயே நடந்த டாவோஸ் உச்சிமாநாட்டில், சுவிட்சர்லாந்து உலகப் பொருளாதார அரங்கின் (WEF) 44வது ஆண்டுக் கூட்டத்தில், கெர்ரி மீண்டும் சிரியா, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு மீது திமிர்த்தனமான போக்கைத்தான் காட்டினார். ஈரான் அதன் அணுசக்தி ஈடுபாடுகளை விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவில்லை என்றால் இராணுவ நடவடிக்கை இன்னும் மேசைமேல் உள்ளது என்றும், அசாத் சிரியாவின் வருங்கால அரசியல் ஏற்பாட்டில் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்றும் ஒரு பேட்டியில் கூறினார்.

இந்நாடு ஜிகாத் மற்றும் பயங்கரவாதத்திற்கு ஒரு மிகப்பெரிய ஈர்க்கும் மையமாகிவிட்டது, அவர் ஆட்சி நடத்தும்வரை எதிர்த்தரப்பினர் போராடுவதை கைவிடமாட்டார்கள் என்றார்.

வெள்ளியன்று ஈரானின் ஜனாதிபதி ஹாசன் ரௌஹணி டாவோஸுக்கு வருகை புரிந்து சிரியாவின் எதிர்காலம் சிரிய நாட்டால் நிர்ணயிக்கப்பட வேண்டுமே ஒழிய வெளிச்சக்திகளால் அல்ல என்றார்.

ஞாயிறன்று சிரியாவின் முக்கிய நட்பு நாடான ஈரான், எதிர்த்தரப்பின் ஆதரவாளர்களான துருக்கி, சவுதி அரேபியா அனைத்தும் சிரியாவிற்குள் செல்லும் வெளிநாட்டுப் போராளிகளைக் கண்டித்த அதே நேரத்தில் தங்கள் நாடுகளுக்கு இதில் பங்கு இல்லை என்றன. சிரியாவின் ஐ.நா. தூதர பஷார் ஜாப்ரி இரு நாட்கள் முன்னதாக அவருடைய அரசாங்கம் 500க்கும் மேற்பட்ட அல்குவேடா தொடர்புடைய போராளிகள் துருக்கியில் இருந்து சிரியாவிற்குள் நுழைவதை அறிந்துள்ளதாகவும், சவுதி அரேபியா விமானம் மூலம் சுன்னி போராளிகளை யேமன் வழியாக சிரியாவிற்கு அனுப்பவதாகவும் கூறினார்.

ஞாயிறன்றே சிரியத் தகவல் மந்திரி ஒம்ரான் அல் ஜௌபி வெளிப்படையாக அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும், குறிப்பாக துருக்கி, கட்டாரையும் உள்நாட்டுப்போரை எரியூட்டுவதற்காக குற்றம் சாட்டினார். அமெரிக்கா அதன் உளவுத்துறை நிறுவனங்கள் மூலம் துருக்கி, கட்டார் ஆதரவுடன் சிரியாவில் நடக்கும் பலவற்றிலும் தொடர்பு கொண்டுள்ளது. என்றார்.

ஈரானிய தொழில்துறை, கூட்டுறவு மற்றும் பொதுநலத் துறைகள் மந்திரி அலி ராபீயியி தெஹ்ரான் தொடர்ந்து சிரியாவிற்கு ஆதரவு கொடுக்கும் என்றும், குருதி கொட்டுதலை நிறுத்த முதல்படி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கான ஒரு  கூட்டு முடிவுதான் என்றார்.

சிரிய ஆட்சி பேச்சுவார்த்தை மூலம் வரும் உடன்பாட்டில் இரு விடயங்களில் அதன் நம்பிக்கைகளை வைத்திருப்பது போல் தோன்றுகிறது: ஒன்று அவர்கள் உள்நாட்டுப்போரை தெளிவாக வென்று வருகின்றனர். மற்றும் இரண்டாவது அல்குவேடா இணைப்புடைய இஸ்லாமியவாதிகள் ஆதிக்கம் எதிர்த்தரப்பில் உள்ளது என்பதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அச்சம் கொண்டுள்ளன.

இம்மாதம் முன்னதாக மேக்டாட் பிபிசியிடம் பல பெயரிடப்படாத மேற்கு உளவுத்துறை அமைப்புக்கள் தீவிர இஸ்லாமியக்குழுக்களுடன் எப்படி போரிடுவது என்பது பற்றி பேச்சு நடத்த டமாஸ்கஸிற்கு சென்றுள்ளன என்றார். பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடையே அசாத் பதவியிறக்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. நான் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை, ஆனால் பலரும் டமாஸ்கஸுக்கு வருகை புரிந்துள்ளனர் என்றார் அவர்.

பல மேற்குஅரசுகள் இப்பொழுது அசாத்தின் தலைமக்கு மாற்றீடு இல்லை என்பதை அறிந்துள்ளனர் என்றார் அவர். சிலர் சிரியாவை இராஜதந்திர உறவுகளுக்கு அணுகியுள்ளனர். பிபிசி சர்வதேச தலைமை நிருபர் லைசீ டௌசே ஜனவரி 16 அன்று மேற்கு மற்றும் பாதுகாப்புத் தலைவர் ஜேனரல் அலி மாம்லுக் உட்பட சிரிய உளவுத்துறை அதிகாரிகளுக்கு இடையே சந்திப்புக்கள் நடந்தன எனக் தகவலறிந்த ஆதாரங்கள் கூறுகின்றன என்றார்.

பேரழிவு தரும் போர் நீடிக்கையில், பல தலைநகரங்களிலும் இதை எப்படி முடிவிற்குக் கொண்டுவருவது என்னும் கவலை பெருகியுள்ளது. ஒரு மேலை அதிகாரி , இது அனைவருக்கும் தோல்வியடையும் ஒரு நிலைமை ஆகும் எனக் கூறியதாக பிபிசி தகவல் கொடுத்துள்ளது.

டெய்லி பீஸ்ட்டில் எழுதிய முன்னாள் உதவி அமெரிக்க வெளிவிவகாரத்துறை உதவிசெயலர் மற்றும் வெளியுறவுக் குழுவின் கௌரவத் தலைவருமான பிராங்க் ஜி.விஸ்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாடு என்பதற்கு மாறியுள்ளார்

சிரியாவில் அசாத்தின் யதார்த்தத்தை எதிர்கொள்ளவும் என்று அவர் அறிவித்தார். ஜெனிவாவின் சிரிய மாநாடு ஜெனீவாவில் ஜனாதிபதி அசாத்தின் ஆட்சியை மாற்றுவதல் தோல்வியுறும், ஒபாமா குழுவிற்கு அது பற்றித் தெரியும். அசாத் அல்லது எதிர்த்தரப்பு முகாம்களில் இராஜதந்திர சமரசத்திற்கு உந்துதல் இல்லை, அதுவும் அமெரிக்காவிற்குத் தெரியும்... நடைமுறை உண்மை அமெரிக்கா மிதவாத எதிர்த்தரப்பிற்கு உதவியது, அது சரிகிறது. அதே நேரத்தில் அசாத்தின் படைகளும் ஜிகாத் தீவிரவாதிகளும் செழிப்புடன் உள்ளன.

ஜனாதிபதி பாரக் ஒபாமா கடந்த ஆண்டு பொது எதிர்ப்பையொட்டி சிரியாவில் இராணுவத் தலையீட்டில் இருந்து பின்வாங்கும் கட்டாயம் ஏற்பட்டது. அது ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்கான அச்சுறுத்தலையும் கொண்டிருந்ததுடன் மற்றும் பிராந்தியம் முழுவதும் போருக்கான சாத்தியத்தையும் கொண்டிருந்தது. ஆனால் கெர்ரியின் இடைவிடா அச்சுறுத்தல்கள் பிராந்தியத்தில் அமெரிக்காவின் விருப்பங்களை கணிசமாக முன்னெடுக்க பேச்சுக்கள் தோற்றால் வாஷிங்டன் சிரியாவுடன் போர் செய்யாது என ஒரு முட்டாள்தான் நினைப்பார் என்பதைக் காட்டுகின்றன.